761-770
குறள் 761:
உறுப்பமைந்துஊறஞ்சாவெல்படைவேந்தன்
வெறுக்கையுள்எல்லாம்தலை.
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
கலைஞர்உரை:
எல்லாவகைகளும்நிறைந்ததாகவும், இடையூறுகளுக்குஅஞ்சாமல்போரிடக்கூடியதாகவும்உள்ளபடைஓர்அரசின்மிகச்சிறந்தசெல்வமாகும்.
மு.வஉரை:
எல்லாஉறுப்புக்களும்நிறைந்ததாய்இடையூறுகளுக்குஅஞ்சாததாய்உள்ளவெற்றிதரும்படை, அரசனுடையசெல்வங்கள்எல்லாவற்றிலும்சிறந்ததாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தரைப்படை, கப்பல்படை, விமானப்படை, காவல்துறைஎனநாட்டைக்காப்போர்பிரிவினால்நிறைந்து, போர்க்களத்தில்புண்படஅஞ்சாது, பகைவரைவெல்லும்படையேஆட்சியாளரின்செல்வத்துள்எல்லாம்முதன்மையானசெல்வம்ஆகும்.
Translation:
A conquering host, complete in all its limbs, that fears no wound, Mid treasures of the king is chiefest found.
Explanation:
The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.
குறள் 762:
உலைவிடத்துஊறஞ்சாவன்கண்தொலைவிடத்துத்
தொல்படைக்கல்லால்அரிது.
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.
கலைஞர்உரை:
போரில்சேதமுற்றுவலிமைகுன்றியபோதும், எவ்விதஇடையூறுகளுக்கும்அஞ்சாதநெஞ்சுறுதி, பழம்பெருமைகொண்டபடைக்குஅல்லாமல்வேறுஎந்தப்படைக்கும்இருக்கமுடியாது.
மு.வஉரை:
போரில்அழிவுவந்தவிடத்தில்வலிமைக்குன்றினாலும், இடையூறுகளுக்குஅஞ்சாதஅஞ்சாமைதொன்றுதொட்டுப்பெருமைஉடையபடைக்குஅல்லாமல்முடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
தம்அரசுக்குஓர்அபாயம்வரும்போது, தாம்எண்ணிக்கையில்குறைவாகஇருந்தாலும், தமக்குஏற்படும்அழிவிற்குஅஞ்சாதுநின்றுபோரிடும்வீரம், பரம்பரைபரம்பரையாகவாழும்சொந்தநாட்டுமக்களுக்கேஅன்றி, மற்றவர்க்குவருவதுகடினம்.
Translation:
In adverse hour, to face undaunted might of conquering foe, Is bravery that only veteran host can show.
Explanation:
Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength.
குறள் 763:
ஒலித்தக்கால்என்னாம்உவரிஎலிப்பகை
நாகம்உயிர்ப்பக்கெடும்.
எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
கலைஞர்உரை:
எலிகள்கூடிகடல்போல்முழங்கிப், பகையைக்கக்கினாலும், நாகத்தின்மூச்சொலிக்குமுன்னால்நிற்கமுடியுமா? அதுபோலத்தான்வீரன்வெகுண்டுஎழுந்தால்வீணர்கள்வீழந்துபடுவார்கள்.
மு.வஉரை:
எலியாகியபகைக்கூடிகடல்போல்ஒலித்தாலும்என்னதீங்குஏற்ப்படும், பாம்புமூச்சுவிட்டஅளவில்அவைக்கெட்டழியும்.
சாலமன்பாப்பையாஉரை:
பாம்பெனநிற்கும்சிறுபடைமுன்கடல்எனவீரர்கள்திரண்டிருந்தாலும், திரண்டவர்கள்மனத்தால்எலியாகஇருந்தால்என்னஆகும்? பாம்புமூச்சுவிட்டஅளவிலேயேஎலிப்படைஅத்தனையும்அழியும்.
Translation:
Though, like the sea, the angry mice send forth their battle cry; What then? The dragon breathes upon them, and they die!.
Explanation:
What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.
குறள் 764:
அழிவின்றிஅறைபோகாதாகிவழிவந்த
வன்கணதுவேபடை.
(போர் முனையில்) அழிவு இல்லாததாய் (பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
கலைஞர்உரை:
எந்தநிலையிலும்அழியாததும், சூழ்ச்சிக்குஇரையாகாததும், பரம்பரையாகவேபயமற்றஉறுதிஉடையதும்தான்உண்மையானபடைஎனப்படும்.
மு.வஉரை:
(போர்முனையில்) அழிவுஇல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்குஇரையாகாததாய், தொன்றுதொட்டுவந்தஅஞ்சாமைஉடையதேபடையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
போரில்தோற்காமலும், பகைவரின்சதிக்குத்துணைபோகாமலும், தொன்றுதொட்டுவரும்வீரத்தைஉடையதேபடை.
Translation:
That is a host, by no defeats, by no desertions shamed, For old hereditary courage famed.
Explanation:
That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).
குறள் 765:
கூற்றுடன்றுமேல்வரினும்கூடிஎதிர்நிற்கும்
ஆற்றலதுவேபடை.
எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
கலைஞர்உரை:
உயிரைப்பறிக்கும்சாவுஎதிர்கொண்டுவந்தாலும்அஞ்சாமல்ஒன்றுபட்டுஎதிர்த்துநிற்கும்ஆற்றல்உடையதற்கேபடைஎன்றபெயர்பொருந்தும்.
மு.வஉரை:
எமனேசினங்கொண்டுதன்மேல்எதிர்த்துவந்தாலும்ஒன்றாகத்திரண்டுஎதிர்த்துநிற்க்கும்ஆற்றல்உடையதேபடையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
எமனேஎதிர்த்துவந்தாலும், கூடிநின்றுஎதிர்த்துச்சண்டைஇடும்ஆற்றலைஉடையதேபடை.
Translation:
That is a 'host' that joins its ranks, and mightily withstands, Though death with sudden wrath should fall upon its bands.
Explanation:
That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.
குறள் 766:
மறமானம்மாண்டவழிச்செலவுதேற்றம்
எனநான்கேஏமம்படைக்கு.
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
கலைஞர்உரை:
வீரம், மானஉணர்வு, முன்னோர்சென்றவழிநடத்தல், தலைவனின்நம்பிக்கையைப்பெறுதல்ஆகியநான்கும்படையைப்பாதுகாக்கும்பண்புகளாகும்.
மு.வஉரை:
வீரம், மானம், சிறந்தவழியில்நடக்கும்நடக்கை, தலைவரால்நம்பித்தெளியப்படுதல்ஆகியஇந்தநான்குபண்புகளும்படைக்குசிறந்தவையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
வீரம், மானம், நல்லவழியில்நடத்தல், அரசி்னநம்பிக்கைக்குஉரியதுஆதல்எனும்நான்கும்படைக்குகாவல்அரண்களாகும்.
Translation:
Valour with honour, sure advance in glory's path, with confidence; To warlike host these four are sure defence.
Explanation:
Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army.
குறள் 767:
தார்தாங்கிச்செல்வதுதானைதலைவந்த
போர்தாங்கும்தன்மைஅறிந்து.
தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.
கலைஞர்உரை:
களத்தில், முதலில்எதிர்கொள்ளும்போரைத்தாங்கித்தகர்க்கும்ஆற்றலைஅறிந்திருப்பின், அதுவேவெற்றிமாலைதாங்கிச்செல்லக்கூடியசிறந்தபடையாகும்.
மு.வஉரை:
தன்மேல்எதிர்த்துவந்தபகைவரின்போரைத்தாங்கி, வெல்லும்தன்மைஅறிந்துஅவனுடையதூசிப்படையைஎதிர்த்துச்செல்லவல்லதேபடையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்மீதுவந்தபகைவரின்போரைத்தடுக்கும்முறையைஅறிந்துஅவர்களில்முதலாவதாகவந்துசண்டையிடும்காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச்சேனைஎன்றும்பெயர்) தன்மீதுவராமல்தடுப்பதேபடை.
Translation:
A valiant army bears the onslaught, onward goes, Well taught with marshalled ranks to meet their coming foes.
Explanation:
That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force)
குறள் 768:
அடல்தகையும்ஆற்றலும்இல்லெனினும்தானை
படைத்தகையால்பாடுபெறும்.
போர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.
கலைஞர்உரை:
போர்புரியும்வீரம், எதிர்த்துநிற்கும்வல்லமைஆகியஇரண்டையும்விடஒருபடையின்அணிவகுப்புத்தோற்றம்சிறப்புடையதாகஅமையவேண்டும்.
மு.வஉரை:
போர்செய்யும்வீரமும்( எதிர்ப்பைத்தாங்கும்) ஆற்றலுமும்இல்லையானால்படைத்தன்னுடையஅணிவகுப்பால்பெருமைபெறும்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்மேல்சென்றுவெல்லும்வீரமும், பகைவர்வந்தால்தடுக்கும்பயிற்சியும்ஆற்றலும்படைக்குஇல்லைஎன்றாலும், அதுதன்கட்டுப்பாடானஅணிவகுப்பின்காட்சிஅழகால்பெருமைபெறும்.
Translation:
Though not in war offensive or defensive skilled; An army gains applause when well equipped and drilled.
Explanation:
Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.
குறள் 769:
சிறுமையும்செல்லாத்துனியும்வறுமையும்
இல்லாயின்வெல்லும்படை.
தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
கலைஞர்உரை:
சிறுத்துவிடாமலும், தலைவனைவெறுத்துவிடாமலும், பயன்படாதநிலைஇல்லாமலும்உள்ளபடைதான்வெற்றிபெறமுடியும்.
மு.வஉரை:
தன்அளவுசிறிதாகத்தேய்தலும், தலைவரிடம்நீங்காதவெறுப்பும்வறுமையும்இல்லாதிருக்குமானால்அத்தகையபடைவெற்றிபெறும்.
சாலமன்பாப்பையாஉரை:
எண்ணிக்கையில்சிறுமை, அரசி்ன்மீதுமனத்தைவிட்டுவிலகாதவெறுப்பு, வறுமைஇவைஎல்லாம்இல்லைஎன்றால்அந்தப்படைவெற்றிபெறும்.
Translation:
Where weakness, clinging fear and poverty Are not, the host will gain the victory.
Explanation:
An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.
குறள் 770:
நிலைமக்கள்சாலஉடைத்தெனினும்தானை
தலைமக்கள்இல்வழிஇல்.
நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.
கலைஞர்உரை:
உறுதிவாய்ந்தவீரர்களைஅதிகம்உடையதாகஇருந்தாலும்தலைமைதாங்கும்தலைவர்கள்இல்லாவிட்டால்அந்தப்படைநிலைத்துநிற்கமுடியாது.
மு.வஉரை:
நெடுங்காலமாகநிலைத்திருக்கும்வீரர்பலரைஉடையதேஆனாலும், தலைமைதாங்கும்தலைவர்இல்லாதபோதுபடைக்குப்பெருமைஇல்லையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
சிறந்தவீரர்கள்அதிகம்இருந்தாலும், படைக்குநல்லதலைவன்இல்லைஎன்றால்அந்தப்படைபோரில்நிலைத்துநிற்காது.
Translation:
Though men abound, all ready for the war, No army is where no fit leaders are.
Explanation:
Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.
Comments
Post a Comment