971-980

குறள் 971:
ஒளிஒருவற்குஉள்ளவெறுக்கைஇளிஒருவற்கு
அஃதிறந்துவாழ்தும்எனல்.

ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

கலைஞர்உரை:
ஒருவரின்வாழ்க்கைக்குஒளிதருவதுஊக்கமேயாகும். ஊக்கமின்றிஉயிர்வாழ்வதுஇழிவுதருவதாகும்.
மு.வஉரை:
ஒருவனுக்குஒளிஊக்கமிகுதியேஆகும், ஒருவனுக்குஇழிவுஅந்தஊக்கம்இல்லாமலேயேஉயிர்வாழலாம்என்றுஎண்ணுதலாம்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனுக்குப்பெருமை, பிறர்செய்யமுடியாதநல்லசெய்வேன்என்றுஎண்ணும்மனஊக்கமே; அவ்வூக்கம்இல்லாமல்வாழ்வேன்என்றுஎண்ணுவதுகேவலமே.
Translation:
The light of life is mental energy; disgrace is his Who says, 'I 'ill lead a happy life devoid of this.'
Explanation:
One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind).

குறள் 972:
பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்சிறப்பொவ்வா
செய்தொழில்வேற்றுமையான்.

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

கலைஞர்உரை:
பிறப்பினால்அனைவரும்சமம். செய்யும்தொழிலில்காட்டுகிறதிறமையில்மட்டுமேவேறுபாடுகாணமுடியும்.
மு.வஉரை:
எல்லாஉயிர்க்கும்பிறப்புஒருத்தன்மையானதே, ஆயினும்செய்கின்றதொழில்களின்உயர்வுதாழ்வுவேறுபாடுகளால்சிறப்பியல்புஒத்திருப்பதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
எல்லாமக்களும்பிறப்பால்சமமே; அவரவர்செய்யும்செயல்வேறுபாடுகளால்மட்டுமேபெருமைவரும்.
Translation:
All men that live are one in circumstances of birth; Diversities of works give each his special worth.
Explanation:
All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

குறள் 973:
மேலிருந்தும்மேலல்லார்மேலல்லர்கீழிருந்தும்
கீழல்லார்கீழல்லவர்.

மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

கலைஞர்உரை:
பண்புஇல்லாதவர்கள்உயர்ந்தபதவியில்இருந்தாலும்உயர்ந்தோர்அல்லர்; இழிவானகாரியங்களில்ஈ.டுபடாதவர்கள்தாழ்ந்தநிலையில்இருந்தாலும்உயர்ந்தோரேயாவார்கள்.
மு.வஉரை:
மேல்நிலையில்இருந்தாலும்மேன்மைப்பண்புஇல்லாதவர்மேலானவர்அல்லர், கீழ்நிலையில்இருந்தாலும்இழிகுணம்இல்லாதவர்கீழ்மக்கள்அல்லர்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லபண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர்உயர்ந்தபதவியில்இருந்தாலும்பெருமைக்குஉரியவர்அல்லர்; சிறியபதவியில்இருந்தாலும்உயர்வானபண்புகளைஉடையவர்பெருமைகுறைந்தவர்அல்லர்.
Translation:
The men of lofty line, whose souls are mean, are never great The men of lowly birth, when high of soul, are not of low estate.
Explanation:
Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

குறள் 974:
ஒருமைமகளிரேபோலப்பெருமையும்
தன்னைத்தான்கொண்டொழுகின்உண்டு.

ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

கலைஞர்உரை:
தன்னிலைதவறாமல்ஒருவன்தன்னைத்தானேகாத்துக்கொண்டுவாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக்கிடைக்கும்புகழும்பெருமையும்அவனுக்குக்கிடைக்கும்.
மு.வஉரை:
ஒருதன்மையானகற்புடையமகளிரைப்போல்பெருமைப்பண்பும்ஒருவன்தன்னைத்தான்காத்துக்கொண்டுநடந்தால்உளதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்கணவனைஅன்றிப்பிறரிடம்மனத்தாலும்உறவுகொள்ளாதபெண்களின்சிறப்பைப்போல,சிறந்துநெறிகளிலிருந்துதவறிவிடாமல்தன்னைக்காத்துக்கொண்டுவாழ்பவனுக்கேபெருமைஉண்டு.
Translation:
Like single-hearted women, greatness too, Exists while to itself is true.
Explanation:
Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.

குறள் 975:
பெருமையுடையவர்ஆற்றுவார்ஆற்றின்
அருமைஉடையசெயல்.

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

கலைஞர்உரை:
அரியசெயல்களைஅவற்றுக்குஉரியமுறையானவழியில்செய்துமுடிக்கும்திறமையுடையவர்கள்பெருமைக்குரியவராவார்கள்.
மு.வஉரை:
பெருமைப்பண்புஉடையவர்செய்வதற்குஅருமையானச்செயலைச்செய்வதற்க்குஉரியநெறியில்செய்துமுடிக்கவல்லவர்ஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
எத்தனைநெருக்கடிவந்தாலும்பிறர்செய்வதற்குஅரியசெயல்களைஉரியவழிகளில்செய்துமுடிப்பவர்பெருமைஉடையவர்.
Translation:
The man endowed with greatness true, Rare deeds in perfect wise will do.
Explanation:
(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).

குறள் 976:
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள்வேம் என்னும் நோக்கு.

பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

கலைஞர்உரை:
பெரியோரைப்போற்றிஏற்றுக்கொள்ளும்நோக்கம், அறிவிற்சிறியோரின்உணர்ச்சியில்ஒன்றியிருப்பதில்லை.
மு.வஉரை:
பெரியாரைவிரும்பிப்போற்றுவோம்எண்ணும்உயர்ந்தநோக்கம், அவருடையசிறப்பைஉணராதசிறியோரின்உணர்ச்சியில்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
பெருமைக்குஉரியவர்களைப்பின்பற்றிஅவர்மரபைக்காப்போம்என்னும்நல்லெண்ணம்சிறியவர்மனத்துள்இராது.
Translation:
'As votaries of the truly great we will ourselves enroll,' Is thought that enters not the mind of men of little soul.
Explanation:
It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.

குறள் 977:
இறப்பேபுரிந்ததொழிற்றாம்சிறப்புந்தான்
சீரல்லவர்கண்படின்.

சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.

கலைஞர்உரை:
சிறப்பானநிலையுங்கூடஅதற்குப்பொருந்தாதகீழ்மக்களுக்குக்கிட்டுமானால், அவர்கள்வரம்புமீறிச்செயல்படுவதுஇயற்கை.
மு.வஉரை:
சிறப்புநிலையும்தனக்குபொருந்தாதசீரற்றகீழ்மக்களிடம்ஏற்பட்டால், வரம்புமீறியசெயலைஉடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பணம், படிப்பு, பதவிஆகியசிறப்புகள்சிறுமைக்குணம்உடையவரிடம்சேர்ந்தால், அவர்களின்செயல்கள்அகங்காரத்தோடுவருவனவாம்.
Translation:
Whene'er distinction lights on some unworthy head, Then deeds of haughty insolence are bred.
Explanation:
Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.

குறள் 978:
பணியுமாம்என்றும்பெருமைசிறுமை
அணியுமாம்தன்னைவியந்து.

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

கலைஞர்உரை:
பண்புடையபெரியோர்எல்லோரிடமும்எப்பொழுதும்பணிவுடன்பழகுவார்கள்; பண்புஇல்லாதசிறியோர், தம்மைத்தாமேபுகழ்ந்துகொண்டுஇறுமாந்துகிடப்பார்கள்.
மு.வஉரை:
பெருமைப்பண்புஎக்காலத்திலும்பணிந்துநடக்கும், ஆனால்சிறுமையோதன்னைத்தானேவியந்துப்பாராட்டிக்கொள்ளும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெருமைஉடையவர்செருக்குஇல்லாமல்பணிவுடன்இருப்பர்; சிறுமைஉடையவரோசெருக்குடன்தம்மைத்தாமேவியந்துபாராட்டுவர்.
Translation:
Greatness humbly bends, but littleness always Spreads out its plumes, and loads itself with praise.
Explanation:
The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.

குறள் 979:
பெருமைபெருமிதம்இன்மைசிறுமை
பெருமிதம்ஊர்ந்துவிடல்.
பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

கலைஞர்உரை:
ஆணவமின்றிஅடக்கமாகஇருப்பதுபெருமைஎனப்படும். ஆணவத்தின்எல்லைக்கேசென்றுவிடுவதுசிறுமைஎனப்படும்.
மு.வஉரை:
பெருமைபண்புசெருக்குஇல்லாமல்வாழ்தல், சிறுமையோசெருக்கேமிகுந்துஅதன்எல்லையில்நின்றுவிடுவதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெருமைப்பட்டுக்கொள்ளக்காரணங்கள்இருந்தும்செருக்குஇல்லாமல்இருப்பதுபெருமை; காரணம்இல்லாமலேயேபெருமைப்பட்டுக்கொள்வதுசிறுமை.
Translation:
Greatness is absence of conceit; meanness, we deem, Riding on car of vanity supreme.
Explanation:
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.

குறள் 980:
அற்றம்மறைக்கும்பெருமைசிறுமைதான்
குற்றமேகூறிவிடும்.
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

கலைஞர்உரை:
பிறருடையகுறைகளைமறைப்பதுபெருமைப்பண்பாகும். பிறருடையகுற்றங்களையேகூறிக்கொண்டிருப்பதுசிறுமைக்குணமாகும்.
மு.வஉரை:
பெருமைப்பண்புபிறருடையகுறைப்பாட்டைமறைக்கும், சிறுமையோபிறருடையகுற்றத்தையேஎடுத்துச்சொல்லிவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெருமைக்குரியவர்பிறர்பெருமைகளைச்சொல்லிஅவர்குறைகளைக்கூறாமல்மறைத்துவிடுவர்; சிறுமைக்குஉரியவர்களோபிறர்பெருமைகளைமறைத்துக்குறைகளைமட்டுமேகூறிவிடுவர்.
Translation:
Greatness will hide a neighbour's shame; Meanness his faults to all the world proclaim.
Explanation:
The great hide the faults of others; the base only divulge them.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290