41. இல்வாழ்வான்என்பான்இயல்புடையமூவர்க்கும்
நல்லாற்றின்நின்றதுணை.
கலைஞர்உரை:
பெற்றோர், வாழ்க்கைத்துணை, குழந்தைகள்எனஇயற்கையாகஅமைந்திடும்மூவர்க்கும்துணையாகஇருப்பதுஇல்லறம்நடத்துவோர்கடமையாகும்.
மு.வஉரை:
இல்லறத்தில்வாழ்பவனாகச்சொல்லப்படுகிறவன்அறத்தின்இயல்பைஉடையமூவருக்கும்நல்வழியில்நிலைபெற்றதுணையாவான்.
சாலமன்பாப்பையாஉரை:
மனைவியோடுவாழ்பவன்தான்பிள்ளைகள், பெற்றோர், உறவினர்என்னும்மூவர்க்கும்நல்லவழியில்உதவுபவன்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, இல்லாளோடுகூடிவாழ்தலினதுசிறப்பு.இந்நிலைஅறம்செய்தற்குஉரியஇருவகைநிலையுள்முதலதுஆதலின், இஃதுஅறன்வலியுறுத்தலின்பின்வைக்கப்பட்டது)
இல்வாழ்வான்என்பான் - இல்லறத்தோடுகூடிவாழ்வான்என்றுசொல்லப்படுவான்; இயல்புஉடையமூவர்க்கும்நல்ஆற்றின்நின்றதுணை- அறஇயல்பினையுடையஏனைமூவர்க்கும்நல்ஆற்றின்நின்றதுணை - அறஇயல்பினையுடையஏனைமூவர்க்கும்அவர்செல்லும்நல்லொழுக்கநெறிக்கண்நிலைபெற்றதுணைஆம். (இல்என்பதுஆகுபெயர். என்பான்எனச்செயப்படுபொருள்வினைமுதல்போலக்கூறப்பட்டது. ஏனைமூவர்ஆவார், ஆசாரியனிடத்தினின்றுஓதுதலும்விரதங்காத்தலும்ஆகியபிரமசரியஒழுக்கத்தானும், இல்லைவிட்டுவனத்தின்கண்தீயொடுசென்றுமனையாள்வழிபடத்தவஞ்செய்யும்ஒழுக்கத்தானும், முற்றத்துறந்தயோகஒழுக்கத்தானும்எனஇவர்; இவருள்முன்னைஇருவரையும்பிறர்மதம்மேற்கொண்டுகூறினார். இவர்இவ்வொழுக்கநெறிகளைமுடியச்செல்லுமளவும், அச்செலவிற்குப்பசிநோய், குளிர்முதலியவற்றான்இடையூறுவாராமல், உண்டியும்மருந்தும்உறையுளும்முதலியஉதவி, அவ்வந்நெறிகளின்வழுவாமல்செலுத்துதலான் 'நல்ஆற்றின்நின்றதுணை' என்றார்.).
மணக்குடவர்உரை:
இல்வாழ்வானென்றுசொல்லப்படுபவன்இயல்புடையமூவர்க்கும்நல்லவழியின்கண்ணேநின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகியமூவர்) என்றதுதானமாகியவில்லறஞ்செய்யுமவன்தவத்தின்பாற்பட்டவிரதங்கொண்டொழுகாநின்றபிரமச்சாரிக்கும், தவமேற்கொண்டொழுகாநின்றவானப்பிரஸ்தன்ஸந்நியாசிகளுக்கும், தத்தம்நிலைகுலையாமலுணவுமுதலாயினகொடுத்துப்பாதுகாத்தலின்அவர்க்குநல்லுலகின்கண்செல்லும்நெறியிலேநின்றவொருதுணையென்றுகூறியவாறாயிற்று. துணையென்பதுஇடையூறுவாராமலுய்த்துவிடுவாரை.
Translation:
The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain.
Explanation:
He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.
42. துறந்தார்க்கும்துவ்வாதவர்க்கும்இறந்தார்க்கும்
இல்வாழ்வான்என்பான்துணை.
கலைஞர்உரை:
பற்றற்றதுறவிகட்கும், பசியால்வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும்இல்லறவாழ்வுநடத்துவோர்துணையாகஇருத்தல்வேண்டும்.
மு.வஉரை:
துறந்தவர்கும்வறியவர்க்கும்தன்னிடத்தேஇறந்தவர்க்கும்இல்லறம்மேற்கொண்டுவாழ்கிறவன்துணையாவான்.
சாலமன்பாப்பையாஉரை:
மனைவியோடுவாழ்பவன்தான்துறவியர், வறுமைப்பட்டவர், இறந்துபோனவர்என்பவர்க்கும்உதவுபவன்.
பரிமேலழகர்உரை:
துறந்தார்க்கும்- களைகண்ஆனவரால்துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித்தன்பால்வந்துஇறந்தார்க்கும்; இல்வாழ்வான்என்பான் 'துணை'-இல்வாழ்வானென்றுசொல்லப்படுவான்துணை (துறந்தார்க்குப்பாவம்ஒழியஅவர்களைகணாய்நின்றுவேண்டுவனசெய்தலானும், துவ்வாதவர்க்குஉணவுமுதலியகொடுத்தலானும், இறந்தார்க்குநீர்க்கடன்முதலியசெய்துநல்லுலகின்கண்செலுத்தலானும், துணைஎன்றார். இவைஇரண்டுபாட்டானும்இல்நிலைஎல்லாஉபகாரத்திற்கும்உரித்தாதல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
வருணத்தினையும்நாமத்தினையுந்துறந்தார்க்கும், துறவாதுநல்குரவாளராயுண்ணப்பெறாதார்க்கும், பிறராய்வந்துசெத்தார்க்கும்இல்வாழ்வானென்றுசொல்லப்படுமவன்துணையாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்). மேற்கூறியமூவரும்வருணநாமங்களைத்துறவாமையாலீண்டுத்துறந்தாரென்றுகூறினார். செத்தார்க்கிவன்செய்யவேண்டியபுறங்காட்டுய்த்தல்முதலாயின. இதுமேற்கூறியவர்க்கேயன்றிஇவர்க்கும்துணையென்றுகூறிற்று.
Translation:
To anchorites, to indigent, to those who've passed away, The man for household virtue famed is needful held and stay.
Explanation:
He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.
43. தென்புலத்தார்தெய்வம்விருந்தொக்கல்தானென்றாங்கு
ஐம்புலத்தாறுஓம்பல்தலை.
கலைஞர்உரை:
வாழ்ந்துமறைந்தோரைநினைவுகூர்தல், வாழ்வாங்குவாழ்வோரைப்போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம்பேணல்ஆகியகடமைகளைநிறைவேற்றத்தன்னைநிலைப்படுத்திக்கொள்ளல்எனப்படும்ஐவகைஅறநெறிகளும்இல்வாழ்வுக்குரியனவாம்.
மு.வஉரை:
தென்புலத்தார், தெய்வம்விருந்தினர், சுற்றத்தார், தான்என்றஐவகையிடத்தும்அறநெறிதவறாமல்போற்றுதல்சிறந்தகடமையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
இறந்துதென்திசையில்வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான்என்னும்ஐந்துபேருக்கும்செய்யவேண்டியஅறத்தைத்தவறாமல்செய்வதுசிறப்பு.
பரிமேலழகர்உரை:
தென்புலத்தார்தெய்வம்விருந்துஒக்கல்தான்என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார்தான்என்றுசொல்லப்பட்ட; ஐம்புலத்துஆறுஓம்பல்தலை - ஐந்துஇடத்தும்செய்யும்அறநெறியைவழுவாமல்செய்தல்இல்வாழ்வானுக்குச்சிறப்புடையஅறம்ஆம். (பிதிரராவார்படைப்புக்காலத்துஅயனால்படைக்கப்பட்டதோர்கடவுட்சாதி; அவர்க்குஇடம்தென்திசைஆதலின், 'தென்புலத்தார்' என்றார். தெய்வம்என்றதுசாதியொருமை. 'விருந்து' என்பதுபுதுமை; அஃதுஈண்டுஆகுபெயராய்ப்புதியவராய்வந்தார்மேல்நின்றது; அவர்இருவகையர்: பண்டுஅறிவுண்மையின்குறித்துவந்தாரும், அஃதுஇன்மையின்குறியாதுவந்தாரும்என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லாஅறங்களும்தான்உளனாய்நின்றுசெய்யவேண்டுதலின்தன்னைஓம்பலும்அறனாயிற்று. 'என்றஎன்பதுவிகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும்அறம்செய்தற்குஇடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்குஇறைப்பொருள்ஆறில்ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும்ஐந்துகூறுவேண்டுதலான்என்பதறிக.).
மணக்குடவர்உரை:
பிதிரர், தேவர், புதியராய்வந்தார், சுற்றத்தார், தானென்னுமைந்திடமாகியநெறியைக்கெடாமலோம்புதல்தலையானஇல்வாழ்க்கை. தனக்குண்டானபொருளைஆறுகூறாக்கிஒருகூறுஅரசற்குக்கொடுத்துஒழிந்தவைந்துகூறினுந்தான்கொள்வதுஒருகூறென்றற்குத்தன்னையுமெண்ணினார். இதுதலையானஇல்வாழ்க்கைவாழும்வாழ்வுகூறிற்று: என்னை? இவையெல்லாமொருங்குசெய்யப்படுதலின்மேற்கூறியஅறுவரும்விருந்தினதுவகையினரென்றுகொள்ளப்படுவர்.
Translation:
The manes, God, guests kindred, self, in due degree, These five to cherish well is chiefest charity.
Explanation:
The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.
44. பழியஞ்சிப்பாத்தூண்உடைத்தாயின்வாழ்க்கை
வழியெஞ்சல்எஞ்ஞான்றும்இல்.
கலைஞர்உரை:
பழிக்குஅஞ்சாமல்சேர்த்தபொருள்கணக்கின்றிஇருப்பினும்அதைவிட, பழிக்குஅஞ்சிச்சேர்த்தபொருளைப்பகுத்துஉண்ணும்பண்பிலேதான்வாழ்க்கையின்ஒழுக்கமேஇருக்கிறது.
மு.வஉரை:
பொருள்சேர்க்கும்பொதுபழிக்குஅஞ்சிச்சேர்த்து, செலவுசெய்யும்போதுபகுந்துஉண்பதைமேற்க்கொண்டால், அவ்வாழ்கையின்ஒழுங்குஎப்போதும்குறைவதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
பொருள்தேடும்போதுபாவத்திற்குப்பயந்துதேடியபொருளைஉறவோடுபகிர்ந்துஉண்ணும்இல்வாழ்பவனின்பரம்பரைஒருகாலும்அழிவதில்லை.
பரிமேலழகர்உரை:
பழிஅஞ்சிப்பாத்துஊண்வாழ்க்கைஉடைத்தாயின் - பொருள்செய்யுங்கால்பாவத்தைஅஞ்சிஈட்டி, அப்பொருளைஇயல்புஉடையமூவர்முதலாயினார்க்கும்தென்புலத்தார்முதலியநால்வர்க்கும்பகுத்துத்தான்உண்டலைஒருவன்இல்வாழ்க்கைஉடைத்தாயின்; வழிஎஞ்ஞான்றும்எஞ்சல்இல் - அவன்வழிஉலகத்துஎஞ்ஞான்றும்நிற்றல்அல்லதுஇறத்தல்இல்லை. (பாவத்தான்வந்தபிறன்பொருளைப்பகுத்துஉண்ணின், அறம்பொருளுடையார்மேலும், பாவம்தன்மேலுமாய்நின்றுவழிஎஞ்சும்ஆகலின், 'பழிஅஞ்சி' என்றார். வாழ்வானதுஉடைமைவாழ்க்கைமேல்ஏற்றப்பட்டது.).
மணக்குடவர்உரை:
இல்வாழ்க்கையாகியநிலை, பழியையுமஞ்சிபகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல்எக்காலத்தினுமில்லை. மேல்பகுக்குமாறுகூறினார். பகுக்குங்காற்பழியோடுவாராதபொருளைப்பகுக்கவேண்டுமென்றுகூறினார்.
Translation:
Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs.
Explanation:
His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).
45. அன்பும்அறனும்உடைத்தாயின்இல்வாழ்க்கை
பண்பும்பயனும்அது.
கலைஞர்உரை:
இல்வாழ்க்கைபண்புடையதாகவும்பயனுடையதாகவும்விளங்குவதற்குஅன்பானஉள்ளமும்அதையொட்டியநல்லசெயல்களும்தேவை.
மு.வஉரை:
இல்வாழ்க்கையின்அன்பும்அறமும்உடையதாகவிளங்குமானால், அந்தவாழக்கையின்பண்பும்பயனும்அதுவேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனைவிபிள்ளைகளிடத்தில்அன்பும், தேடியபொருளைநட்புசுற்றங்களுடன்பகிர்ந்துகொள்ளும்அறமும்இருந்தால்இல்வாழ்க்கையின்பண்பும்அதுவே; பயனும்அதுவே.
பரிமேலழகர்உரை:
இல்வாழ்க்கைஅன்பும்அறனும்உடைத்தாயின் - ஒருவன்இல்வாழ்க்கைதன்துணைவிமேல்செய்யத்தகும்அன்பினையும், பிறர்க்குப்பகுத்துஉண்டல்ஆகியஅறத்தினையும்உடைத்தாயின்; அதுபண்பும்பயனும் - அவ்வுடைமைஅதற்குப்பண்பும்பயனும்ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும்கணவற்கும்நெஞ்சுஒன்றாகாவழிஇல்லறம்கடைபோகாமையின், அன்புடைமைபண்புஆயிற்று; அறனுடைமைபயன்ஆயிற்று. இவைமூன்றுபாட்டானும்இல்நிலையில்நின்றான்அறஞ்செய்யுமாறுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
இல்வாழ்க்கையாகியநிலையாவர்மட்டும்அன்புசெய்தலையும்அறஞ்செய்தலையும்உடைத்தாயின், அதற்குக்குணமாவதும்பயனாவதும்அவ்விரண்டினையுமுடைமைதானே. பயன்வேறுவேண்டாம் :தனக்கும்பிறர்க்கும்உண்டானமுகமலர்ச்சிதானேயமையுமென்பது. இதுபழியோடுவாராதவுணவைநுகரவேற்பார்மாட்டுஅன்புசெய்யவேண்டுமென்பதும்சீலனாய்க்கொடுக்கவேண்டுமென்பதும்கூறிற்று.
Translation:
If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain.
Explanation:
If the married life possess love and virtue, these will be both its duty and reward.
46. அறத்தாற்றின்இல்வாழ்க்கைஆற்றின்புறத்தாற்றில்
போஒய்ப்பெறுவஎவன்.
கலைஞர்உரை:
அறநெறியில்இல்வாழ்க்கையைஅமைத்துக்கொண்டவர்கள்பெற்றிடும்பயனை, வேறுநெறியில்சென்றுபெற்றிடஇயலுமோ? இயலாது.
மு.வஉரை:
ஒருவன்அறநெறியில்இல்வாழ்க்கையைச்செலுத்திவாழ்வானானால், அத்தகையவன்வேறுநெறியில்சென்றுபெறத்தக்கதுஎன்ன?.
சாலமன்பாப்பையாஉரை:
மனைவியோடுகூடியவாழ்க்கையைஅதற்குரியஇயல்புகளோடுஅறவழிகளில்நடத்தினால்இல்லறத்திற்குமாறானபிறவழிகளில்போய்ப்பெறும்பயன்தான்என்ன?.
பரிமேலழகர்உரை:
இல்வாழ்க்கைஅறத்தாற்றின்ஆற்றின் - ஒருவன்இல்வாழ்க்கையைஅறத்தின்வழியேசெலுத்துவன்ஆயின்; புறத்தாற்றின்போஒய்ப்பெறுவதுஎவன் - அவன்அதற்குப்புறம்ஆகியநெறியில்போய்ப்பெறும்பயன்யாது? ('அறத்தாறு' என்பதுபழிஅஞ்சிப்பகுத்துஉண்டலும், அன்புஉடைமையும்எனமேற்சொல்லியஆறு. 'புறத்தாறு' இல்லைவிட்டுவனத்துச்செல்லும்நிலை. அந்நிலையின்இதுபயனுடைத்துஎன்பார், போஒய்ப்பெறுவதுஎவன்என்றார்.).
மணக்குடவர்உரை:
இல்வாழ்க்கையாகியநிலையைஅறநெறியிலேசெலுத்தவல்லவனாயின்புறநெறியாகியதவத்திற்போய்ப்பெறுவதுயாதோ?. மேல்சீலனாய்க்கொடுக்கவேண்டுமென்றார்அவ்வாறுசெய்யின்தவப்பயனும்இதுதானேதருமென்றார்.
Translation:
If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain?
Explanation:
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
47. இயல்பினான்இல்வாழ்க்கைவாழ்பவன்என்பான்
முயல்வாருள்எல்லாம்தலை.
கலைஞர்உரை:
நல்வாழ்வுக்கானமுயற்சிகளைமேற்கொள்வோரில்தலையானவராகத்திகழ்பவர், இல்வாழ்வின்இலக்கணமுணர்ந்துஅதற்கேற்பவாழ்பவர்தான்.
மு.வஉரை:
அறத்தின்இயல்பொடுஇல்வாழ்கைவாழ்கிறவன்- வாழமுயல்கிறவன்பலதிறத்தாரிலும்மேம்பட்டுவிளங்குகிறவன்ஆவான்.
சாலமன்பாப்பையாஉரை:
கடவுளைஅறியவும், அடையவும்முயல்பவருள்மனைவியோடுகூடியவாழ்க்கையைஅதற்குரியஇயல்புகளோடுவாழ்பவனேமுதன்மையானவன்.
பரிமேலழகர்உரை:
இல்வாழ்க்கைஇயல்பினான்வாழ்பவன்என்பான் - இல்வாழ்க்கைக்கண்நின்றுஅதற்குஉரியஇயல்போடுகூடிவாழ்பவன்என்றுசொல்லப்படுவான்; முயல்வாருள்எல்லாம்தலை - புலன்களைவிடமுயல்வார்எல்லாருள்ளும்மிக்கவன். (முற்றத்துறந்தவர்விட்டமையின், 'முயல்வார்' என்றதுமூன்றாம்நிலையில்நின்றாரை. அந்நிலைதான்பலவகைப்படுதலின், எல்லாருள்ளும்எனவும், முயலாதுவைத்துப்பயன்எய்துதலின், 'தலை' எனவும்கூறினார்.).
மணக்குடவர்உரை:
நெறியினானேயில்வாழ்க்கைவாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந்தலையாவான். முயறல்- பொருட்குமுயறல்.
Translation:
In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place.
Explanation:
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.
குறள் 48:
ஆற்றின்ஒழுக்கிஅறனிழுக்காஇல்வாழ்க்கை
நோற்பாரின்நோன்மைஉடைத்து.
கலைஞர்உரை:
தானும்அறவழியில்நடந்து, பிறரையும்அவ்வழியில்நடக்கச்செய்திடுவோரின்இல்வாழ்க்கை, துறவிகள்கடைப்பிடிக்கும்நோன்பைவிடப்பெருமையுடையதாகும்.
மு.வஉரை:
மற்றவரைஅறநெறியில்ஒழுகச்செய்துதானும்அறம்தவறாதஇல்வாழ்க்கை , தவம்செய்வாரைவிடமிகச்சிறந்தவல்லமைஉடையவாழ்க்கையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மற்றவர்களைஅவர்களின்வழியில்வாழச்செய்து, தானும்அறத்திலிருந்துவிலகாமல், மனைவியுடன்வாழும்வாழ்க்கை, துறவறத்தார்காட்டும்பொறுமையிலும்வலிமைமிக்கது.
பரிமேலழகர்உரை:
ஆற்றின்ஒழுக்கிஅறன்இழுக்காஇல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும்தத்தம்நெறியின்கண்ஒழுகப்பண்ணித்தானும்தன்அறத்தின்தவறாதஇல்வாழ்க்கை; நோற்பாரின்நோன்மைஉடைத்து - அத்தவஞ்செய்வார்நிலையினும்பொறையுடைத்து. (பசிமுதலியஇடையூறுநீக்கலின் 'ஆற்றின்ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பதுஆகுபெயர்.நோற்பார்நிலைக்குஅவர்தம்மைஉற்றநோயல்லதுஇல்வாழ்வார்நிலைபோல்பிறரைஉற்றநோயும்பொறுத்தல்இன்மையின், 'நோற்பாரின்நோன்மையுடைத்து' என்றார்.).
மணக்குடவர்உரை:
பிறரையும்நன்னெறியிலேஒழுகப்பண்ணித்தானும்அறத்தின்பாலொழுகும்இல்வாழ்க்கைதவஞ்செய்வாரினும்வலியுடைத்து. ஒழுகப்பண்ணலாவதுஅவர்க்குவேண்டுவனஅமைத்தல். இதுதவத்தினும்வலியுடைத்தென்றது.
Translation:
Others it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics' pains such life domestic brighter shines.
Explanation:
The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.
குறள் 49:
அறனென்ப்பட்டதேஇல்வாழ்க்கைஅஃதும்
பிறன்பழிப்பதில்லாயின்நன்று.
கலைஞர்உரை:
பழிப்புக்குஇடமில்லாதஇல்வாழ்க்கைஇல்லறம்எனப்போற்றப்படும்.
மு.வஉரை:
அறம்என்றுசிறப்பித்துசொல்லப்பட்டதுஇல்வாழ்க்கையேஆகும். அதுவும்மற்றவன்பழிக்கும்குற்றம்இல்லாமல்விளங்கினால்மேலும்நன்மையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறம்என்றுசிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன்வாழும்வாழ்க்கையே; துறவறவாழ்க்கையும், பிறரால்பழிக்கப்படாமல்இருக்குமானால்நல்லது.
பரிமேலழகர்உரை:
அறன்எனப்பட்டதுஇல்வாழ்க்கை - இருவகைஅறத்தினும்நூல்களான்அறன்என்றுசிறப்பித்துச்சொல்லப்பட்டதுஇல்வாழ்க்கையே; அஃதும்பிறன்பழிப்பதுஇல்லாயின்நன்று - ஏனைத்துறவறமோஎனின், அதுவும்பிறனால்பழிக்கப்படுவதுஇல்லையாயின், அவ்வாழ்க்கையோடுஒருதன்மைத்தாகநன்று. (ஏகாரம்பிரிநிலைக்கண்வந்தது. இதனால்பிரிக்கப்பட்டதுதுறவறம்ஆதலின், 'அஃது' என்னும்சுட்டுப்பெயர்அதன்மேல்நின்றது. 'பிறன்பழிப்பது' என்றதுகூடாவொழுக்கத்தை. துறவறம்மனத்தையும்பொறிகளையும்ஒறுத்துஅடக்கவல்லஅருமையுடைத்தாயவழியே, அவற்றைஒறுக்கவேண்டாதுஐம்புலஇன்பங்கள்ஆரத்துய்க்கும்மென்மையுடையஇல்வாழ்க்கையோடுஅறம்எனஒருங்குஎண்ணப்படுவதுஎன்றவாறுஆயிற்று. இவைநான்குபாட்டானும்இல்நிலையேபயனுடைத்துஎனஇதன்சிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அறனென்றுசிறப்பித்துச்சொல்லப்பட்டதுஇல்வாழ்க்கையே. அதுவும்நன்றாவதுபிறனொருவனாற்பழிக்கப்படுவதொன்றையுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றதுஇழிகுலத்தாளாகியமனையாளை. இனிவாழ்க்கைத்துணைநலங்கூறுகின்றாராகலின், இதுகூறப்பட்டது.
Translation:
The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim.
Explanation:
The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.
குறள் 50:
வையத்துள்வாழ்வாங்குவாழ்பவன்வான்உநற்யும்
தெய்வத்துள்வைக்கப்படும்.
கலைஞர்உரை:
தெய்வத்துக்கெனஎத்தனையோஅருங்குணங்கள்கூறப்படுகின்றன. உலகில்வாழவேண்டியஅறநெறியில்நின்றுவாழ்கிறவன்வானில்வாழ்வதாகச்சொல்லப்படும்தெய்வத்துக்குஇணையாகவைத்துமதிக்கப்படுவான்.
மு.வஉரை:
உலகத்தில்வாழவேண்டியஅறநெறியில்நின்றுவாழ்கிறவன், வானுலகத்தில்உள்ளதெய்வமுறையில்வைத்துமதிக்கப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
மனைவியுடன்வாழும்வாழ்க்கையைச்சிறப்பாகவாழ்பவன், பூமியில்வாழ்ந்தாலும், வானத்துள்வாழும்தேவருள்ஒருவனாகவேமதிக்கப்படுவான்.
பரிமேலழகர்உரை:
வாழ்வாங்குவையத்துள்வாழ்பவன் - இல்லறத்தோடுகூடிவாழும்இயல்பினால்வையத்தின்கண்வாழ்பவன்; வான்உறையும்தெய்வத்துள்வைக்கப்படும்- வையத்தானேஎனினும்வானின்கண்உறையும்தேவருள்ஒருவனாகவைத்துநன்குமதிக்கப்படும். பின்தேவனாய்அவ்வறப்பயன்நுகர்தல்ஒருதலையாகலின், 'தெய்வத்துள்வைக்கப்படும்' என்றார். இதனான்இல்நிலையதுமறுமைப்பயன்கூறப்பட்டது. இம்மைப்பயன்புகழ், அதனைஇறுதிக்கண்கூறுப.(அதி.24.புகழ்).
மணக்குடவர்உரை:
இல்வாழ்க்கைவாழும்படியிலேவாழுமவன்உலகத்திலேதேவருள்ஒருவனாகமதிக்கப்படுவன். இவன்எல்லாராலும்நன்குமதிக்கப்படுவனென்றவாறு.
Translation:
Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed.
Explanation:
He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.
Comments
Post a Comment