461-470

குறள் 461:
அழிவதூஉம்ஆவதூஉம்ஆகிவழிபயக்கும்
ஊதியமும்சூழ்ந்துசெயல்.
கலைஞர்உரை:
எந்தஅளவுக்குநன்மைகிடைக்கும்அல்லதுதீமைஏற்படும்என்றுவிளைவுகளைக்கணக்குப்பார்த்தபிறதேஒருசெயலில்இறங்கவேண்டும்.
மு.வஉரை:
(ஒருசெயலைத்தொடங்குமுன்) அதனால்அழிவதையும்அழிந்தபின்ஆவதையும், பின்புஉண்டாகும்ஊதியத்தையும்ஆராய்ந்துசெய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்யும்போதுவரும்நட்டத்தையும், பின்விளைவையும்பார்த்து, அதற்குப்பின்வரும்லாபத்தையும்கணக்கிட்டுச்செய்க.
Translation:
Expenditure, return, and profit of the deed
In time to come; weigh these- than to the act proceed.
Explanation:
Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.

குறள் 462:
தெரிந்தஇனத்தொடுதேர்ந்தெண்ணிச்செய்வார்க்கு
அரும்பொருள்யாதொன்றும்இல்.
கலைஞர்உரை:
தெளிந்துதேர்ந்தநண்பர்களுடன், சேர்ந்து, ஆற்றவேண்டியசெயலைஆராய்ந்து, தாமும்நன்குசிந்தித்துச்செய்தால்ஆகாததுஒன்றுமில்லை.
மு.வஉரை:
ஆராய்ந்துசேர்ந்தஇனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத்தேர்ந்து, தாமும்
எண்ணிப்பார்த்துச்செய்கின்றவர்க்குஅறியபொருள்ஒன்றும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தாம்தேர்ந்துகொண்டநிருவாகச்சுற்றத்தோடுஒருசெயலைஆராய்ந்துதிட்டமிட்டுச்செய்பவர்க்குச்செய்யமுடியாதசெயல்என்றுஎதுவும்இல்லை.
Translation:
With chosen friends deliberate; next use the private thought;
Then act. By those who thus proceed all works with ease are wrought.
Explanation:
There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

குறள் 463:
ஆக்கம்கருதிமுதலிழக்கும்செய்வினை
ஊக்கார்அறிவுடையார்.
கலைஞர்உரை:
பெரும்ஆதாயம்கிட்டுமென்றுஎதிர்பார்த்துக்கைமுதலையும்இழந்துவிடக்கூடியகாரியத்தைஅறிவுடையவர்கள்செய்யமாட்டார்கள்.
மு.வஉரை:
பின்விளையும்ஊதியத்தைக்கருதிஇப்போதுகையில்உள்ளமுதலைஇழந்துவிடக்காரணமாச்செயலைஅறிவுடையோர்மேற்க்கொள்ளமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
வரும்லாபத்தைஎண்ணி, இருக்கும்முதலையும்இழந்துவிடுவதற்குஏற்றசெயலைஅறிவுள்ளவர்செய்யமாட்டார்.
Translation:
To risk one's all and lose, aiming at added gain,
Is rash affair, from which the wise abstain.
Explanation:
The Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.

குறள் 464:
தெளிவிலதனைத்தொடங்கார்இளிவென்னும்
ஏதப்பாடுஅஞ்சுபவர்.
கலைஞர்உரை:
களங்கத்துக்குப்பயப்படக்கூடியவர்கள்தான்விளைவுகளைஎண்ணிப்பார்த்துஅந்தக்களங்கம்தரும்காரியத்தில்இறங்காமல்இருப்பார்கள்.
மு.வஉரை:
கல்லாதவனுடையஇழிவுதருவதாகியக்குற்றத்திற்குஅஞ்சுகின்றவர் (இன்னஊதியம்பயிக்கும்என்னும்) தெளிவுஇல்லாதசெயலைத்தொடங்கமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
தனக்குஅவமானம்என்னும்குற்றம்வரும்என்றுபயப்படுபவர், நம்பிக்கைஇல்லாதசெயலைச்செய்யத்தொடங்கமாட்டார்.
Translation:
A work of which the issue is not clear,
Begin not they reproachful scorn who fear.
Explanation:
Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.

குறள் 465:
வகையறச்சூழாதெழுதல்பகைவரைப்
பாத்திப்படுப்பதோராறு.
கலைஞர்உரை:
முன்னேற்பாடுகளைமுழுமையாகஆராய்ந்துசெய்யாமல்பகைவரைஒடுக்கமுனைவதுஅந்தப்பகைவரின்வலிமையைநிலையாகவளர்க்கும்வழியாகஆகிவிடும்.
மு.வஉரை:
செயலின்வகைகளைஎல்லாம்முற்றஎண்ணாமல்செய்யத்தொடங்குதல், பகைவரைவளரும்பாத்தியில்நிலைபெறச்செய்வதொருவழியாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
முறையாகத்திட்டமிடாதுஒருசெயலைத்தொடங்குவது, வளரும்நிலத்திலேஎதிர்அணியினரைநிலைபெறச்செய்யும்வழியாகும்.
Translation:
With plans not well matured to rise against your foe,
Is way to plant him out where he is sure to grow!.
Explanation:
One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).

குறள் 466:
செய்தக்கஅல்லசெயக்கெடும்செய்தக்க
செய்யாமையானுங்கெடும்.
கலைஞர்உரை:
செய்யக்கூடாததைச்செய்வதால்கேடுஏற்படும்; செய்யவேண்டியதைச்செய்யாமல்விட்டாலும்கேடுஏற்படும்.
மு.வஉரை:
ஒருவன்செய்யத்தகாதசெயல்களைச்செய்வதனால்கெடுவான், செய்யத்தக்கசெயல்களைசெய்யாமல்விடுவதனாலும்கெடுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
செய்யக்கூடாதவற்றைச்செய்தாலும்செய்யவேண்டியவற்றைச்செய்யாமல்விட்டாலும்அழிவுவரும்.
Translation:
'Tis ruin if man do an unbefitting thing;
Fit things to leave undone will equal ruin bring.
Explanation:
He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.

குறள் 467:
எண்ணித்துணிககருமம்துணிந்தபின்
எண்ணுவம்என்பதுஇழுக்கு.
கலைஞர்உரை:
நன்றாகச்சிந்தித்தபிறகேசெயலில்இறங்கவேண்டும்; இறங்கியபிறகுசிந்திக்கலாம்என்பதுதவறு.
மு.வஉரை:
(செய்யத்தகுந்த) செயலையும்வழிகளைஎண்ணியபிறகேதுணிந்துதொடங்கவேண்டும், துணிந்தபின்எண்ணிப்பார்க்கலாம்என்பதுகுற்றமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்துமுடிக்கும்வழியைஅறிந்துதொடங்குக. தொடங்கியபின்அதுபற்றிஎண்ணிக்கொள்வோம்என்பதுகுற்றம்.
Translation:
Think, and then dare the deed! Who cry,
'Deed dared, we'll think,' disgraced shall be.
Explanation:
Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.

குறள் 468:
ஆற்றின்வருந்தாவருத்தம்பலர்நின்று
போற்றினும்பொத்துப்படும்.
கலைஞர்உரை:
எத்தனைபேர்தான்துணையாகஇருந்தாலும்முறையாகச்செய்யப்படாதமுயற்சிஇறுதியில்முடங்கிப்போய்விடும்.
மு.வஉரை:
தக்கவழியில்செய்யப்படாதமுயற்சிபலர்துணையாகநின்று(அதைமுடிக்குமாறு) காத்தபோதிலும்குறையாகிவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைமுடிக்கும்வழிஅறியாதுதொடங்கினால், பலர்சேர்ந்துதுணைசெய்தாலும், அச்செயல்கெட்டுப்போகும்.
Translation:
On no right system if man toil and strive,
Though many men assist, no work can thrive.
Explanation:
The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

குறள் 469:
நன்றாற்றலுள்ளுந்தவுறுண்டுஅவரவர்
பண்பறிந்தாற்றாக்கடை.
கலைஞர்உரை:
ஒருவருடையஇயல்பைப்புரிந்துகொண்டுதான்நன்மையைக்கூடச்செய்யவேண்டும். இல்லாவிட்டால்அதுவேதீமையாகத்திருப்பித்தாக்கும்.
மு.வஉரை:
அவரவருடையஇயல்புகளைஅறிந்துஅவரவருக்குப்பொருந்துமாறுசெய்யாவிட்டால், நன்மைசெய்வதிலும்தவறுஉண்டாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அவர்அவர்குணநலன்களைஅறிந்துசெயல்ஆற்றாவிட்டால்நல்லதுசெய்வதிலும்பிழைநேர்ந்துவிடும்.
Translation:
Though well the work be done, yet one mistake is made,
To habitudes of various men when no regard is paid.
Explanation:
There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.

குறள் 470:
எள்ளாதஎண்ணிச்செயல்வேண்டும்தம்மோடு
கொள்ளாதகொள்ளாதுஉலகு.
கலைஞர்உரை:
தம்முடையநிலைமைக்குமாறானசெயல்களைஉயர்ந்தோர்பாராட்டமாட்டார்கள்என்பதால், அவர்கள்பழித்துரைக்காதசெயல்களையேசெய்திடல்வேண்டும்.
மு.வஉரை:
தம்நிலையோடுபொருந்தாதவற்றைஉலகம்ஏற்றுக்கொள்ளாது, ஆகையால்உலகம்இகழ்ந்துதள்ளாதசெயல்களைஆராய்ந்துசெய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்தகுதிக்குப்பொருந்தாதவழிமுறைகளைச்செய்தால்மக்கள்அதைஇகழ்வர்; அதனால்மக்கள்இகழாதவழிமுறைகளைஎண்ணிச்செய்யவேண்டும்.
Translation:
Plan and perform no work that others may despise;
What misbeseems a king the world will not approve as wise.
Explanation:
Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290