குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:பாயிரவியல். அதிகாரம்:நீத்தார்பெருமை.
குறள் 21:
ஒழுக்கத்துநீத்தார்பெருமைவிழுப்பத்து
வேண்டும்பனுவல்துணிவு.
கலைஞர்உரை:
ஒழுக்கத்தில்உறுதியானதுறவிகளின்பெருமை, சான்றோர்நூலில்விருப்பமுடனும், உயர்வாகவும்இடம்பெறும்.
மு.வஉரை:
ஒழுக்கத்தில்நிலைத்துநின்றுபற்றுவிட்டவர்களின்பெருமையைச்சிறந்ததாகபோற்றிகூறுவதேநூல்களின்துணிவாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தமக்குரியஒழுக்கத்தில்வாழ்ந்து, ஆசைகளைஅறுத்து, உயர்ந்தமேன்மக்களின்பெருமையே, சிறந்தனவற்றுள்சிறந்ததுஎன்றுநூல்கள்சொல்கின்றன.
பரிமேலழகர்உரை:
ஒழுக்கத்துநீத்தார்பெருமை - தமக்குரியஒழுக்கத்தின்கண்ணேநின்றுதுறந்தாரதுபெருமையை; விழுப்பத்துவேண்டும்பனுவல்துணிவு - விழுமியபொருள்கள்பலவற்றுள்ளும்இதுவேவிழுமியதுஎனவிரும்பும்நூல்களதுதுணிவு. (தமக்குஉரியஒழுக்கத்தின்கண்ணேநின்றுதுறத்தலாவது, தத்தம்வருணத்திற்கும்நிலைக்கும்உரியஒழுக்கங்களைவழுவாதுஒழுகஅறம்வளரும்; அறம்வளரப்பாவம்தேயும்; பாவம்தேயஅறியாமைநீங்கும் ; அறியாமைநீங்கநித்தஅநித்தங்களதுவேறுபாட்டுஉணர்வும்அழிதன்மாலையவாயஇம்மைமறுமைஇன்பங்களின்உவர்ப்பும், பிறவித்துன்பங்களும்தோன்றும் ; அவைதோன்றவீட்டின்கண்ஆசைஉண்டாம்; அஃதுஉண்டாகப்பிறவிக்குக்காரணம்ஆகிய 'பயன்இல்' முயற்சிகள்எல்லாம்நீங்கிவீட்டிற்குக்காரணமாகியயோகமுயற்சிஉண்டாம்; அஃதுஉண்டாக,மெய்யுணர்வுபிறந்துபுறப்பற்றுஆகிய 'எனது' என்பதும், அகப்பற்றுஆகிய 'யான்' என்பதும்விடும். ஆகலான்இவ்விரண்டுபற்றையும்இம்முறையேஉவர்த்துவிடுதல்எனக்கொள்க. 'பனுவல்' எனப்பொதுபடக்கூறியஅதனான்ஒன்றையொன்றுஒவ்வாதசமயநூல்கள்எல்லாவற்றிற்கும்இஃதுஒத்ததுணிவுஎன்பதுபெற்றாம். செய்தாரதுதுணிவுபனுவல்மேல்ஏற்றப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒழுக்கத்தின்பொருட்டுஎல்லாப்பொருளையுந்துறந்தாரதுபெருமையைநூல்களின்துணிவுவிழுப்பத்தின்பொருட்டுவேண்டும். தானுமொருபொய்யைச்சொல்லும்நூலும்தன்னையெல்லாருங்கொண்டாடுவதற்காகத்துறந்தார்பெருமையைநன்குமதித்துக்கூறும். அதனானேயானுஞ்சொல்லுகின்றேனென்பது.
Translation:
The settled rule of every code requires, as highest good, Their greatness who, renouncing all, true to their rule have stood.
Explanation:
The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.
22. துறந்தார்பெருமைதுணைக்கூறின்வையத்து
இறந்தாரைஎண்ணிக்கொண்டற்று.
கலைஞர்உரை:
உலகில்இறந்தவர்களின்எண்ணிக்கைஎவ்வளவுஎன்றுகூறமுடியுமா? அதுபோலத்தான்உண்மையாகவேபற்றுகளைத்துறந்தஉத்தமர்களின்பெருமையையும்அளவிடவேமுடியாது.
மு.வஉரை:
பற்றுக்களைத்துறந்தவர்களின்பெருமையைஅளந்துகூறுதல், உலகத்தில்இதுவரைபிறந்துஇறந்தவர்களைகணக்கிடுவதைப்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
ஆசைகளைவிட்டுவிலகியவரின்பெருமைக்கு, எண்ணிக்கையால்அளவுகூறுவது, இந்தஉலகத்தில்இறந்துபோனவர்களின்எண்ணிக்கையைஎல்லாம்எண்ணுவதுபோலாகும்.
பரிமேலழகர்உரை:
துறந்தார்பெருமைதுணைக்கூறின் - இருவகைப்பற்றினையும்விட்டாரதுபெருமையைஇவ்வளவுஎன்றுஎண்ணால்கூறிஅறியலுறின்அளவுபடாமையான்; வையத்துஇறந்தாரைஎண்ணிக்கொண்டுஅற்று - இவ்வுலகத்துப்பிறந்துஇறந்தாரைஎண்ணி, இத்துணையர்எனஅறியலுற்றாற்போலும். (முடியாதுஎன்பதாம், 'கொண்டால்' என்னும்வினைஎச்சம் 'கொண்டு' எனத்திரிந்துநின்றது.).
மணக்குடவர்உரை:
காமமுதலாகத்துறந்தார்பெருமைக்குஅளவுகூறின்உலகத்துப்பிறந்திறந்தாரைஇத்துணையாரென்றுஎண்ணியறியலுற்றாற்போலும். துபெருமைக்கெல்லைகூறுதலரிதாயினுஞ்சிலசொல்லப்புகாநின்றேனென்றதுகருதிக்கூறிற்று.
Translation:
As counting those that from the earth have passed away, 'Tis vain attempt the might of holy men to say.
Explanation:
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.
23. இருமைவகைதெரிந்துஈண்டுஅறம்பூண்டார்
பெருமைபிறங்கிற்றுஉலகு.
கலைஞர்உரை:
நன்மைஎது, தீமைஎதுஎன்பதைஆய்ந்தறிந்துநன்மைகளைமேற்கொள்பவர்களேஉலகில்பெருமைக்குரியவர்களாவார்கள்.
மு.வஉரை:
பிறப்புவீடுஎன்பனபோல்இரண்டிரண்டாகஉள்ளவைகளின்கூறுபாடுகளைஆராய்ந்தறிந்துஅறத்தைமேற்கொண்டவரின்பெருமையேஉலகத்தில்உயர்ந்தது.
சாலமன்பாப்பையாஉரை:
இம்மையின்துன்பத்தையும்மறுமையின்இன்பத்தையும்அறிந்து, மெய்உணர்ந்து, ஆசைகள்அறுத்துஎறியும்அறத்தைச்செய்தவரின்பெருமையே, இவ்வுலகில்உயர்ந்துவிளங்குகிறது.
பரிமேலழகர்உரை:
இருமைவகைதெரிந்து - பிறப்புவீடுஎன்னும்இரண்டனதுதுன்பஇன்பக்கூறுபாடுகளைஆராய்ந்துஅறிந்து; ஈண்டுஅறம்பூண்டார்பெருமை - அப்பிறப்புஅறுத்தற்குஇப்பிறப்பின்கண்துறவறத்தைப்பூண்டாரதுபெருமையே; உலகுபிறங்கிற்று - உலகின்கண்உயர்ந்தது. (தெரிமாண்தமிழ்மும்மைத்தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப்போல, 'இருமை' என்றதுஈண்டுஎண்ணின்கண்நின்றது. பிரிநிலைஏகாரம்விகாரத்தால்தொக்கது. இதனால்திகிரிஉருட்டிஉலகம்முழுதுஆண்டஅரசர்முதலாயினார்பெருமைபிரிக்கப்பட்டது. இவைமூன்றுபாட்டானும்நீத்தார்பெருமையேஎல்லாப்பெருமையினும்மிக்கதுஎன்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பிறப்பும்வீடுமென்னுமிரண்டினதுகூறுபாட்டையாராய்ந்துஇவ்விடத்தேதுறவறத்தைமேற்கொண்டவரதுபெருமைஉலகத்தில்மிக்கது.
இஃதுஎல்லாரானும்போற்றப்படுமென்றது.
Translation:
Their greatness earth transcends, who, way of both worlds weighed, In this world take their stand, in virtue's robe arrayed.
Explanation:
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).
24. உரனென்னும்தோட்டியான்ஓரைந்தும்காப்பான்
வரனென்னும்வைப்பிற்கோர்வித்தது.
கலைஞர்உரை:
உறுதியென்றஅங்குசம்கொண்டு, ஐம்பொறிகளையும்அடக்கிக்காப்பவன், துறவறம்எனும்நிலத்திற்குஏற்றவிதையாவான்.
மு.வஉரை:
அறிவுஎன்னும்கருவியினால்ஐம்பொறிகளாகியயானைகளைஅடக்கிகாக்கவல்லவன், மேலானவீட்டிற்குவிதைபோன்றவன்.
சாலமன்பாப்பையாஉரை:
மெய், வாய்,கண், மூக்கு, செவிஎன்னும்ஐந்துயானைகளும்தத்தம்புலன்கள்ஆகியஊறு, சுவை, ஒளி,
நாற்றம், ஓசைஆகியவற்றின்மேல்செல்லாமல், அவற்றைமனஉறுதிஎன்னும்அங்குசத்தால்காப்பவன்எல்லாவற்றிலும்சிறந்ததாகியவீட்டுலகிற்குஒருவிதைஆவான்.
பரிமேலழகர்உரை:
உரன்என்னும்தோட்டியான்ஓர்ஐந்தும்காப்பான் - திண்மைஎன்னும்தோட்டியால்பொறிகள்ஆகியயானைஐந்தினையும்தத்தம்புலன்கள்மேல்செல்லாமல்காப்பான்; வரன்என்னும்வைப்பிற்குஓர்வித்து - எல்லாநிலத்திலும்மிக்கதுஎன்றுசொல்லப்படும்வீட்டுநிலத்திற்குஓர்வித்துஆம். (இஃதுஏகதேசஉருவகம். திண்மைஈண்டுஅறிவின்மேற்று. அந்நிலத்திற்சென்றுமுளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப்பிறந்துஇறந்துவரும்மகனல்லன்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
அறிவாகியதோட்டியானேபொறியாகியயானையைந்தினையும்புலன்களிற்செல்லாமல்மீட்பவன்மேலாகியவிடத்தேயாதற்குஇவ்விடத்தேயிருப்பதொருவித்து.
Translation:
He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains.
Explanation:
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.
25. ஐந்தவித்தான்ஆற்றல்அகல்விசும்புளார்கோமான்
இந்திரனேசாலுங்கரி.
கலைஞர்உரை:
புலன்களைஅடக்கமுடியாமல்வழிதவறிச்சென்றிடும்மனிதனுக்குச்சான்றாகஇந்திரன்விளங்கி, ஐம்புலன்களால்ஏற்படும்ஆசைகளைக்கட்டுப்படுத்தியதால்வான்புகழ்கொண்டவர்களின்ஆற்றலைஎடுத்துக்காட்டுகிறான்.
மு.வஉரை:
ஐந்துபுலன்களாலாகும்ஆசைகளைஒழித்தவனுடையவல்லமைக்கு, வானுலகத்தாரின்தலைவனாகியஇந்திரனேபோதுமானசான்றுஆவான்.
சாலமன்பாப்பையாஉரை:
அகன்றவானத்துவாழ்பவரின்இறைவனாகியஇந்திரனே, புலன்வழிப்பெருகும்ஆசைஐந்தையும்அறுத்தவனின்வலிமைக்குத்தகுந்தசான்றுஆவான்.
பரிமேலழகர்உரை:
ஐந்துஅவித்தான்ஆற்றல் - புலன்களில்செல்கின்றஅவாஐந்தனையும்அடக்கினானதுவலிக்கு; அகல்விசும்புஉளார்கோமான்இந்திரனேசாலும்கரி - அகன்றவானத்துள்ளார்இறைவன்ஆகியஇந்திரனேஅமையும்சான்று. (ஐந்தும்என்னும்முற்றுஉம்மையும்ஆற்றற்குஎன்னும்நான்கன்உருபும்செய்யுள்விகாரத்தால்தொக்கன. தான்ஐந்துஅவியாதுசாபம்எய்திநின்று, அவித்தவனதுஆற்றல்உணர்த்தினான்ஆகலின், 'இந்திரனேசாலும்கரி' என்றார்.
மணக்குடவர்உரை:
நுகர்ச்சியாகியவைந்தினையுந்துறந்தானதுவலிக்குஅகன்றவிசும்பிலுள்ளார்க்குநாயகனாகியஇந்திரனேயமையுஞ்சான்று. இந்திரன்சான்றென்றதுஇவ்வுலகின்கண்மிகத்தவஞ்செய்வாருளரானால்அவன்தன்பதம்இழக்கின்றானாகநடுங்குமாதலான். இதுதேவரினும்வலியனென்றது.
Translation:
Their might who have destroyed 'the five', shall soothly tell Indra, the lord of those in heaven's wide realms that dwell.
Explanation:
Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.
26. செயற்கரியசெய்வார்பெரியர்சிறியர்
செயற்கரியசெய்கலாதார்.
கலைஞர்உரை:
பெருமைதரும்செயல்களைப்புரிவோரைப்பெரியோர்என்றும், சிறுமையானசெயல்களையன்றிப்பெருமைக்குரியசெயல்களைச்செய்யாதவர்களைச்சிறியோர்என்றும்வரையறுத்துவிடமுடியும்.
மு.வஉரை:
செய்வதற்குஅருமையானசெயல்களைசெய்யவல்லவரேபெரியோர். செய்வதற்குஅரியசெயல்களைச்செய்யமாட்டாதவர்சிறியோர்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்செய்வதற்குமுடியாதசெயல்களைச்செய்பவரேமேன்மக்கள்; செய்யமுடியாதவரோசிறியவரே.
பரிமேலழகர்உரை:
செயற்குஅரியசெய்வார்பெரியர் - ஒத்தபிறப்பினராயமக்களுள்செய்தற்குஎளியவற்றைச்செய்யாதுஅரியவற்றைச்செய்வார்பெரியர்;செயற்குஅரியசெய்கலாதார்சிறியர் - அவ்வெளியவற்றைச்செய்துஅரியவற்றைச்செய்யமாட்டாதார்சிறியர். (செயற்குஎளியஆவன, மனம்வேண்டியவாறேஅதனைப்பொறிவழிகளால்புலன்களில்செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும்முதலாயின. செயற்குஅரியஆவன, இமயம்,நியமம்முதலாயஎண்வகையோகஉறுப்புகள். நீரிற்பலகால்மூழ்கல்முதலாய, 'நாலிருவழக்கின்தாபதபக்கம்'(புறப்பொருள்வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும்உளர்; அவைநியமத்துள்ளேஅடங்கலின், நீத்தாரதுபெருமைக்குஏலாமைஅறிக.).
மணக்குடவர்உரை:
செயற்குஅரியனசெய்வாரைப்பெரியோரென்றுசொல்லுவர். அவற்றைசெய்யமாட்டாதாரைத்துறந்தாராயினுஞ்சிறியோரென்றுசொல்லுவர்.
செயற்கரியன- இயமநியமமுதலாயின. இவ்வதிகாரம்நீத்தார்பெருமையென்றுகூறப்பட்டதாயினும், துறந்தமாத்திரத்தானேபெரியரென்றுகொள்ளப்படார். செயற்கரியனசெய்வாரேபெரியரென்றுகொள்ளப்படுவரென்றுஇதுகூறிற்று.
Translation:
Things hard in the doing will great men do; Things hard in the doing the mean eschew.
Explanation:
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.
27. சுவைஒளிஊறுஓசைநாற்றமெனஐந்தின்
வகைதெரிவான்கட்டேஉலகு.
கலைஞர்உரை:
ஐம்புலன்களின்இயல்பைஉணர்ந்துஅவற்றைஅடக்கியாளும்திறன்கொண்டவனையேஉலகம்போற்றும்.
மு.வஉரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்என்றுசொல்லப்படும்ஐந்தின்வகைகளையும்ஆராய்ந்துஅறியவல்லவனுடையஅறிவில்உள்ளதுஉலகம்.
சாலமன்பாப்பையாஉரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்என்றுகூறப்படும்ஐந்துபுலன்களின்வழிப்பிறக்கும்ஆசைகளைஅறுத்துஎறிபவனின்வசப்பட்டதேஇவ்வுலகம்.
பரிமேலழகர்உரை:
சுவைஒளிஊறுஓசைநாற்றம்என்றஐந்தின்வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும்என்றுசொல்லப்பட்டதன்மாத்திரைகள்ஐந்தனதுகூறுபாட்டையும்; தெரிவான்கட்டேஉலகு - ஆராய்வான்அறிவின்கண்ணதேஉலகம். (அவற்றின்கூறுபாடுஆவன :பூதங்கட்குமுதல்ஆகியஅவைதாம்ஐந்தும், அவற்றின்கண்தோன்றியஅப்பூதங்கள்ஐந்தும், அவற்றின்கூறுஆகியஞானேந்திரியங்கள்ஐந்தும், கன்மேந்திரியங்கள்ஐந்தும்ஆகஇருபதும்ஆம். 'வகைதெரிவான்கட்டு' எனஉடம்பொடுபுணர்த்ததனால், தெரிகின்றபுருடனும், அவன்தெரிதற்கருவிஆகியமான்அகங்காரமனங்களும், அவற்றிற்குமுதல்ஆகியமூலப்பகுதியும்பெற்றாம். தத்துவம்இருபத்தைந்தனையும்தெரிதல்ஆவது, மூலப்பகுதிஒன்றில்தோன்றியதுஅன்மையின்பகுதியேஆவதல்லதுவிகுதிஆகாதுஎனவும், அதன்கண்தோன்றியமானும், அதன்கண்தோன்றியஅகங்காரமும், அதன்கண்தோன்றியதன்மாத்திரைகளும்ஆகியஏழும், தத்தமக்குமுதலாயதனைநோக்கவிகுதியாதலும் , தங்கண்தோன்றுவனவற்றைநோக்கப்பகுதியாதலும்உடையஎனவும், அவற்றின்கண்தோன்றியமனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும்ஆகியபதினாறும்தங்கண்தோன்றுவனஇன்மையின்விகுதியேஆவதல்லதுபகுதிஆகாஎனவும், புருடன், தான்ஒன்றில்தோன்றாமையானும்தன்கண்தோன்றுவனஇன்மையானும்இரண்டும்அல்லன்எனவும், சாங்கியநூலுள்ஓதியவாற்றான்ஆராய்தல். இவ்விருபத்தைந்துமல்லதுஉலகுஎனப்பிறிதொன்றுஇல்லைஎனஉலகினதுஉண்மைஅறிதலின், அவன்அறிவின்கண்ணதாயிற்று. இவைநான்குபாட்டானும்பெருமைக்குஏதுஐந்துஅவித்தலும், யோகப்பயிற்சியும், தத்துவஉணர்வும்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
சுவைமுதலாகக்கூறியவைந்துபுலன்களின்வகையையாராய்வான்கண்ணதேயுலகம். எனவே, இவற்றின்காரியம்வேறொன்றாகத்தோன்றுமன்றேஅதனைஅவ்வாறுகூறுபடுத்துக்காணக்காரணந்தோற்றுமாதலால், காரியமானவுலகம்அறிவான்கண்ணதாமென்றவாறாயிற்று.
Translation:
Taste, light, touch, sound, and smell: who knows the way Of all the five,- the world submissive owns his sway.
Explanation:
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.
28. நிறைமொழிமாந்தர்பெருமைநிலத்து
மறைமொழிகாட்டிவிடும்.
கலைஞர்உரை:
சான்றோர்களின்பெருமையை, இந்தஉலகில்அழியாமல்நிலைத்துநிற்கும்அவர்களதுஅறவழிநூல்களேஎடுத்துக்காட்டும்.
மு.வஉரை:
பயன்நிறைந்தமொழிகளில்வல்லசான்றோரின்பெருமையை, உலகத்தில்அழியாமல்விளங்கும்அவர்களுடையமறைமொழிகளேகாட்டிவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
நிறைவானவாக்குப்பெருமைஉடையமேன்மக்களின்உயர்வை, அவர்கள்இவ்வுலகில்சொன்னமந்திரச்சொற்களேஅடையாளம்காட்டிவிடும்.
பரிமேலழகர்உரை:
நிறைமொழிமாந்தர்பெருமை - நிறைந்தமொழியினைஉடையதுறந்தாரதுபெருமையை; நிலத்துமறைமொழிகாட்டிவிடும் - நிலவுலகத்தின்கண்அவர்ஆணையாகச்சொல்லியமந்திரங்களேகண்கூடாகக்காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக்கூறினும், வெகுண்டுகூறினும், அவ்வப்பயன்களைப்பயந்தேவிடும்மொழி. காட்டுதல்! பயனான்உணர்த்துதல்.).
மணக்குடவர்உரை:
நிரம்பியகல்வியுடையமாந்தரதுபெருமையைஅவராற்சொல்லப்பட்டுநிலத்தின்கண்வழங்காநின்றமந்திரங்களேகாட்டும். இஃதுஅவராணைநடக்குமென்றுகூறிற்று.
Translation:
The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.
Explanation:
The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.
29. குணமென்னும்குன்றேறிநின்றார்வெகுளி
கணமேயும்காத்தல்அரிது.
கலைஞர்உரை:
குணக்குன்றுகளானபெரியவர்கள்கோபம்கொண்டால்அந்தக்கோபம்அவர்கள்உள்ளத்தில்ஒருகணம்கூடநிலைத்துநிற்காது.
மு.வஉரை:
நல்லபண்புகளாகியமலையின்மேல்ஏறிநின்றபெரியோர், ஒருகணப்பொழுதேசினம்கொள்வார்ஆயினும்அதிலிருந்துஒருவரைக்காத்தல்அரிதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நற்குணங்களாம்சிறுமலைமீதுஏறிநின்றஅம்மேன்மக்கள், தமக்குள்ஒருகணப்பொழுதும்கோபத்தைக்கொண்டிருப்பதுகடினம்.
பரிமேலழகர்உரை:
குணம்என்னும்குன்றுஏறிநின்றார்வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மைமுதலியநற்குணங்கள்ஆகியகுன்றின்முடிவின்கண்நின்றமுனிவரதுவெகுளி; 'கணம்ஏயும்' காத்தல்அரிது - தான்உள்ளஅளவுகணமேஆயினும், வெகுளப்பட்டாரால்தடுத்தல்அரிது. (சலியாமையும், பெருமையும்பற்றிக்குணங்களைக்குன்றாகஉருவகம்செய்தார். குணம்சாதியொருமை. அநாதியாய்வருகின்றவாறுபற்றிஒரோவழிவெகுளிதோன்றியபொழுதேஅதனைமெய்யுணர்வுஅழிக்கும்ஆகலின்,கணம்ஏயும்என்றும், நிறைமொழிமாந்தர்ஆகலின், 'காத்தல்அரிது' என்றும்கூறினார். இவைஇரண்டுபாட்டானும்அவர்ஆணைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
குணமாகியமலையைமேற்கொண்டுநின்றார்மாட்டுஉளதாகியவெகுளியால்வருந்தீமையைச்சிறிதுபொழுதாயினும்வாராமற்காத்தலரிது. நகுஷன்பெரும்பாம்பாயினன். இதுவெகுளிபொறுத்தலரிதென்றது.
Translation:
The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure.
Explanation:
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.
30. அந்தணர்என்போர்அறவோர்மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மைபூண்டொழுகலான்.
கலைஞர்உரை:
அனைத்துஉயிர்களிடத்திலும்அன்புகொண்டுஅருள்பொழியும்சான்றோர்எவராயினும்அவர்அந்தணர்எனப்படுவார்.
மு.வஉரை:
எல்லாஉயிர்களிடத்திலும்செம்மையானஅருளைமேற்கொண்டுஒழுகுவதால், அறவோரேஅந்தணர்எனப்படுவோர்ஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
எல்லாஉயிர்களிடத்திலும்இரக்கம்கொண்டுவாழ்பவரேஅறவோர்; அவரேஅந்தணர்.
பரிமேலழகர்உரை:
எவ்வுயிர்க்கும்செந்தண்மைபூண்டுஒழுகலான் - எல்லாஉயிர்கள்மேலும்செவ்வியதண்ணளியைப்பூண்டுஒழுகலான்; அந்தணர்என்போர்அறவோர் - அந்தணரென்றுசொல்லப்படுவார்துறவறத்தில்நின்றவர். (பூணுதல்விரதமாகக்கோடல். 'அந்தணர்' என்பதுஅழகியதட்பத்தினைஉடையார்எனஏதுப்பெயர்ஆகலின், அஃதுஅவ்வருளுடையார்மேலன்றிச்செல்லாதுஎன்பதுகருத்து. அவ்வாறுஆணையுடையாராயினும்உயிர்கண்மாட்டுஅருளுடையர்என்பதுஇதனால்கூறப்பட்டது.
மணக்குடவர்உரை:
எல்லாவுயிர்க்குஞ்செவ்வியதட்பஞ்செய்தலைமேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும்துறந்தாராகக்கொள்ளப்படுவர். மேல்துறந்தவர்களினுஞ்சிறியாருளரென்றுகூறினார். இதனானேதுறவாதாரினும்பெரியாருளரென்றுகூறினார். இவையெட்டானும்துறவறத்தின்பெருமைகூறப்பட்டது.
Translation:
Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,
Explanation:
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.
Comments
Post a Comment