101-110
குறள் 101:
செய்யாமல்செய்தஉதவிக்குவையகமும்
வானகமும்ஆற்றல்அரிது.
கலைஞர்உரை:
வாராதுவந்தமாமணி ( என்பதுபோல், செய்யாமற்செய்தஉதவி) என்றுபுகழத்தக்கஅரியஉதவிவழங்கப்பட்டால், அதற்குஇந்தவானமும்பூமியும்கூடஈடாகமாட்டா.
மு.வஉரை:
தான்ஓர்உதவியும்முன்செய்யாதிருக்கப்பிறன்தனக்குசெய்தஉதவிக்குமண்ணுலகத்தையும்விண்ணுலகத்தையும்கைமாறாகக்கொடுத்தாலும்ஈடுஆகமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவருக்குஒருநன்மையும்நாம்செய்யாதபோதும், அவர்நமக்குஉதவினால், அதற்குக்கைம்மாறாகமண்ணுலகையும்விண்ணுலகயும்கொடுத்தாலும்சமம்ஆகாது.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, தனக்குப்பிறர்செய்தநன்மையைமறவாமை. இனியவைகூறிஇல்லறம்வழுவாதார்க்குஉய்திஇல்குற்றம்செய்ந்நன்றிகோறலேயாகலின் , அதனைப்பாதுகாத்துக்கடிதற்பொருட்டு, இஃதுஇனியவைகூறலின்பின்வைக்கப்பட்டது. )
செய்யாமல்செய்தஉதவிக்கு - தனக்குமுன்ஓர்உதவிசெய்யாதிருக்கஒருவன்பிறனுக்குச்செய்தஉதவிக்கு; வையகமும், வானகமும்ஆற்றல்அரிது - மண்ணுலகும்விண்ணுலகும்கைம்மாறாகக்கொடுத்தாலும்ஒத்தல்அரிது. (கைம்மாறுகள்எல்லாம்காரணமுடையவாகலின், காரணம்இல்லாதஉதவிக்குஆற்றாவாயின. 'செய்யாமைச்செய்தஉதவி' என்றுபாடம்ஓதி 'மறித்துஉதவமாட்டாமையுள்ளஇடத்துச்செய்தஉதவி' என்றுஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
முன்னோருதவிசெய்யாதார்க்குஒருவன்செய்தவுதவிக்குஉலகமுஞ்சுவர்க்கமும்நிறையாற்றுதலரிது.
Translation:
Assistance given by those who ne'er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid.
Explanation:
(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.
குறள் 102:
காலத்தினாற்செய்தநன்றிசிறிதெனினும்
ஞாலத்தின்மாணப்பெரிது.
கலைஞர்உரை:
தேவைப்படும்காலத்தில்செய்யப்படும்உதவிசிறிதளவாகஇருந்தாலும், அதுஉலகத்தைவிடப்பெரிதாகமதிக்கப்படும்.
மு.வஉரை:
உற்றகாலத்தில்ஒருவன்செய்தஉதவிசிறிதளவாகஇருந்தாலும், அதன்தன்மையைஅறிந்தால்உலகைவிடமிகப்பெரிதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நமக்குநெருக்கடியானநேரத்தில்ஒருவர்செய்தஉதவி, அளவில்சிறியதுஎன்றாலும், உதவியநேரத்தைஎண்ணஅதுஇந்தப்பூமியைவிடமிகப்பெரியதாகும்.
பரிமேலழகர்உரை:
காலத்தினால்செய்தநன்றி - ஒருவனுக்குஇறுதிவந்தஎல்லைக்கண்ஒருவன்செய்தஉபகாரம்; சிறிதுஎனினும்ஞாலத்தின்மாணப்பெரிது - தன்னைநோக்கச்சிறிதாயிருந்ததுஆயினும்அக்காலத்தைநோக்கநிலவுலகத்தினும்மிகப்பெரியது. (அக்காலம்நோக்குவதல்லதுபொருள்நோக்கலாகாதுஎன்பதாம். 'காலத்தினால்' என்பதுவேற்றுமைமயக்கம்.).
மணக்குடவர்உரை:
உதவவேண்டுங்காலந்தப்பாமற்செய்தவுதவிதான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும்மிகப்பெரிது. இதுகாலந்தப்பாமற்செய்தவுதவிஉலகத்தினும்பெரிதென்றது.
Translation:
A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth.
Explanation:
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.
குறள் 103:
பயன்தூக்கார்செய்தஉதவிநயன்தூக்கின்
நன்மைகடலின்பெரிது.
கலைஞர்உரை:
என்னபயன்கிடைக்கும்என்றுஎண்ணிப்பார்க்காமலே, அன்பின்காரணமாகஒருவர்செய்தஉதவியின்சிறப்புகடலைவிடப்பெரிது.
மு.வஉரை:
இன்னபயன்கிடைக்கும்என்றுஆராயாமல்ஒருவன்செய்தஉதவியின்அன்புடைமையைஆராய்ந்தால்அதன்நன்மைகடலைவிடபெரியதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
இவருக்குஉதவினால்பிறகுநமக்குஇதுகிடைக்கும்என்றுஎண்ணாதவராய்ஒருவர்செய்தஉதவியின்அன்பைஆய்ந்துபார்த்தால், அவ்வுதவியின்நன்மைகடலைவிடப்பெரியதுஆகும்.
பரிமேலழகர்உரை:
பயன்தூக்கார்செய்தஉதவிநயன்தூக்கின் - இவர்க்குஇதுசெய்தால்இன்னதுபயக்கும்என்றுஆராய்தல்இலராய்ச்செய்தஉதவியாகியஈரமுடைமையைஆராயின்; நன்மைகடலின்பெரிது - அதன்நன்மைகடலினும்பெரிதுஆம். (இவைமூன்றுபாட்டானும்முறையேகாரணம்இன்றிச்செய்ததூஉம், காலத்தினால்செய்ததூஉம், பயன்தூக்காராய்ச்செய்ததூஉம்அளவிலவாதல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தமக்கொருபயனைநோக்காதவராய்ச்செய்தவுபகாரத்தாலுண்டாயநன்மையையாராயின், அதனாலுண்டாயநன்மைகடலினும்பெரிது.
Translation:
Kindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, 'Tis vaster than the sea.
Explanation:
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
குறள் 104:
தினைத்துணைநன்றிசெயினும்பனைத்துணையாக்
கொள்வர்பயன்தெரிவார்.
கலைஞர்உரை:
ஒருவர்செய்யும்தினையளவுநன்மையைக்கூடஅதனால்பயன்பெறும்நன்றியுள்ளவர்பல்வேறுவகையில்பயன்படக்கூடியபனையின்அளவாகக்கருதுவார்.
மு.வஉரை:
ஒருவன்தினையளவாகியஉதவியைச்செய்தபோதிலும்அதன்பயனைஆராய்கின்றவர், அதனையேபனையளவாகக்கொண்டுபோற்றுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
தினைஅளவாகமிகச்சிறியஉதவியேசெய்யப்பெற்றிருந்தாலும்உதவியின்பயனைநன்குஅறிந்தவர்அதைப்பனைஅளவுமிகப்பெரியஉதவியாய்க்கருதுவர்.
பரிமேலழகர்உரை:
தினைத்துணைநன்றிசெயினும் - தமக்குத்தினையளவிற்றாயஉபகாரத்தைஒருவன்செய்தானாயினும்; பனைத்துணையாக்கொள்வர்பயன்தெரிவார் - அதனைஅவ்வளவிற்றாகக்கருதாது, பனையளவிற்றாகக்கருதுவர்அக்கருத்தின்பயன்தெரிவார். ('தினை', 'பனை' என்பனசிறுமைபெருமைகட்குக்காட்டுவனசிலஅளவை. அக்கருத்தின்பயனாவதுஅங்ஙனம்கருதுவார்க்குவரும்பயன்.).
மணக்குடவர்உரை:
தினையளவுநன்றிசெய்தாராயினும், அதனையவ்வளவிற்றென்றுநினையாது, பனையளவாகக்கொள்வார்அதன்பயனையறிபவர். பனையளவு- அதனுயர்ச்சி.
Translation:
Each benefit to those of actions' fruit who rightly deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem.
Explanation:
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.
குறள் 105:
உதவிவரைத்தன்றுஉதவிஉதவி
செயப்பட்டார்சால்பின்வரைத்து.
கலைஞர்உரை:
உதவிஎன்பது, செய்யப்படும்அளவைப்பொருத்துச்சிறப்படைவதில்லை; அந்தஉதவியைப்பெறுபவரின்பண்பைப்பொருத்தேஅதன்அளவுமதிப்பிடப்படும்.
மு.வஉரை:
கைமாறாகச்செய்யும்உதவிமுன்செய்தஉதவியின்அளவைஉடையதுஅன்று, உதவிசெய்யப்பட்டவற்றின்பண்புக்குஏற்றஅளவைஉடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவர்நமக்குச்செய்தஉதவிக்குத்திரும்பநாம்செய்வது, அவர்செய்தஉதவியின்காரணம், பொருள், காலம்பார்த்துஅன்று; உதவியைப்பெற்றநம்பண்பாட்டுத்தகுதியேஅதற்குஅளவாகும்.
பரிமேலழகர்உரை:
உதவிஉதவிவரைத்துஅன்று - கைம்மாறானஉதவி, காரணத்தானும்பொருளானும்காலத்தானும்ஆகியமூவகையானும்முன்செய்தஉதவியளவிற்றுஅன்று; உதவிசெயப்பட்டார்சால்பின்வரைத்து - அதனைச்செய்வித்துக்கொண்டவர்தம்அமைதிஅளவிற்று. '(சால்புஎவ்வளவுபெரிதாயிற்று, உதவியும்அவ்வளவுபெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்துஎன்றார். இவைஇரண்டுபாட்டானும்மூன்றும்அல்லாதஉதவிமாத்திரமும்அறிவார்க்குச்செய்தவழிப்பெரிதாம்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
முன்னேசெய்தவுதவியின்அளவன்றுபின்புசெய்யும்மாற்றுதவி: அவ்வுதவிசெய்யப்பட்டவர்தன்மைஎவ்வளவிற்றுஅவ்வளவிற்றுஅவர்செய்யும்மாற்றுதவி. இதுமாற்றுதவிக்குஅளவில்லைஎன்றது.
Translation:
The kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do.
Explanation:
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.
குறள் 106:
மறவற்கமாசற்றார்கேண்மைதுறவற்க
துன்பத்துள்துப்பாயார்நட்பு.
கலைஞர்உரை:
மாசற்றவர்களின்உறவைமறக்கவும்கூடாது; துன்பத்தில்துணைநின்றவர்நட்பைத்துறக்கவும்கூடாது.
மு.வஉரை:
குற்றமற்றவரின்உறவைஎப்போதும்மறக்கலாகாது: துன்பம்வந்தகாலத்தில்உறுதுணையாய்உதவியவர்களின்நட்பைஎப்போதும்விடாலாகாது.
சாலமன்பாப்பையாஉரை:
உன்துன்பத்துள்துணையாகநின்றவரின்நட்பைவிடாதே; அறிவுஒழுக்கங்களில்குற்றம்இல்லாதவரின்நட்பைமறந்துவிடாதே.
பரிமேலழகர்உரை:
துன்பத்துள்துப்புஆயார்நட்புதுறவற்க - துன்பக்காலத்துத்தனக்குப்பற்றுக்கோடாயினாரதுநட்பைவிடாதொழிக; மாசுஅற்றார்கேண்மைமறவற்க - அறிவொழுக்கங்களில்குற்றமற்றாரதுகேண்மையைமறவாதொழிக. (கேண்மை: கேள்ஆம்தன்மை. இம்மைக்குஉறுதிகூறுவார், மறுமைக்குஉறுதியும்உடன்கூறினார்.).
மணக்குடவர்உரை:
தனக்குத்துன்பம்வந்தகாலத்துவலியாயினர்நட்பைவிடாதொழிக: எக்காலத்துங்குற்றமற்றாரதுநட்பைமறவாதொழிக.
Translation:
Kindness of men of stainless soul remember evermore!
Forsake thou never friends who were thy stay in sorrow sore!.
Explanation:
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.
குறள் 107:
எழுமைஎழுபிறப்பும்உள்ளுவர்தங்கண்
விழுமந்துடைத்தவர்நட்பு.
கலைஞர்உரை:
ஏழேழுதலைமுறைக்குஎன்றும்ஏழேழுபிறவிக்குஎன்றும்மிகைப்படுத்திச்சொல்வதுபோல, ஒருவருடையதுன்பத்தைப்போக்கியவரின்தூய்மையானநட்பைநினைத்துப்போற்றுவதற்குக்காலஎல்லையேகிடையாது.
மு.வஉரை:
தம்முடையதுன்பத்தைப்போக்கிஉதவியவரின்நட்பைப்பல்வேறுவகையானபிறவியிலும்மறவாமல்போற்றுவர்பெரியோர்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்துன்பத்தைப்போக்கியவரின்நட்பைஏழேழுபிறப்பிலும்நல்லவர்எண்ணுவர்.
பரிமேலழகர்உரை:
தம்கண்விழுமம்துடைத்தவர்நட்பு - தம்கண்எய்தியதுன்பத்தைநீக்கினவருடையநட்பினை; எழுமைஎழுபிறப்பும்உள்ளுவர் - எழுமையினையுடையதம்எழுவகைப்பிறப்பினும்நினைப்பர்நல்லோர். ('எழுமை' என்றதுவினைப்பயன்தொடரும்ஏழுபிறப்பினை: அதுவளையாபதியுள்கண்டது. எழுவகைப்பிறப்புமேலேஉரைத்தாம் (குறள் 62) விரைவுதோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவதுதுன்பம்துடைத்தலான், அவர்மாட்டுஉளதாகியஅன்புபிறப்புத்தோறும்தொடர்ந்துஅன்புடையராதல். இவைஇரண்டுபாட்டானும்நன்றிசெய்தாரதுநட்புவிடலாகாதுஎன்பதுகூறப்பட்டது,).
மணக்குடவர்உரை:
தங்கண்உற்றதுன்பத்தைநீக்கினவரதுநட்பைஅப்பிறப்பிலேயன்றிஎழுமையிலுந்தோற்றும்பிறப்பெல்லாம்நினைப்பர்சான்றோர்.
Translation:
Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise.
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.
Explanation:
(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.
குறள் 108:
நன்றிமறப்பதுநன்றன்றுநன்றல்லது
அன்றேமறப்பதுநன்று.
கலைஞர்உரை:
ஒருவர்நமக்குச்செய்தநன்மையைமறப்பதுநல்லதல்ல; அவர்தீமைசெய்திருந்தால்அதைமட்டும்அக்கணமேமறந்துவிடுவதுநல்லது.
மு.வஉரை:
ஒருவரர்முன்செய்தநன்மையைமறப்பதுஅறம்அன்று; அவர்செய்ததீமையைச்செய்தஅப்பொழுதேமறந்துவிடுவதுஅறம்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்நமக்குச்செய்தஉதவியைமறப்பதுஅறம்அன்று; அவன்செய்ததீமையைஅப்போதேமறப்பதுஅறம்.
பரிமேலழகர்உரை:
நன்றிமறப்பதுநன்றுஅன்று -ஒருவன்முன்செய்தநன்மையைமறப்பதுஒருவற்குஅறன்அன்று; நன்றுஅல்லதுஅன்றேமறப்பதுநன்று - அவன்செய்ததீமையைச்செய்தபொழுதேமறப்பதுஅறன். (இரண்டும்ஒருவனாற்செய்யப்பட்டவழி, மறப்பதும்மறவாததும்வகுத்துக்கூறியவாறு.).
மணக்குடவர்உரை:
பிறர்செய்தநன்றியைமறப்பதுஎன்றும்நன்றல்ல: பிறர்செய்ததீமையைஅன்றேமறப்பதன்றேநன்றாம். இதுதீமையைமறக்கவேண்டுமென்றுகூறிற்று.
Translation:
'Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, 'tis good to rid thy memory that very day.
Explanation:
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).
குறள் 109:
கொன்றன்னஇன்னாசெயினும்அவர்செய்த
ஒன்றுநன்றுஉள்ளக்கெடும்.
கலைஞர்உரை:
ஒருவர்செய்யும்மிகக்கொடுமையானதீமைகூடநமதுஉள்ளத்தைப்புண்படுத்தாமல்அகன்றுவிடவேண்டுமானால், அந்தஒருவர்முன்னர்நமக்குச்செய்தநன்மையைமட்டும்நினைத்துப்பார்த்தாலேபோதுமானது.
மு.வஉரை:
முன்உதவிசெய்தவர்பின்பு கொன்றார்போன்றதுன்பத்தைச்செய்தாரானாலும், அவர்முன்செய்தஒருநன்மையைநினைத்தாலும்அந்தத்துன்பம்கெடும்.
சாலமன்பாப்பையாஉரை:
முன்புநன்மைசெய்தவரேபின்புநம்மைக்கொலைசெய்வதுபோன்றதீமையைச்செய்தாலும்அவர்முன்புசெய்தஒப்பற்றநன்மையைநினைத்தஅளவில்அத்தீமைமறையும்.
பரிமேலழகர்உரை:
கொன்றுஅன்னஇன்னாசெயினும் - தமக்குமுன்ஒருநன்மைசெய்தவர், பின்கொன்றால்ஒத்தஇன்னாதவற்றைச்செய்தாராயினும்; அவர்செய்தநன்றுஒன்றுஉள்ளக்கெடும் - அவையெல்லாம்அவர்செய்தநன்மைஒன்றனையும்நினைக்கஇல்லையாம். (தினைத்துணைபனைத்துணையாகக்கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமேஅவற்றையெல்லாம்கெடுக்கும்என்பதாம். இதனால்நன்றல்லதுஅன்றேமறக்கும்திறம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தமக்குமுன்புநன்மைசெய்தார்தம்மைக்கொன்றாலொத்தஇன்னாமையைப்பின்புசெய்யினும்அவர்முன்புசெய்தநன்றியொன்றைநினைக்கஅவ்வின்னாமையெல்லாங்கெடும்.
Translation:
Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.
Explanation:
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.
குறள் 110:
எந்நன்றிகொன்றார்க்கும்உய்வுண்டாம்உய்வில்லை
செய்ந்நன்றிகொன்றமகற்கு.
கலைஞர்உரை:
எந்தஅறத்தைமறந்தார்க்கும்வாழ்வுஉண்டு; ஆனால்ஒருவர்செய்தஉதவியைமறந்தார்க்குவாழ்வில்லை.
மு.வஉரை:
எந்தஅறத்தைஅழித்தவர்க்கும்தப்பிப்பிழைக்கவழிஉண்டாகும்; ஒருவர்செய்தஉதவியைமறந்துஅழித்தவனுக்குஉய்வுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
எத்தனைபெரியஅறங்களைஅழித்தவர்க்கும்பாவத்தைக்கழுவவழிகள்உண்டு. ஆனால், ஒருவர்செய்தஉதவியைமறந்துதீமைசெய்பவனுக்குவழியேஇல்லை.
பரிமேலழகர்உரை:
எந்நன்றிகொன்றார்க்கும்உய்வுஉண்டாம் - பெரியஅறங்களைச்சிதைத்தார்க்கும்பாவத்தின்நீங்கும்வாயில்உண்டாம்; செய்ந்நன்றிகொன்றமகற்குஉய்வுஇல்லை - ஒருவன்செய்தநன்றியைச்சிதைத்தமகனுக்குஅஃதுஇல்லை. (பெரியஅறங்களைச்சிதைத்தலாவது, ஆன்முலைஅறுத்தலும், மகளிர்கருவினைச்சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலியபாதகங்களைச்செய்தல். இதனால்செய்ந்நன்றிகோறலின்கொடுமைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
எல்லாநன்மைகளையுஞ்சிதைத்தார்க்கும்பின்பொருகாலத்தேயாயினும்உய்வுண்டாம்: ஒருவன்செய்தநன்றியைச்சாவாக்கினமகனுக்குஒருகாலத்தினும்உய்தலில்லை.
Translation:
Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!.
Explanation:
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.
Comments
Post a Comment