91-100

குறள் 91:
இன்சொலால்ஈரம்அளைஇப்படிறுஇலவாம்
செம்பொருள்கண்டார்வாய்ச்சொல்.
கலைஞர்உரை:
அன்புகலந்துவஞ்சம்அற்றவைகளாகியசொற்கள், மெய்ப்பொருள்கண்டவர்களின்வாய்ச்சொற்கள்இன்சொற்களாகும்.
மு.வஉரை:
ஒருவர்வாயிலிருந்துவரும்சொல்அன்புகலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும்இருப்பின்அதுவேஇன்சொல்எனப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறம்அறிந்தவர்வாயிலிருந்துபிறந்து, அன்புகலந்துஉள்நோக்கம்இல்லாதுவருவதேஇனியசொல்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, மனத்தின்கண்உவகையைவெளிப்படுப்பனவாகியஇனியசொற்களைச்சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்குஇன்றியமையாததுஆகலின், விருந்தோம்புதலின்பின்வைக்கப்பட்டது.)
இன்சொல் - இன்சொலாவன; ஈரம்அளைஇப்படிறுஇலவாம்செம்பொருள்கண்டார்வாய்ச்சொல் - அன்போடுகலந்துவஞ்சனைஇலவாயிருக்கின்றஅறத்தினைஉணர்ந்தார்வாயிற்சொற்கள். (ஆல்அசைநிலை. அன்போடுகலத்தல் - அன்புடைமையைவெளிப்படுத்தல். படிறுஇன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார்நெஞ்சிற்குஎல்லாம்செம்மையுடைத்தாய்த்தோன்றலின்செம்பொருள்எனப்பட்டது. 'இலவாம்சொல்' எனஇயையும். 'வாய்' எனவேண்டாதுகூறினார், தீயசொல்பயிலாஎன்பதுஅறிவித்தற்கு. இதனான்இன்சொற்குஇலக்கணம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவன்இனியவாகச்சொல்லுஞ்சொற்கள்இன்பத்தைப்பயத்தலைக்காண்பான். அதற்குமறுதலையாகியவன்சொல்லைவழங்குவதுஎப்பயனைநோக்கியோ?.
Translation:
Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.
Explanation:
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.

குறள் 92:
அகன்அமர்ந்துஈதலின்நன்றேமுகனமர்ந்து
இன்சொலன்ஆகப்பெறின்.
கலைஞர்உரை:
முகம்மலர்ந்துஇனிமையாகப்பேசுவது, அகம்குளிர்ந்துஒன்றைக்கொடுப்பதைவிடமேலானபண்பாகும்.
மு.வஉரை:
முகம்மலர்ந்துஇன்சொல்உடையவனாகஇருக்கப்பெற்றால், மனம்மகிழ்ந்துபொருள்கொடுக்கும்ஈகையைவிடநல்லதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
முகத்தால்விரும்பி, இனியசொற்களைக்கூறுகிறவனாகவும்ஆகிவிட்டால், உள்ளம்மகிழ்ந்துபொருளைக்கொடுப்பதைக்காட்டிலும்அதுநல்லது.
பரிமேலழகர்உரை:
அகன்அமர்ந்துஈதலின்நன்று - நெஞ்சுஉவந்துஒருவற்குவேண்டியபொருளைக்கொடுத்தலினும்நன்று; முகன்அமர்ந்துஇன்சொலன்ஆகப்பெறின் - கண்டபொழுதேமுகம்இனியனாய்அதனொடுஇனியசொல்லையும்உடையனாகப்பெறின். (இன்முகத்தோடுகூடியஇன்சொல்ஈதல்போலப்பொருள்வயத்ததுஅன்றித்தன்வயத்ததுஆயினும், அறநெஞ்சுடையார்க்குஅல்லதுஇயல்பாகஇன்மையின்அதனினும்அரிதுஎன்னும்கருத்தான், 'இன்சொலன்ஆகப்பெறின்' என்றார்.).
மணக்குடவர்உரை:
மனம்பொருந்திக்கொடுத்தலினும்நன்று: முகம்பொருந்திஇனிமைச்சொல்சொல்லவல்லவனாயின்.
Translation:
A pleasant word with beaming smile,s preferred,
Even to gifts with liberal heart conferred.
Explanation:
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

குறள் 93:
முகத்தான்அமர்ந்துஇனிதுநோக்கிஅகத்தானாம்
இன்சொலினதேஅறம்.
கலைஞர்உரை:
முகம்மலரநோக்கி, அகம்மலரஇனியசொற்களைக்கூறுவதேஅறவழியில்அமைந்தபண்பாகும்.
மு.வஉரை:
முகத்தால்விரும்பி- இனிமையுடன்நோக்கி- உள்ளம்கலந்துஇன்சொற்களைக்கூறும்தன்மையில்உள்ளதேஅறமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறரைப்பார்க்கும்போதுமுகத்தால்விரும்பி, இனிமையாகப்பார்த்து, உள்ளத்துள்இருந்துவரும்இனியசொற்களைச்சொல்வதேஅறம்ஆகும்.
பரிமேலழகர்உரை:
முகத்தான்அமர்ந்துஇனிதுநோக்கி - கண்டபொழுதேமுகத்தான்விரும்பிஇனிதாகநோக்கி; அகத்தான்ஆம்இன்சொலினதேஅறம் - பின்நண்ணியவழி, மனத்துடன்ஆகியஇனியசொற்களைச்சொல்லுதலின்கண்ணதேஅறம். ('நோக்கி' என்னும்வினையெச்சம் 'இன்சொல்' எனஅடையடுத்துநின்றமுதல்நிலைத்தொழிற்பெயர்கொண்டது. ஈதலின்கண்ணதுஅன்றுஎன்றவாறு. இவைஇரண்டுபாட்டானும்இன்முகத்தோடுகூடியஇன்சொல்முன்னரேபிணித்துக்கோடலின், விருந்தோம்புதற்கண்சிறந்ததுஎன்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
கண்ணாலேபொருந்தி, இனிதாகநோக்கிமனத்தோடேபொருந்தியஇன்சொல்சொல்லவல்லவனாயின்அதுதானேயறமாம்.
Translation:
With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity.
Explanation:
Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.

குறள் 94:
துன்புறூஉம்துவ்வாமைஇல்லாகும்யார்மாட்டும்
இன்புறூஉம்இன்சொலவர்க்கு.
கலைஞர்உரை:
இன்சொல்பேசிஎல்லோரிடத்திலும்கனிவுடன்பழகுவோர்க்குநட்பில்வறுமைஎனும்துன்பமில்லை.
மு.வஉரை:
யாரிடத்திலும்இன்புறத்தக்கஇன்சொல்வழங்குவோர்க்குத்துன்பத்தைமிகுதிபடுத்தும்வறுமைஎன்பதுஇல்லையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
எவரிடமும்இன்பம்தரும்இனியசொற்களைப்பேசுபவர்க்குத்துன்பம்தரும்வறுமைவராது.
பரிமேலழகர்உரை:
யார்மாட்டும்இன்புஉறூஉம்இன்சொலவர்க்கு - எல்லார்மாட்டும்இன்பத்தைமிகுவிக்கும்இன்சொல்லைஉடையார்க்கு; துன்புஉறூஉம்துவ்வாமைஇல்லாகும் - துன்பத்தைமிகுவிக்கும்நல்குரவுஇல்லையாம். (நாமுதலியபொறிகள்சுவைமுதலியபுலன்களைநுகராமைஉடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார்மாட்டும்இன்புஉறூஉம்இன்சொலவர்க்குப்பகையும்நொதுமலும்இன்றிஉள்ளதுநட்பேஆம், ஆகவேஅவர்எல்லாச்செல்வமும்எய்துவர்' என்பதுகருத்து.).
மணக்குடவர்உரை:
துன்பமுறுவிக்கின்றநுகராமையாகியநல்குரவுஇல்லையாகும். யாவர்மாட்டுங்கூறஇன்பமுறுவிக்கின்றஇனியசொல்லையுடையார்க்கு.
Translation:
The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow's prey be found.
Explanation:
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.

குறள் 95:
பணிவுடையன்இன்சொலன்ஆதல்ஒருவற்கு
அணியல்லமற்றுப்பிற.
கலைஞர்உரை:
அடக்கமானபண்பும், இனிமையாகப்பேசும்இயல்பும்தவிர, ஒருவருக்குச்சிறந்தஅணிகலன்வேறுஇருக்கமுடியாது.
மு.வஉரை:
வணக்கம்உடையவனாகவும்இன்சொல்வழங்குவோனாகவும்ஆதலேஒருவனுக்குஅணிகலனாகும்மற்றவைஅணிகள்அல்ல.
சாலமன்பாப்பையாஉரை:
தகுதிக்குக்குறைவானவரிடமும்பணிவுடன்இனியசொற்களைச்சொல்பவனாகஆவதுஒருவனுக்குஆபரணம்ஆகும்; பிறஅணிகள்அணிஆகா.
பரிமேலழகர்உரை:
ஒருவற்குஅணிபணிவுஉடையன்இன்சொலன்ஆதல் - ஒருவனுக்குஅணியாவதுதன்னால்தாழப்படுவார்கண்தாழ்ச்சியுடையனாய்எல்லார்கண்ணும்இனியசொல்லையும்உடையனாதல், பிறஅல்ல - அன்றிமெய்க்குஅணியும்பிறஅணிகள்அணிஆகா. (இன்சொலனாதற்குஇனமாகலின், பணிவுடைமையும்உடன்கூறினார். 'மற்று' அசைநிலை. வேற்றுமைஉடைமையான், பிறஎனவும், இவைபோலப்பேரழகுசெய்யாமையின் 'அல்ல' எனவும்கூறினார். இவைஇரண்டுபாட்டானும்இனியவைகூறுவார்க்குஇம்மைப்பயன்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவனுக்குஅழகாவதுதாழ்ச்சியுடையனாயினியசொற்களைக்கூறவல்லவனாதல்: பிறவாகியஅழகெல்லாம்அழகெனப்படா. இதுதாழ்த்துக்கூறவேண்டுமென்பதும்அதனாலாம்பயனுங்கூறிற்று.
Translation:
Humility with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth.
Explanation:
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

குறள் 96:
அல்லவைதேயஅறம்பெருகும்நல்லவை
நாடிஇனியசொலின்.
கலைஞர்உரை:
தீயசெயல்களைஅகற்றிஅறநெறிதழைக்கச்செய்யவேண்டுமானால், இனியசொற்களைப்பயன்படுத்திநல்வழிஎதுவெனக்காட்டவேண்டும்.
மு.வஉரை:
பிறர்க்குநன்மையானவற்றைநாடிஇனிமைஉடையச்சொற்களைச்சொல்லின், பாவங்கள்தேய்ந்துகுறையஅறம்வளர்ந்துபெருகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்க்குநன்மைதரும்இனியசொற்களைமனத்தால்எண்ணிச்சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும்அறம்வளரும்; பாவங்கள்குறையும்.
பரிமேலழகர்உரை:
நல்லவைநாடிஇனியசொலின் - பொருளால்பிறர்க்குநன்மைபயக்கும்சொற்களைமனத்தான்ஆராய்ந்துஇனியவாகஒருவன்சொல்லுமாயின்; அல்லவைதேயஅறம்பெருகும் - அவனுக்குப்பாவங்கள்தேயஅறம்வளரும். (தேய்தல் : தன்பகைஆகியஅறம்வளர்தலின்தனக்குநிலையின்றிமெலிதல். "தவத்தின்முன்நில்லாதாம்பாவம்" (நாலடி.51) என்பதூஉம்இப்பொருட்டு. நல்லவைநாடிச்சொல்லுங்காலும்கடியவாகச்சொல்லின், அறன்ஆகாதுஎன்பதாம். இதனான்மறுமைப்பயன்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நல்லவானசொற்களையாராய்ந்துஇனியவாகச்சொல்லுவானாயின்அதனானேஅறமல்லாதனதேயஅறம்வளரும்.
Translation:
Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.
Explanation:
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

குறள் 97:
நயன்ஈன்றுநன்றிபயக்கும்பயன்ஈன்று
பண்பின்தலைப்பிரியாச்சொல்.
கலைஞர்உரை:
நன்மையானபயனைத்தரக்கூடியநல்லபண்பிலிருந்துவிலகாதசொற்கள்அவற்றைக்கூறுவோருக்கும்இன்பத்தையும், நன்மையையும்உண்டாக்கக்கூடியவைகளாகும்.
மு.வஉரை:
பிறர்க்குநன்மையானபயனைத்தந்துநல்லபண்பிலிருந்துநீங்காதசொற்கள்,வழங்குவோனுக்கும்இன்பம்தந்துநன்மைபயக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்க்குநன்மையைத்தந்து, இனியபண்பிலிருந்துவிலகாதசொல், இம்மைக்குஉலகத்தாரோடுஒற்றுமையையும், மறுமைக்குஅறத்தையும்கொடுக்கும்.
பரிமேலழகர்உரை:
நயன்ஈன்றுநன்றிபயக்கும் - ஒருவனுக்குஇம்மைக்குநீதியையும்உண்டாக்கிமறுமைக்குஅறத்தையும்பயக்கும்: பயன்ஈன்றுபண்பின்தலைப்பிரியாச்சொல் - பொருளால்பிறர்க்குநன்மையைக்கொடுத்துஇனிமைப்பண்பின்நீங்காதசொல். (நீதி: உலகத்தோடுபொருந்துதல். 'பண்பு' என்பதுஈண்டுஅதிகாரத்தான்இனிமைமேல்நின்றது. தலைப்பிரிதல் - ஒருசொல்நீர்மைத்து.).
மணக்குடவர்உரை:
பிறரால்விரும்பப்படுதலையும்பயந்து, பொருளையும்பயந்து, அறத்தினையும்பயக்கும்; குணத்தினின்றுநீங்காதசொல்.
Translation:
The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere.
Explanation:
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).

குறள் 98:
சிறுமையுவுநீங்கியஇன்சொல்மறுமையும்
இம்மையும்இன்பம்தரும்.
கலைஞர்உரை:
சிறுமைத்தனமற்றஇனியசொல்ஒருவனுக்குஅவன்வாழும்போதும், வாழ்ந்துமறைந்தபிறகும்புகழைத்தரக்கூடியதாகும்.
மு.வஉரை:
பிறர்க்குத்துன்பம்விளைக்கும்சிறுமையிலிருந்துநீங்கியஇனியசொற்கள்மறுமைக்கும்இம்மைக்கும்வழங்குவோனுக்குஇன்பம்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்க்குமனத்துன்பம்தராதஇனியசொல்ஒருவனுக்குஇம்மையிலும்மறுமையிலும்இன்பம்தரும்.
பரிமேலழகர்உரை:
சிறுமையுள்நீங்கியஇன்சொல் - பொருளால்பிறர்க்குநோய்செய்யாதஇனியசொல்; மறுமையும்இம்மையும்இன்பம்தரும் - ஒருவனுக்குஇருமையினும்இன்பத்தைப்பயக்கும். (மறுமைஇன்பம்பெரிதாகலின், முன்கூறப்பட்டது. இம்மைஇன்பமாவது, உலகம்தன்வயத்ததாகலான்நல்லனஎய்திஇன்புறுதல். இவைஇரண்டுபாட்டானும்இருமைப்பயனும்ஒருங்குஎய்துதல்வலியுறுத்தப்பட்டது.).
மணக்குடவர்உரை:
புன்மையுள்நின்றுநீங்கியஇனியசொற்கள்இம்மையின்கண்ணும்மறுமையின்கண்ணும்இன்பத்தைத்தரும்.
Translation:
Sweet kindly words, from meanness free, delight of heart,
In world to come and in this world impart.
Explanation:
Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

குறள் 99:
இன்சொல்இனிதீன்றல்காண்பான்எவன்கொலோ
வன்சொல்வழங்குவது.
கலைஞர்உரை:
இனியசொற்கள்இன்பத்தைவழங்கும்என்பதைஉணர்ந்தவர்அதற்குமாறாகஎதற்காகக்கடுஞ்சொற்களைப்பயன்படுத்தவேண்டும்?.
மு.வஉரை:
இனியசொற்கள்இன்பம்பயத்தலைக்காண்கின்றவன், அவற்றிற்குமாறானவன்சொற்களைவழங்குவதுஎன்னபயன்கருதியோ?.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்சொல்லும்இனியசொற்கள், இன்பம்தருவதைஉணர்ந்தவன், பிறர்க்கும்தனக்கும்துன்பம்தரும்கடும்சொற்களைப்பேசுவதுஎன்னபயன்கருதியோ?.
பரிமேலழகர்உரை:
இன்சொல்இனிதுஈன்றல்காண்பான் - பிறர்கூறும்இன்சொல்தனக்குஇன்பம்பயத்தலைஅனுபவித்துஅறிகின்றவன்; வன்சொல்வழங்குவதுஎவன்கொல் - அதுநிற்கப்பிறர்மாட்டுவன்சொல்லைச்சொல்வதுஎன்னபயன்கருதி? ('இனிது' என்றதுவினைக்குறிப்புப்பெயர். கடுஞ்சொல்பிறர்க்கும்இன்னாதாகலின், அதுகூறலாகாதுஎன்பதுகருத்து.).
மணக்குடவர்உரை:
இருவர்மாறுபடச்சொன்னமாற்றத்தினதுஉண்மைப்பொருளைக்கண்டார்கூறும்மெய்யாகியசொற்களும்இன்சொலாதலானேஅருளொடுபொருந்திக்குற்றமிலவாம். இஃதுஒருவனைக்கடிந்துசொல்லவேண்டுமிடத்தும்இன்சொல்லாலேகடியவேண்டுமென்றது.
Translation:
Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words?.
Explanation:
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?.

குறள் 100:
இனியஉளவாகஇன்னாதகூறல்
கனிஇருப்பக்காய்கவர்ந்தற்று.
கலைஞர்உரை:
இனிமையானசொற்கள்இருக்கும்போதுஅவற்றைவிடுத்துக்கடுமையாகப்பேசுவதுகனிகளைஒதுக்கிவிட்டுக்காய்களைப்பறித்துத்தின்பதற்குச்சமமாகும்.
மு.வஉரை:
இனியசொற்கள்இருக்கும்போதுஅவற்றைவிட்டுக்கடுமையானசொற்களைக்கூறுதல்கனிகள்இருக்கும்போதுஅவற்றைவிட்டுகாய்களைப்பறித்துத்தின்பதைப்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்திற்குஇன்பம்தரும்சொற்கள்இருக்க, அவற்றைவிட்டுவிட்டுத்துன்பம்தரும்சொற்களைக்கூறுவது, நல்லபழம்இருக்கநச்சுக்காயைஉண்பதுபோலாகும்.
பரிமேலழகர்உரை:
இனியஉளவாகஇன்னாதகூறல் - அறம்பயக்கும்இனியசொற்களும்தனக்குஉளவாயிருக்க, அவற்றைக்கூறாதுபாவம்பயக்கும்இன்னாதசொற்களைஒருவன்கூறுதல்; கனிஇருப்பக்காய்கவர்ந்தற்று - இனியகனிகளும்தன்கைக்கண்உளவாயிருக்க, அவற்றைநுகராதுகாய்களைநுகர்ந்ததனோடுஒக்கும். ('கூறல்' என்பதனான்சொற்கள்என்பதுபெற்றாம். பொருளைவிசேடித்துநின்றபண்புகள்உவமைக்கண்ணும்சென்றன. இனியகனிகள்என்றதுஒளவைஉண்டநெல்லிக்கனிபோலஅமிழ்தானவற்றை. இன்னாதகாய்கள்என்றதுகாஞ்சிரங்காய்போலநஞ்சானவற்றை. கடுஞ்சொல்சொல்லுதல்முடிவில்தனக்கேஇன்னாதுஎன்பதாம். இவைஇரண்டுபாட்டானும்இன்னாதகூறலின்குற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பிறர்க்கினியவாகச்சொல்லுஞ்சொற்களின்பத்தைத்தருதலைக்கண்டவன்இனியசொற்கள்இருக்கக்கடியசொற்களைக்கூறுதல், பழமுங்காயும்ஓரிடத்தேயிருக்கக்கண்டவன், பழத்தைக்கொள்ளாதுகாயைக்கொண்டதன்மைத்து.
Translation:
When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
Explanation:
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.


Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290