231-240
குறள் 231:
ஈதல்இசைபடவாழ்தல்அதுவல்லது
ஊதியம்இல்லைஉயிர்க்கு.
கலைஞர்உரை:
கொடைத்தன்மையும், குன்றாதபுகழும்தவிரவாழ்க்கைக்குஆக்கம்தரக்கூடியதுவேறெதுவும்இல்லை.
மு.வஉரை:
வறியவர்க்குஈதல்வேண்டும்அதனால்புகழ்உண்டாகவாழவேண்டும், அப்புகழ்அல்லாமல்உயிர்க்குஊதியமானதுவேறொன்றும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
ஏழைகளுக்குக்கொடுப்பது; அதனால்புகழ்பெருகவாழ்வது; இப்புகழ்அன்றிமனிதர்க்குப்பயன்வேறுஒன்றும்இல்லை.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, இல்வாழ்க்கைமுதல்ஈகைஈறாகச்சொல்லப்பட்டஇல்லறத்தின்வழுவாதார்க்குஇம்மைப்பயனாகியஇவ்வுலகின்கண்நிகழ்ந்துஇறவாதுநிற்கும்கீர்த்தி. இது, பெரும்பான்மையும்ஈதல்பற்றிவருதலின் , அதன்பின்வைக்கப்பட்டது.)
'ஈதல்' - வறியார்க்குஈக, இசைபடவாழ்தல் - அதனால்புகழ்உண்டாகவாழ்க, அல்லதுஉயிர்க்குஊதியம்இல்லை - அப்புகழ்அல்லதுமக்கள்உயிர்க்குப்பயன்பிறிதுஒன்றுஇல்லைஆகலான்.்(இசைபடவாழ்தற்குக்கல்வி, ஆண்மைமுதலியபிறகாரணங்களும்உளவேனும்உணவின்பிண்டம்உண்டிமுதற்று (புறநா.18) ஆகலின்ஈதல்சிறந்ததுஎன்பதற்குஞாபகமாக 'ஈதல்' என்றார். உயிர்க்குஎன்பது, பொதுப்படக்கூறினாரேனும், விலங்குஉயிர்கட்குஏலாமையின், மக்கள்உயிர்மேல்நின்றது.).
மணக்குடவர்உரை:
புகழ்படவாழ்தலாவதுகொடுத்தல். அக்கொடையானல்லதுஉயிர்க்குஇலாபம்வேறொன்றில்லை. இதுபுகழுண்டாமாறுகூறிற்று.
Translation:
See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain.
Explanation:
Give to the poor and live with praise. There is no greater profit to man than that.
குறள் 232:
உரைப்பார்உரைப்பவைஎல்லாம்இரப்பார்க்கொன்று
ஈவார்மேல்நிற்கும்புகழ்.
கலைஞர்உரை:
போற்றுவோர்போற்றுவனவெல்லாம்இல்லாதவர்க்குஒன்றுவழங்குவோரின்புகழைக்குறித்தேஅமையும்.
மு.வஉரை:
புகழ்ந்துசொல்கின்றவர்சொல்பவைஎல்லாம்வறுமையால்இரப்பவர்க்குஒருபொருள்கொடுத்துஉதவுகின்றவரின்மேல்நிற்கின்றபுகழேயாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
சொல்வார்சொல்வனஎல்லாம், இல்லைஎன்றுவருபவர்க்குத்தருபவர்மேல்சொல்லப்படும்புகழே.
பரிமேலழகர்உரை:
உரைப்பார்உரைப்பவைஎல்லாம் - உலகத்துஒன்றுஉரைப்பார்உரைப்பனஎல்லாம், இரப்பார்க்குஒன்றுஈவார்மேல்நிற்கும்புகழ் - வறுமையான்இரப்பார்க்குஅவர்வேண்டியதுஒன்றைஈவார்கண்நிற்கும்புகழாம். (புகழ்தான்உரையும்பாட்டும்எனஇருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் 'உரைப்பார்உரைப்பவை' எனஎல்லார்க்கும்உரியவழக்கினையேஎடுத்தாராயினும்,இனம்பற்றிப்புலவர்க்கேஉரியசெய்யுளும்கொள்ளப்படும், படவே 'பாடுவார்பாடுவனஎல்லாம் "புகழாம்என்பதூஉம்பெற்றாம். ஈதற்காரணம்சிறந்தமைஇதனுள்ளும்காண்க. இதனைப்பிறர்மேலும்நிற்கும்என்பார். தாம்எல்லாம்சொல்லுக ; புகழ்ஈவார்மேல்நிற்கும்' என்றுஉரைப்பாரும்உளர். அதுபுகழதுசிறப்புநோக்காமைஅறிக.).
மணக்குடவர்உரை:
சொல்லுவார்சொல்லுவனவெல்லாம்இரந்துவந்தார்க்குஅவர்வேண்டியதொன்றைக்கொடுப்பார்மேல்நில்லாநின்றபுகழாம்.
Translation:
The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown.
Explanation:
Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.
குறள் 233:
ஒன்றாஉலகத்துஉயர்ந்தபுகழல்லால்
பொன்றாதுநிற்பதொன்றில்.
கலைஞர்உரை:
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும்இந்தஉலகத்தில்நிலைத்திருப்பதுபுகழைத்தவிரவேறுஎதுவுமேஇல்லை.
மு.வஉரை:
உயர்ந்தபுகழ்அல்லாமல்உலகத்தில்ஒப்பற்றஒருபொருளாகஅழியாமல்நிலைநிற்கவல்லதுவேறொன்றும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தனக்குஇணையில்லாததாய், உயர்ந்ததாய்விளங்கும்புகழேஅன்றி, அழியாமல்நிலைத்துநிற்கும்வேறொன்றும்இவ்வுலகத்தில்இல்லை.
பரிமேலழகர்உரை:
ஒன்றாஉயர்ந்தபுகழ்அல்லால்- தனக்குஇணையின்றாகஓங்கியபுகழல்லது; உலகத்துப்பொன்றாதுநிற்பதுஒன்றுஇல்-உலகத்துஇறவாதுநிற்பதுபிறிதொன்றுஇல்லை. (இணைஇன்றாகஓங்குதலாவது : கொடுத்தற்குஅரியஉயிர்உறுப்புப்பொருள்களைக்கொடுத்தமைபற்றிவருதலால்தன்னோடுஒப்பதுஇன்றித்தானேஉயர்தல். அத்தன்மைத்தாகியபுகழேசெய்யப்படுவதுஎன்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்குஒருவார்த்தையாகச்சொல்லின்எனவும், ஒருதலையாகப்பொன்றாதுநிற்பதுஎனவும்உரைப்பாரும்உளர். இவைமூன்றுபாட்டானும்புகழ்சிறப்புக்கூறப்பட்டது.
மணக்குடவர்உரை:
உயர்ந்தபுகழல்லதுஇணையின்றாகஉலகத்துக்கெடாதுநிற்பதுபிறிதில்லை. இதுபுகழ்மற்றுள்ளபொருள்போலன்றிஅழியாதுநிற்குமென்றது.
Translation:
Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die.
Explanation:
There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.
குறள் 234:
நிலவரைநீள்புகழ்ஆற்றின்புலவரைப்
போற்றாதுபுத்தேள்உலகு.
கலைஞர்உரை:
இனிவரும்புதியஉலகம்கூடஇன்றையஉலகில்தன்னலம்துறந்துபுகழ்ஈ.ட்டியபெருமக்களைவிடுத்து, அறிவாற்றல்உடையவரைமட்டும்போற்றிக்கொண்டிராது.
மு.வஉரை:
நிலவுலகின்எல்லையில்நெடுங்காலம்நிற்கவல்லபுகழைச்செய்தால், வானுலகம் (அவ்வாறுபுகழ்செய்தாரைப்போற்றுமேஅல்லாமல்) தேவரைப்போற்றாது.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னில்வாழும்அறிஞரைப்போற்றாமல், இந்தநிலஉலகில்நெடும்புகழ்பெற்றுவாழந்தவரையேதேவர்உலகம்பேணும்.
பரிமேலழகர்உரை:
நிலவரைநீள்புகழ்ஆற்றின் - ஒருவன்நிலஎல்லைக்கண்ணேபொன்றாதுநிற்கும்புகழைச்செய்யுமாயின்புத்தேள்உலகுபுலவரைப்போற்றாது - புத்தேள்உலகம்அவனையல்லதுதன்னைஎய்திநின்றஞானிகளைப்பேணாது. (புகழ்உடம்பான்இவ்வுலகும், புத்தேள்உடம்பான்அவ்வுலகும்ஒருங்கேஎய்தாமையின், புலவரைப்போற்றாதுஎன்றார். அவன்இரண்டுஉலகும்ஒருங்குஎய்துதல், 'புலவர்பாடும்புகழுடையோர்விசும்பின்வலவன்ஏவாவானஊர்திஎய்துபஎன்பதம்செய்வினைமுடித்து' (புறநா.27), எனப்பிறராலும்சொல்லப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவன்நிலத்தெல்லையின்கண்ணேநெடியபுகழைச்செய்வனாயின்தேவருலகம்புலவரைப்போற்றாதுஇவனைப்போற்றும். புலவரென்றார்தேவரை, அவர்புலனுடையாராதலான். இதுபுகழ்செய்தாரைத்தேவருலகம்போற்றுமென்றது.
Translation:
If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned.
Explanation:
If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.
குறள் 235:
நத்தம்போல்கேடும்உளதாகும்சாக்காடும்
வித்தகர்க்கல்லால்அரிது.
கலைஞர்உரை:
துன்பங்களுக்கிடையேகூடஅவற்றைத்தாங்கும்வலிமையால்தமதுபுகழைவளர்த்துக்கொள்வதும், தமதுசாவிலும்கூடப்புகழைநிலைநாட்டுவதும்இயல்பானஆற்றலுடையவருக்கேஉரியசெயலாகும்.
மு.வஉரை:
புகழுடம்புமேம்படுதலாகும்வாழ்வில்கேடும், புகழ்நிலைநிற்பதாகும்சாவும்அறிவில்சிறந்தவர்க்குஅல்லாமல்மற்றவர்க்குஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
பூதஉடம்பின்வறுமையைப்புகழுடம்பின்செல்வமாக்குவதும், பூதஉடம்பின்அழிவைப்புகழுடம்பின்அழியாத்தன்மைஆக்குவதும், பிறர்க்குஈந்து, தாம்மெய்உணர்ந்து, அவாஅறுத்தவித்தகர்க்குஆகுமேஅன்றிமற்றவர்க்குஆவதுகடினம்.
பரிமேலழகர்உரை:
நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்குஆக்கமாகுங்கேடும், உளதுஆகும்சாக்காடும் - புகழுடம்புஉளதாகும்சாக்காடும், வித்தகர்க்குஅல்லால்அரிது - சதுரப்பாடுடையார்க்குஅல்லதுஇல்லை. ('நந்து' என்னும்தொழிற்பெயர்விகாரத்துடன் 'நத்து' என்றாய்பின் 'அம்' என்னும்பகுதிப்பொருள்விகுதிபெற்று 'நத்தம்' என்றுஆயிற்று. 'போல்' என்பதுஈண்டுஉரையசை. 'ஆகும்' என்பதனைமுன்னும்கூட்டி, 'அரிது' என்பதனைத்தனித்தனிகூட்டிஉரைக்க. ஆக்கமாகும்கேடாவது; புகழ்உடம்புசெல்வம்எய்தப்பூதஉடம்புநல்கூர்தல். உளதாகும்சாக்காடாவது; புகழ்உடம்புநிற்கப்பூதஉடம்புஇறத்தல். நிலையாதனவற்றான்நிலையின்எய்துவார்வித்தகர்ஆகலின், 'வித்தகர்க்குஅல்லால்' அரிதுஎன்றார். இவைஇரண்டுபாட்டானும்புகழ்உடையார்எய்தும்மேன்மைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஆக்கம்போலக்கேடும்உளதானாற்போலச்சாதலும்வல்லவற்கல்லதுஅரிது. இதுபுகழ்படவாழ்தல்மக்களெல்லார்க்கும்அரிதென்றது.
Translation:
Loss that is gain, and death of life's true bliss fulfilled,
Are fruits which only wisdom rare can yield.
Explanation:
Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.
குறள் 236:
தோன்றின்புகழொடுதோன்றுகஅஃதிலார்
தோன்றலின்தோன்றாமைநன்று.
கலைஞர்உரை:
எந்தத்துறையில்ஈடுபட்டாலும்அதில்புகழுடன்விளங்கவேண்டும்; இயலாதவர்கள்அந்தத்துறையில்ஈ.டுபடாமல்இருப்பதேநல்லது.
மு.வஉரை:
ஒருதுறையில்முற்பட்டுத்தோன்றுவதானால்புகழோடுதோன்றவேண்டும், அத்தகையசிறப்புஇல்லாதவர்அங்குத்தோன்றுவதைவிடத்தோன்றாமலிருப்பதேநல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்அறியுமாறுஅறிமுகமானால்புகழ்மிக்கவராய்அறிமுகம்ஆகுக; புகழ்இல்லாதவர்உலகுகாணக்காட்சிதருவதிலும், தராமல்இருப்பதேநல்லது.
பரிமேலழகர்உரை:
தோன்றின்புகழோடுதோன்றுக-மக்களாய்ப்பிறக்கின்புகழுக்குஏதுவாகியகுணத்தோடுபிறக்க; 'அஃதுஇலார்' தோன்றலின்தோன்றாமைநன்று-அக்குணமில்லாதார்மக்களாய்ப்பிறத்தலின்விலங்காய்ப்பிறத்தல்நன்று (புகழ்; ஈண்டுஆகுபெயர். அஃதுஇலார்என்றமையின்மக்களாய்என்பதூஉம், 'மக்களாய்ப்பிறவாமை' என்றஅருத்தாபத்தியான் 'விலங்காய்ப்பிறத்தல்' என்பதூஉம்பெற்றாம். இகழ்வார்இன்மையின் 'நன்று' என்றார்).
மணக்குடவர்உரை:
பிறக்கிற்புகழுண்டாகப்பிறக்க; அஃதிலார்பிறக்குமதிற்பிறவாமைநன்று. இதுபுகழ்படவாழவேண்டுமென்றது.
Translation:
If man you walk the stage, appear adorned with glory's grace;
Save glorious you can shine, 'twere better hide your face.
Explanation:
If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.
குறள் 237:
புகழ்படவாழாதார்தந்நோவார்தம்மை
இகழ்வாரைநோவதுஎவன்.
கலைஞர்உரை:
உண்மையானபுகழுடன்வாழமுடியாதவர்கள், அதற்காகத்தம்மைநொந்துகொள்ளவேண்டுமேதவிரத்தமதுசெயல்களைஇகழ்ந்துபேசுகிறவர்களைநொந்துகொள்வதுஎதற்காக?.
மு.வஉரை:
தமக்குப்புகழ்உண்டாகுமாறுவாழமுடியாதவர்தம்மைத்தாம்நொந்துகொள்ளாமல்தம்மைஇகழ்கின்றவரைநொந்துகொள்ளக்காரணம்என்ன?.
சாலமன்பாப்பையாஉரை:
புகழ்பெருகுமாறுவாழமுடியாதவர்அதற்குக்காரணர்தாமேஎன்றுதம்மீதுவருந்தாமல், தம்மைஇகழ்வார்மீதுவருத்தம்கொள்வதுஎதற்காக?.
பரிமேலழகர்உரை:
புகழ்படவாழாதார்- தமக்குப்புகழுண்டாகவாழமாட்டாதார்; தம்நோவார்அதுபற்றிப்பிறர்இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சிநம்மாட்டாமையான்வந்தது' என்றுதம்மைநோவாதேதம்மைஇகழ்வாரைநோவதுஎவன்-தம்மைஇகழ்வாரைநோவதுஎன்கருதி? (புகழ்படவாழலாயிருக்கஅதுமாட்டாதகுற்றம்பற்றிப்பிறர்இகழ்தல்ஒருதலையாகலின், இகழ்வாரைஎன்றார்.).
மணக்குடவர்உரை:
புகழ்படவாழமாட்டாதார்தங்களைநோவாதுதம்மையிகழ்வாரைநோகின்றதுயாதினுக்கு? இதுபுகழ்படவாழமாட்டாதார்இகழப்படுவரென்றது.
Translation:
If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You've yourself to blame.
Explanation:
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.
குறள் 238:
வசையென்பவையத்தார்க்கெல்லாம்இசையென்னும்
எச்சம்பெறாஅவிடின்.
கலைஞர்உரை:
தமக்குப்பிறகும்எஞ்சிநிற்கக்கூடியபுகழைப்பெறாவிட்டால், அதுஅந்தவாழ்க்கைக்கேவந்தபழியென்றுவையம்கூறும்.
மு.வஉரை:
தமக்குப்பின்எஞ்சிநிற்பதாகியப்புகழைப்பெறாவிட்டால்உலகத்தார்எல்லார்க்கும்அத்தகையவாழ்க்கைபழிஎன்றுசொல்லுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
புகழ்என்னும்பெரும்செல்வத்தைப்பெறாதுபோனால், இந்தஉலகத்தவர்க்குஅதுவேபழிஎன்றுஅறிந்தோர்கூறுவர்.
பரிமேலழகர்உரை:
இசைஎன்னும்எச்சம்பெறாவிடின் - புகழ்என்னும்எச்சம்பெறலாயிருக்க, அதுபெறாதுஒழிவாராயின், வையத்தார்க்குஎல்லாம்வசைஎன்ப - வையகத்தோர்க்குஎல்லாம்அதுதானேவசைஎன்றசொல்லுவர்நல்லோர். ( 'எச்சம்' என்றார், செய்தவர்இறந்துபோகத்தான்இறவாது 'நிற்றலின்' இகழப்படுதற்குப்பிறிதொருகுற்றம்வேண்டாஎன்பதுகருத்து.).
மணக்குடவர்உரை:
உலகத்தார்க்கெல்லாம்புகழாகியஒழிபுபெறாவிடின், அப்பெறாமைதானேவசையாமென்றுசொல்லுவர். மேல்புகழில்லாதாரையிகழ்பவென்றார்அவர்குற்றமில்லாராயின்இகழப்படுவரோவென்றார்க்குவேறுகுற்றம்வேண்டா, புகழின்மைதானேயமையுமென்றார்.
Translation:
Fame is virtue's child, they say; if, then,
You childless live, you live the scorn of men.
Explanation:
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.
குறள் 239:
வசையிலாவண்பயன்குன்றும்இசையிலா
யாக்கைபொறுத்தநிலம்.
கலைஞர்உரை:
புகழ்எனப்படும்உயிர்இல்லாதவெறும்மனிதஉடலைச்சுமந்தால், இந்தப்பூமிநல்லவிளைவில்லாதநிலமாகக்கருதப்படும்.
மு.வஉரை:
புகழ்பெறாமல்வாழ்வைக்கழித்தவருடையஉடம்பைச்சுமந்தநிலம், வசையற்றவளமானபயனாகியவிளைவுஇல்லாமல்குன்றிவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
புகழ்இல்லாதஉடம்பைச்சுமந்தபூமி, தன்வளம்மிக்கவிளைச்சலில்குறைவுபடும்.
பரிமேலழகர்உரை:
இசைஇலாயாக்கைபொறுத்தநிலம் - புகழ்இல்லாதஉடம்பைச்சுமந்தநிலம் , வசைஇலாவண்பயன்குன்றும் - பழிப்புஇல்லாதவளப்பத்தைஉடையவிளையுள்குன்றும். ( உயிர்உண்டாயினும்அதனால்பயன்கொள்ளாமையின்யாக்கைஎனவும்அதுநிலத்திற்குப்பொறையாகலின் 'பொறுத்த' எனவும்கூறினார். விளையுள்குன்றுதற்கேது, பாவயாக்கையைப்பொறுக்கின்றவெறுப்பு. 'குன்றும்' எனஇடத்துநிகழ்பொருளின்தொழில்இடத்தின்மேல்நின்றது. இவைநான்குபாட்டானும்புகழ்இல்லாதாரதுதாழ்வுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
புகழில்லாதவுடம்பைப்பொறுத்தநிலம்பழியற்றநல்விளைவுகுறையும். இதுபுகழில்லாதானிருந்தவிடம்விளைவுகுன்றுமென்றது.
Translation:
The blameless fruits of fields' increase will dwindle down,
If earth the burthen bear of men without renown.
Explanation:
The ground which supports a body without fame will diminish in its rich produce.
குறள் 240:
வசையொழியவாழ்வாரேவாழ்வார்இசையொழிய
வாழ்வாரேவாழாதவர்.
கலைஞர்உரை:
பழிஉண்டாகாமல்வாழ்வதேவாழ்க்கைஎனப்படும், புகழ்இல்லாதவர்வாழ்வதும்வாழாததும்ஒன்றுதான்.
மு.வஉரை:
தாம்வாழும்வாழ்க்கையில்பழிஉண்டாகாமல்வாழ்கின்றவரேஉயிர்வாழ்கின்றவர், புகழ்உண்டாகாமல்வாழ்கின்றவரேஉயிர்வாழாதவர்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்மீதுபழிஇன்றிப்புகழோடுவாழ்பவரேஉயிரோடுவாழ்பவர்; புகழ்இன்றிப்பழியோடுவாழ்பவர்இருந்தும்இல்லாதவரே.
பரிமேலழகர்உரை:
வசைஒழியவாழ்வாரேவாழ்வார் - தம்மாட்டுவசைஉண்டாகாமல்வாழ்வாரேஉயிர்வாழ்வாராவார், இசைஒழியவாழ்வாரேவாழாதவர் - புகழ்உண்டாகாமல்வாழ்வாரேஇறந்தார்ஆவார். (வசையொழிதலாவதுஇசைஎன்னும்எச்சம்பெறுதல்ஆயினமையின், இசையொழிதலாவதுவசைபெறுதலாயிற்று. மேல், 'இசைஇலாயாக்கை' என்றதனைவிளக்கியவாறு. இதனான்இவ்விரண்டும்உடன்கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும்தெய்வத்துள்வைக்கப்படும்' (குறள்50) எனமேலேகூறப்பட்டது. படவேஇல்லறத்திற்குஇவ்வுலகில்புகழும், தேவர்உலகில்போகமும்பயன்என்பதுபெற்றாம். இனி, மனுமுதலியஅறநூல்களால்பொதுவாகக்கூறப்பட்டஇல்லறங்கள்எல்லாம்இவர்தொகுத்துக்கூறியஇவற்றுள்ளேஅடங்கும்: அஃதுஅறிந்துஅடக்கிக்கொள்க: யாம்உரைப்பின்பெருகும்.).
மணக்குடவர்உரை:
வசையொழியவாழுமவர்களேஉயிர்வாழ்வாராவர்; புகழொழியவாழ்வாரேஉயிர்வாழாதார். இதுபுகழில்லார்பிணத்தோடொப்பரென்றது.
Translation:
Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem.
Explanation:
Those live who live without disgrace. Those who live without fame live not.
Comments
Post a Comment