751-760
குறள் 751:
பொருளல்லவரைப்பொருளாகச்செய்யும்
பொருளல்லதுஇல்லைபொருள்.
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
கலைஞர்உரை:
மதிக்கத்தகாதவர்களையும்மதிக்கக்கூடியஅளவுக்குஉயர்த்திவிடுவதுஅவர்களிடம்குவிந்துள்ளபணத்தைத்தவிரவேறுஎதுவும்இல்லை.
மு.வஉரை:
ஒருபொருளாகமதிக்கத்தகாதவரையும், மதிப்புடையவராகச்செய்வதாகியபொருள்அல்லாமல்சிறப்புடையபொருள்வேறுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தகுதிஅற்றவரையும்கூடத்தகுதிஉடையவராகஆக்கிவிடும்தகுதிஉடையது, பணமேஅன்றிவேறொன்றும்இல்லை.
Translation:
Nothing exists save wealth, that can Change man of nought to worthy man.
Explanation:
Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.
குறள் 752:
இல்லாரைஎல்லாரும்எள்ளுவர்செல்வரை
எல்லாரும்செய்வர்சிறப்பு.
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.
கலைஞர்உரை:
பொருள்உள்ளவர்களைப்புகழ்ந்துபோற்றுவதும்இல்லாதவர்களைஇகழ்ந்துதூற்றுவதும்தான்இந்தஉலகநடப்பாகஉள்ளது.
மு.வஉரை:
பொருள்இல்லாதவரை (வேறுநன்மைஉடையவராகஇருந்தாலும்) எல்லாரும்இகழ்வார், செல்வரை (வேறுநன்மைஇல்லாவிட்டாலும்) எல்லாரும்சிறப்புசெய்வர்.
சாலமன்பாப்பையாஉரை:
பணம்இல்லாதவரைஎல்லாரும்இகழ்வர். செல்வரையோஎல்லாரும்பெருமைப்படுத்துவர்.
Translation:
Those who have nought all will despise; All raise the wealthy to the skies.
Explanation:
All despise the poor; (but) all praise the rich.
குறள் 753:
பொருளென்னும்பொய்யாவிளக்கம்இருளறுக்கும்
எண்ணியதேயத்துச்சென்று.
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.
கலைஞர்உரை:
பொருள்என்னும்அணையாவிளக்குமட்டும்கையில்இருந்துவிட்டால்நினைத்தஇடத்துக்குச்சென்றுஇருள்என்னும்துன்பத்தைத்துரத்திவிடமுடிகிறது.
மு.வஉரை:
பொருள்என்றுசொல்லப்படுகின்றநந்தாவிளக்கு, நினைத்தஇடத்திற்குச்சென்றுஉள்ளஇடையூற்றைக்கெடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
பணம்எனப்படும்அணையாவிளக்குஅயல்நாட்டிற்குள்ளும்சென்றுபகையாகியஇருளைப்போக்கும்.
Translation:
Wealth, the lamp unfailing, speeds to every land, Dispersing darkness at its lord's command.
Explanation:
The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).
குறள் 754:
அறன்ஈனும்இன்பமும்ஈனும்திறனறிந்து
தீதின்றிவந்தபொருள்.
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
கலைஞர்உரை:
தீயவழியைமேற்கொண்டுதிரட்டப்படாதசெல்வம்தான்ஒருவருக்குஅறநெறியைஎடுத்துக்காட்டி, அவருக்குஇன்பத்தையும்தரும்.
மு.வஉரை:
சேர்க்கும்திறம்அறிந்துதீமைஒன்றும்இல்லாமல், சேர்க்கப்பட்டுவந்தபொருள்ஒருவனுக்குஅறத்தையும்கொடுக்கும்இன்பத்தையும்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
நேரியவழிகைஅறிந்து, தீமைஏதும்செய்யாமல்சம்பாதிக்கப்பட்டபணம்அறத்தையும்தரம்; இன்பத்தையும்தரும்.
Translation:
Their wealth, who blameless means can use aright, Is source of virtue and of choice delight.
Explanation:
The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.
குறள் 755:
அருளொடும்அன்பொடும்வாராப்பொருளாக்கம்
புல்லார்புரளவிடல்.
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
கலைஞர்உரை:
பெரும்செல்வமாகஇருப்பினும்அதுஅருள்நெறியிலோஅன்புவழியிலோவராதபோதுஅதனைப்புறக்கணித்துவிடவேண்டும்.
மு.வஉரை:
அருளோடும், அன்போடும்பொருந்தாதவழிகளில்வந்தசெல்வத்தின்ஆக்கத்தைப்பெற்றுமகிழாமல்அதைத்தீமையானதுஎன்றுநீக்கிவிடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்மீதுஇரக்கமும்அன்பும்இல்லாமல்சேர்க்கும்பணச்சேமிப்பைஏற்காதுவிட்டுவிடுக.
Translation:
Wealth gained by loss of love and grace, Let man cast off from his embrace.
Explanation:
(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.
குறள் 756:
உறுபொருளும்உல்குபொருளும்தன்ஒன்னார்த்
தெறுபொருளும்வேந்தன்பொருள்.
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.
கலைஞர்உரை:
வரியும், சுங்கமும், வெற்றிகொள்ளப்பட்டபகைநாடுசெலுத்தும்கப்பமும்அரசுக்குரியபொருளாகும்.
மு.வஉரை:
இறையாகவந்துசேரும்பொருளும், சுங்கமாகக்கொள்ளும்பொருளும், தன்பகைவரைவென்றுதிறமையாகக்கொள்ளும்பொருளும்அரசனுடையபொருள்களாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
வாரிசுதாரர்இல்லாமல்வந்தபொருள்வெளிநாட்டுபொருட்களுக்குவிதிக்கப்படும்வரிதன்பகைவர்தனக்குக்கட்டும்கப்பம்என்னும்இவைஎல்லாம்அரசிற்குஉரியபொருள்களாம்.
Translation:
Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues, The spoils of slaughtered foes; these are the royal revenues.
Explanation:
Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.
குறள் 757:
அருளென்னும்அன்பீன்குழவிபொருளென்னும்
செல்வச்செவிலியால்உண்டு.
அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.
கலைஞர்உரை:
அன்புஎன்கிறஅன்னைபெற்றெடுக்கும்அருள்என்கிறகுழந்தை, பொருள்என்கிறசெவிலித்தாயால்வளரக்கூடியதாகும்.
மு.வஉரை:
அன்பினால்பெறப்பட்டஅருள்என்றுக்கூறப்படும்குழந்தை, பொருள்என்றுக்கூறப்படும்செல்வமுள்ளசெவிலித்தாயால்வளர்வதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அன்புபெற்றெடுத்தஅருள்என்னும்குழந்தை, பொருள்எனப்படும்இன்பம்தரும்வளர்ப்புத்தாயால்வளரும்.
Translation:
'Tis love that kindliness as offspring bears: And wealth as bounteous nurse the infant rears.
Explanation:
The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.
குறள் 758:
குன்றேறியானைப்போர்கண்டற்றால்தன்கைத்தொன்று
உண்டாகச்செய்வான்வினை.
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.
கலைஞர்உரை:
தன்கைப்பொருளைக்கொண்டுஒருதொழில்செய்வதுஎன்பதுயானைகள்ஒன்றோடொன்றுபோரிடும்போதுஇடையில்சிக்கிக்கொள்ளாமல்அந்தப்போரைஒருகுன்றின்மீதுநின்றுகாண்பதைப்போன்றுஇலகுவானது.
மு.வஉரை:
தன்கைப்பொருள்ஒன்றுதன்னிடம்இருக்கஅதைக்கொண்டுஒருவன்செயல்செய்தால், மலையின்மேல்ஏறியானைப்போரைக்கண்டாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
தன்கையிலேபணம்இருக்கஒருசெயலைச்செய்யத்தொடங்குவது, ஒருவன்மலைமேல்ஏறிநின்றுயானைச்சண்டையைக்கண்டதுபோலாம்.
Translation:
As one to view the strife of elephants who takes his stand, On hill he's climbed, is he who works with money in his hand.
Explanation:
An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.
குறள் 759:
செய்கபொருளைச்செறுநர்செருக்கறுக்கும்
எஃகதனிற்கூரியதில்.
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
கலைஞர்உரை:
பகைவரின்செருக்கைஅழிக்கும்தகுதியானகருவிபொருளைத்தவிரவேறொன்றும்இல்லாததால்அதனைச்சேமிக்கவேண்டியுள்ளது.
மு.வஉரை:
ஒருவன்பொருளைஈட்டவேண்டும், அவனுடையபகைவரின்செருக்கைக்கெடுக்கவல்லவாள்அதைவிடக்கூர்மையானதுவேறுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
எதையும்சாதிக்கஎண்ணுவோர்பணத்தைச்சம்பாதியுங்கள்; பகைவரின்அகங்காரத்தைஅறுக்கும்கூரியஆயுதம், பணத்தைவிடவேறுஇல்லை.
Translation:
Make money! Foeman's insolence o'ergrown To lop away no keener steel is known.
Explanation:
Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.
குறள் 760:
ஒண்பொருள்காழ்ப்பஇயற்றியார்க்குஎண்பொருள்
ஏனைஇரண்டும்ஒருங்கு.
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.
கலைஞர்உரை:
அறம்பொருள்இன்பம்எனும்மூன்றினுள்பொருந்தும்வழியில்பொருளைமிகுதியாகஈட்டியவர்களுக்குஏனையஇரண்டும்ஒன்றாகவேஎளிதில்வந்துசேரும்.
மு.வஉரை:
சிறந்ததாகியபொருளைமிகுதியாகஈட்டியவர்க்கு, மற்றஅறமும்இன்பமுமாகியஇரண்டும்ஒருசேரக்கைகூடும்எளியபொருளாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லவழியில்மிகுதியாகப்பணம்சேர்த்தவர்க்குமற்றஅறமும்இன்பமும்எளிதாக்கிடைக்கும்பொருள்களாகும்.
Translation:
Who plenteous store of glorious wealth have gained, By them the other two are easily obtained.
Explanation:
To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition).
Comments
Post a Comment