441-450

குறள் 441:
அறனறிந்துமூத்தஅறிவுடையார்கேண்மை
திறனறிந்துதேர்ந்துகொளல்.
கலைஞர்உரை:
அறமுணர்ந்தமூதறிஞர்களின்நட்பைப்பெறும்வகைஅறிந்து, அதனைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
அறம்உணர்ந்தவராய்த்தன்னைவிடமூத்தவராய்உள்ளஅறிவுடையவரின்நட்பை, கொள்ளும்வகைஅறிந்துஆராய்ந்துகொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறத்தின்நுண்மையைஅறிந்து, குறிப்பிட்டதுறையிலும்வளர்ந்தஅறிவுடையவரின்நட்பை, அதன்அருமையையும், அதைப்பெறும்திறத்தையும்அறிந்துபெறுக.
Translation:
As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed well, the king should choose with care.
Explanation:
Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

குறள் 442:
உற்றநோய்நீக்கிஉறாஅமைமுற்காக்கும்
பெற்றியார்ப்பேணிக்கொளல்.
கலைஞர்உரை:
வந்துள்ளதுன்பத்தைப்போக்கி, மேலும்துன்பம்நேராமல்காக்கவல்லபெரியோர்களைத்துணையாகக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
எண்வந்துள்ளதுன்பத்தைநீக்கி, இனித்துன்பம்வராதபடிமுன்னதாகவேகாக்கவல்லதன்மையுடையவரைப்போற்றிநட்புக்கொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
வந்ததுன்பங்களைப்போக்கும்வழிஅறிந்துபோக்கி, அவைதிரும்பவும்வராமல்முன்னதாகவேகாக்கும்ஆற்றல்மிக்கவரை, அவருக்குவேண்டியதைச்செய்து, துணையாகப்பெறுக.
Translation:
Cherish the all-accomplished men as friends,
Whose skill the present ill removes, from coming ill defends.
Explanation:
Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.

குறள் 443:
அரியவற்றுளெல்லாம்அரிதேபெரியாரைப்
பேணித்தமராக்கொளல்.
கலைஞர்உரை:
பெரியவர்களைப்போற்றிப்பாராட்டிஅவர்களுடன்உறவாடுதல்எல்லாப்பேறுகளையும்விடப்பெரும்பேறாகும்.
மு.வஉரை:
பெரியாரைப்போற்றிதமக்குச்சுற்றத்தாராக்கிக்கொள்ளுதல், பெறத்தக்கஅரியபேறுகள்எல்லாவற்றிலும்அருமையானதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
துறைப்பெரியவர்களுக்குஅவர்விரும்புகின்றவற்றைச்செய்து, அவரைத்தமக்குஉரியவராகச்செய்துகொள்வதுஅரியபேறுகளுள்எல்லாம்அரிது.
Translation:
To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known.
Explanation:
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.

குறள் 444:
தம்மிற்பெரியார்தமராஒழுகுதல்
வன்மையுளெல்லாந்தலை.
கலைஞர்உரை:
அறிவுஆற்றல்ஆகியவற்றில்தம்மைக்காட்டிலும்சிறந்தபெரியவராய்இருப்பவரோடுஉறவுகொண்டுஅவர்வழிநடப்பதுமிகப்பெரும்வலிமையாகஅமையும்.
மு.வஉரை:
தம்மைவிட (அறிவுமுதலியவற்றால் ) பெரியவர்தமக்குச்சுற்றத்தராகுமாறுநடத்தல், வல்லமைஎல்லாவற்றிலும்சிறந்ததாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவுமுதலியவற்றால்தம்மைக்காட்டிலும்சிறந்ததுறைஅறிவுடையவரைத்தமக்குஉரியவராகக்கொண்டு, அவர்காட்டும்வழியில்நடப்பது, வலிமையுள்எல்லாம்முதன்மைஆனதாகும்.
Translation:
To live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells.
Explanation:
So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.

குறள் 445:
சூழ்வார்கண்ணாகஒழுகலான்மன்னவன்
சூழ்வாரைக்சூழ்ந்துகொளல்.
கலைஞர்உரை:
கண்ணாகஇருந்துஎதனையும்கண்டறிந்துகூறும்அறிஞர்பெருமக்களைச்சூழவைத்துக்கொண்டிருப்பதேஆட்சியாளர்க்குநன்மைபயக்கும்.
மு.வஉரை:
தக்கவழிகளைஆராய்ந்துகூறும்அறிஞரையேஉலகம்கண்ணாகக்கொண்டுநடத்தலால், மன்னவனும்அத்தகையாரைக்ஆராய்ந்துநட்புக்கொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னைச்சூழஇருப்பவரைக்கண்ணாகக்கொண்டுஅரசுஇயங்குவதால்அப்படியேசூழும்துறைப்பெரியவரையேதுணையாகக்கொள்க.
Translation:
The king, since counsellors are monarch's eyes,
Should counsellors select with counsel wise.
Explanation:
As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.

குறள் 446:
தக்காரினத்தனாய்த்தானொழுகவல்லானைச்
செற்றார்செயக்கிடந்ததில்.
கலைஞர்உரை:
அறிவும், ஆற்றலும்கொண்டஒருவன், தன்னைச்சூழவும்அத்தகையோரையேகொண்டிருந்தால்பகைவர்களால்எந்தத்தீங்கையும்விளைவிக்கமுடியாது.
மு.வஉரை:
தக்கபெரியாரின்கூட்டத்தில்உள்ளனவாய்நடக்கவல்லஒருவனுக்கு,அவனுடையபகைவர்செய்யக்கூடியத்தீங்குஒன்றும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தகுதிமிக்கதுறைப்பெரியவரைநட்பாகக்கொண்டு, அவர்காட்டும்வழியில்நடப்பவரைப்பகைவர்ஏதும்செய்யஇயலாது.
Translation:
The king, who knows to live with worthy men allied,
Has nought to fear from any foeman's pride.
Explanation:
There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.

குறள் 447:
இடிக்குந்துணையாரையாள்வரையாரே
கெடுக்குந்தகைமையவர்.
கலைஞர்உரை:
இடித்துரைத்துநல்வழிகாட்டுபவரின்துணையைப்பெற்றுநடப்பவர்களைக்கெடுக்கும்ஆற்றல்யாருக்குஉண்டு?.
மு.வஉரை:
கடிந்துஅறிவுரைக்கூறவல்லபெரியாரின்துணைகொண்டுநடப்பவரைகெடுக்கும்ஆற்றல்உள்ளவர்எவர்இருக்கின்றனர்.
சாலமன்பாப்பையாஉரை:
தீயனகண்டபோதுநெருங்கிச்சொல்லும்துறைப்பெரியவரைத்துணையாகக்கொண்டுசெயல்படுபவரைக்கெடுக்கக்கூடியவர்எவர்?.
Translation:
What power can work his fall, who faithful ministers
Employs, that thunder out reproaches when he errs.
Explanation:
Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?.

குறள் 448:
இடிப்பாரைஇல்லாதஏமராமன்னன்
கெடுப்பாரிலானுங்கெடும்.
கலைஞர்உரை:
குறையைஉணர்த்துவோர்இல்லாதஅரசுதானாகவேகெடும்.
மு.வஉரை:
கடிந்துஅறிவுரைக்கூறும்பெரியாரின்துணைஇல்லாதக்காவலற்றஅரசன், தன்னைக்கெடுக்ககும்பகைவர்எவரும்இல்லாவிட்டாலும்கெடுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
தீயனகண்டபோதுகடிந்துசொல்லும்துறைப்பெரியவரைத்துணையாகக்கொள்ளாதபாதுகாப்புஅற்றஅரசு, அதைக்கெடுப்பார்இல்லாமலேயேதானாகவேகெடும்.
Translation:
The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall.
Explanation:
The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.

குறள் 449:
முதலிலார்கஊதியமில்லைமதலையாஞ்
சார்பிலார்க்கில்லைநிலை.
கலைஞர்உரை:
கட்டடத்தைத்தாங்கும்தூண்போலத்தம்மைத்தாங்கிநிற்கக்கூடியதுணையில்லாதவர்களின்நிலை, முதலீடுசெய்யாதவாணிபத்தில்வருவாய்இல்லாதநிலையைப்போன்றதேயாகும்.
மு.வஉரை:
முதல்இல்லாதவணிகர்க்குஅதனால்வரும்ஊதியம்இல்லை, அதுபோல்தம்மைத்தாங்கிக்காப்பாற்றும்துணைஇல்லாதவர்க்குநிலைபேறுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
முதல்இல்லாதவர்களுக்குஅதனால்வரும்லாபம்இல்லை, அதுபோலவேதன்னைத்தாங்கும்துறைப்பெரியவர்துணைஇல்லாதஅரசுக்குஅவர்களால்வரும்பயனும்இல்லை.
Translation:
Who owns no principal, can have no gain of usury;
Who lacks support of friends, knows no stability.
Explanation:
The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

குறள் 450:
பல்லார்பகைகொளலிற்பத்தடுத்ததீமைத்தே
நல்லார்தொடர்கைவிடல்.
கலைஞர்உரை:
நல்லவர்களின்தொடர்பைக்கைவிடுவதுஎன்பதுபலருடையபகையைத்தேடிக்கொள்வதைவிடக்கேடுவிளைவிக்கக்கூடியதாகும்.
மு.வஉரை:
நல்லவராகியபெரியாரின்தொடர்பைக்கைவிடுதல்பலருடையபகையைத்தேடிக்கொள்வதைவிடப்பத்துமடங்குதீமைஉடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
துறைப்பெரியவர்நட்பைப்பெறாமல்அதைவிட்டுவிடுவது, தனியனாய்நின்று, பலரோடும்பகைகொள்வதைக்காட்டிலும், பலபத்துமடங்குதீமைஆகும்.
Translation:
Than hate of many foes incurred, works greater woe
Ten-fold, of worthy men the friendship to forego.
Explanation:
It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290