821-830

குறள் 821:
சீரிடம்காணின்எறிதற்குப்பட்டடை
நேராநிரந்தவர்நட்பு.
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

கலைஞர்உரை:
மனதாரஇல்லாமல்வெளியுலகிற்குநண்பரைப்போல்நடிப்பவரின்நட்பானது, ஒருகேடுசெய்வதற்குச்சரியானசந்தர்ப்பம்கிடைக்கும்போதுஇரும்பைத்துண்டாக்கத்தாங்குபலகைபோல்இருக்கும்பட்டடைக்கல்லுக்குஒப்பாகும்.
மு.வஉரை:
அகத்தேபொருந்தாமல்புறத்தேபொருந்திநடப்பவரின்நட்பு, தக்கஇடம்கண்டபோதுஎறிவதற்குஉரியபட்டையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்தால்நம்மைவிரும்பாமல், தமக்கானவாய்ப்பைஎதிர்நோக்கிநம்முடன்பழகுபவரின்நட்பானது, பொருளைத்தாங்குவதுபோல்தோன்றினாலும்பொருளைவெட்டிஎறிவதற்குத்துணைசெய்யும்பட்டடைபோன்றது.
Translation:
Anvil where thou shalt smitten be, when men occasion find, Is friendship's form without consenting mind.
Explanation:
The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.

குறள் 822:
இனம்போன்றுஇனமல்லார்கேண்மைமகளிர்
மனம்போலவேறுபடும்.
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

கலைஞர்உரை:
உற்றாராகஇல்லாமல்உற்றார்போலநடிப்பவர்களின்நட்பு, மகளிருக்குரியநற்பண்புஇல்லாமல்அப்பண்புஉள்ளவர்போலநடிக்கும்விலைமகளிரின்மனம்போலஉள்ளொன்றும்புறமொன்றுமாகஇருக்கும்.
மு.வஉரை:
இனம்போலவேஇருந்துஉண்மையில்இனம்அல்லாதவரின்நட்பு, பொதுமகளிரின்மனம்போலஉள்ளொன்றுபுறமொன்றாகவேறுபட்டுநிற்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
வேண்டியவர்போலத்தோன்றி, மனத்தால்வேண்டாதவராகஇருப்பவரோடுஉண்டானநட்புபாலியல்தொழிலாளர்மனம்போலவேறுபடும்.
Translation:
Friendship of those who seem our kin, but are not really kind. Will change from hour to hour like woman's mind.
Explanation:
The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.

குறள் 823:
பலநல்லகற்றக்கடைத்துமனநல்லர்
ஆகுதல்மாணார்க்கரிது.
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

கலைஞர்உரை:
அரியநூல்கள்பலவற்றைக்கற்றிருந்தபோதிலும், பகையுணர்வுபடைத்தோர்மனம்திருந்திநடப்பதென்பதுஅரிதானகாரியமாகும்.
மு.வஉரை:
பலநல்லநூல்களைக்கற்றுத்தேர்ந்தபோதிலும், அவற்றின்பயனாகநல்லமனம்உடையவராகப்பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்குஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்தால்பொருந்தாதவர்கள்நல்லபலநூல்களைக்கற்றபோதும்மனந்திருந்திநல்லநண்பர்ஆவதுஅரிது.
Translation:
To heartfelt goodness men ignoble hardly may attain, Although abundant stores of goodly lore they gain.
Explanation:
Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.

குறள் 824:
முகத்தின்இனியநகாஅஅகத்தின்னா
வஞ்சரைஅஞ்சப்படும்.
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

கலைஞர்உரை:
சிரித்துப்பேசிநம்மைச்சீரழிக்கநினைக்கும்வஞ்சகரின்நட்புக்குஅஞ்சிஒதுங்கிடவேண்டும்.
மு.வஉரை:
முகத்தால்இனிமையாகச்சிரித்துப்பழகிஅகத்தில்தீமைகொண்டுள்ளவஞ்சகருடன்நட்புகொள்வதற்குஅஞ்சவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நாம்காணும்போதுமுகத்தால்இனிதாகச்சிரித்து, மனத்தால்எப்போதும்பகைவராய்வாழும்வஞ்சகர்களுக்குஅஞ்சவேண்டும்.
Translation:
'Tis fitting you should dread dissemblers' guile, Whose hearts are bitter while their faces smile.
Explanation:
One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.

குறள் 825:
மனத்தின்அமையாதவரைஎனைத்தொன்றும்
சொல்லினால்தேறற்பாற்றுஅன்று.
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.

கலைஞர்உரை:
மனம்வேறுசெயல்வேறாகஇருப்பவர்களின்வார்த்தைகளைநம்பிஎந்தவொருதெளிவானமுடிவையும்எடுக்கஇயலாது.
மு.வஉரை:
மனத்தால்தம்மொடுபொருந்தாமல்பழகுகின்றவரைஅவர்கூறுகின்றசொல்லைக்கொண்டுஎத்தகையஒருசெயலிலும்நம்பித்தெளியக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்தால்நம்மோடுசேராதவரைஎந்தக்காரியத்திலும்அவர்களின்சொல்லைக்கண்டுநம்பமுடியாது.
Translation:
When minds are not in unison, 'its never; just, In any words men speak to put your trust.
Explanation:
In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.

குறள் 826:
நட்டார்போல்நல்லவைசொல்லினும்ஒட்டார்சொல்
ஒல்லைஉணரப்படும்.
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

கலைஞர்உரை:
பகைவர், நண்பரைப்போலஇனிமையாகப்பேசினாலும்அந்தச்சொற்களில்கிடக்கும்சிறுமைக்குணம்வெளிப்பட்டேதீரும்.
மு.வஉரை:
நண்பர்போல்நன்மையானவற்றைச்சொன்னபோதிலும்பகைமைகொண்டவர்சொல்லும்சொற்களின்உண்மைத்தன்மைவிரைவில்உணரப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
நண்பர்களைப்போல், நன்மைதருவனவற்றைச்சொன்னாலும், நம்மோடுமனத்தால்கூடாதவர்களின்சொற்கள்நன்மைதராதனவேஎன்றுவிரைவில்அறிந்துகொள்ளலாம்.
Translation:
Though many goodly words they speak in friendly tone, The words of foes will speedily be known.
Explanation:
Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).

குறள் 827:
சொல்வணக்கம்ஒன்னார்கண்கொள்ளற்கவில்வணக்கம்
தீங்குகுறித்தமையான்.
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.

கலைஞர்உரை:
பகைவரிடம்காணப்படும்சொல்வணக்கம்என்பதுவில்லின்வணக்கத்தைப்போல்தீங்குவிளைவிக்கக்கூடியதுஎன்பதால், அதனைநம்பக்கூடாது.
மு.வஉரை:
வில்லின்வணக்கம்வணக்கமாகஇருந்தாலும்தீங்குசெய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும்அவருடையசொல்லின்வணக்கத்தைநன்மையாகக்கொள்ளக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
வில்வளைவதுதீமைசெய்யவே, பகைவர்வணங்கிப்பேசும்சொற்களும்அத்தன்மையவே; அதனால்அவர்தம்சொற்களைஏற்றுக்கொள்ளவேண்டா.
Translation:
To pliant speech from hostile lips give thou no ear; 'Tis pliant bow that show the deadly peril near! .
Explanation:
Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.

குறள் 828:
தொழுதகையுள்ளும்படையொடுங்கும்ஒன்னார்
அழுதகண்ணீரும்அனைத்து.
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

கலைஞர்உரை:
பகைவர்கள்வணங்குகின்றபோதுகூடஅவர்களின்கைக்குள்ளேகொலைக்கருவிமறைந்திருப்பதுபோலவே, அவர்கள், கண்ணீர்கொட்டிஅழுதிடும்போதும்சதிச்செயலேஅவர்களின்நெஞ்சில்நிறைந்திருக்கும்.
மு.வஉரை:
பகைவர்வணங்கித்தொழுதகையினுள்ளும்கொலைக்கருவிமறைந்திருக்கும், பகைவர்அழுதுசொரிந்தகண்ணீரும்அத்தன்மையானதே.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்தொழும்கைக்குள்ளும்ஆயுதம்மறைந்திருக்கும்; அவர்அழுதுசிந்தும்கண்ணீரும்அப்படிப்பட்டதே.
Translation:
In hands that worship weapon ten hidden lies; Such are the tears that fall from foeman's eyes.
Explanation:
A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.

குறள் 829:
மிகச்செய்துதம்மெள்ளுவாரைநகச்செய்து
நட்பினுள்சாப்புல்லற்பாற்று.
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

கலைஞர்உரை:
வெளித்தோற்றத்திற்குநண்பரைப்போல்நகைமுகம்காட்டிமகிழ்ந்து, உள்ளுக்குள்பகையுணர்வுடன்இகழ்பவரின்நட்பை, நலிவடையுமாறுசெய்திடநாமும்அதேமுறையைக்கடைப்பிடிக்கவேண்டு
ம்.
மு.வஉரை:
புறத்தேமிகுதியாகநட்புத்தோன்றச்செய்துஅகத்தில்இகழ்கின்றவரைத்தாமும்அந்நட்பில்நகைத்துமகிழுமாறுசெய்துஅத்தொடர்புசாகுமாறுநடக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
வெளியில்நண்பராய்ப்பெரிதுபடக்காட்டி, மனத்தேநம்மைஇகழ்ந்துமகிழ்பவரைநாமும்வெளியில்அவரைச்சிரிக்கவைத்து, மனத்தேஅம்மகிழ்ச்சிஅழியும்படிபோலிநண்பராகலாம்.
Translation:
'Tis just, when men make much of you, and then despise, To make them smile, and slap in friendship's guise.
Explanation:
It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).

குறள் 830:
பகைநட்பாம்காலம்வருங்கால்முகநட்டு
அகநட்புஒரீஇவிடல்.
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

கலைஞர்உரை:
பகைவருடன்பழகிடும்காலம்வருமேயானால்அகத்தளவில்இல்லாமல்முகத்தளவில்மட்டும்நட்புச்செய்துபின்னர்நட்பையும்விட்டுவிடவேண்டும்.
மு.வஉரை:
பகைவர்நண்பராகும்காலம்வரும்போதுமுகத்தளவில்நட்புகொண்டுஅகத்தில்நட்புநீங்கிவாய்ப்புக்கிடைத்தபோதுஅதையும்விடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நம்பகைவர்நம்முடன்நண்பராகவாழும்காலம்வந்தால்நாமும்அவருடன்முகத்தால்நட்புக்கொண்டுமனத்தால்அந்நட்பைவிட்டுவிடவேண்டும்.
Translation:
When time shall come that foes as friends appear, Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.
Explanation:
When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290