281-290

குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:கள்ளாமை.
குறள்வரிசை: 281 282 283 284 285 286 287 288 289 290
குறள் 281:
எள்ளாமைவேண்டுவான்என்பான்எனைத்தொன்றும்
கள்ளாமைகாக்கதன்நெஞ்சு.
கலைஞர்உரை:
எந்தப்பொருளையும்களவாடும்நினைவுதன்நெஞ்சைஅணுகாமல்பார்த்துக் (காத்துக்) கொள்பவனேஇகழ்ச்சிக்குஆட்படாமல்வாழமுடியும்.
மு.வஉரை:
பிறரால்இகழப்படால்வாழவிரும்புகிறவன், எத்தன்மையானப்பொருளையும்பிறரிடமிருந்துவஞ்சித்துக்கொள்ளஎண்ணாதபடிதன்நெஞ்சைக்காக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவர்நம்மைஇகழக்கூடாதுஎன்றுஎண்ணுபவன், அடுத்தவர்க்குரியஎந்தப்பொருளையும்மனத்தால்கூடத்திருடநினைக்கக்கூடாது.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, பிறர்உடைமையாயிருப்பதுயாதொருபொருளையும்அவரைவஞ்சித்துக்கொள்ளக்கருதாமை. கருதலும்செய்தலோடுஒத்தலின் , 'கள்ளாமை' என்றார். இல்வாழ்வார்க்குஆயின், தமரோடுவிளையாட்டுவகையால்அவரைவஞ்சித்துக்கோடற்குஇயைந்தபொருள்களைஅங்ஙனம்கொள்ளினும்அமையும். துறந்தார்க்குஆயின், அதனைக்கருதியவழியும்பெரியதோர்இழுக்காம்ஆகலின், இதுதுறவறமாயிற்று. புறத்துப்போகாதுமடங்கிஒருதலைப்பட்டுஉயிரையேநோக்கற்பாலதாயஅவர்மனம் , அஃதுஒழிந்து, புறத்தேபோந்துபலதலைப்பட்டுஉடம்பின்பொருட்டுப்பொருளைநோக்குதலேயன்றி , அதுதன்னையும்வஞ்சித்துக்கொள்ளக்கருதுதல்அவர்க்குப்பெரியதோர்இழுக்காதல்அறிக. இவ்வாறு 'வாய்மை' முதல் 'கொல்லாமை' ஈறாயநான்குஅதிகாரத்திற்கும்ஒக்கும். பொருள்பற்றிநிகழும்குற்றத்தைவிலக்குகின்றதாகலின், இதுகாமம்பற்றிநிகழ்வதாயகூடாஒழுக்கத்தின்பின்வைக்கப்பட்டது.)
எள்ளாமைவேண்டுவான்என்பான் - வீட்டினைஇகழாதுவிரும்புவான்இவன்என்றுதவத்தோரான்நன்குமதிக்கப்படுவான், எனைத்துஒன்றுகள்ளாமைதன்நெஞ்சுகாக்க - யாதொருபொருளையும்பிறரைவஞ்சித்துக்கொள்ளக்கருதாவகைதன்நெஞ்சினைக்காக்க. ('எள்ளாது' என்னும்எதிர்மறைவினையெச்சம்எள்ளாமைஎனத்திரிந்துநின்றது. வீட்டினைஇகழ்தலாவதுகாட்சியேஅளவையாவதுஎன்றும்,நிலம், நீர், தீ, வளிஎனப்பூதம்நான்கேஎன்றும், அவற்றதுபுணர்ச்சிவிசேடத்தால்தோன்றி, பிரிவால்மாய்வதாயஉடம்பின்கண்ணேஅறிவுமதுவின்கண்களிப்புப்போலவெளிப்பட்டுஅழியும்என்றும், இறந்தஉயிர்பின்பிறவாதுஎன்றும், இன்பமும்பொருளும்ஒருவனால்செய்யப்படுவனஎன்றும்சொல்லும்உலோகாயதம்முதலியமயக்கநூல்களைத்தெளிந்து, அவற்றிற்குஏற்பஒழுகுதல். ஞானத்திற்குஏதுவாயமெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனைவழிபட்டன்றிஅவனைவஞ்சித்துக்கொள்ளின்அதுவும்களவாம்ஆகலின், 'எனைத்துஒன்றும்' என்றார். 'நெஞ்சுகள்ளாமல்காக்க' எனவே, துறந்தார்க்குவிலக்கப்பட்டகள்ளுதல்கள்ளக்கருதுதல்என்பதுபெற்றாம்.).
மணக்குடவர்உரை:
பிறராலிகழப்படாமையைவேண்டுவானிவனென்றுசொல்லப்படுமவன்யாதொருபொருளையுங்களவிற்கொள்ளாமல்தன்னெஞ்சைக்காக்க. இதுகளவுஆகாதென்றது.
Translation:
Who seeks heaven's joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure.
Explanation:
Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.


282. உள்ளத்தால்உள்ளலும்தீதேபிறன்பொருளைக்
கள்ளத்தால்கள்வேம்எனல்.
கலைஞர்உரை:
பிறருக்குரியபொருளைச்சூழ்ச்சியினால்கவர்ந்துகொள்ளலாமாஎன்றுஒருவன்நினைப்பதேகூடக்குற்றமாகும்.
மு.வஉரை:
குற்றமானதைஉள்ளத்தால்எண்ணுவதும்குற்றமே, அதானால்பிறன்பொருளைஅவன்அறியாதப்வகையால்வஞ்சித்துக்கொள்வோம்என்றுஎண்ணாதிருக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவர்பொருளைஅவருக்குத்தெரியாமல்திருடுவோம்என்றுமனத்தால்நினைப்பதும்தீமையானது.
பரிமேலழகர்உரை:
உள்ளத்தால்உள்ளலும்தீதே - குற்றங்களைத்தம்நெஞ்சால்கருதுதலும்துறந்தார்க்குப்பாவம், பிறன்பொருளைக்கள்ளத்தால்கள்வேம்எனல் - ஆதலால், பிறனொருவன்பொருளைஅவன்அறியாவகையால்வஞ்சித்துக்கொள்வோம்என்றுகருதற்க. ('உள்ளத்தால்' எனவேண்டாதுகூறினார், அவர்உள்ளம்ஏனையோர்உள்ளம்போலாதுசிறப்புடைத்துஎன்பதுமுடித்தற்கு. உள்ளலும்என்பதுஇழிவுசிறப்புஉம்மை. 'அல்' விகுதிவியங்கோள் 'எதிர்மறைக்கண்' வந்தது. இவைஇரண்டுபாட்டானும்இந்நடைக்குக்களவாவதுஇஃதுஎன்பதூஉம்அதுகடியப்படுவதுஎன்பதூஉம்கூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
பிறன்பொருளைநெஞ்சினால்நினைத்தலும்தீதாம்; ஆதலால்அதனைமறைவினாலேகள்வேமென்றுமுயலாதொழிக. இதுகளவுதீதென்றது.
Translation:
'Tis sin if in the mind man but thought conceive;
'By fraud I will my neighbour of his wealth bereave'.
Explanation:
Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.


283. களவினால்ஆகியஆக்கம்அளவிறந்து
ஆவதுபோலக்கெடும்.
கலைஞர்உரை:
கொள்ளையடித்துப்பொருள்குவிப்பது, முதலில்பெரிதாகத்தோன்றினாலும், அந்தச்செயல்ஏற்கனவேஇருந்தசெல்வத்தையும்அடித்துகொண்டுபோய்விடும்.
மு.வஉரை:
களவுசெய்துபொருள்கொள்வதால்உண்டாகியஆக்கம்பெருகுவதுபோல்தோன்றிஇயல்பாகஇருக்கவேண்டியஅளவையும்கடந்துகெட்டுவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
திருடுவதால்வரும்செல்வம், பெருகுவதுபோலத்தோன்றிவிரைவில்அழியும்.
பரிமேலழகர்உரை:
களவினால்ஆகியஆக்கம் - களவினால்உளதாகியபொருள், ஆவதுபோலஅளவிறந்துகெடும் - வளர்வதுபோலத்தோன்றித்தன்எல்லையைக்கடந்துகெடும். (ஆக்கத்திற்குஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக்கடந்துகெடுதலாவது, தான்போங்கால்பாவத்தையும்பழியையும்நிறுத்திச்செய்தஅறத்தையும்உடன்கொண்டுபோதல். 'அளவுஅறிந்துஅவ்வளவிற்குஉதவாதுகெடும்' என்றுஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
களவிற்கொண்டபொருளாலாகியஆக்கம்மேன்மேலும்மிகுவதுபோலக்கெடும். இதுபொருள்நிலையாதென்றது.
Translation:
The gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go.
Explanation:
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

284. களவின்கண்கன்றியகாதல்விளைவின்கண்
வீயாவிழுமம்தரும்.
கலைஞர்உரை:
களவுசெய்வதில்ஒருவனுக்குஏற்படும்தணியாததாகம், அதனால்உருவாகும்விளைவுகளால்தீராததுன்பத்தைஉண்டாக்கும்.
மு.வஉரை:
களவுசெய்துபிறர்பொருள்கொள்ளுதலில்ஒருவனுக்குஉள்ளமிகுந்தவிருப்பம், பயன்விளையும்போதுதொலையாதத்துன்பத்தைத்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவர்பொருளைத்திருடும்ஆசை, நிறைவேறியபின்அழியாததுன்பத்தைத்தரும்.
பரிமேலழகர்உரை:
களவின்கண்கன்றியகாதல் - பிறர்பொருளைவஞ்சித்துக்கோடற்கண்ணேமிக்கவேட்கை, விளைவின்கண்வீயாவிழுமம்தரும்- அப்பொழுதுஇனிதுபோலத்தோன்றித்தான்பயன்கொடுக்கும்பொழுதுதொலையாதஇடும்பையைக்கொடுக்கும். (கன்றுதலான்எஞ்ஞான்றும்அக்களவையேபயில்வித்துஅதனால்பாவமும்பழியும்பயந்தேவிடுதலின்வீயாவிழுமம்தரும்என்றார். இவைஇரண்டுபாட்டானும்அதுகடியப்படுதற்குக்காரணம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
களவின்கண்ணேமிக்கஆசை, பயன்படுங்காலத்துக்கேடில்லாதநோயைத்தரும். இதுநரகம்புகுத்தும்என்றது.
Translation:
The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.
Explanation:
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

குறள் 285:
அருள்கருதிஅன்புடையராதல்பொருள்கருதிப்
பொச்சாப்புப்பார்ப்பார்கண்இல்.
கலைஞர்உரை:
மறந்திருக்கும்நேரம்பார்த்துப்பிறர்பொருளைக்களவாடஎண்ணுபவரிடத்தில், அருள்கருதிஅன்பாகநடக்கும்பண்புஇருக்காது.
மு.வஉரை:
அருளைப்பெரிதாகக்கருதிஅன்புஉடையவராய்நடத்தல், பிறருடையபொருளைக்கவரஎண்ணிஅவர்சோர்ந்திருக்கும்நிலையைப்பார்ப்பவரிடத்தில்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவர்பொருளைத்திருடஎண்ணி, அவர்தளரும்நேரத்தைஎதிர்பார்த்துஇருப்போர், அருள்மீதுபற்றுஉள்ளவராய்வாழமுடியாது.
பரிமேலழகர்உரை:
அருள்கருதிஅன்புஉடையர்ஆதல் - அருளினதுஉயர்ச்சியைஅறிந்துஅதன்மேல்அன்புடையராய்ஒழுகுதல், பொருள்கருதிப்பொச்சாப்புப்பார்ப்பார்கண்இல் - பிறர்பொருளைவஞ்சித்துக்கொள்ளக்கருதிஅவரதுசோர்வுபார்ப்பார்மாட்டுஉண்டாகாது. (தமக்குஉரியபொருளையும்அதனதுகுற்றம்நோக்கித்துறந்துபோந்தவர், பின்பிறர்க்குஉரியபொருளைநன்குமதித்து, அதனைவஞ்சித்துக்கோடற்குஅவரதுசோர்வுபார்க்கும்மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல்அருள்செய்தல்நமக்குஉறுதிஎன்றுஅறிந்துஅவ்வருளின்வழுவாதுஒழுகும்தெருட்சிகூடாதுஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
அருளைக்குறித்துஉயிர்மீதுஅன்புடையராயொழுகுதல்பொருளைகுறித்துப்பிறரதுமறவியைப்பார்ப்பார்மாட்டுஇல்லை. இஃதுஅருளும்அன்புமில்லையாமென்றது.
Translation:
'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,
Who neighbour's goods desire, and watch for his unguarded hour.
Explanation:
The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property.

குறள் 286:
அளவின்கண்நின்றொழுகல்ஆற்றார்களவின்கண்
கன்றியகாதலவர்.
கலைஞர்உரை:
ஓர்எல்லைக்குட்பட்டுவாழ்வைச்செம்மையாகஅமைத்துக்கொள்ளாதவர்கள், களவுசெய்துபிறர்பொருளைக்கொள்வதில்நாட்டமுடையவராவார்கள்.
மு.வஉரை:
களவுசெய்துபிறர்பொருள்கொள்ளுதலில்மிக்கவிருப்பம்உடையவர், அளவு (சிக்கனம்) போற்றிவாழும்நெறியில்நின்றுஒழுகமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
உயிர்களைநேசிக்கும்ஆசைஇல்லாதவரேஅடுத்தவர்பொருளைத்திருடும்பேராசைஉடையவர்ஆவர்.
பரிமேலழகர்உரை:
அளவின்கண்நின்றுஒழுகல்ஆற்றார் - உயிர்முதலியவற்றைஅளத்தலாகியநெறியின்கண்நின்றுஅதற்குஏற்பஒழுகமாட்டார், களவின்கண்கன்றியகாதலவர் - களவின்கண்ணேமிக்கவேட்கையைஉடையார். (உயிர்முதலியவற்றைஅளத்தலாவது, காட்சிமுதலாகச்சொல்லப்பட்டஅளவைகளான்உயிர்ப்பொருளையும், அதற்குஅநாதியாய்வருகின்றநல்வினைதீவினைக்குஉற்றவிளைவுகளையும்அவற்றான்அதுநாற்கதியுள்பிறந்துஇறந்துவருதலையும், அதுசெய்யாமல்அவற்றைக்கெடுத்தற்குஉபாயமாகியயோகஞானங்களையும், அவற்றான்அஃதுஎய்தும்வீட்டினையும்அளந்துஉள்ளவாறுஅறிதல். இதனைஆருகதர்தருமத்தியானம்என்ப. அதற்குஏற்பஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள்தீயனவற்றின்நீங்கிநல்லனவற்றின்வழிநிற்றல்.).
மணக்குடவர்உரை:
களவின்கண்ணேமிக்கஆசையையுடையவர்நேரின்கணின்றுஒழுகுதலைச்செய்யமாட்டார். இதுநேர்செய்யமாட்டாரென்றது.
Translation:
They cannot walk restrained in wisdom's measured bound,
In whom inveterate lust of fraudful gain is found.
Explanation:
They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

குறள் 287:
களவென்னும்காரறிவாண்மைஅளவென்னும்
ஆற்றல்புரிந்தார்கண்டஇல்.
கலைஞர்உரை:
அளவறிந்துவாழ்க்கைநடத்துகிறஆற்றலுடையவர்களிடம், களவாடுதல்எனும்சூதுமதிகிடையாது.
மு.வஉரை:
களவுஎன்பதற்குகாரணமானமயங்கியஅறிவுஉடையவராயிருத்தல், அளவுஅறிந்துவாழ்தலாகியஆற்றலைவிரும்பினவரிடத்தில்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
உயிர்களைநேசிக்கும்ஆசைகொண்டவரிடம், அடுத்தவர்பொருளைத்திருடும்இருண்டஅறிவுஇராது.
பரிமேலழகர்உரை:
களவுஎன்னும்கார்அறிவுஆண்மை - களவுஎன்றுசொல்லப்படுகின்றஇருண்டஅறிவினைஉடையராதல்; அளவுஎன்னும்ஆற்றல்புரிந்தார்கண்இல் - உயிர்முதலியவற்றைஅளத்தல்என்னும்பெருமையைவிரும்பினார்கண்இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக்காரணமாகஉபசரித்துக் 'களவென்னும்கார்அறிவுஆண்மை' என்றும், காரணத்தைக்காரியமாக்கி 'அளவுஎன்னும்ஆற்றல்' என்றும்கூறினார். களவும்துறவும், இருளும்ஒளியும்போலத்தம்முள்மாறாகலின், ஒருங்குநில்லாஎன்பதுஇவைமூன்றுபாட்டானும்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
களவாகியபொல்லாஅறிவுடைமைநேராகியபெருமையைப்பொருந்தினார்மாட்டுஇல்லை. இதுநேரறிந்தவர்களவுகாணாரென்றது.
Translation:
Practice of fraud's dark cunning arts they shun,
Who long for power by 'measured wisdom' won.
Explanation:
That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.

குறள் 288:
அளவறிந்தார்நெஞ்சத்தறம்போலநிற்கும்
களவறிந்தார்நெஞ்சில்கரவு.
கலைஞர்உரை:
நேர்மையுள்ளவர்நெஞ்சம்அறவழியில்செல்லும்; கொள்ளையடிப்போர்நெஞ்சமோகுறுக்குவழியானவஞ்சகவழியில்செல்லும்.
மு.வஉரை:
அளவறிந்துவாழ்கின்றவரின்நெஞ்சில்நிற்கும்அறம்போல்களவுசெய்துபழகிஅறிந்தவரின்நெஞ்சில்வஞ்சம்நிற்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
உயிர்களைநேசிக்கும்உள்ளத்துள்அறம்நிலைத்துஇருப்பதுபோல, அடுத்தவர்பொருளைத்திருடஎண்ணுபவன்உள்ளத்துள்வஞ்சகம்இருக்கும்.
பரிமேலழகர்உரை:
அளவுஅறிந்தார்நெஞ்சத்துஅறம்போலநிற்கும் - அவ்வளத்தலையேபயின்றவர்நெஞ்சத்துஅறம்நிலைபெற்றாற்போலநிலைபெறும், களவுஅறிந்தார்நெஞ்சில்கரவு - களவையேபயின்றவர்நெஞ்சத்துவஞ்சனை. (உயிர்முதலியவற்றைஅளந்தறிந்தார்க்குத்துறவறம்சலியாதுநிற்கும்என்பதுஇவ்வுவமையால்பெற்றாம். களவோடுமாறின்றிநிற்பதுஇதனால்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நேரறிந்தவர்நெஞ்சத்துஅறம்நிற்குமாறுபோலநிற்கும்: களவறிந்தவர்நெஞ்சில்வஞ்சகமும். இதுகளவுகாண்பாரைப்பின்புகளவினின்றுதவிர்த்தல்முடியாதென்றது.
Translation:
As virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns.
Explanation:
Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.

குறள் 289:
அளவல்லசெய்தாங்கேவீவர்களவல்ல
மற்றையதேற்றாதவர்.
கலைஞர்உரை:
அளவுஎன்பதைத்தவிரவேறுநல்வழிகளைநாடாதவர்கள், வரம்புகடந்தசெயல்களால்வாழ்விழந்துவீழ்வார்கள்.
மு.வஉரை:
களவுசெய்தலைத்தவிரமற்றநல்லவழிகளைத்நம்பித்தெளியாதவர்அளவுஅல்லாதசெயல்களைச்செய்துஅப்போதேகெட்டழிவர்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவர்பொருளைத்திருடுவதைத்தவிரவேறொன்றும்தெரியாதவர்தகுதிஅற்றஅந்தச்செயல்களாலேயேஅழிந்துபோவார்.
பரிமேலழகர்உரை:
அளவுஅல்லசெய்தாங்கேவீவர் - அவ்வளவல்லாததீயநினைவுகளைநினைத்தபொழுதேகெடுவர், அளவுஅல்லமற்றையதேற்றாதவர் - களவுஅல்லாதபிறவற்றைஅறியாதவர். (தீயநினைவுகளாவன : பொருளுடையாரைவஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால்அதுகொள்ளுமாறும், கொண்டஅதனால்தாம்புலன்களைநுகருமாறும்முதலாயின. நினைத்தலும்செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃதுஉள்ளஅறங்களைப்போக்கி, கரந்தசொற்செயல்களைப்புகுவித்துஅப்பொழுதேகெடுக்கும்ஆகலின்ஆங்கேவீவர்' என்றும்கூறினார். மற்றையாவன: துறந்தார்க்குஉணவாகஓதப்பட்டகாய், கனி ,கிழங்குசருகுமுதலாயினவும், இல்வாழ்வார்செய்யும்தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையேநுகர்ந்துஅவ்வளவால்நிறைந்திருத்தலைஅறியாமை. இதனாற்கள்வார்கெடுமாறுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நேர்ஆகாதனசெய்துஅவ்விடத்தேகெடுவார்; களவல்லாதமற்றையஅறங்களைத்தெளியாதவர். இதுகள்வாரைஅரசர்கொல்வரென்றது.
Translation:
Who have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die.
Explanation:
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.

குறள் 290:
கள்வார்க்குத்தள்ளும்உயிர்நிலைகள்வார்க்குத்
தள்ளாதுபுத்தேளுளகு.
கலைஞர்உரை:
களவாடுபவர்க்குஉயிர்வாழ்வதேகூடத்தவறிப்போகும்; களவைநினைத்தும்பார்க்காதவர்க்கோ, புகழுலகவாழ்க்கைதவறவேதவறாது.
மு.வஉரை:
களவுசெய்வார்க்குஉடலில்உயிர்வாழும்வாழ்வும்தவறிப்போகும், களவுசெய்யாமல்வாழ்வோர்க்குதேவருலகும்வாய்க்கத்தவறாது.
சாலமன்பாப்பையாஉரை:
திருடுபவரைஅவரதுஉயிரும்வெறுக்கும்; திருடாதவரையோதேவர்உலகமும்வெறுக்காது.
பரிமேலழகர்உரை:
கள்வார்க்குஉயிர்நிலைதள்ளும் - களவினைப்பயில்வார்க்குத்தம்மின்வேறல்லாதஉடம்பும்தவறும், கள்ளார்க்குப்புத்தேள்உலகுதள்ளாது - அதுசெய்யாதார்க்குநெடுஞ்சேணதுஆகியபுத்தேள்உலகும்தவறாது. (உயிர்நிற்றற்குஇடனாகலின், உயிர்நிலைஎனப்பட்டது. சிறப்புஉம்மைகள்இரண்டும்விகாரத்தால்தொக்கன. இம்மையினும்அரசனால்ஒறுக்கப்படுதலின், 'உயிர்நிலையும்தள்ளும்' என்றும், மறுமையினும்தேவராதல்கூடுதலின் 'புத்தேள்உலகும்தள்ளாது' என்றும்கூறினார். 'மற்றதுதள்ளினும்தள்ளாமைநீர்த்து' (குறள்.566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல்அறிக. இதற்குப்பிறவாறுஉரைப்பாரும்உளர். இதனான்இருவர்பயனும்ஒருங்குகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பிறர்பொருளைக்கள்வார்க்குஉயிர்நிலையாகியவீடுபெறுதல்தப்பும். கள்ளாதார்க்குத்தேவருலகம்பெறுதல்தப்பாது. இதுகள்வார்முத்திபெறுதலுமிலர், கள்ளாதார்சுவர்க்கம்பெறாமையுமிலரென்றது.
Translation:
The fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know.
Explanation:
Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290