451-460
குறள் 451:
சிற்றினம்அஞ்சும்பெருமைசிறுமைதான்
சுற்றமாச்சூழ்ந்துவிடும்.
கலைஞர்உரை:
பெரியோர், கீழ்மக்களின்கூட்டத்தோடுசேரமாட்டார்கள். ஆனால்சிறியோர்களோஇனம்இனத்தோடுசேருமென்பதுபோல்அந்தக்கீழ்மக்கள்கூட்டத்துடன்சேர்ந்துகொள்வார்கள்.
மு.வஉரை:
பெரியோரின்இயல்புசிற்றினத்தைஅஞ்சிஒதுக்கும், சிறியோரின்இயல்புஅதையேசுற்றமாகஎண்ணித்தழுவிக்கொள்ளும்.
சாலமன்பாப்பையாஉரை:
தீயகுணத்தாரோடுசேரப்பெரியோர்அஞ்சுவர்; சிறியாரோஅவர்களைத்தம்உறவாகவேகருதிவிடுவர்.
Translation:
The great of soul will mean association fear;
The mean of soul regard mean men as kinsmen dear.
Explanation:
(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.
குறள் 452:
நிலத்தியல்பால்நீர்திரிந்தற்றாகும்மாந்தர்க்கு
இனத்தியல்பதாகும்அறிவு.
கலைஞர்உரை:
சேர்ந்தநிலத்தின்தன்மையால்நீரானதுவேறுபட்டுஅந்தநிலத்தின்தன்மையைஅடைந்துவிடும்அதுபோலமக்களின்அறிவும், தாங்கள்சேர்ந்தஇனத்தின்தன்மையைப்பெற்றதாகிவிடும்.
மு.வஉரை:
சேர்ந்தநிலத்தின்இயல்பால்அந்தநீர்வேறுபட்டுஅந்நிலத்தின்தன்மையுடையதாகும், அதுபோல்மக்களுடையஅறிவுஇனத்தின்இயல்பினைஉடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தான்சேர்ந்தநிலத்தின்தன்மையால்நீர்தன்இயல்பைஇழந்து, நிலத்தின்இயல்பாகவேமாறிவிடும்; மனிதரின்அறிவும்அவர்சேர்ந்தஇனத்தின்இயல்பாகவேஆகிவிடும்.
Translation:
The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.
Explanation:
As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.
குறள் 453:
மனத்தானாம்மாந்தர்க்குணர்ச்சிஇனத்தானாம்
இன்னான்எனப்படுஞ்சொல்.
கலைஞர்உரை:
ஒருவரின்உணர்ச்சி, மனத்தைப்பொருத்துஅமையும். அவர்இப்படிப்பட்டவர்என்றுஅளந்துசொல்வதுஅவர்சேர்ந்திடும்கூட்டத்தைப்பொருத்துஅமையும்.
மு.வஉரை:
மக்களுக்குஇயற்கையறிவுமனத்தால்ஏற்படும், இப்படிப்பட்டவன்என்றுஉலகத்தாரால்மதிக்கப்படும்சொல், சேர்ந்தஇனத்தால்ஏற்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
மக்களுக்குஇயல்பானஅறிவுஅவர்தம்மனததால்உண்டாகும்; ஆனால், ஒருவன்இப்படிப்பட்டவன்என்றுபெரியோர்சொல்லும்சொல்அவன்சார்ந்தஇனம்காரணமாகவேஉண்டாகும்.
Translation:
Perceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known.
Explanation:
The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.
குறள் 454:
மனத்துளதுபோலக்காட்டிஒருவற்கு
இனத்துளதாகும்அறிவு.
கலைஞர்உரை:
ஒருவரின்அறிவுஅவரதுமனத்தின்இயல்புஎன்பதுபோல்தோன்றினாலும், அதுஅவர்சேர்ந்தகூட்டத்தாரின்தொடர்பால்வெளிப்படுவதேயாகும்.
மு.வஉரை:
ஒருவனுக்குசிறப்பறிவுமனத்தில்உள்ளதுபோலக்காட்டி (உண்மையாகநோக்கும்போது) அவன்சேர்ந்தஇனத்தில்உள்ளதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவுஒருவன்மனத்துள்இருப்பதுபோலத்தோன்றும்; உண்மையில்அதுஅவன்சேர்ந்துள்ளஇனத்தின்பால்இருந்துபெறப்படுவதேஆகும்.
Translation:
Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find.
Explanation:
Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.
குறள் 455:
மனந்தூய்மைசெய்வினைதூய்மைஇரண்டும்
இனந்தூய்மைதூவாவரும்.
கலைஞர்உரை:
ஒருவன்கொண்டுள்ளதொடர்புதூய்மையானதாகஇருந்தால்தான்அவனுடையமனமும்செயலும்தூய்மையானவையாகஇருக்கும்.
மு.வஉரை:
மனத்தின்தூய்மைசெய்யும்செயலின்தூய்மைஆகியஇவ்விரண்டும்சேர்ந்தஇனத்தின்தூய்மையைப்பொறுத்தேஏற்ப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்தூய்மை, செய்யும்செயல்சிறப்புஆகியஇரண்டும், ஒருவன்சேர்ந்துள்ளஇனத்தின்தூய்மையைஆதாரமாகக்கொண்டேபிறக்கும்.
Translation:
Both purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near.
Explanation:
Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.
குறள் 456:
மனந்தூயார்க்கெச்சம்நன்றாகும்இனந்தூயார்க்கு
இல்லைநன்றாகாவினை.
கலைஞர்உரை:
மனத்தின்தூய்மையால்புகழும், சேர்ந்தஇனத்தின்தூய்மையால்நற்செயல்களும்விளையும்.
மு.வஉரை:
மனம்தூய்மையாகப்பெற்றவர்க்கு , அவர்க்குப்பின்எஞ்சிநிற்கும்புகழ்முதலியவைநன்மையாகும், இனம்தூய்மையாகஉள்ளவர்க்குநன்மையாகாதசெயல்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்தால்நல்லவர்க்குஅவர்விட்டுச்செல்வனவேநல்லவை; இனத்தால்நல்லவர்க்கோநல்லதாகஅமையாதசெயல்என்றுஎதுவுமேஇல்லை.
Translation:
From true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds.
Explanation:
To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.
குறள் 457:
மனநலம்மன்னுயிர்க்காக்கம்இனநலம்
எல்லாப்புகழும்தரும்.
கலைஞர்உரை:
மனத்தின்நலம்உயிருக்குஆக்கமாகவிளங்கும்இனத்தின்நலமோஎல்லாப்புகழையும்வழங்கும்.
மு.வஉரை:
மனதின்நன்மைஉயிர்க்குஆக்கமாகும், இனத்தின்தன்மை (அவ்வளவோடுநிற்காமல்) எல்லாப்புகழையும்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
நிலைபெற்றுவரும்உயிர்களுக்குமனநலம்சிறந்தசெல்வம்தரும்; இனநலமோஎல்லாப்புகழையும்தரும்.
Translation:
Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain.
Explanation:
Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.
குறள் 458:
மனநலம்நன்குடையராயினும்சான்றோர்க்கு
இனநலம்ஏமாப்புடைத்து.
கலைஞர்உரை:
மனவளம்மிக்கசான்றோராகஇருப்பினும்அவர்சேர்ந்துள்ளகூட்டத்தினரைப்பொருத்தேவலிமைவந்துவாய்க்கும்.
மு.வஉரை:
மனதின்நன்மையைஉறுதியாகஉடையவராயினும்சான்றோர்க்குஇனத்தின்நன்மைமேலும்நல்லகாவலாகஅமையும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனநலத்தைச்சிறப்பாகப்பெற்றவரேஆயினும், நல்லகுணம்உடையவர்க்குஇனநலம்பாதுகாப்பாகஇருக்கும்.
Translation:
To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong.
Explanation:
Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.
குறள் 459:
மனநலத்தின்ஆகும்மறுமைமற்றஃதும்
இனநலத்தின்ஏமாப்புடைத்து.
கலைஞர்உரை:
நல்லஉறுதியானஉள்ளம்படைத்தஉயர்ந்தோராகஇருந்தாலும்அவர்சார்ந்தஇனத்தின்உறுதியும்அவருக்குவலிமையானதுணையாகஅமையக்கூடியதாகும்.
மு.வஉரை:
மனத்தின்நன்மையால்மறுமைஇன்பம்உண்டாகும், அதுவும்இனத்தின்நன்மையால்மேலும்சிறப்புடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனுக்குமனநலத்தால்மறுமைஇன்பம்கிடைக்கும். அதுவுங்கூடஇனநலத்தால்வலிமைபெறும்.
Translation:
Although to mental goodness joys of other life belong,
Yet good companionship is confirmation strong.
Explanation:
Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.
குறள் 460:
நல்லினத்தினூங்குந்துணையில்லைதீயினத்தின்
அல்லற்படுப்பதூஉம்இல்.
கலைஞர்உரை:
நல்லஇனத்தைக்காட்டிலும்துணையாகஇருப்பதும், தீயஇனத்தைக்காட்டிலும்துன்பம்தரக்கூடியதும்எதுவுமேஇல்லை.
மு.வஉரை:
நல்லஇனத்தைவிடச்சிறந்ததாகியதுணையும்உலகத்தில்இல்லை, தீயஇனத்தைவிடத்துன்பப்படுத்தும்பகையும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனுக்குநல்லஇனத்தைக்காட்டிலும்பெரியதுணையும்இல்லை; தீயஇனத்தைக்காட்டிலும்துன்பம்தருவதும்இல்லை.
Translation:
Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe.
Explanation:
There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.
Comments
Post a Comment