201-210

குறள் 201:
தீவினையார்அஞ்சார்விழுமியார்அஞ்சுவர்
தீவினைஎன்னும்செருக்கு.
கலைஞர்உரை:
தீயவர்கள்தீவினைசெய்யஅஞ்சமாட்டார்கள்; தீவினையால்மகிழ்ச்சிஏற்படுவதாயினும்அதனைச்செய்திடச்சான்றோர்அஞ்சிநடுங்குவார்கள்.
மு.வஉரை:
தீயவைசெய்தலாகியசெருக்கைத்தீவினைஉடையபாவிகள்அஞ்சார், தீவினைஇல்லாதமேலோர்மட்டுமேஅஞ்சுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
தீமைஎன்னும்மயக்கத்தைச்செய்ய, முன்னைத்தீவினைஉடையவர்பயப்படமாட்டார்; பெரியவர்களோபயப்படுவர்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, பாவங்களாயினசெய்தற்குஅஞ்சுதல். இதனான்மெய்யின்கண்நிகழும்பாவங்கள்எல்லாம்தொகுத்துவிளக்குகின்றார்ஆகலின்.இதுபயன்இலசொல்லாமையின்பின்வைக்கப்பட்டது.)
தீவினைஎன்னும்செருக்கு - தீவினைஎன்றுசொல்லப்படும்மயக்கத்தை, தீவினையார்அஞ்சார் - முன்செய்ததீவினையுடையார்அஞ்சார், விழுமியார்அஞ்சுவர் - அஃதுஇலராகியசீரியார்அஞ்சுவர். ('தீவினைஎன்னும்செருக்கு' எனக்காரியம்காரணமாகஉபசரிக்கப்பட்டது. மேல்தொட்டுச்செய்துகைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்துஅறியாமையான் 'அஞ்சுவர்' என்றும்கூறினார்.).
மணக்குடவர்உரை:
என்றுந்தீத்தொழில்செய்வாரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகியகளிப்பை. இஃதுஇதற்குநல்லோரஞ்சுவரென்றது.
Translation:
With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.
Explanation:
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.

குறள் 202:
தீயவைதீயபயத்தலால்தீயவை
தீயினும்அஞ்சப்படும்.
கலைஞர்உரை:
தீயசெயல்களால்தீமையேவிளையும்என்பதால்அச்செயல்களைத்தீயைவிடக்கொடுமையானவையாகக்கருதிஅவற்றைச்செய்திடஅஞ்சிடவேண்டும்.
மு.வஉரை:
தீயசெயல்கள்தீமையைவிளைவிக்கும்தன்மைஉடையனவாகஇருத்தலால், அத்தீயச்செயல்கள்தீயைவிடக்கொடியனவாகக்கருதிஅஞ்சப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
நமக்குநன்மைஎன்றுபிறருக்குச்செய்யும்தீமைகள், நமக்குத்தீமையேதருவதால், தீமைகளைத்தீயினும்கொடியனவாகஎண்ணிச்செய்யஅஞ்சவேண்டும்.
பரிமேலழகர்உரை:
தீயவைதீயபயத்தலான் - தனக்குஇன்பம்பயத்தலைக்கருதிச்செய்யும்தீவினைகள், பின்அஃதுஒழித்துத்துன்பமேபயத்தலான், தீயவைதீயினும்அஞ்சப்படும்- அத்தன்மையாகியதீவினைகள்ஒருவனால்தீயினும்அஞ்சப்படும். (பிறிதொருகாலத்தும், பிறிதொருதேயத்தும், பிறிதோர்உடம்பினும்சென்றுசுடுதல்தீக்குஇன்மையின் , தீயினும்அஞ்சப்படுவதாயிற்று.).
மணக்குடவர்உரை:
தீத்தொழிலானவைதமக்குத்தீமைபயத்தலானே, அத்தொழில்கள்தொடிற்சுடுமென்றுதீக்குஅஞ்சுதலினும்மிகஅஞ்சப்படும்.
Translation:
Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.
Explanation:
Because evil produces evil, therefore should evil be feared more than fire.

குறள் 203:
அறிவினுள்எல்லாந்தலையென்பதீய
செறுவார்க்கும்செய்யாவிடல்.
கலைஞர்உரை:
தீமைசெய்தவர்க்குஅதையேதிருப்பிச்செய்யாமலிருத்தலை, எல்லாஅறிவிலும்முதன்மையானஅறிவுஎன்றுபோற்றுவர்.
மு.வஉரை:
தம்மைவருத்துவோர்க்கும்தீயசெயல்களைச்செய்யாமலிருத்தலை, அறிவுஎல்லாவற்றிலும்தலையானஅறிவுஎன்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
தனக்குத்தீமைசெய்பவர்க்கும்தீமைசெய்யாதுஇருப்பதே, அறிவில்எல்லாம்முதன்மைஅறிவுஎன்றுகூறுவர்.
பரிமேலழகர்உரை:
அறிவினுள்எல்லாம்தலைஎன்ப - தமக்குஉறுதிநாடும்அறிவுரைகள்எல்லாவற்றுள்ளும்தலையாயஅறிவுஎன்றுசொல்லுவார்நல்லோர், செறுவார்க்கும்தீயசெய்யாவிடல் - தம்மைச்செறுவார்மாட்டும்தீவினைகளைச்செய்யாதுவிடுதலை. (விடுதற்குக்காரணம்ஆகியஅறிவை 'விடுதல்' என்றும் , செய்யத்தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவேதமக்குத்துன்பம்வாராதுஎனஉய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள்எல்லாம்தலை' என்றும்கூறினார். செய்யாதுஎன்பதுகடைக்குறைந்துநின்றது. இவைமூன்றுபாட்டானும்தீவினைக்குஅஞ்சவேண்டும்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
எல்லாஅறங்களையும்அறியும்அறிவுஎல்லாவற்றுள்ளும்தலையானஅறிவென்றுசொல்லுவர்நல்லோர்; தமக்குத்தீமைசெய்வார்க்குந்தாம்தீமைசெய்யாதொழிதலை. இஃதுஎல்லாவற்றுள்ளுந்தலைமையுடைத்தென்றது.
Translation:
Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.
Explanation:
To do no evil to enemies will be called the chief of all virtues.

குறள் 204:
மறந்தும்பிறன்கேடுசூழற்கசூழின்
அறஞ்சூழம்சூழ்ந்தவன்கேடு.
கலைஞர்உரை:
மறந்தும்கூடமற்றவர்க்குக்கேடுசெய்யநினைக்கக்கூடாது; அப்படிநினைத்தால்அவனுக்குக்கேடுஉண்டாக்கஅவனைஅறம்முற்றுகையிட்டுவிடும்.
மு.வஉரை:
பிறனுக்குகேட்டைத்தரும்தீயசெயல்களைஒருவன்மறந்தும்கூடஎண்ணக்கூடாது, எண்ணினால்எண்ணியவனுக்குகேடுவிளையுமாறுஅறம்எண்ணும்.
சாலமன்பாப்பையாஉரை:
மறந்தும்பிறர்க்குத்தீமைசெய்யஎண்ணாதே; எண்ணினால்எண்ணியவனுக்குஅறக்கடவுளேதீமையைத்தரஎண்ணும்.
பரிமேலழகர்உரை:
பிறன்கேடுமறந்தும்சூழற்க - ஒருவன்பிறனுக்குக்கேடுபயக்கும்வினையைமறந்தும்எண்ணாதொழிக, சூழின்சூழ்ந்தவன்கேடுஅறம்சூழும் - எண்ணுவானாயின், தனக்குக்கேடுபயக்கும்வினையைஅறக்கடவுள்எண்ணும். ('கேடு' என்பனஆகுபெயர். சூழ்கின்றபொழுதேதானும்உடன்சூழ்தலின், இவன்பிற்படினும்அறக்கடவுள்முற்படும்என்பதுபெறப்பட்டது. அறக்கடவுள்எண்ணுதலாவது, அவன்கெடத்தான்நீங்கநினைத்தல். தீவினைஎண்ணலும்ஆகாதுஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
பிறனுக்குக்கேட்டைமறந்துஞ்சூழாதொழிக: சூழ்வனாயின்அவனாற்சூழப்பட்டவன்அதற்குமாறாகக்கேடுசூழ்வதன்முன்னேசூழ்ந்தவனுக்குக்கேட்டைத்தீமைசெய்தார்க்குத்தீமைபயக்கும்அறந்தானேசூழும். இதுதீமைநினையினுங்கேடுதருமென்றது.
Translation:
Though good thy soul forget, plot not thy neighbour's fall,
Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.
Explanation:
Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.

குறள் 205:
இலன்என்றுதீயவைசெய்யற்கசெய்யின்
இலனாகும்மற்றும்பெயர்த்து.
கலைஞர்உரை:
வறுமையின்காரணமாகஒருவன்தீயசெயல்களில்ஈ.டுபடக்கூடாது; அப்படிஈ.டுபட்டால்மீண்டும்அவன்வறுமையிலேயேவாடவேண்டியிருக்கும்.
மு.வஉரை:
யான்வறியவன்என்றுநினைத்துத்தீயசெயல்களைச்செய்யக்கூடாது, செய்தால்மீண்டும்வறியவன்ஆகிவருந்துவான்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்ஏழ்மையைப்போக்கப்பிறர்க்குத்தீமைசெய்யாதே, செய்தால்மேலும்ஏழைஆவாய்.
பரிமேலழகர்உரை:
இலன்என்றுதீயவைசெய்யற்க -யான்வறியன்என்றுகருதிஅதுதீர்தற்பொருட்டுப்பிறர்க்குத்தீவினைகளைஒருவன்செய்யாதுஒழிக, செய்யின்பெயர்த்தும்இலன்ஆகும் - செய்வானாயின்பெயர்த்தும்வறியன்ஆம். (அத்தீவினையால்பிறவிதோறும்இலன்ஆம்என்பதாம். அன்விகுதிமுன்தனித்தன்மையினும்பின்படர்க்கைஒருமையினும்வந்தது. தனித்தன்மை 'உளனாஎன்உயிரைஉண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும்அறிக. மற்று - அசைநிலை. 'இலம்' என்றுபாடம்ஓதுவாரும்உளர். பொருளான்வறியன்எனக்கருதித்தீயவைசெய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குணநற்செய்கைகளாலும்வறியனாம், என்றுஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
நல்கூர்ந்தேமென்றுநினைத்துச்செல்வத்தைக்கருதிதீவினையைச்செய்யாதொழிக; செய்வானாயின்பின்பும்நல்குரவினனாவன். அதுசெல்வம்பயவாது. இதுவறுமைதீரத்தீமைசெய்யினும்பின்பும்வறியனாகுமென்றது.
Translation:
Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.
Explanation:
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.

குறள் 206:
தீப்பாலதான்பிறர்கண்செய்யற்கநோய்ப்பால
தன்னைஅடல்வேண்டாதான்.
கலைஞர்உரை:
வேதனைவிளைவிக்கும்தீயசெயல்கள்தன்னைத்தாக்கலாகாதுஎனஎண்ணுகிறவன்அவனும்அத்தீங்குகளைப்பிறருக்குச்செய்யாமல்இருக்கவேண்டும்.
மு.வஉரை:
துன்பம்செய்யும்தீவினைகள்தன்னைவருத்துதலைவிரும்பாதவன், தீயசெயல்களைத்தான்பிறருக்குச்செய்யாமலிருக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
துன்பம்தருவனதன்னைச்சூழ்ந்துவருத்தவிரும்பாதவன், பிறர்க்குத்தீமைசெய்யக்கூடாது.
பரிமேலழகர்உரை:
நோய்ப்பாலதன்னைஅடல்வேண்டாதான் - துன்பம்செய்யும்கூற்றவாகியபாவங்கள்தன்னைப்பின்வந்துவருத்துதலைவேண்டாதவன், தீப்பாலதான்பிறர்கண்செய்யற்க - தீமைக்கூற்றவாகியவினைகளைத்தான்பிறர்மாட்டுச்செய்யாதுஒழிக. (செய்யின்அப்பாவங்கள்அடுதல்ஒருதலைஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
தன்னைத்துன்பப்பகுதியானவைநலிதல்வேண்டாதவன்தீமையாயினவற்றைத்தான்பிறர்க்குச்செய்யதாதொழிக. இதுநோயுண்டாமென்றது.
Translation:
What ranks as evil spare to do, if thou would'st shun
Affliction sore through ill to thee by others done.
Explanation:
Let him not do evil to others who desires not that sorrows should pursue him.

குறள் 207:
எனைப்பகையுற்றாரும்உய்வர்வினைப்பகை
வீயாதுபின்சென்றுஅடும்.
கலைஞர்உரை:
ஒருவர்நேரடியானபகைக்குத்தப்பிவாழமுடியும்; ஆனால், அவர்செய்யும்தீயவினைகள்பெரும்பகையாகிஅவரைத்தொடர்ந்துவருத்திக்கொண்டேஇருக்கும்.
மு.வஉரை:
எவ்வளவுகொடியபகைஉடையவரும்தப்பிவாழமுடியும், ஆனால்தீயவைசெய்தால்வரும்தீவினையாகியபகைநீங்காமல்பின்சென்றுவருத்தும்.
சாலமன்பாப்பையாஉரை:
எவ்வளவுபெரியபகையைப்பெற்றவரும்தப்பித்துக்கொள்வர்; ஆனால்தீமைசெய்வதால்வரும்பகையோ, அழியாமல்நம்பின்வந்து, நம்மைஅழிக்கும்.
பரிமேலழகர்உரை:
எனைப்பகைஉற்றாரும்உய்வர் - எத்துணைப்பெரியபகைஉடையாரும்அதனைஒருவாற்றால்தப்புவர், வினைப்பகைவீயாதுபின்சென்றுஅடும் - அவ்வாறன்றித்தீவினைஆகியபகைநீங்காதுபுக்குழிப்புக்குக்கொல்லும் ('வீயாதுஉடம்பொடுநின்றஉயிரும்இல்லை.' (புறநா.363) என்புழியும்வீயாமைநீங்காமைக்கண்வந்தது.).
மணக்குடவர்உரை:
எல்லாப்பகையும்உற்றார்க்கும்உய்தியுண்டாம்; தீவினையாகியபகைநீங்காதுஎன்றும்புக்குழிப்புகுந்துகொல்லும். அஃதாமாறுபின்கூறப்படும்.
Translation:
From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.
Explanation:
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

குறள் 208:
தீயவைசெய்தார்கெடுதல்நிழல்தன்னை
வீயாதுஅஇஉறைந்தற்று.
கலைஞர்உரை:
ஒருவருடையநிழல்அவருடனேயேஒன்றியிருப்பதைப்போல், தீயசெயல்களில்ஈ.டுபடுகிறவர்களைவிட்டுத்தீமையும்விலகாமல், தொடர்ந்துஒட்டிக்கொண்டிருக்கும்.
மு.வஉரை:
தீயசெயல்களைச்செய்தவர்கேட்டைஅடைதல், ஒருவனுடையநிழல்அவனைவிடாமல்வந்துஅடியில்தங்கியிருத்தலைப்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்க்குத்தீமைசெய்தவர்அழிவது, அவரைஅவரதுநிழல்விடாதுகால்களின்கீழேதங்கியிருப்பதுபோலாம்.
பரிமேலழகர்உரை:
தீயவைசெய்தார்கெடுதல் - பிறர்க்குத்தீவினைசெய்தார்தாம்கெடுதல்எத்தன்மைத்துஎனின், நிழல்தன்னைவீயாதுஅடிஉறைந்தற்று - ஒருவன்நிழல்நெடிதாகப்போயும், அவன்றன்னைவிடாதுவந்துஅடியின்கண்தங்கியதன்மைத்து. (இவ்வுவமையைத்தன்காலம்வருந்துணையும்புலனாகாதுஉயிரைப்பற்றிநின்றுஅதுவந்துழிஉருப்பதாயதீவினையைச்செய்தார், பின்அதனால்கெடுதற்குஉவமையாக்கிஉரைப்பாரும்உளர். அஃதுஉரைஅன்றுஎன்பதற்குஅடிஉறைந்தநிழல்தன்னைவீந்தற்றுஎன்னாது, வீயாதுஅடிஉறைந்தற்றுஎன்றபாடமேகரியாயிற்று. மேல் 'வீயாதுபின்சென்றுஅடும்' என்றார்.ஈண்டுஅதனைஉவமையான்விளக்கினார்.).
மணக்குடவர்உரை:
தீயவானவற்றைப்பிறர்க்குச்செய்தார்கெடுதல், நிழல்தன்னைநீங்காதேஉள்ளடியின்கீழ்ஒதுங்கினாற்போலும். மேல்வினைப்பகைபின்சென்றடுமென்றார்அஃதடுமாறுகாட்டினார்.
Translation:
Man's shadow dogs his steps where'er he wends;
Destruction thus on sinful deeds attends.
Explanation:
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.

குறள் 209:
தன்னைத்தான்காதலனாயின்எனைத்தொன்றும்
துன்னற்கதீவினைப்பால்.
கலைஞர்உரை:
தனதுநலத்தைவிரும்புகிறவன்தீயசெயல்களின்பக்கம்சிறிதளவுகூடநெருங்கலாகாது.
மு.வஉரை:
ஒருவன்தன்னைத்தான்விரும்பிவாழ்பவனாயின், தீயசெயலாகியபகுதியைஎவ்வளவுசிறியதாயினும்பொருந்தாமல்நீங்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்மீதுஅன்புள்ளவன், எவ்வளவுசிறிதுஎன்றாலும்சரி, மற்றவர்க்குத்தீமைசெயயவேண்டா.
பரிமேலழகர்உரை:
தன்னைத்தான்காதலன்ஆயின் - ஒருவன்தன்னைத்தான்காதல்செய்தல்உடையனாயின், தீவினைப்பால்எனைத்துஒன்றும்துன்னற்க - தீவினையாகியபகுதிஎத்துணையும்சிறிதுஒன்றாயினும்பிறர்மாட்டுச்செய்யாதுஒழிக. (நல்வினைதீவினைஎனவினைப்பகுதிஇரண்டாகலின், தீவினைப்பால்என்றார். பிறர்மாட்டுச்செய்ததீவினைதன்மாட்டுத்துன்பம்பயத்தல்விளக்கினார்ஆகலின், 'தன்னைத்தான்காதலன்ஆயின்' என்றார். இவைஆறுபாட்டானும்பிறர்க்குத்தீவினைசெய்யின்தாம்கெடுவர்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தனக்குத்தான்நல்லவனாயின், யாதொன்றாயினும்தீவினைப்பகுதியாயினவற்றைப்பிறர்க்குச்செய்யாதொழிக. இதுதீவினைக்குஅஞ்சவேண்டுமென்றது.
Translation:
Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!.
Explanation:
If a man love himself, let him not commit any sin however small.

குறள் 210:
அருங்கேடன்என்பதுஅறிகமருங்கோடித்
தீவினைசெய்யான்எனின்.
கலைஞர்உரை:
வழிதவறிச்சென்றுபிறர்க்குத்தீங்குவிளைவிக்காதவர்க்குஎந்தக்கேடும்ஏற்படாதுஎன்பதைஅறிந்துகொள்க.
மு.வஉரை:
ஒருவன்தவறானநெறியில்சென்றுதீயசெயல்செய்யாதிருப்பானானால்அவன்கேடுஇல்லாதவன்என்றுஅறியலாம்.
சாலமன்பாப்பையாஉரை:
தீயவழிகளில்பிறர்க்குத்தீமைசெய்யாதுவாழ்பவனேகேடுஇல்லாதவன்என்றுஅறிக.
பரிமேலழகர்உரை:
மருங்குஓடித்தீவினைசெய்யான்எனின் - ஒருவன்செந்நெறிக்கண்செல்லாதுகொடுநெறிக்கண்சென்றுபிறர்மாட்டுத்தீவினைகளைச்செய்யானாயின், அருங்கேடன்என்பதுஅறிக - அவன்அரிதாகியகேட்டையுடையவன்என்பதுஅறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன்என்பதனை, 'சென்றுசேக்கல்லாப்புள்ளஉள்ளில்என்றூழ்வியன்குளம்' (அகநா.42) என்பதுபோலக்கொள்க. 'ஓடி' என்னும்வினையெச்சம் 'செய்யான்' என்னும்எதிர்மறைவினையின்செய்தலோடுமுடிந்தது. இதனால்தீவினைசெய்யாதவன்கேடிலன்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருமருங்குஓடிப்பிறர்க்குத்தீவினைகளைச்செய்யானாயின்தனக்குக்கேடுவருவதில்லையென்றுதானேயறிக. இதுகேடில்லையென்றது.
Translation:
The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.
Explanation:
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290