1031-1040

                                                                                    உழவு
1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை.
உரை :
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது 
எழுவாரை எல்லாம் பொறுத்து.
உரை :
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர்.
உரை :
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் 
அலகுடை நீழ லவர்.
உரை :
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

1035. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

பொருள்: கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் தொழிலாளார் பிறரிடம் சென்று பிச்சை கேட்க மாட்டார். தம்மிடம் கேட்பவர்க்கு ஒளிக்காமல் இருப்பதை கொடுப்பார்.


குறள் 1036:
உழவினார்கைம்மடங்கின்இல்லைவிழைவதூஉம்
விட்டேம்என்பார்க்கும்நிலை.

உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
கலைஞர்உரை:
எல்லாப்பற்றையும்விட்டுவிட்டதாகக்கூறும்துறவிகள்கூடஉழவரின்கையைஎதிர்பார்த்துதான்வாழவேண்டும்.
மு.வஉரை:
உழவருடையகை, தொழில்செய்யாமல்மடங்கியிருக்குமானால், விரும்புகின்றஎந்தப்பற்றையும்விட்டுவிட்டோம்என்றுகூறும்துறவிகளுக்கும்வாழ்வுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
உழுபவர்கைமட்டும்வேலைசெய்யாதுமடங்கிவிட்டால், எல்லாரும்விரும்பும்உணவையும், நாம்விட்டுவிட்டோம்என்றுகூறும்துறவியரும்கூடஅவரதுஅறத்தில்நிலைத்துநிற்கமுடியாது.
Translation:
For those who 've left what all men love no place is found, When they with folded hands remain who till the ground.
Explanation:
If the farmer's hands are slackened, even the ascetic state will fail.

1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் 
வேண்டாது சாலப் படும்.
உரை :
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

1038. ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

பொருள் : ஏர்பூட்டி உழுதலைவிட எரு இடுதலும், களை எடுத்த பின், நீர்ப்பாய்ச்சுதலைவிடப் பயிர்களை பூச்சி, விலங்குககள் முதலியன சேதப்படுத்தி விடாமல் பயிரை பாதுகாத்தலும் முக்கியம் ஆகும்.

1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து 
இல்லாளின் ஊடி விடும்.
உரை :
நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் 
நிலமென்னும் நல்லாள் நகும்.
உரை :
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290