611-620

குறள் 611:
அருமைஉடைத்தென்றுஅசாவாமைவேண்டும்
பெருமைமுயற்சிதரும்.
கலைஞர்உரை:
நம்மால்முடியுமாஎன்றுமனத்தளர்ச்சிஅடையாமல், முடியும்என்றநம்பிக்கையுடன்முயற்சிசெய்தால்அதுவேபெரியவலிமையாகஅமையும்.
மு.வஉரை:
இதுசெய்வதற்குஅருமையாகாதுஎன்றுசோர்வுறாமல்இருக்கவேண்டும், அதைச்செய்வதற்க்குத்தக்கபெருமையைமுயற்சிஉண்டாக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
நம்மால்இதைச்செய்யமுடியாதுஎன்றுமனம்தளரக்கூடாது. அதைச்செய்துமுடிக்கும்ஆற்றலைமுயற்சிதரும்.
Translation:
Say not, 'Tis hard', in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power.
Explanation:
Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).

குறள் 612:
வினைக்கண்வினைகெடல்ஓம்பல்வினைக்குறை
தீர்ந்தாரின்தீர்ந்தன்றுஉலகு.
கலைஞர்உரை:
எந்தச்செயலில்ஈடுபட்டாலும்அதனைமுழுமையாகச்செய்துமுடிக்கவேண்டும். இல்லையேல்அரைக்கிணறுதாண்டியகதையாகிவிடும்.
மு.வஉரை:
தொழிலாகியகுறையைச்செய்யாமல்கைவிட்டவரைஉலகம்கைவிடும், ஆகையால்தொழில்முயற்சிஇல்லாதிருத்தலைஒழிக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்யும்போதே, அதைத்தொடர்ந்துசெய்வதுகடினம்எனஎண்ணிச்செய்யாதுவிட்டுவிடாதே. அவ்வாறுவிட்டுவிடுபவரைஇந்தஉலகமும்விட்டுவிடும்.
Translation:
In action be thou, 'ware of act's defeat;
The world leaves those who work leave incomplete!.
Explanation:
Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.

குறள் 613:
தாளாண்மைஎன்னும்தகைமைக்கண்தங்கிற்றே
வேளாண்மைஎன்னுஞ்செருக்கு.
கலைஞர்உரை:
பிறருக்குஉதவிபுரியும்பெருமிதஉணர்வு, விடாமுயற்சிமேற்கொள்ளக்கூடியஉயர்ந்தஇயல்புடையவர்களிடம்நிலை
பெற்றிருக்கும்.
மு.வஉரை:
பிறர்க்குஉதவிசெய்தல்என்னும்மேம்பட்டநிலைமைமுயற்சிஎன்றுசொல்லப்படுகின்றஉயர்ந்தபண்பில்நிலைத்திருக்கின்றது.
சாலமன்பாப்பையாஉரை:
முயற்சிஎனப்படும்உயர்ந்தகுணத்தில்தான்பிறர்க்குஉதவுதல்என்னும்மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
Translation:
In strenuous effort doth reside
The power of helping others: noble pride!.
Explanation:
The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

குறள் 614:
தாளாண்மைஇல்லாதான்வேளாண்மைபேடிகை
வாளாண்மைபோலக்கெடும்.
கலைஞர்உரை:
ஊக்கமில்லாதவர்உதவியாளராகஇருப்பதற்கும், ஒருபேடி, கையிலேவாள்தூக்கிவீசுவதற்கும்வேறுபாடுஒன்றுமில்லை.
மு.வஉரை:
முயற்சிஇல்லாதவன்உதவிசெய்பவனாகஇருத்தல், பேடிதன்கையில்வாளைஎடுத்தும்ஆளும்தன்மைபோல்நிறைவேறாமல்போகும்.
சாலமன்பாப்பையாஉரை:
முயற்சிஇல்லாதவன், பிறர்க்குஉதவுவேன்என்பது, படைகண்டுநடுங்கும்பேடி, களத்துள்நின்றுதன்கைவாளைச்சுழற்றுதல்போலஒருபயனும்இல்லாமல்
போகும்.
Translation:
Beneficent intent in men by whom no strenuous work is wrought,
Like battle-axe in sexless being's hand availeth nought.
Explanation:
The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.

குறள் 615:
இன்பம்விழையான்வினைவிழைவான்தன்கேளிர்
துன்பம்துடைத்தூன்றும்தூண்.
கலைஞர்உரை:
தன்னலம்விரும்பாமல், தான்மேற்கொண்டசெயலைநிறைவேற்றவிரும்புகின்றவன்தன்னைச்சூழ்ந்துள்ளசுற்றத்தார், நண்பர்கள், நாட்டுமக்கள்ஆகியஅனைவரின்துன்பம்துடைத்து, அவர்களைத்தாங்குகிறதூணாவான்.
மு.வஉரை:
தன்இன்பத்தைவிரும்பாதவனாய்மேற்க்கொண்டச்செயலைமுடிக்கவிரும்புகிறவன், தன்சுற்றத்தாரின்துன்பத்தைப்போக்கித்தாங்குகின்றதூண்ஆவான்.
சாலமன்பாப்பையாஉரை:
இன்பத்தைவிரும்பாதவனாய்ச்செயல்செய்வதையேவிரும்புபவன், தன்உறவும்நட்புமாகியபாரத்தின்துன்பத்தைப்போக்கி, அதைத்தாங்கும்தூண்ஆவான்.
Translation:
Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
He wipes away his kinsmen's grief and stands the pillar of their might.
Explanation:
He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.

குறள் 616:
முயற்சிதிருவினைஆக்கும்முயற்றின்மை
இன்மைபுகுத்திவிடும்.
கலைஞர்உரை:
முயற்சிஇல்லாமல்எதுவும்இல்லை. முயற்சிதான்சிறப்பானசெயல்பாடுகளுக்குக்காரணமாகஅமையும்.
மு.வஉரை:
முயற்சிஒருவனுக்குச்செல்வத்தைப்பெருகச்செய்யும், முயற்சிஇல்லாதிருத்தல்அவனுக்குவறுமையைச்சேர்த்துவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
முயற்சிசெல்வத்தைச்சேர்க்கும்; முயலாமல்இருப்பதுவறுமைக்குள்சேர்ந்துவிடும்.
Translation:
Effort brings fortune's sure increase,
Its absence brings to nothingness.
Explanation:
Labour will produce wealth; idleness will bring poverty.

குறள் 617:
மடியுளாள்மாமுகடிஎன்பமடியிலான்
தாளுளான்தாமரையினாள்.

கலைஞர்உரை:
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும்,முயற்சியில்ஊக்கமற்றசோம்பேறியையும்சுட்டிக்காட்டிப்பயன்படுவனவாகும்.

மு.வஉரை:
ஒருவனுடையசோம்பலில்கரியமூதேவிவாழ்கின்றாள், சோம்பல்இல்லாதவனுடையமுயற்சியிலேதிருமகள்வாழ்கின்றாள்.

சாலமன்பாப்பையாஉரை:
சோம்பிஇருப்பவனிடம்மூதேவிதங்குவான். சோம்பாதவனின்முயற்சியில்திருமகள்தங்குவாள்என்பர்.

Translation:
In sluggishness is seen misfortune's lurid form, the wise declare; 
Where man unslothful toils, she of the lotus flower is there!.

Explanation:
They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.

குறள் 618:
பொறியின்மையார்க்கும்பழியன்றுஅறிவறிந்து
ஆள்வினைஇன்மைபழி.

கலைஞர்உரை:
விதிப்பயனால்பழிஏற்படும்என்பதுதவறு, அறியவேண்டியவற்றைஅறிந்துசெயல்படாமல்இருப்பதேபெரும்பழியாகும்.

மு.வஉரை:
நன்மைவிளைவிக்கும்ஊழ்இல்லாதிருத்தல்யார்க்கும்பழிஅன்று, அறியவேண்டியவற்றைஅறிந்துமுயற்சிசெய்யாதிருத்தலேபழி.

சாலமன்பாப்பையாஉரை:
உடல்உறுப்பு, செயலற்றுஇருப்பதுகுறைஆகாது. அறியவேண்டியவதைஅறிந்துமுயற்சிசெய்யாதுஇருப்பதேகுறை.

Translation:
'Tis no reproach unpropitious fate should ban; 
But not to do man's work is foul disgrace to man!.

Explanation:
Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

குறள் 619:
தெய்வத்தான்ஆகாதெனினும்முயற்சிதன்
மெய்வருத்தக்கூலிதரும்.

கலைஞர்உரை:
கடவுளேஎன்றுகூவிஅழைப்பதால்நடக்காதகாரியம்ஒருவர்முயற்சியுடன்உழைக்கும்போதுஅந்தஉழைப்புக்கேற்றவெற்றியைத்தரும்.

மு.வஉரை:
ஊழியின்காரணத்தால்ஒருசெயல்செய்யமுடியாமல்போகுமாயினும், முயற்சிதன்உடம்புவருந்தியவருத்தத்தின்கூலியையாவதுகொடுக்கும்.

சாலமன்பாப்பையாஉரை:
விதிநமக்குஉதவமுடியாதுபோனாலும், முயற்சிநம்உடல்உழைப்பிற்குஏற்றபலனைத்தரும்.

Translation:
Though fate-divine should make your labour vain; 
Effort its labour's sure reward will gain.

Explanation:
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

குறள் 620:
ஊழையும்உப்பக்கம்காண்பர்உலைவின்றித்
தாழாதுஉஞற்றுபவர்.
கலைஞர்உரை:
ஊழ்என்பதுவெல்லமுடியாதஒன்றுஎன்பார்கள். சோர்வில்லாமல்முயற்சிமேற்கொள்பவர்கள்அந்தஊழையும்தோல்விஅ
டையச்செய்வார்கள்.
மு.வஉரை:
சோர்வுஇல்லாமல்முயற்சியில்குறைவுஇல்லாமல்முயல்கின்றவர்,(செயலுக்குஇடையூறாகவரும்)ஊழையும்ஒருகாலத்தில்தோல்வியுறச்செய்யும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனம்தளராமல்இடைவிடாதுமுயற்சிசெய்பவர், விதியையும்புறமுதுகுகாட்டக்காண்பர்.
Translation:
Who strive with undismayed, unfaltering mind,
At length shall leave opposing fate behind.
Explanation:
They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290