331-340
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:நிலையாமை.
குறள்வரிசை: 331 332 333 334 335 336 337 338 339 340
குறள் 331:
நில்லாதவற்றைநிலையினஎன்றுணரும்
புல்லறிவாண்மைகடை.
கலைஞர்உரை:
நிலையற்றவைகளைநிலையானவைஎனநம்புகின்றஅறியாமைமிகஇழிவானதாகும்.
மு.வஉரை:
நிலையில்லாதவைகளைநிலையானவைஎன்றுமயங்கிஉணரும்புல்லறிவுஉடையவராகஇருத்தல்வாழ்க்கையில்இழிந்தநிலையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நிலைஇல்லாதபொருள்களைநிலையானவைஎன்றுஎண்ணும்அற்பஅழிவுஇழிவானது.
பரிமேலழகர்உரை:
[அவற்றுள்,நிலையாமையாவது;தோற்றம்உடையனயாவும்நிலையுதல்இலவாம்தன்மை. மயங்கியவழிப்பேய்தேரில்புனல்போலத்தோன்றி,மெய்யுணர்ந்தவழிக்கயிற்றில்அரவுபோலக்கெடுதலின்பொய்என்பாரும்,நிலைவேறுபட்டுவருதலால்கணந்தோறும்பிறந்துஇருக்கும்என்பாரும்,ஒருவாற்றான்வேறுபடுதலும்ஒருவாற்றான்வேறுபடாமையும்உடைமையின், நிலையுதலும்நிலையாமையும்ஒருங்கேயுடையஎன்பாரும்எனப்பொருட்பெற்றிகூறுவார்பலதிறத்தராவர்; அவர்எல்லார்க்கும்அவற்றதுநிலையாமைஉடம்பாடாகலின், ஈண்டுஅதனையேகூறுகின்றார். இஃதுஉணர்ந்துழிஅல்லதுபொருள்களின்பற்றுவிடாதுஆகலின், இதுமுன்வைக்கப்பட்டது.]
நில்லாதவற்றைநிலையினஎன்றுஉணரும்புல்லறிவுஆண்மை -நிலையுதல்இலவாகியபொருள்களைநிலையுதல்உடையஎன்றுகருதுகின்றபுல்லியஅறிவினைஉடையராதல்; கடை -துறந்தார்க்குஇழிபு. (தோற்றம்உடையவற்றைக்கேடிலஎன்றுகருதும்புல்லறிவால்அவற்றின்மேல்பற்றுச்செய்தல்பிறவித்துன்பத்திற்குஏதுவாகலின், அதுவீடுஎய்துவார்க்குஇழுக்குஎன்பதுஇதனால்கூறப்பட்டது. இனிபுல்லறிவாளர்பெரும்பான்மையும்பற்றிச்செய்துசிற்றின்பத்துக்குஏதுவாகியசெல்வத்தின்கண்ணும், அதனைஅனுபவிக்கும்யாக்கையின்கண்ணும்ஆகலின், வருகின்றபாட்டுகளான்அவற்றதுநிலையாமையைவிதந்துகூறுப.).
மணக்குடவர்உரை:
நில்லாதபொருள்களைநிலைநிற்பனவென்றுநினைக்கின்றபுல்லியவறிவுடைமைஇழிந்தது. எனவே, பொருள்களையுள்ளவாறுகாணவொட்டாதமயக்கத்தைக்கடியவேண்டுமென்றவாறாயிற்று.
Translation:
Lowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure!.
Explanation:
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).
குறள் 332:
கூத்தாட்டுஅவைக்குழாத்தற்றேபெருஞ்செல்வம்
போக்கும்அதுவிளிந்தற்று.
கலைஞர்உரை:
சேர்த்துவைத்தபணமும்சொத்தும்ஒருவரைவிட்டுப்போவது, கூத்துமுடிந்ததும்மக்கள்அரங்கத்தைவிட்டுக்கலைந்துசெல்வதைப்போன்றதாகும்.
மு.வஉரை:
பெரியசெல்வம்வந்துசேர்தல், கூத்தாடும்இடத்தில்கூட்டம்சேர்வதைப்போன்றது, அதுநீங்கிப்போதலும்கூத்துமுடிந்ததும்கூட்டம்கலைவதைப்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
நாடகஅரங்கிற்குகூட்டம்வருவதுபோல்சிறுகச்சிறுகசெல்வம்சேரும். நாடகம்முடிந்ததுமகூட்டம்கலைவதுபோல்மொத்தமாய்ப்போய்விடும்.
பரிமேலழகர்உரை:
பெருஞ்செல்வம்கூத்தாட்டுஅவைக்குழாத்தற்று - ஒருவன்மாட்டுப்பெரியசெல்வம்வருதல்கூத்தாடுதல்செய்கின்றஅரங்கின்கண்காண்போர்குழாம்வந்தாற்போலும், போக்கும்அதுவிளிந்தற்று - அதனதுபோக்கும்அக்கூத்தாட்டுமுடிந்தவழிஅக்குழாம்போயினாற்போலும். (பெருஞ்செல்வம்எனவே, துறக்கச்செல்வமும்அடங்கிற்று. போக்கும்என்ற, எச்சஉம்மையான், வருதல்பெற்றாம். அக்குழாம்கூத்தாட்டுக்காரணமாகஅரங்கின்கண்பலதிறத்தால்தானேவந்து, அக்காரணம்போயவழித்தானும்போமாறுபோல, செல்வமும்ஒருவன்நல்வினைகாரணமாகஅவன்மாட்டுப்பல்திறத்தால்தானேவந்துஅக்காரணம்போயவழித்தானும்போம்என்றதாயிற்று.).
மணக்குடவர்உரை:
கூத்தாட்டுக்காண்டற்குஅவைக்கூட்டம்திரண்டாலொக்கும்பெருஞ்செல்வத்திரளும்; அந்தஅவையெழுந்துபோனாற்போலும்அதுபோமாறும்.
Translation:
As crowds round dancers fill the hall, is wealth's increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.
Explanation:
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.
குறள் 333:
அற்காஇயல்பிற்றுச்செல்வம்அதுபெற்றால்
அற்குபஆங்கேசெயல்.
கலைஞர்உரை:
நம்மைவந்தடையும்செல்வம்நிலையற்றதுஎன்பதைஉணர்ந்துஅதைக்கொண்டுஅப்பொழுதேநிலையானநற்செயல்களில்ஈடுபடவேண்டும்.
மு.வஉரை:
செல்வம்நிலைக்காதஇயல்பைஉடையது, அத்தகையசெல்வத்தைப்பெற்றால், பெற்றஅப்போதேநிலையானஅறங்களைச்செய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நிலையாதஇயல்பினைஉடையதுசெல்வம்; அதுகிடைத்தால்நிலையானஅறங்களைச்செய்க.
பரிமேலழகர்உரை:
அற்காஇயல்பிற்றுச்செல்வம் - நில்லாதஇயல்பினையுடைத்துச்செல்வம், அதுபெற்றால்அற்குபஆங்கேசெயல் - அதனைப்பெற்றால்அதனால்செய்யப்படும்அறங்களைஅப்பெற்றபொழுதேசெய்க. ('அல்கா' என்பதுதிரிந்துநின்றது. ஊழுள்ளவழியல்லதுதுறந்தாரால்பெறப்படாமையின், அதுபெற்றால்என்றும்அஃதுஇல்வழிநில்லாமையின் 'ஆங்கே' என்றும்கூறினார். அதனால்செய்யப்படும்அறங்களாவன: பயன்நோக்காதுசெய்யப்படும்கடவுட்பூசையும், தானமும்முதலாயின. அவைஞானஏதுவாய்வீடுபயத்தலின்அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும்கூறினார். இவைஇரண்டுபாட்டானும்செல்வம்நிலையாமைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நில்லாதவியல்பையுடைத்துச்செல்வம்; அதனைப்பெற்றால்அப்பொழுதேநிற்பனவாகியஅறங்களைச்செய்க. நிலையாமைமூன்றுவகைப்படும்: செல்வநிலையாமை, இளமைநிலையாமை, யாக்கைநிலையாமைஎன.
Translation:
Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.
Explanation:
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.
குறள் 334:
நாளெனஒன்றுபோற்காட்டிஉயிர்ஈரும்
வாளதுஉணர்வார்ப்பெறின்.
கலைஞர்உரை:
வாழ்க்கையைப்பற்றிஉணர்ந்தவர்கள், நாள்என்பதுஒருவரின்ஆயுளைஅறுத்துக்குறைத்துக்கொண்டேயிருக்கும்வாள்என்றுஅறிவார்கள்.
மு.வஉரை:
வாழ்க்கையைஆராய்ந்துஉணர்வாரைப்பெற்றால்நாள்என்பதுஒருகாலஅளவுகோல்காட்டி, உயிரைஉடம்பிலிருந்துபிரித்துஅறுக்கும்வாளாகஉள்ளது.
சாலமன்பாப்பையாஉரை:
நாள்எனநமக்குத்தோன்றும்காலம், நம்உயிரைப்பிளந்துசெல்லும்வாளே; அறிஞர்க்குத்தான்இதுவிளங்கும்.
பரிமேலழகர்உரை:
நாள்எனஒன்றுபோல்காட்டிஈரும்வாளதுஉயிர் - நாள்என்றுஅறுக்கப்படுவதொருகாலவரையறைபோலத்தன்னைக்காட்டிஈர்ந்துசெல்கின்றவாளினதுவாயதுஉயிர், உணர்வார்ப்பெறின் - அஃதுஉணர்வாரைப்பெறின். (காலம்என்னும்அருவப்பொருள்உலகியல்நடத்தற்பொருட்டுஆதித்தன்முதலியஅளவைகளால்கூறுபட்டதாகவழங்கப்படுவதல்லது, தானாகக்கூறுபடாமையின், நாள்எனஒன்றுபோல்என்றும்அதுதன்னைவாள்என்றுஉணரமாட்டாதார்தமக்குப்பொழுதுபோகாநின்றதுஎன்றுஇன்புறுமாறுநாளாய்மயக்கலின் 'காட்டி' என்றும்இடைவிடாதுஈர்தலான் 'வாளின்வாயது' என்றும், அஃதுஈர்கின்றமையைஉணர்வார்அரியர்ஆகலின்உணர்வார்ப்பெறின்என்றும்கூறினார். உயிர்என்னும்சாதியொருமைப்பெயர்ஈண்டுஉடம்பின்மேல்நின்றது. ஈரப்படுவதுஅதுவேயாகலின். வாள்என்பதுஆகுபெயர். இனிஇதனைநாள்என்பதொருபொருள்போலத்தோன்றிஉயிரைஈர்வதொருவாளாம்என்றுஉரைப்பாரும்உளர் :'என' என்பதுபெயரன்றிஇடைச்சொல்லாகலானும், 'ஒன்றுபோல்காட்டி' என்பதற்குஒருபொருள்சிறப்புஇன்மையானும், 'அது' என்பதுகுற்றியலுகரம்அன்மையானும், அஃதுஉரையன்மைஅறிக.).
மணக்குடவர்உரை:
நாளென்பதுஇன்பந்தருவதொன்றுபோலக்காட்டி, உயிரையீர்வதொருவாளாம்: அதனையறிவாரைப்பெறின். இஃதுஉயிரீரும்என்றமையால்இளமைநிலையாமைகூறிற்று.
Translation:
As 'day' it vaunts itself; well understood, 'tis knife',
That daily cuts away a portion from thy life.
Explanation:
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.
குறள் 335:
நாச்செற்றுவிக்குள்மேல்வாராமுன்நல்வினை
மேற்சென்றுசெய்யப்படும்.
கலைஞர்உரை:
வாழ்க்கையின்நிலையாமையைஉணர்ந்துநம்உயிர்இருக்கும்போதேஉயர்ந்தநற்பணிகளைஆற்றிடமுனையவேண்டும்.
மு.வஉரை:
நாவைஅடக்கிவிக்கல்மேலெழுவதற்குமுன்னே (இறப்புநெருங்குவதற்குமுன்) நல்லஅறச்செயலைவிரைந்துசெய்யத்தக்கதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நாவைஅடைத்துவிக்கல்வருவதற்குமுன், நல்லசெயல்களைவிரைந்துசெய்யவேண்டும்.
பரிமேலழகர்உரை:
நாச்செற்றுவிக்குள்மேல்வாராமுன் - உரையாடாவண்ணம்நாவைஅடக்கிவிக்குள்எழுவதற்குமுன்னே; நல்வினைமேற்சென்றுசெய்யப்படும் - வீட்டிற்குஏதுவாகியஅறம்விரைந்துசெய்யப்படும். (மேல்நோக்கிவருதல்ஒருதலையாகலானும், வந்துழிச்செய்தலேஅன்றிச்சொல்லும்ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான்இன்னபொழுதுவரும்என்பதுஇன்மையின் 'மேற்சென்று' என்றும்கூறினார். மேற்சேறல்மண்டுதல். நல்வினைசெய்யும்ஆற்றின்மேல்வைத்துநிலையாமைகூறியவாறு.).
மணக்குடவர்உரை:
நாவழங்காமற்செறுத்துவிக்குளானதுமீதூர்ந்துவருவதன்முன்னே, நல்வினையைமேல்விழுந்துசெய்யவேண்டும். இஃதுஉயிரானதுகழிவதன்முன்னேநல்வினையைச்செய்யவேண்டுமென்றது.
Translation:
Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.
Explanation:
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.
குறள் 336:
நெருநல்உளனொருவன்இன்றில்லைஎன்னும்
பெருமைஉடைத்துஇவ்வுலகு.
கலைஞர்உரை:
இந்தஉலகமானது, நேற்றுஉயிருடன்இருந்தவரைஇன்றுஇல்லாமல்செய்துவிட்டோம்என்றஅகந்தையைப்பெருமையாக்கொண்டதாகும்.
மு.வஉரை:
நேற்றுஇருந்தவன்ஒருவன்இன்றுஇல்லாமல்இறந்துபோனான்என்றுசொல்லப்படும்நிலையாமைஆகியபெருமைஉடையதுஇவ்வுலகம்.
சாலமன்பாப்பையாஉரை:
நேற்றுஇருந்தஒருவன்இன்றுஇல்லைஎன்றுசொல்லும்படிநிலையாமையைஉடையதுஇவ்வுலகம்.
பரிமேலழகர்உரை:
ஒருவன்நெருதல்உளன்இன்றுஇல்லைஎன்னும்பெருமைஉடைத்து; - ஒருவன்நெருநல்உளனாயினான் , அவனேஇன்றுஇல்லையாயினான்என்றுசொல்லும்நிலையாமைமிகுதிஉடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டுஉண்மைபிறத்தலையும், இன்மைஇறத்தலையும்உணர்த்திநின்றன. அவைபெண்பாற்கும்உளவாயினும், சிறப்புப்பற்றிஆண்பாற்கேகூறினார். இந்நிலையாமையேஉலகின்மிக்கதுஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
ஒருவன்நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினானென்றுசொல்லும்பெருமையைஇவ்வுலகம்உடைத்து. இதுயாக்கைநிலையாமைகூறிற்று.
Translation:
Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.
Explanation:
This world possesses the greatness that one who yesterday was is not today.
குறள் 337:
ஒருபொழுதும்வாழ்வதுஅறியார்கருதுப
கோடியும்அல்லபல.
கலைஞர்உரை:
ஒருபொழுதுகூடவாழ்க்கையைப்பற்றிஉண்மையைச்சிந்தித்துஅறியாதவர்களே, ஆசைக்கோர்அளவின்றிமனக்கோட்டைகள்கட்டுவார்கள்.
மு.வஉரை:
அறிவில்லாதவர்ஒருவேளையாவதுவாழ்க்கையின்தன்மையைஆராய்ந்துஅறிவதில்லை.ஆனால்வீணீல்எண்ணுவனவோஒருகோடியும்அல்ல, மிகப்பலஎண்ணங்கள்.
சாலமன்பாப்பையாஉரை:
உயிரும்உடம்பும்இணைந்திருந்தும்உடம்பின்நிலையற்றதன்மையைஒருகணப்பொழுதும்அறியஇயலாதவர்கோடிக்கும்மேலானநினைவுகளைஎண்ணிநிற்பர்.
பரிமேலழகர்உரை:
ஒருபொழுதும்வாழ்வதுஅறியார் - ஒருபொழுதளவும்தம்உடம்பும்உயிரும்இயைந்திருத்தலைத்தெளியமாட்டார், கோடியும்அல்லபலகருதுப - மாட்டாதுவைத்தும், கோடியளவும்அன்றிஅதனினும்பலவாயநினைவுகளைநினையாநிற்பர்அறிவிலாதார். (இழிவுசிறப்புஉம்மையால்பொழுதுஎன்பதுஈண்டுக்கணத்தின்மேல்நின்றது. காரணமாகியவினையின்அளவேவாழ்தற்கும்அளவாகலின், அஃதுஅறியப்படாதாயிற்று.பலவாயநினைவுகளாவன: பொறிகளான்நுகரப்படும்இன்பங்கள்தமக்குஉரியவாமாறும்அதற்குப்பொருள்துணைக்காரணம்ஆமாறும், அதுதம்முயற்சிகளான்வருமாறும், அவற்றைத்தாம்முயலுமாறும், அவற்றிற்குவரும்இடையூறுகளும்அவற்றைநீக்குமாறும்நீக்கிஅப்பொருள்கடைக்கூட்டுமாறும், அதனைப்பிறர்கொள்ளாமல்காக்குமாறும், அதனால்நட்டாரைஆக்குமாறும், நள்ளாரைஅழிக்குமாறும்தாம்அவ்வின்பங்கள்நுகருமாறும்முதலாயின. அறிவிலாரதுஇயல்பின்மேல்வைத்துநிலையாமைகூறியவாறு. இனிக் 'கருதுப' என்பதனைஅஃறிணைப்பன்மைப்பெயராக்கிஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
ஒருபொழுதளவும்தம்முயிர்நிலைநிற்கும்என்பதனையறியாராயிருந்தும், தமதுவாழ்நாளைகோடியுமல்ல, பலவாகக்கருதுவர்உலகத்தார். மேல்ஒருநாளுளனானவன்பிற்றைஞான்றுசெத்தானென்றார்ஈண்டுஒருபொழுதளவும்உயிர்நிலையாகாதுஎன்றார்.
Translation:
Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away!.
Explanation:
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.
குறள் 338:
குடம்பைதனித்துஒழியப்புள்பறந்தற்றே
உடம்பொடுஉயிரிடைநட்பு.
கலைஞர்உரை:
உடலுக்கும்உயிருக்கும்உள்ளஉறவுமுட்டைக்கும்பறவைக்குஞ்சுக்கும்உண்டானஉறவுபோன்றதுதான்.
மு.வஉரை:
உடம்போடுஉயிர்க்குஉள்ளஉறவு, தான்இருந்தகூடுதனியேஇருக்கஅதைவிட்டுவேறிடத்திற்குப்பறவைபறந்தாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
உடம்பிற்கும்உயிருக்கும்இடையேயானஉறவு, முட்டைதனித்துக்கிடக்கப்பறவைபறந்துவிடுவதுபோன்றதே.
பரிமேலழகர்உரை:
குடம்பைதனித்துஒழியப்புள்பறந்தற்று - முன்தனியாதமுட்டைதனித்துக்கிடப்பஅதனுள்இருந்தபுள்ளுப்பருவம்வந்துழிப்பறந்துபோனதன்மைத்து; உடம்பொடுஉயிரிடைநட்பு - உடம்பிற்கும்உயிர்க்கும்உளதாயநட்பு. ('தனித்துஒழிய' என்றதனான்முன்தனியாமைபெற்றாம். அஃதாவது, கருவும்தானும்ஒன்றாய்ப்பிறந்துவேறாம்துணையும்அதற்குஆதாரமாய்நிற்றல்அதனால்அஃதுஉடம்பிற்குஉவமையாயிற்று; அதனுள்வேற்றுமையின்றிநின்றேபின்புகாமல்போகலின், புள்உயிர்க்குஉவமையாயிற்று. முட்டையுள்பிறப்பனபிறவும்உளவேனும், புள்ளையேகூறினார், பறந்துபோதல்தொழிலான்உயிரோடுஒப்புமைஎய்துவதுஅதுவேயாகலின். 'நட்பு'என்பதுஈண்டுக்குறிப்புமொழியாய்நட்பின்றிப்போதல்உணர்த்திநின்றது. சேதனமாய்அருவாய்நித்தமாயஉடம்பும்தம்முள்மாறாகலின் , வினைவயத்தால்கூடியதல்லதுநட்பிலஎன்பதுஅறிக. இனி, 'குடம்பை' என்பதற்குக்கூடுஎன்றுஉரைப்பாரும்உளர்; அதுபுள்ளுடன்தோன்றாமையானும், அதன்கண்அதுமீண்டுபுகுதல்உடைமையானும், உடம்பிற்குஉவமையாகாமைஅறிக.).
மணக்குடவர்உரை:
கூடுதனியேகிடக்கப்புள்ளுப்பறந்துபோனாற்போலும்,உடம்போடுஉயிர்க்குஉள்ளநட்பு. மேல்ஒருபொழுதென்றுகாலங்கூறினார்ஈண்டுஉயிர்நினைக்காதபொழுதுபோமென்றார்.
Translation:
Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share.
Explanation:
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.
குறள் 339:
உறங்குவதுபோலுஞ்சாக்காடுஉறங்கி
விழிப்பதுபோலும்பிறப்பு.
கலைஞர்உரை:
நிலையற்றவாழ்க்கையில், உறக்கத்திற்குப்பிறகுவிழிப்பதைப்போன்றதுபிறப்பு; திரும்பவிழிக்கமுடியாதமீளாஉறக்கம்கொள்வதேஇறப்பு.
மு.வஉரை:
இறப்புஎனப்படுவதுஒருவனுக்குஉறக்கம்வருதலைப்போன்றது, பிறப்புஎனப்படுவதுஉறக்கம்நீங்கிவிழித்துக்கொள்வதைப்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
உறங்குவதுபோன்றதுசாவு; உறங்கிவிழிப்பதுபோன்றதுபிறப்பு.
பரிமேலழகர்உரை:
சாக்காடுஉறங்குவதுபோலும் - ஒருவனுக்குச்சாக்காடுவருதல்உறக்கம்வருதலோடுஒக்கும், பிறப்புஉறங்கிவிழிப்பதுபோலும் - அதன்பின்பிறப்புவருதல்உறங்கிவிழித்தல்வருதலோடுஒக்கும். (உறங்குதலும்விழித்தலும்உயிர்கட்குஇயல்பாய்க்கடிதின்மாறிமாறிவருகின்றாற்போலச்சாக்காடும்பிறப்பும்இயல்பாய்க்கடிதின்மாறிமாறிவரும்என்பதுகருத்து. நிலையாமையேநிலைபெற்றவாறுஅறிவித்தற்குப்பிறப்பும்உடன்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
உறங்குவதனோடுஒக்கும்சாக்காடு: உறங்கிவிழிப்பதனோடுஒக்கும்பிறப்பு. இதுபோனஉயிர்மீண்டும்பிறக்குமென்பதூஉம், இறத்தலும்பிறத்தலும்உறங்குதலும்விழித்தலும்போலமாறிவருமென்பதூஉம்கூறிற்று.
Translation:
Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.
Explanation:
Death is like sleep; birth is like awaking from it.
குறள் 340:
புக்கில்அமைந்தின்றுகொல்லோஉடம்பினுள்
துச்சில்இருந்தஉயிர்க்கு.
கலைஞர்உரை:
உடலுடன்தங்கியுள்ளஉயிருக்குஅதனைப்பிரிந்தால்வேறுபுகலிடம்கிடையாது.
மு.வஉரை:
(நோய்களுக்குஇடமாகிய) உடம்பில்ஒருமூலையில்குடியிருந்தஉயிர்க்கு, நிலையாகப்புகுந்திருக்கும்வீடுஇதுவரையில்அமையவில்லையோ.
சாலமன்பாப்பையாஉரை:
உடம்பிற்குள்ஒதுங்கிஇருந்தஉயிருக்குநிலையானஇருப்பிடம்இன்னும்அமையவில்லைபோலும்!.
பரிமேலழகர்உரை:
உடம்பினுள்துச்சில்இருந்தஉயிர்க்கு - வாதம்முதலியவற்றின்இல்லாயஉடம்புகளுள்ஒதுக்கிருந்தேபோந்தஉயிர்க்கு , புக்கில்அமைந்தின்றுகொல் - எஞ்ஞான்றும்இருப்பதோர்இல்இதுகாறும்அமைந்ததில்லைபோலும்! (அந்நோய்கள்இருக்கஅமைந்தஞான்றுஇருந்தும், வெகுண்டஞான்றுபோயும்ஓர்உடம்பினுள்நிலைபெறாதுவருதலால், 'துச்சில்இருந்த' என்றார். பின்புறப்படாதுபுக்கேவிடும்இல்அமைந்ததாயின்,பிறர்இல்களுள்துச்சிலிராதுஎன்பதாம், ஆகவேஉயிரோடுகூடிநிற்பதோர்உடம்பும்இல்லைஎன்பதுபெறப்பட்டது. இவைஏழுபாட்டானும் , முறையேயாக்கைகட்குவரைந்தநாள்கழிகின்றவாறும், கழிந்தால்உளதாயநிலையாமையும், அவைஒரோவழிப்பிறந்தஅளவிலேஇறத்தலும், ஒருகணமாயினும்நிற்கும்என்பதுதெளியப்படாமையும், உயிர்நீங்கியவழிக்கிடக்குமாறும், அவற்றிற்குஇறப்பும்பிறப்பும்மாறிமாறிவருமாறும்அவைதாம்உயிர்க்குரியஅன்மையும்என்று,இவ்வாற்றால்யாக்கைநிலையாமைகூறியவாறுகண்டுகொள்க.).
மணக்குடவர்உரை:
தனதல்லாதஉடம்பினுள்ளேஒதுக்குக்குடியாகவிருந்தஉயிர்க்குப்போயிருப்பதற்கிடம்அமைந்ததில்லையோ? அமைந்ததாயின்இதனுள்இராது. புக்கில்என்பதுமுத்திஸ்தானம்இதுமேற்கூறியவற்றால்உயிர்மாறிப்பிறந்துவரினும்ஓரிடத்தேதவறுமென்பதுகூறிற்று.
Translation:
The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest it knows?.
Explanation:
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.
Comments
Post a Comment