121-130

குறள் 121:
அடக்கம்அமரருள்உய்க்கும்அடங்காமை
ஆரிருள்உய்த்துவிடும்.
கலைஞர்உரை:
அடக்கம்அழியாதபுகழைக்கொடுக்கும். அடங்காமைவாழ்வையேஇருளாக்கிவிடும்.
மு.வஉரை:
அடக்கம்ஒருவனைஉயர்த்தித்தேவருள்சேர்க்கும்; அடக்கம்இல்லாதிருத்தல், பொல்லாதஇருள்போன்றதீயவாழ்க்கையில்செலுத்திவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடக்கம்ஒருவனைப்பிற்காலத்தில்தேவர்உலகிற்குக்கொண்டுசேர்க்கும்; அடங்காமல்வாழ்வதோஅவனைநிறைந்தஇருளுக்குக்கொண்டுபோகும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, மெய், மொழி, மனங்கள்தீநெறிக்கண்செல்லாதுஅடங்குதல்உடையன்ஆதல். அஃதுஏதிலார்குற்றம்போல்தம்குற்றமும்காணும்(குறள்.190) நடுவுநிலைமைஉடையார்க்குஆகலின், இதுநடுவுநிலைமையின்பின்வைக்கப்பட்டது.)
அடக்கம்அமரருள்உய்க்கும் - ஒருவனைஅடக்கம்ஆகியஅறம்பின்தேவருலகத்துஉய்க்கும் ; அடங்காமைஆர்இருள்உய்த்துவிடும் - அடங்காமையாகியபாவம்தங்குதற்குஅரியஇருளின்கண்செலுத்தும். ( 'இருள்' என்பதுஓர்நரகவிசேடம். "எல்லாம்பொருளில்பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பதுஒருசொல்லாய்நின்றது.).
மணக்குடவர்உரை:
மனமொழிமெய்களையடக்கியொழுகஅவ்வடக்கம்தேவரிடத்தேகொண்டுசெலுத்தும்: அவற்றையடக்காதொழியஅவ்வடங்காமைதானேநரகத்திடைக்கொண்டுசெலுத்திவிடும். மேல்பலவாகப்பயன்கூறினாராயினும், ஈண்டுஅடக்கத்திற்கும்அடங்காமைக்குமிதுவேபயனென்றுதொகுத்துக்கூறினார்.
Translation:
Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.
Explanation:
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

குறள் 122:
காக்கபொருளாஅடக்கத்தைஆக்கம்
அதனினூஉங்கில்லைஉயிர்க்கு.
கலைஞர்உரை:
மிக்கஉறுதியுடன்காக்கப்படவேண்டியதுஅடக்கமாகும். அடக்கத்தைவிடஆக்கம்தரக்கூடியதுவேறொன்றும்இல்லை.
மு.வஉரை:
அடக்கத்தைஉறுதிப்பொருளாகக்கொண்டுபோற்றிக் காக்கவேண்டும். அந்தஅடக்கத்தைவிடமேம்பட்டஆக்கம்உயிர்க்குஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
அடக்கத்தைச்செல்வமாகஎண்ணிக்காக்க; அதைக்காட்டிலும்பெரியசெல்வம்வேறுஇல்லை.
பரிமேலழகர்உரை:
உயிர்க்குஅதனின்ஊங்குஆக்கம்இல்லை - உயிர்கட்குஅடக்கத்தின்மிக்கசெல்வம்இல்லை; அடக்கத்தைப்பொருளாகக்காக்க - ஆதலான்அவ்வடக்கத்தைஉறுதிப்பொருளாகக்கொண்டுஅழியாமல்காக்க. (உயிர்என்பதுசாதியொருமை. அஃதுஈண்டுமக்கள்உயிர்மேல்நின்றது, அறிந்துஅடங்கிப்பயன்கொள்வதுஅதுவேஆகலின்.).
மணக்குடவர்உரை:
ஒருவன்தனக்குப்பொருளாகஅடக்கத்தையுண்டாக்குக. அவனுயிர்க்குஆக்கம்அதனின்மேற்பட்டதுபிறிதில்லை.
Translation:
Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul!.
Explanation:
Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.

குறள் 123:
செறிவறிந்துசீர்மைபயக்கும்அறிவறிந்து
ஆற்றின்அடங்கப்பெறின்.
கலைஞர்உரை:
அறிந்துகொள்ளவேண்டியவற்றைஅறிந்துஅதற்கேற்பஅடக்கத்துடன்நடந்துகொள்பவரின்பண்பைஉணர்ந்துபாராட்டுகள்குவியும்.
மு.வஉரை:
அறியவேண்டியவற்றைஅறிந்து, நல்வழியில்அடங்கிஒழுகப்பெற்றால், அந்தஅடக்கம்நல்லோரால்அறியப்பட்டுமேன்மைபயக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடக்கத்துடன்வாழ்வதேஅறிவுடைமைஎன்றுஅறிந்து, ஒருவன்அடக்கமாகவாழ்ந்தால்அவனதுஅடக்கம்நல்லவர்களால்அறியப்பட்டுஅதுஅவனுக்குப்பெருமையைக்கொடுக்கும்.
பரிமேலழகர்உரை:
அறிவுஅறிந்துஆற்றின்அடங்கப்பெறின் - அடங்குதலேநமக்குஅறிவாவதுஎன்றுஅறிந்துநெறியானேஒருவன்அடங்கப்பெறின்; செறிவுஅறிந்துசீர்மைபயக்கும் - அவ்வடக்கம்நல்லோரான்அறியப்பட்டுஅவனுக்குவிழுப்பத்தைக்கொடுக்கும். (இல்வாழ்வானுக்குஅடங்கும்நெறியாவது, மெய்ம்முதல்மூன்றும்தன்வயத்தஆதல்.).
மணக்குடவர்உரை:
அறியப்படுவனவும்அறிந்துஅடக்கப்படுவனவும்அறிந்துநெறியினானேயடங்கப்பெறின்அவ்வடக்கம்நன்மைபயக்கும். அறியப்படுவன- சுவைஒளிஊறுஓசைநாற்றம்: அடக்கப்படுவன- மெய்வாய்கண்மூக்குசெவி.
Translation:
If versed in wisdom's lore by virtue's law you self restrain.
Your self-repression known will yield you glory's gain.
Explanation:
Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.

குறள் 124:
நிலையின்திரியாதுஅடங்கியான்தோற்றம்
மலையினும்மாணப்பெரிது.
கலைஞர்உரை:
உறுதியானஉள்ளமும், அத்துடன்ஆர்ப்பாட்டமற்றஅடக்கஉணர்வும்கொண்டவரின்உயர்வு, மலையைவிடச்சிறந்ததுஎனப்போற்றப்படும்.
மு.வஉரை:
தன்நிலையிலிருந்துமாறுபடாமல்அடங்கிஒழுகுவோனுடையஉயர்வு, மலையின்உயர்வைவிடமிகவும்பெரிதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்நேர்மையானவழியைவிட்டுவிலகாது, அடக்கத்துடன்வாழ்பவனைப்பற்றியபிறர்மனத்தோற்றம்மலையைக்காட்டிலும்மிகஉயரமானது.
பரிமேலழகர்உரை:
நிலையின்திரியாதுஅடங்கியான்தோற்றம் - இல்வாழ்க்கையாகியதன்நெறியின்வேறுபடாதுநின்றுஅடங்கியவனதுஉயர்ச்சி, மலையினும்மாணப்பெரிது - மலையின்உயர்ச்சியினும்மிகப்பெரிது. (திரியாதுஅடங்குதல் - பொறிகளால்புலன்களைநுகராநின்றேஅடங்குதல். 'மலை' ஆகுபெயர்.).
மணக்குடவர்உரை:
தனதுநிலையிற்கெடாதேயடங்கினவனதுஉயர்ச்சிமலையினும்மிகப்பெரிது. நிலை- வன்னாச்சிரமதன்மம்.
Translation:
In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view.
Explanation:
More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.

குறள் 125:
எல்லார்க்கும்நன்றாம்பணிதல்அவருள்ளும்
செல்வர்க்கேசெல்வம்தகைத்து.
கலைஞர்உரை:
பணிவுஎன்னும்பண்பு, எல்லார்க்கும்நலம்பயக்கும். ஏற்கனவேசெல்வர்களாகஇருப்பவர்களுக்குஅந்தப்பண்பு, மேலும்ஒருசெல்வமாகும்.
மு.வஉரை:
பணிவுடையவராகஒழுகுதல்பொதுவாகஎல்லோர்க்கும்நல்லதாகும்; அவர்களுள்சிறப்பாகச்செல்வர்க்கேமற்றொருசெல்வம்போன்றதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
செருக்குஇல்லாமல்அடக்கமாகவாழ்வதுஎல்லார்க்குமேநல்லதுதான்; அவ்எல்லாருள்ளும்செல்வர்களுக்குஅதுமேலும்ஒருசெல்வமாகவிளங்கும்.
பரிமேலழகர்உரை:
பணிதல்எல்லோர்க்கும்நன்றாம் - பெருமிதம்இன்றிஅடங்குதல்எல்லார்க்கும்ஒப்பநன்றேஎனினும்; அவருள்ளும்செல்வர்க்கேசெல்வம்தகைத்து - அவ்வெல்லாருள்ளும்செல்வம்உடையார்க்கேவேறொருசெல்வம்ஆம்சிறப்பினைஉடைத்து. (பெருமிதத்தினைச்செய்யுங்கல்வியும்குடிப்பிறப்பும்உடையார்அஃதுஇன்றிஅவைதம்மானேஅடங்கியவழிஅவ்வடக்கஞ்சிறந்துகாட்டாதுஆகலின், 'செல்வர்க்கேசெல்வம்தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பதுமெலிந்துநின்றது. பொதுஎன்பாரையும்உடம்பட்டுச்சிறப்பாதல்கூறியவாறு. இவைஐந்துபாட்டானும்பொதுவகையான்அடக்கத்ததுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அடங்கியொழுகல்எல்லார்க்கும்நன்மையாம்: அவரெல்லாரினுஞ்செல்வமுடையார்க்கேமிகவும்நன்மையுடைத்தாம். செல்வம் - மிகுதி.
Translation:
To all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem.
Explanation:
Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.

குறள் 126:
ஒருமையுள்ஆமைபோல்ஐந்தடக்கல்ஆற்றின்
எழுநம்யும்ஏமாப்புடைத்து.
கலைஞர்உரை:
உறுப்புகளைஓர்ஓட்டுக்குள்அடக்கிக்கொள்ளும்ஆமையைப்போல்ஐம்பொறிகளையும்அடக்கியாளும்உறுதி, காலமெல்லாம்வாழ்க்கைக்குக்காவல்அரணாகஅமையும்.
மு.வஉரை:
ஒருபிறப்பில், ஆமைபோல்ஐம்பொறிகளையும்அடக்கியாளவல்லவனானால், அஃதுஅவனுக்குப்பலபிறப்பிலும்காப்பாகும்சிறப்புஉடையது.
சாலமன்பாப்பையாஉரை:
ஆமைதன்நான்குகால், ஒருதலைஆகியஐந்துஉறுப்புகளையும்ஆபத்துவரும்போதுஓட்டுக்குள்மறைத்துக்கொள்வதுபோல, ஒருவன்தன்ஒருபிறப்பில்மெய், வாய், கண், மூக்கு, செவிஆகியஐந்துபொறிகளையும்அறத்திற்குமாறானதீமைவரும்போதுஅடக்கும்ஆற்றல்பெறுவான்என்றால், அதுஅவனுக்குப்பிறவிதோறும்ஏழுபிறப்பிலும் - அரணாகஇருந்துஉதவும்.
பரிமேலழகர்உரை:
ஆமைபோல்ஒருமையுள்ஐந்துஅடக்கல்ஆற்றின் - ஆமைபோல, ஒருவன்ஒருபிறப்பின்கண்ஐம்பொறிகளையும்அடக்கவல்லன்ஆயின்; எழுமையும்ஏமாப்புஉடைத்து - அவ்வன்மைஅவனுக்குஎழுபிறப்பின்கண்ணும்அரண்ஆதலைஉடைத்து. (ஆமைஐந்துஉறுப்பினையும்இடர்புகுதாமல்அடக்குமாறுபோலஇவனும்ஐம்பொறிகளையும்பாவம்புகுதாமல்அடக்கவேண்டும்என்பார் 'ஆமைபோல்' என்றார். ஒருமைக்கண்செய்தவினையின்பயன்எழுமையும்தொடரும்என்பதுஇதனான்அறிக. இதனான்மெய்யடக்கம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருபிறப்பிலேபொறிகளைந்தினையும்ஆமைபோலஅடக்கவல்லவனாயின், அவனுக்குஅதுதானேஎழுபிறப்பினுங்காவலாதலையுடைத்து.
Translation:
Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains.
Explanation:
Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.

குறள் 127:
யாகாவாராயினும்நாகாக்ககாவாக்கால்
சோகாப்பர்சொல்லிழுக்குப்பட்டு.
கலைஞர்உரை:
ஒருவர்எதைக்காத்திடமுடியாவிட்டாலும்நாவையாவதுஅடக்கிக்காத்திடவேண்டும். இல்லையேல்அவர்சொன்னசொல்லேஅவர்துன்பத்துக்குக்காரணமாகிவிடும்.
மு.வஉரை:
காக்கவேண்டியவற்றுள்எவற்றைக்காக்காவிட்டாலும்நாவையாவதுகாக்கவேண்டு்ம்; காக்கத்தவறினால்சொற்குற்றத்தில்அகப்பட்டுத்துன்புறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
எதைக்காக்கமுடியாதவரானாலும்நாஒன்றையாவதுகாத்துக்கொள்ளவேண்டும். முடியாதுபோனால்சொல்குற்றத்தில்சிக்கித்துன்பப்படுவர்.
பரிமேலழகர்உரை:
யாகாவாராயினும்நாகாக்க - தம்மால்காக்கப்படுவனஎல்லாவற்றையும்காக்கமாட்டாராயினும்நாவொன்றனையும்காக்க, காவாக்கால்சொல்இழுக்குப்பட்டுச்சோகாப்பர் - அதனைக்காவாராயின்சொல்இழுக்குப்பட்டுச்சோகாப்பர் - அதனைக்காவாராயின்சொற்குற்றத்தின்கண்பட்டுத்தாமேதுன்புறுவர். ('யா' என்பதுஅஃறிணைப்பன்மைவினாப்பெயர். அஃதுஈண்டுஎஞ்சாமைஉணரநின்றது. முற்றுஉம்மைவிகாரத்தால்தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண்தோன்றும்குற்றம். 'அல்லாப்பர்செம்மாப்பர்' என்பனபோலச் 'சோகாப்பர்' என்பதுஒருசொல்.).
மணக்குடவர்உரை:
எல்லாவற்றையும்அடக்கிலராயினும்நாவொன்றினையும்அடக்குக: அதனைஅடக்காக்காற்சொற்சோர்வுபட்டுத்தாமேசோகிப்பாராதலான். இதுசோகத்தின்மாட்டேபிணிக்கப்படுவரென்பது.
Translation:
Whate'er they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep.
Explanation:
Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.

குறள் 128:
ஒன்றானுந்தீச்சொல்பொருட்பயன்உண்டாயின்
நன்றாகாதாகிவிடும்.
கலைஞர்உரை:
ஒருகுடம்பாலில்துளிநஞ்சுபோல், பேசும்சொற்களில்ஒருசொல்தீயசொல்லாகஇருந்துதுன்பம்விளைவிக்குமானாலும், அந்தப்பேச்சில்உள்ளநல்லசொற்கள்அனைத்தும்தீயவாகிவிடும்.
மு.வஉரை:
தீய சொற்களின்பொருளால்விளையும்தீமைஒன்றாயினும்ஒருவனிடம்உண்டானால், அதனால்மற்றஅறங்களாலும்நன்மைவிளையாமல்போகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தீயசொற்களின்பொருளால்பிறர்க்குவரும்துன்பம்சிறிதேஎன்றாலும்அந்தக்குறைஒருவனிடம்இருந்தால்அவனுக்குப்பிறஅறங்களால்வரும்நன்மையம்தீமையாகப்போய்விடும்.
பரிமேலழகர்உரை:
தீச்சொல்பொருள்பயன்ஒன்றானும்உண்டாயின்- தீயவாகியசொற்களின்பொருள்களால்பிறர்க்குவரும்துன்பம்ஒன்றாயினும்ஒருவன்பக்கல்உண்டாவதாயின்; நன்றுஆகாதுஆகிவிடும் - அவனுக்குப்பிறஅறங்களான்உண்டானநன்மைதீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்குபயக்கும்பொய், குறளை, கடுஞ்சொல்என்பன. ஒருவன்நல்லவாகச்சொல்லும்சொற்களின்கண்ணேஒன்றாயினும் 'தீச்சொற்படும்பொருளினதுபயன்பிறர்க்குஉண்டாவதாயின்' என்றுஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
ஒருசொல்லேயாயினும்கேட்டார்க்குஇனிதாயிருந்துதீயசொல்லின்பொருளைப்பயக்குமாயின், நன்மையாகாதாகியேவிடும். இதுசாலமொழிகூறினாலுந்தீதாமென்றது.
Translation:
Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.
Explanation:
If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

குறள் 129:
தீயினாற்சுட்டபுண்உள்ளாறும்ஆறாதே
நாவினாற்சுட்டவடு.
கலைஞர்உரை:
நெருப்புசுட்டபுண்கூடஆறிவிடும்; ஆனால்வெறுப்புக்கொண்டுதிட்டியசொற்கள்விளைத்ததுன்பம்ஆறவேஆறாது.
மு.வஉரை:
தீயினால்சுட்டபுண்புறத்தேவடுஇருந்தாலும்உள்ளேஆறிவிடும்; ஆனால்நாவினால்தீயசொல்கூறிச்சுடும்வடுஎன்றும்ஆறாது.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனைமற்றொருவன்தீயால்சுட்டபுண்உடம்பின்மேல்வடுவாகஇருந்தாலும்உள்ளத்துக்காயம்காலத்தில்ஆறிப்போய்விடும். ஆனால்கொடியவார்த்தைகளால்நெஞ்சைச்சுட்டவடுஅதில்புண்ணாகவேகிடந்துஒருநாளும்ஆறாது.
பரிமேலழகர்உரை:
தீயினால்சுட்டபுண்உள்ஆறும் - ஒருவனைஒருவன்தீயினால்சுட்டபுண்மெய்க்கண்கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதேஆறும்; நாவினால்சுட்டவடுஆறாது - அவ்வாறன்றிவெவ்வுரைஉடையநாவினால்சுட்டவடுஅதன்கண்ணும்எஞ்ஞான்றும்ஆறாது. (ஆறிப்போதலால்தீயினால்சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாதுகிடத்தலால்நாவினால்சுட்டதனை 'வடு' என்றும்கூறினார். தீயும்வெவ்வுரையும்சுடுதல்தொழிலான்ஒக்கும்ஆயினும், ஆறாமையால்தீயினும்வெவ்வுரைகொடிதுஎன்பதுபோதரலின், இதுகுறிப்பான்வந்தவேற்றுமைஅலங்காரம். இவைமூன்றுபாட்டானும்மொழிஅடக்கம்கூறப்பட்டது.
மணக்குடவர்உரை:
தீயினாற்சுட்டபுண்உள்ளாறித்தீரும்: நாவினாற்சுட்டபுண்ஒருகாலத்தினுந்தீராது.
Translation:
In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth never more.
Explanation:
The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.

குறள் 130:
கதங்காத்துக்கற்றடங்கல்ஆற்றுவான்செவ்வி
அறம்பார்க்கும்ஆற்றின்நுழைந்து.
கலைஞர்உரை:
கற்பவைகற்றுச், சினம்காத்து, அடக்கமெனும்பண்புகொண்டவரைஅடைந்திடஅறமானதுவழிபார்த்துக்காத்திருக்கும்.
மு.வஉரை:
சினம்தோன்றாமல்காத்து, கல்விகற்று, அடக்கமுடையவனாகஇருக்கவல்லவனுடையசெவ்வியை, அவனுடையவழியில்சென்றுஅறம்பார்த்திருக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
கல்விகற்றுமனத்துள்கோபம்பிறக்காமல்காத்து, அடக்கமாகவாழும்ஆற்றல்படைத்தவனைஅடைவதற்கானநேரத்தைஎதிர்பார்த்துஅறம்அவன்வழியில்நுழைந்துகாத்துஇருக்கும்.
பரிமேலழகர்உரை:
கதம்காத்துக்கற்றுஅடங்கல்ஆற்றுவான்செவ்வி - மனத்தின்கண்வெகுளிதோன்றாமல்காத்துக்கல்வியுடையவனாய்அடங்குதலைவல்லவனதுசெவ்வியை, அறம்பார்க்கும்ஆற்றின்நுழைந்து - அறக்கடவுள்பாராநிற்கும்அவனைஅடையும்நெற்றியின்கண்சென்று. (அடங்குதல் - மனம்புறத்துப்பரவாதுஅறத்தின்கண்ணேநிற்றல். செவ்வி - தன்குறைகூறுதற்குஏற்றமனம், மொழிமுகங்கள்இனியனாம்ஆம்காலம். இப்பெற்றியானைஅறம்தானேசென்றுஅடையும்என்பதாம். இதனான்மனவடக்கம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
வெகுளியும்அடக்கிக்கல்வியுமுடையனாய்அதனால்வரும்பெருமிதமும்அடக்கவல்லவன்மாட்டு, அறமானதுநெறியானேவருந்தித்தானேவருதற்குக்காலம்பார்க்கும். இஃதுஅடக்கமுடையார்க்குஅறமுண்டாமென்றது.
Translation:
Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path.
Explanation:
Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290