411-420
குறள் 411:
செல்வத்துட்செல்வஞ்செவிச்செல்வம்அச்செல்வம்
செல்வத்துளெல்லாந்தலை.
கலைஞர்உரை:
செழுமையானகருத்துகளைச்செவிவழியாகப்பெறும்செல்வமேஎல்லாச்செல்வங்களுக்கும்தலையாயசெல்வமாகும்.
மு.வஉரை:
செவியால்கேட்டறியும்செல்வம், செல்வங்களுள்ஒன்றாகப்போற்றப்படும்செல்வமாகும், அச்செல்வம்செல்வங்கள்எல்லாவற்றிலும்தலையானதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
செவியால்கேட்டுப்பெறும்செல்வமேசிறந்தசெல்வம்; இதுபிறசெல்வங்கள்எல்லாவற்றிலும்முதன்மையானது.
Translation:
Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.
Explanation:
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.
குறள் 412:
செவுக்குணவில்லாதபோழ்துசிறிது
வயிற்றுக்கும்ஈயப்படும்.
கலைஞர்உரை:
செவிவழியாகஇன்பம்தரும்உணவுஇல்லாதபோதேசிறிதளவுஉணவுவயிற்றுக்குத்தரும்நிலைஏற்படும்.
மு.வஉரை:
செவிக்குகேள்வியாகியஉணவுஇல்லாதபோது (அதற்க்குதுணையாகஉடலைஒப்புமாறு) வயிற்றுக்கும்சிறிதுஉணவுதரப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
செவிக்குஉணவாகியகேள்விகிடைக்காதபோது, வயிற்றுக்கும்சிறிதுஉணவுஇடப்படும்.
Translation:
When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.
Explanation:
When there is no food for the ear, give a little also to the stomach.
குறள் 413:
செவியுணவிற்கேள்வியுடையார்அவியுணவின்
ஆன்றாரோடொப்பர்நிலத்து.
கலைஞர்உரை:
குறைந்தஉணவருந்திநிறைந்தஅறிவுடன்விளங்கும்ஆன்றோர்க்குஒப்பாகக்கேள்விஞானம்எனும்செவியுணவுஅருந்துவோர்எண்ணப்படுவர்.
மு.வஉரை:
கற்றவரின்செவியுணவாகியகேள்விஉடையவர்நிலத்தில்வாழ்கின்றவரேஆயினும்அவிஉணவைக்கொள்ளும்தேவரோடுஒப்பாவார்.
சாலமன்பாப்பையாஉரை:
செவிஉணவாகியகேள்வியைப்பெற்றிருப்பவர்இப்பூமியில்வாழ்பவரேஎன்றாலும், வேள்வித்தீயில்கொடுக்கப்படும்நெய்முதலியஉணவைப்பெறும்விண்ணுலகத்தேவர்க்குச்சமமாவர்.
Translation:
Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich who share.
Explanation:
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.
குறள் 414:
கற்றிலனாயினுங்கேட்கஅஃதொருவற்கு
ஒற்கத்தின்ஊற்றாந்துணை.
கலைஞர்உரை:
நூல்களைக்கற்காவிட்டாலும், கற்றவரிடம்கேட்டுத்தெரிந்துகொண்டால், அதுநடைதளர்ந்தவனுக்குஉதவிடும்ஊன்றுகோலைப்போலத்துணையாகஅமையும்.
மு.வஉரை:
நூல்களைக்கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம்கேட்டறியவேண்டும், அதுஒருவனுக்குவாழ்க்கையில்தளர்ச்சிவந்தபோதுஊன்றுகோல்போல்துணையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
கல்லாதவனேஎன்றாலும்கற்றவர்கூறும்சிறந்தசெய்திகளைக்கேட்கவேண்டும்; அப்படிக்கேட்பதுஅவனுக்குநெருக்கடிவரும்போதுபிடிப்பதற்குஏற்றதுணையாகஉதவும்.
Translation:
Though learning none hath he, yet let him hear alway:
In weakness this shall prove a staff and stay.
Explanation:
Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.
குறள் 415:
இழுக்கல்உடையுழிஊற்றுக்கோல்அற்றே
ஒழுக்கமுடையார்வாய்ச்சொல்.
கலைஞர்உரை:
வழுக்குநிலத்தில்நடப்பதற்குஊன்றுகோல்உதவுவதுபோல்ஒழுக்கம்உடையவர்களின்அறிவுரையானதுஉதவும்.
மு.வஉரை:
கல்லாதவன்ஒழுக்கமுடையசான்றோரின்வாய்ச்சொற்கள், வழுக்கல்உடையசேற்றுநிலத்தில்ஊன்றுகோல்போல்வாழ்க்கையில்உதவும்.
சாலமன்பாப்பையாஉரை:
கற்று, ஒழுக்கம்மிக்கவரின்வாயிலிருந்துபிறந்தசொற்கள்வழுக்கும்தரையில்ஊன்றுகோல்உதவுவதுபோல்துன்பநேரத்தில்உதவும்.
Translation:
Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous ways.
Explanation:
The words of the good are like a staff in a slippery place.
குறள் 416:
எனைத்தானும்நல்லவைகேட்கஅனைத்தானும்
ஆன்றபெருமைதரும்.
கலைஞர்உரை:
நல்லவற்றைஎந்தஅளவுக்குக்கேட்கிறோமோஅந்தஅளவுக்குப்பெருமைகிடைக்கும்என்றநம்பிக்கையுடன்இருக்கவேண்டும்.
மு.வஉரை:
எவ்வளவுசிறிதேஆயினும்நல்லவற்றைக்கேட்டறியவேண்டும், கேட்டஅந்தஅளவிற்குஅவைநிறைந்தபெருமையைத்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
சிறிதுநேரமேஎன்றாலும்உறுதிதரம்நற்பொருளைக்கேட்கவேண்டும். அதுகூடநிறைந்தபெருமையைத்தரும்.
Translation:
Let each man good things learn, for e'en as he
Shall learn, he gains increase of perfect dignity.
Explanation:
Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.
குறள் 417:
பிழைத்துணர்ந்தும்பேதைமைசொல்லாரிழைத்துணர்ந்
தீண்டியகேள்வியவர்.
கலைஞர்உரை:
எதையும்நுணுகிஆராய்வதுடன்கேள்விஅறிவும்உடையவர்கள், சிலவற்றைப்பற்றித்தவறாகஉணர்ந்திருந்தாலும்கூட, அப்போதும்அறிவற்றமுறையில்பேசமாட்டார்கள்.
மு.வஉரை:
நுட்பமாகஉணர்ந்துநிறைந்தகேள்வியறிவைஉடையவர், ( ஒருகால்பொருள்களைத்) தவறாகஉணர்ந்திருந்தாலும்பேதைமையானவற்றைச்சொல்லார்.
சாலமன்பாப்பையாஉரை:
நுண்ணிதாகஆராய்ந்துஅறிந்து, கேள்விஞானத்தால்நிறைந்தவர், பிழைபடஉணர்ந்தபோதும், அறிவற்றசொற்களைச்சொல்லமாட்டார்.
Translation:
Not e'en through inadvertence speak they foolish word,
With clear discerning mind who've learning's ample lessons heard.
Explanation:
Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).
குறள் 418:
கேட்பினுங்கேளாத்தகையவேகேள்வியால்
தோட்கப்படாதசெவி.
கலைஞர்உரை:
இயற்கையாகவேகேட்கக்கூடியகாதுகளாகஇருந்தாலும்அவைநல்லோர்உரைகளைக்கேட்கமறுத்தால்செவிட்டுக்காதுகள்என்றேகூறப்படும்.
மு.வஉரை:
கேள்வியறிவால்துளைக்கப்படாதசெவிகள், ( இயற்கையானதுளைகள்கொண்டுஓசையைக்) கேட்டறிந்தாலும்கேளாதசெவிட்டுத்தன்மைஉடையனவே.
சாலமன்பாப்பையாஉரை:
கேள்விஞானத்தால்துளைக்கப்படாதசெவிகள்ஓசைகளைக்கேட்டாலும்அவைசெவிட்டுத்தன்மையவே.
Translation:
Where teaching hath not oped the learner's ear,
The man may listen, but he scarce can hear.
Explanation:
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
குறள் 419:
நுணங்கியகேள்வியரல்லார்வணங்கிய
வாயினராதல்அரிது.
கலைஞர்உரை:
தெளிவானகேள்வியறிவுஇல்லாதவர்கள், அடக்கமாகப்பேசும்அமைதியானபண்புடையவர்களாகஇருக்கஇயலாது.
மு.வஉரை:
நுட்பமானபொருள்களைக்கேட்டறிந்தவர்அல்லாதமற்றவர், வணக்கமானச்சொற்களைப்பேசும்வாயினைஉடையவராகமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
நுண்ணியகேள்விஞானம்இல்லாதவர், பணிவுமிக்கசொற்களைப்பேசுபவராகஆவதுகடினம்.
Translation:
'Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.
Explanation:
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.
குறள் 420:
செவியிற்சுவையுணராவாயுணர்வின்மாக்கள்
அவியினும்வாழினும்என்.
கலைஞர்உரை:
செவிச்சுவைஉணராமல்வாயின்சுவைக்காகமட்டுமேவாழும்மக்கள்உயிரோடுஇருப்பதும்ஒன்றுதான்இல்லாமற்போவதும்ஒன்றுதான்.
மு.வஉரை:
செவியால்கேள்விச்சுவைஉணராமல்வாயின்சுவையுணர்வுமட்டும்உடையமக்கள், இறந்தாலும்என்ன, உயிரோடுவாழ்ந்தாலும்என்ன.
சாலமன்பாப்பையாஉரை:
செவியால்நுகரப்படும்சுவைகளைஉணராமல், வாயால்அறியப்படும்சுவைகளைமட்டுமேஅறியும்மனிதர்இருந்தால்என்ன? இறந்தால்தான்என்ன?.
Translation:
His mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die, or prosperous live?.
Explanation:
What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?.
Comments
Post a Comment