431-440

குறள் 431:
செருக்குஞ்சினமும்சிறுமையும்இல்லார்
பெருக்கம்பெருமிதநீர்த்து.
கலைஞர்உரை:
இறுமாப்பு, ஆத்திரம், இழிவானநடத்தைஇவைகள்இல்லாதவர்களுடையசெல்வாக்குதான்மதிக்கத்தக்கதாகும்.
மு.வஉரை:
செருக்கும்சினமும்காமமும்ஆகியஇந்தக்குற்றங்கள்இல்லாதவனுடையவாழ்வில்காணும்பெருக்கம்மேம்பாடுஉடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தான்என்னும்அகங்காரம், கோபம், பெண்ணாசைஎன்னும்சிறுமைஇவைஇல்லாதஆட்சியாளர்களின்செல்வம்மேன்மையானது.
Translation:
Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.
Explanation:
Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

குறள் 432:
இவறலும்மாண்பிறந்தமானமும்மாணா
உவகையும்ஏதம்இறைக்கு.
கலைஞர்உரை:
மனத்தில்பேராசை, மானஉணர்வில்ஊனம், மாசுபடியும்செயல்களில்மகிழ்ச்சிஆகியவைதலைமைக்குரியதகுதிக்கேபெருங்கேடுகளாகும்.
மு.வஉரை:
பொருள்கொடாததன்மையும்மாட்சியில்லாதமானமும், தகுதியற்றமகிழ்ச்சியும்தலைவனாகஇருப்பனுக்குகுற்றங்களாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நியாயமாகத்தேவைப்படுவோர்க்குத்தேவையானவற்றைக்கொடாதிருப்பது, பெரியோர்என்றுதெரிந்தும்தம்பதவிப்பெருமைகருதிவணங்காதிருப்பது, தீயவற்றில்மகிழ்வது - இவைஆட்சியாளர்க்குக்குற்றங்களாம்.
Translation:
A niggard hand, o'erweening self-regard, and mirth
Unseemly, bring disgrace to men of kingly brith.
Explanation:
Avarice, undignified pride, and low pleasures are faults in a king.

குறள் 433:
தினைத்துணையாங்குற்றம்வரினும்பனைத்துணையாக்
கொள்வர்பழிநாணுவார்.
கலைஞர்உரை:
பழிக்குநாணுகின்றவர்கள், தினையளவுகுற்றத்தையும்பனையளவாகக்கருதி, அதைச்செய்யாமல், தங்களைக்காத்துக்கொள்வார்கள்.
மு.வஉரை:
பழிநாணுகின்றபெருமக்கள்தினையளவாகியசிறுகுற்றம்நேர்ந்தாலும்அதைபனையளவாகக்கருதிக் (குற்றம்செய்யாமல்) காத்துக்கொள்வர்.
சாலமன்பாப்பையாஉரை:
பழிபாவங்களுக்குஅஞ்சி, நானும்பெரியோர், தினைஎனமிகச்சிறியஅளவேகுற்றம்வந்தாலும், அதனைப்பனைஎனமிகப்பெரியஅளவாகக்கொள்வர்.
Translation:
Though small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace 'twill seem.
Explanation:
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.

குறள் 434:
குற்றமேகாக்கபொருளாகக்குற்றமே
அற்றந்த்ரூஉம்பகை.
கலைஞர்உரை:
குற்றம்புரிவதுஅழிவைஉண்டாக்கக்கூடியபகையாகமாறுவதால்குற்றம்புரியாமல்இருப்பதுஎன்பதையேநோக்கமாகக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
>குற்றமேஒருவனுக்குஅழிவைஉண்டாக்கும்பகையாகும், ஆகையால்குற்றம்செய்யாமல்இருப்பதேநோக்கமாகக்கொண்டுகாத்துக்கொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
அரசிற்குஅழிவுதரும்பகைமனக்குற்றந்தான். அதனால்அக்குற்றம்தன்னிடம்வராமல்காப்பதையேபொருளாகக்கொள்ளவேண்டும்.
Translation:
Freedom from faults is wealth; watch heedfully
'Gainst these, for fault is fatal enmity.
Explanation:
Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

குறள் 435:
வருமுன்னர்க்காவாதான்வாழ்க்கைஎரிமுன்னர்
வைத்தூறுபோலக்கெடும்.
கலைஞர்உரை:
முன்கூட்டியேஎச்சரிக்கையாகஇருந்துஒருதவறானசெயலைத்தவிர்த்துக்கொள்ளாதவருடையவாழ்க்கையானதுநெருப்பின்முன்னால்உள்ளவைக்கோல்போர்போலக்கருகிவிடும்.
மு.வஉரை:
குற்றம்நேர்வதற்குமுன்னமேவராமல்காத்துக்கொள்ளாதவனுடையவாழ்க்கை, நெருப்பின்முன்நின்றவைக்கோல்போர்போல்அழிந்துவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
தனக்குஒருகுற்றம்வருவதற்குமுன்பேவராமல்காத்துக்கொள்ளாதஅரசு, நெருப்பிற்குமுன்வைக்கப்பட்டவைக்கோல்போலஅழிந்துபோகும்.
Translation:
His joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.
Explanation:
The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

குறள் 436:
தன்குற்றம்நீக்கிப்பிறர்குற்றங்காண்கிற்பின்
என்குற்றமாகும்இறைக்கு.
கலைஞர்உரை:
முதலில்தனக்குள்ளகுறையைநீக்கிக்கொண்டுஅதன்பின்னர்பிறர்குறையைக்கண்டுசொல்லும்தலைவனுக்குஎன்னகுறைநேரும்?.
மு.வஉரை:
முன்னேதன்குற்றத்தைக்கண்டுநீக்கிபிறகுபிறருடையக்குற்றத்தை
ஆராயவல்லவனானால், தலைவனுக்குஎன்னகுற்றமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
படிக்காதவர்முதலில்தன்குற்றத்தைக்கண்டுவிலக்கிப்பிறகுஅடுத்தவர்குற்றத்தைக்காணும்ஆற்றல்மிக்கஅரசிற்குக்குற்றம்ஏதும்வராது!.
Translation:
Faultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men.
Explanation:
What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

குறள் 437:
செயற்பாலசெய்யாதிவறியான்செல்வம்
உயற்பாலதன்றிக்கெடும்.
கலைஞர்உரை:
நற்பணிகளைச்செய்யாமல்சேமித்துவைக்கப்படும்கருமியின்செல்வம்பயன்ஏதுமின்றிப்பாழாகிவிடும்.
மு.வஉரை:
செய்யத்தக்கநன்மைகளைச்செய்யாமல்பொருளைச்சேர்த்துவைத்திருப்பவனுடையசெல்வம், உய்யுந்தன்மைஇல்லாமல்அழியும்.
சாலமன்பாப்பையாஉரை:
செல்வத்தால்தனக்குச்செய்துகொள்ளவேண்டியவற்றைப்பொருள்மீதுகொண்டபற்றினால்செய்யாமல், கஞ்சனாய்வாழும்ஆட்சியாளனின்செல்வம்வீணேகெட்டு, அழிந்துபோகும்.
Translation:
Who leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind.
Explanation:
The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.

குறள் 438:
பற்றுள்ளம்என்னும்இவறன்மைஎற்றுள்ளும்
எண்ணப்படுவதொன்றன்று.
கலைஞர்உரை:
எல்லாக்குற்றங்களையும்விடத்தனிப்பெருங்குற்றமாகக்கருதப்படுவதுபொருள்சேர்ப்பதில்பற்றுக்கொண்டுஎவருக்கும்எதுவும்ஈ.யாமல்வாழ்வதுதான்.
மு.வஉரை:
பொருளினிடத்தில்பற்றுக்கொள்ளும்உள்ளமாகியஈயாத்தன்மை, குற்றம்எதனோடும்சேர்ந்துஎண்ணத்தகாதஒருதனிக்குற்றமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
செலவிடவேண்டியவற்றிற்குச்செலவிடாமல்செல்வத்தின்மீதுஆசைகொண்டகஞ்சமனத்தைப்பெற்றிருப்பதுகுற்றங்கள்எல்லாவற்றிலும்கொடியகுற்றமாகும்.
Translation:
The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.
Explanation:
Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).

குறள் 439:
வியவற்கஎஞ்ஞான்றும்தன்னைநயவற்க
நன்றிபயவாவினை.
கலைஞர்உரை:
எந்தவொருகாலகட்டத்திலும்தன்னைத்தானேஉயர்வாகஎண்ணிடும்தற்பெருமைகொண்டுநன்மைதராதசெயல்களில்ஈ.டுபடக்கூடாது.
மு.வஉரை:
எக்காலத்திலும்தன்னைமிகஉயர்வாகஎண்ணிவியந்துமதிக்கக்கூடாது, நன்மைதராதசெயலைத்தான்விரும்பவும்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
எவ்வளவுபெரிதாகவளர்ந்தாலும்அகங்காரம்கொண்டுபெரிதாகப்பேசாதே; நாட்டுக்கும்ஆட்சிக்கும்நன்மைதராதசெயல்களைச்செய்யவிரும்பாதே.
Translation:
Never indulge in self-complaisant mood,
Nor deed desire that yields no gain of good.
Explanation:
Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

குறள் 440:
காதலகாதல்அறியாமைஉய்க்கிற்பின்
ஏதிலஏதிலார்நூல்.
கலைஞர்உரை:
தமதுவிருப்பத்தைப்பகைவர்அறிந்துகொள்ளமுடியாமல்நிறைவேற்றுபவரிடம்அந்தப்பகைவரின்எண்ணம்பலிக்காமற்போய்விடும்.
மு.வஉரை:
தன்விருப்பம்பிறர்க்குதெரியாதபடிவிருப்பமானவற்றைநுகரவல்லவனானால், பகைவர்தன்னைவஞ்சிப்பதற்காகச்செய்யும்சூழ்ச்சிகள்பலிக்காமல்போகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தான்செய்யஎண்ணியவற்றைப்பிறர்முன்னதாகவேஅறிந்துவிடாதபடிகாத்தால், அவனைஅழிக்கஎண்ணும்பகைவர்எண்ணம்பழுதுபடும்.
Translation:
If, to your foes unknown, you cherish what you love,
Counsels of men who wish you harm will harmless prove.
Explanation:
If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290