881-890

குறள் 881:
நிழல்நீரும்இன்னாதஇன்னாதமர்நீரும்
இன்னாவாம்இன்னாசெயின்.
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.

கலைஞர்உரை:
இனிமையாகத்தெரியும்நிழலும்நீரும்கூடக்கேடுவிளைவிக்கக்கூடியவையாகஇருந்தால்அவைதீயவைகளாகவேகருதப்படும். அதுபோலவேதான்உற்றார்உறவினராகஉள்ளவர்களின்உட்பகையும்ஆகும்.
மு.வஉரை:
இன்பம்தரும்நிழலும்நீரும்நோய்செய்வனவாகஇருந்தால்தீயனவேஆகும், அதுபோலவேசுற்றத்தாறின்தன்மைகளும்துன்பம்தருவானால்தீயனவேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நிழலும்நீரும்முதலில்இனியவாகஇருந்தாலும், பிறகுதுன்பம்தருவனவே. அதபோல, நெருக்கமானஉறவும்சொந்தக்கட்சிக்காரரும்கூடப்பழக்கத்தில்இனியவராகஇருந்து, செயலில்துன்பம்தந்தால்அதுபெருந்துன்பமே.
Translation:
Water and shade, if they unwholesome prove, will bring you pain. And qualities of friends who treacherous act, will be your bane.
Explanation:
Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.

குறள் 882:
வாள்போலபகைவரைஅஞ்சற்கஅஞ்சுக
கேள்போல்பகைவர்தொடர்பு.
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

கலைஞர்உரை:
வெளிப்படையாகஎதிரேவரும்பகைவர்களைவிடஉறவாடிக்கெடுக்கநினைப்பவர்களிடம்தான்எச்சரிக்கையாகஇருக்கவேண்டும்.
மு.வஉரை:
வாளைப்போல்வெளிப்படையானபகைவர்க்குஅஞ்சவேண்டியதில்லை, ஆனால்உறவினரைப்போல்இருந்துஉட்பகைகொண்டவரின்தொடர்புக்குஅஞ்சவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
வாளைப்போல்வெளிப்படையாகத்தெரியும்பகைவர்க்குஅஞ்சவேண்டா; நண்பரைப்போல்வெளியில்காட்டிமனத்துள்பகைவராகவேஇருப்போரின்தொடர்புக்குஅஞ்சுக.
Translation:
Dread not the foes that as drawn swords appear; Friendship of foes, who seem like kinsmen, fear!.
Explanation:
Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.

குறள் 883:
உட்பகைஅஞ்சித்தற்காக்கஉலைவிடத்து
மட்பகையின்மாணத்தெறும்.

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

கலைஞர்உரை:
உட்பகைக்குஅஞ்சிஒருவன்தன்னைப்பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால்ஒருசோதனையானநேரத்தில்பச்சைபாண்டத்தைஅறுக்கும்கருவிபோலஅந்தஉட்பகைஅழிவுசெய்துவிடும்.
மு.வஉரை:
உட்பகைக்குஅஞ்சிஒருவன்தன்னைக்காத்துக்கொள்ளவேண்டும், தளர்ச்சிவந்தபோதுமட்கலத்தைஅறுக்கும்கருவிபோல்அந்தஉட்பகைதவறாமல்அழிவுசெய்யும்.
சாலமன்பாப்பையாஉரை:
உட்பகைக்குஅஞ்சித்தன்னைக்காத்துக்கொள்க; காக்காதுபோனால்நமக்குத்தளர்வுவந்தபோது, மண்கலத்தைஅறுக்கும்கைக்கருவிபோலஉட்பகையானவர்நம்மைஉறுதியாகஅழித்துவிடுவர்.
Translation:
Of hidden hate beware, and guard thy life; In troublous time 'twill deeper wound than potter's knife.
Explanation:
Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay.

குறள் 884:
மனமாணாஉட்பகைதோன்றின்இனமாணா
ஏதம்பலவும்தரும்.

மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

கலைஞர்உரை:
மனம்திருந்தாதஅளவுக்குஉட்பகைவிளைவிக்கும்உணர்வுஒருவனுக்குஏற்பட்டுவிடுமானால், அதுஅவனைச்சேர்ந்தவர்களையேபகைவராக்கும்கேட்டினைஉண்டாக்கிவிடும்.
மு.வஉரை:
மனம்திறந்தாதஉட்பகைஒருவனுக்குஉண்டாகுமானால், அதுஅவனுக்குச்சுற்றம்சிர்படாமைக்குகாரணமானகுற்றம்பலவற்றைத்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
புறத்தேநட்பானவர்போல்தோன்றிஅகத்தேதிருந்ததாதஉட்பகைஉண்டானால், அதுநம்சுற்றமும்நம்கட்சிக்காரரும்நம்வசப்படாதிருக்கும்படிபலசிக்கல்களையும்உண்டாக்கும்.
Translation:
If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurt.
Explanation:
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations.

குறள் 885:
உறல்முறையான்உட்பகைதோன்றின்இறல்முறையான்
ஏதம்பலவும்தரும்.

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
கலைஞர்உரை:
நெருங்கியஉறவினருக்கிடையேதோன்றும்உட்பகையானதுஅவர்களுக்குக்கேடுவிளைவிக்கக்கூடியபலதுன்பங்களைஉண்டாக்கும்.
மு.வஉரை:
உறவுமுறையோடுஉட்பகைஉண்டாகுமானால், அதுஒருவனுக்குஇறக்கும்வகையானதுன்பம்பலவற்றையும்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
உறவுமுறையைஉடையவனே ( சொந்தக்கட்சிக்காரனே) உட்பகையானால், அதுசாவோடுகூடியகுற்றம்பலவற்றையும்உண்டாக்கும்.
Translation:
Amid one's relatives if hidden hath arise, 'Twill hurt inflict in deadly wise.
Explanation:
If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.

குறள் 886:
ஒன்றாமைஒன்றியார்கட்படின்எஞ்ஞான்றும்
பொன்றாமைஒன்றல்அரிது.

ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

கலைஞர்உரை:
ஒன்றிஇருந்தவர்களிடையேஉட்பகைதோன்றிவிடுமானால், அதனால்ஏற்படும்அழிவைத்தடுப்பதுஎன்பதுஎந்தக்காலத்திலும்அரிதானசெயலாகும்.
மு.வஉரை:
ஒருவனுடையஉற்றாரிடத்தில்பகைமைஏற்படுமானால், அந்தஉட்பகையால்அவன்அழியாமலிருத்தல்எப்போதும்அரிது.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னுடன்இருப்பவரின்பகைதோன்றுமானால், ஆட்சியின்அழிவைத்தடுக்கஒருபோதும்முடியாது.
Translation:
If discord finds a place midst those who dwelt at one before, 'Tis ever hard to keep destruction from the door.
Explanation:
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.

குறள் 887:
செப்பின்புணர்ச்சிபோல்கூடினும்கூடாதே
உட்பகைஉற்றகுடி.

செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.

கலைஞர்உரை:
செப்புஎனப்படும்சிமிழில்அதன்மூடிபொருந்தியிருப்பதுபோலவெளித்தோற்றத்துக்குமட்டுமேதெரியும்அவ்வாறேஉட்பகையுள்ளவர்கள்உளமாரப்பொருந்தியிருக்கமாட்டார்கள்.
மு.வஉரை:
செப்பின்இணைப்பைப்போலபுறத்தேபொருந்திஇருந்தாலும், உட்பகைஉண்டானகுடியில்உள்ளவர்அகத்தேபொருந்திஇருக்கமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
செப்பு, மூடியோடுசேர்ந்துஇருப்பதுபோல்உட்பகைகொண்டகுடும்பமும், கட்சியும், அரசும்வெளியேசேர்ந்துஇருந்தாலும்உள்ளத்துள்சேரவேமாட்டா.
Translation:
As casket with its cover, though in one they live alway, No union to the house where hate concealed hath sway.
Explanation:
Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.

குறள் 888:
அரம்பொருதபொன்போலத்தேயும்உரம்பொருது
உட்பகைஉற்றகுடி.

உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.
கலைஞர்உரை:
அரத்தினால்தேய்க்கப்படும்இரும்பின்வடிவமும்வலிமையும்குறைவதைப்போல, உட்பகைஉண்டானகுலத்தின்வலிமையும்தேய்ந்துகுறைந்துவிடும்.
மு.வஉரை:
உட்பகைஉண்டானகுடிஅரத்தினால்தேய்க்கப்பட்டஇரும்புபோல்வலிமைகுறைக்கப்பட்டுதேய்ந்துபோகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அரத்தால்தேய்க்கப்படும்இரும்புதேய்வதுபோல, உட்பகைகொண்டகுடு்ம்பமும்கட்சியும்அரசும்தமக்கும்பொருதுதம்பலம்இழக்கும்.
Translation:
As gold with which the file contends is worn away, So strength of house declines where hate concealed hath sway.
Explanation:
A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.

குறள் 889:
எட்பகவன்னசிறுமைத்தேஆயினும்
உட்பகைஉள்ளதாங்கேடு.

எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

கலைஞர்உரை:
எள்ளின்பிளவுபோன்றுசிறிதாகஇருந்தாலும்உட்பகையால்பெருங்கேடுவிளையும்.
மு.வஉரை:
எள்ளின்பிளவைப்போன்றசிறியஅளவுஉடையதேஆனாலும், ஒருகுடியைஅழிக்கவல்லகேடுஉட்பகையில்உள்ளதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
எள்ளின்பிளவுபோலஉட்பகைசிறியதாகஇருக்கலாம்; என்றாலம்உட்பகைஉள்ளகட்சிக்குள்ளேயேஅதன்கேடும்இருக்கிறதாம்.
Translation:
Though slight as shred of 'seasame' seed it be, Destruction lurks in hidden enmity.
Explanation:
Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.

குறள் 890:
உடம்பாடுஇலாதவர்வாழ்க்கைகுடங்கருள்
பாம்போடுஉடனுறைந்தற்று.

அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.
கலைஞர்உரை:
உள்ளத்தால்ஒன்றுபடாதவர்கள்கூடிவாழ்வதுஎன்பதுஒருசிறியகுடிலுக்குள்பாம்புடன்இருப்பதுபோன்றுஒவ்வொருநொடியும்அச்சம்தருவதாகும்.
மு.வஉரை:
அகத்தில்உடண்பாடுஇல்லாதவருடன்குடிவாழும்வாழ்க்கை, ஒருகுடிசையிற்பாம்போடுஉடன்வாழ்ந்தாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
மனப்பொருத்தம்இல்லாதவரோடுசேர்ந்துவாழும்வாழ்க்கை, ஒருகுடிசைக்குள்ளேபாம்புடன்சேர்ந்துவாழ்வதுபோலாகும்.
Translation:
Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for company.
Explanation:
Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290