991-1000

குறள் 991:
எண்பதத்தால்எய்தல்எளிதென்பயார்மாட்டும்
பண்புடைமைஎன்னும்வழக்கு.

பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

கலைஞர்உரை:
யாராயிருந்தாலும்அவர்களிடத்தில்எளிமையாகப்பழகினால், அதுவேபண்புடைமைஎன்கிறசிறந்தஒழுக்கத்தைப்பெறுவதற்குஎளிதானவழியாகஅமையும்.
மு.வஉரை:
பண்புஉடையவராகவாழும்நல்வழியை, யாரிடத்திலும்எளியசெவ்வியுடன்இருப்பதால்அடைவதுஎளிதுஎன்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
எவரும்தன்னைஎளிதாகக்கண்டுபேசும்நிலையில்வாழ்ந்தால், பண்புடைமைஎன்னும்நல்வழியைஅடைவதுஎளிதுஎன்றுநூலோர்கூறுவர்.
Translation:
Who easy access give to every man, they say, Of kindly courtesy will learn with ease the way.
Explanation:
If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

குறள் 992:
அன்புடைமைஆன்றகுடிப்பிறத்தல்இவ்விரண்டும்
பண்புடைமைஎன்னும்வழக்கு.

அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

கலைஞர்உரை:
அன்புடையவராகஇருப்பதும், உயர்ந்தகுடியில்பிறந்தஇலக்கணத்துக்குஉரியவராகஇருப்பதும்தான்பண்புடைமைஎனக்கூறப்படுகிறசிறந்தநெறியாகும்.
மு.வஉரை:
அன்புடையவராகஇருத்தல், உயர்ந்தகுடியில்பிறந்ததன்மைஅமைந்திருத்தல்ஆகியஇவ்விரண்டும்பண்புஉடையவராகவாழும்நல்வழியாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
எல்லாரிடமும்அன்புள்ளவனாகவாழ்வது. உலகத்தோடுஒத்துவாழும்குடும்பத்தில்பிறந்திருத்தல்இவைஇரண்டும்பண்புடைமைஎன்னும்நல்லவழிகளாகும்.
Translation:
Benevolence and high born dignity, These two are beaten paths of courtesy.
Explanation:
Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.

குறள் 993:
உறுப்பொத்தல்மக்களொப்புஅன்றால்வெறுத்தக்க
பண்பொத்தல்ஒப்பதாம்ஒப்பு.

உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

கலைஞர்உரை:
நற்பண்புஇல்லாதவர்களைஅவர்களின்உடல்உறுப்புகளைமட்டுமேஒப்பிட்டுப்பார்த்துமக்கள்இனத்தில்சேர்த்துப்பேசுவதுசரியல்ல; நற்பண்புகளால்ஒத்திருப்பவர்களேமக்கள்எனப்படுவர்.
மு.வஉரை:
உடம்பால்ஒத்திருத்தல்மக்களோடுஒப்புமைஅன்று, பொருந்தத்தக்கப்பண்பால்ஒத்திருத்தலேகொள்ளத்தக்கஒப்புமையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உறுப்புக்களின்தோற்றத்தால்பிறருடன்ஒத்திருப்பதுஒப்புஆகாது; உள்ளத்துடன்இணையும்பண்பால்பிறருடன்ஒத்திருப்பதேஒப்புஆகும்.
Translation:
Men are not one because their members seem alike to outward view; Similitude of kindred quality makes likeness true.
Explanation:
Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.

குறள் 994:
நயனொடுநன்றிபுரிந்தபயனுடையார்
பண்புபாராட்டும்உலகு.

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

கலைஞர்உரை:
நீதிவழுவாமல்நன்மைகளைச்செய்துபிறருக்குப்பயன்படப்பணியாற்றுகிறவர்களின்நல்லபண்பைஉலகம்பாராட்டும்.
மு.வஉரை:
நீதியையும்நன்மையையும்விரும்பிப்பிறர்க்குப்பயன்படவாழும்பெரியோரின்நல்லப்பண்பைஉலகத்தார்போற்றிக்கொண்டாடுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
நீதியையும்அறத்தையும்விரும்பிப்பிறர்க்கும்பயன்படுபவரின்பண்பினைஉலகத்தவர்சிறப்பித்துப்பேசுவர்.
Translation:
Of men of fruitful life, who kindly benefits dispense, The world unites to praise the 'noble excellence'.
Explanation:
The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

குறள் 995:
நகையுள்ளும்இன்னாதிகழ்ச்சிபகையுள்ளும்
பண்புளபாடறிவார்மாட்டு.

ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

கலைஞர்உரை:
விளையாட்டாகக்கூடஒருவரைஇகழ்ந்துபேசுவதால்கேடுஉண்டாகும். அறிவுமுதிர்ந்தவர்கள், பகைவரிடமும்பண்புகெடாமல்நடந்துகொள்வார்கள்.
மு.வஉரை:
ஒருவனைஇகழ்ந்துபேசுதல்விளையாட்டிலும்துன்பம்தருவதாகும், பிறருடையஇயல்பைஅறிந்துநடப்பவரிடத்தில்பகைமையிலும்நல்லப்பண்புகள்உள்ளன.
சாலமன்பாப்பையாஉரை:
விளையாட்டில்விளையாட்டிற்காகக்கூடஒருவனைஇகழ்ந்துஏளனமாகப்பேசுவதுஅவனுக்குமனவருத்தத்தைத்தரும்; அதனால்மற்றவர்களிடம்எப்படிநடந்துகொள்ளவேண்டும்என்றுஅறியும்திறம்உள்ளவர்கள், பகைவர்களிடம்கூடஏளனமாகப்பேசார்.
Translation:
Contempt is evil though in sport. They who man's nature know, E'en in their wrath, a courteous mind will show.
Explanation:
Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.

குறள் 996:
பண்புடையார்ப்பட்டுண்டுஉலகம்அதுஇன்றேல்
மண்புக்குமாய்வதுமன்.

பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

கலைஞர்உரை:
உலகநடைமுறைகள், பண்பாளர்களைச்சார்ந்துஇயங்கவேண்டும். இல்லையேல்அந்தநடைமுறைகள்நாசமாகிவிடும்.
மு.வஉரை:
பண்புஉடையவரிடத்தில்பொருந்தியிருப்பதால்உலகம்உள்ளதாய்இயங்குகின்றது, அஃதுஇல்லையானால்மண்ணில்புகுந்துஅழிந்துபோகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பண்புடையவர்கள்வாழ்வதால்தான்மக்கள்வாழ்க்கைஎப்போதும்நிலைத்துஇருக்கிறது. அவர்கள்மட்டும்வாழாதுபோவார்என்றால். மனிதவாழ்க்கைமண்ணுக்குள்புகுந்துமடிந்துபோகும்.
Translation:
The world abides; for 'worthy' men its weight sustain. Were it not so, 'twould fall to dust again.
Explanation:
The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.

குறள் 997:
அரம்போலும்கூர்மையரேனும்மரம்போல்வர்
மக்கட்பண்புஇல்லாதவர்.

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

கலைஞர்உரை:
அரம்போன்றகூர்மையானஅறிவுடையமேதையாகஇருந்தாலும், மக்களுக்குரியபண்புஇல்லாதவர்மரத்துக்குஒப்பானவரேயாவார்.
மு.வஉரை:
மக்களுக்குஉரியபண்புஇல்லாதவர்அரம்போல்கூர்மையானஅறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகியமரத்தைப்போன்றவரேஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
மனிதப்பண்புஇல்லாதவர்கள்அரம்போலஅறிவுக்கூர்மைபடைத்தவர்என்றாலும்ஓர்அறிவுபடைத்தமரத்தைப்போன்றோரே.
Translation:
Though sharp their wit as file, as blocks they must remain, Whose souls are void of 'courtesy humane'.
Explanation:
He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.

குறள் 998:
நண்பாற்றார்ஆகிநயமிலசெய்வார்க்கும்
பண்பாற்றார்ஆதல்கடை.

நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

கலைஞர்உரை:
நட்புக்குஏற்றவராகஇல்லாமல்தீமைகளையேசெய்துகொண்டிருப்பவரிடம், நாம்பொறுமைகாட்டிப்பண்புடையவராகநடந்துகொள்ளாவிட்டால்அதுஇழிவானசெயலாகக்கருதப்படும்.
மு.வஉரை:
நட்புகொள்ளமுடியாதவராய்த்தீயவைச்செய்கின்றவரிடத்திலும்பண்புஉடையவராய்நடக்கமுடியாமைஇழிவானதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்முடன்நட்புச்செய்யாமல்பகைமைகொண்டுதீமையேசெய்பவர்க்கும்கூடப்பண்பற்றவராய்வாழ்வதுஇழுக்கே.
Translation:
Though men with all unfriendly acts and wrongs assail, 'Tis uttermost disgrace in 'courtesy' to fail.
Explanation:
It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.

குறள் 999:
நகல்வல்லர்அல்லார்க்குமாயிருஞாலம்
பகலும்பாற்பட்டன்றுஇருள்.

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

கலைஞர்உரை:
நண்பர்களுடன்பழகிமகிழத்தெரியாதவர்களுக்குஉலகம்என்பதுபகலில்கூடஇருட்டாகத்தான்இருக்கும்.
மு.வஉரை:
பிறரோடுகலந்துபழகிமகிழமுடியாதவர்க்கு, மிகப்பெரியஇந்தஉலகம்ஒளியுள்ளபகற்காலத்திலும்இருளில்கிடப்பதாம்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லபண்புஇல்லாததால்மற்றவர்களுடன்கலந்துபேசிமனம்மகிழும்இயல்புஇல்லாதவர்க்கு, இந்தப்பெரியஉலகம்இருள்இல்லாதபகல்பொழுதிலும்கூடஇருளிலேஇருப்பதுபோலவாம்.
Translation:
To him who knows not how to smile in kindly mirth, Darkness in daytime broods o'er all the vast and mighty earth.
Explanation:
To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.

குறள் 1000:
பண்பிலான்பெற்றபெருஞ்செல்வம்நன்பால்
கலந்தீமையால்திரிந்தற்று.

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

கலைஞர்உரை:
பாத்திரம்களிம்புபிடித்திருந்தால், அதில்ஊற்றிவைக்கப்படும்பால்எப்படிக்கெட்டுவிடுமோஅதுபோலப்பண்புஇல்லாதவர்கள்பெற்றசெல்வமும்பயனற்றதாகிவிடும்.
மு.வஉரை:
பண்புஇல்லாதவன்பெற்றபெரியசெல்வம், வைத்தகலத்தின்தீமையால்நல்லபால்தன்சுவைமுதலியனகெட்டாற்போன்றதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லபண்புஇல்லாதவன்அடைந்தபெரும்செல்வம், பாத்திரக்கேட்டால்அதிலுள்ளநல்லபால்கெட்டுப்போவதுபோலாம்.
Translation:
Like sweet milk soured because in filthy vessel poured, Is ample wealth in churlish man's unopened coffers stored.
Explanation:
The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290