1001-1010

குறள் 1001:
வைத்தான்வாய்சான்றபெரும்பொருள்அஃதுண்ணான்
செத்தான்செயக்கிடந்ததுஇல்.

ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

கலைஞர்உரை:
அடங்காதஆசையினால்வீடுகொள்ளாதஅளவுக்குச்செல்வத்தைச்சேர்த்துவைத்துஅதனைஅனுபவிக்காமல்செத்துப்போகிறவனுக்கு, அப்படிச்சேர்க்கப்பட்டசெல்வத்தினால்என்னபயன்?.
மு.வஉரை:
ஒருவன்இடமெல்லாம்நிறைந்தபெரும்பொருளைச்சேர்த்துவைத்துஅதைஉண்டுநூகராமல்இறந்துபோனால்அவன்அந்தபொருளால்செய்யமுடிந்ததுஒன்றுமில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தன்வீடுநிறையப்பெரும்பொருள்சேர்த்துவைத்திருந்தும், கஞ்சத்தனத்தால்அதைஅனுபவிக்காதவனுக்குஅப்பொருளால்பயன்இல்லை. ஆதலால்அவன்இருந்தாலும்இறந்தவனே.
Translation:
Who fills his house with ample store, enjoying none, Is dead. Nought with the useless heap is done.
Explanation:
He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).

குறள் 1002:
பொருளானாம்எல்லாமென்றுஈயாதுஇவறும்
மருளானாம்மாணாப்பிறப்பு.

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

கலைஞர்உரை:
யாருக்கும்எதுவும்கொடுக்காமல், தன்னிடமுள்ளபொருளால்எல்லாம்ஆகுமென்று, அதனைவிடாமல்பற்றிக்கொண்டிருப்பவன்எந்தச்சிறப்புமில்லாதஇழிபிறவியாவான்.
மு.வஉரை:
பொருளால்எல்லாம்ஆகும்என்றுபிறர்க்குஒன்றும்கொடுக்காமல்இறுகப்பற்றியமயக்கத்தால்சிறப்பில்லாதபிறவிஉண்டாம்.
சாலமன்பாப்பையாஉரை:
பொருளால்எல்லாவற்றையும்சாதிக்கலாம்என்றுஎண்ணிஅதைத்தேடியபின்தானும்அனுபவிக்காமல், பிறர்தேவைக்கும்அதைத்தராமல்கஞ்சனாகவாழ்பவனின்மயக்கத்தால்அவனுக்குமுழுமையற்றபேய்ப்பிறப்புஉண்டாகும்.
Translation:
Who giving nought, opines from wealth all blessing springs, Degraded birth that doting miser's folly brings.
Explanation:
He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.

குறள் 1003:
ஈட்டம்இவறிஇசைவேண்டாஆடவர்
தோற்றம்நிலக்குப்பொறை.

சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

கலைஞர்உரை:
புகழைவிரும்பாமல்பொருள்சேர்ப்பதுஒன்றிலேயேகுறியாகஇருப்பவர்கள்பிறந்துவாழ்வதேஇந்தப்பூமிக்குப்பெரும்சுமையாகும்.
மு.வஉரை:
சேர்த்துவைப்பதையேவிரும்பிப்பற்றுள்ளம்கொண்டுபுகழைவிரும்பாதமக்கள்பிறந்துவாழ்தல்நிலத்திற்குபாரமேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மற்றவரைவிடநாம்அதிகம்பொருள்சேர்க்கவேண்டும்என்றுபொருள்சேர்ப்பதையேவிரும்பிப்புகழைவிரும்பாதமனிதரின்பிறப்புஇப்பூமிக்குப்பாரமே.
Translation:
Who lust to heap up wealth, but glory hold not dear, It burthens earth when on the stage of being they appear.
Explanation:
A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.

குறள் 1004:
எச்சமென்றுஎன்எண்ணுங்கொல்லோஒருவரால்
நச்சப்படாஅதவன்.

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

கலைஞர்உரை:
யாராலும்விரும்பப்படாதஒருவன், தன்மரணத்திற்குப்பிறகுஎஞ்சிநிற்கப்போவதுஎன்றுஎதனைநினைத்திடமுடியும்?.
மு.வஉரை:
பிறர்க்குஉதவியாகவாழாதக்காரணத்தால்ஒருவராலும்விரும்பப்படாதவன் , தான்இறந்தபிறகுஎஞ்சிநிற்பதுஎன்றுஎதனைஎண்ணுவானே.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்க்குஏதும்வழங்காதவன்ஆதலால்எவராலும்விரும்பப்படாதஅவன், தன்காலத்திற்குப்பின்தன்னைநினைவுபடுத்திநிற்கப்போவதுஎன்றுஎதைஎண்ணுவான்?.
Translation:
Whom no one loves, when he shall pass away, What doth he look to leave behind, I pray?.
Explanation:
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?.

குறள் 1005:
கொடுப்பதூஉம்துய்ப்பதூஉம்இல்லார்க்குஅடுக்கிய
கோடியுண்டாயினும்இல்.

பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

கலைஞர்உரை:
கொடுத்துஉதவும்பண்பினால்இன்பமுறும்இயல்புஇல்லாதவரிடம், கோடிகோடியாகச்செல்வம்குவிந்தாலும்அதனால்பயன்எதுவுமில்லை.
மு.வஉரை:
பிறர்க்குகொடுத்துஉதவுவதும்தான்நுகர்வதும்இல்லாதவர்க்குமேன்மேலும்பெருகியபலகோடிப்பொருள்உண்டானாலும்பயன்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தேவைப்படுவோர்க்குக்கொடுப்பதும், தேவைகண்டுதாம்அனுபவிப்பதும்இல்லாதவர்க்குப்பலமடங்காகஅடுக்கியகோடிப்பொருள்இருந்தாலும்இல்லாததேஆகும்.
Translation:
Amid accumulated millions they are poor, Who nothing give and nought enjoy of all they store.
Explanation:
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

குறள் 1006:
ஏதம்பெருஞ்செல்வம்தான்துவ்வான்தக்கார்க்கொன்று
ஈதல்இயல்பிலாதான்.

தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

கலைஞர்உரை:
தானும்அனுபவிக்காமல்தக்கவர்களுக்குஉதவிடும்இயல்பும்இல்லாமல்வாழ்கிறவன், தன்னிடமுள்ளபெருஞ்செல்வத்தைத்தொற்றிக்கொண்டநோயாவான்.
மு.வஉரை:
தானும்நுகராமல்தக்கவற்க்குஒன்றுகொடுத்துஉதவும்இயல்பும்இல்லாமல்வாழ்கின்றவன், தன்னிடமுள்ளபெருஞ்செல்வத்திற்குஒருநோய்ஆவான்.
சாலமன்பாப்பையாஉரை:
தானும்அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத்தரும்மனப்பாங்கும்இல்லாமல்வாழ்பவனிடம்இருக்கும்பெரும்செல்வம்ஒருநோயே.
Translation:
Their ample wealth is misery to men of churlish heart, Who nought themselves enjoy, and nought to worthy men impart.
Explanation:
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.

குறள் 1007:
அற்றார்க்கொன்றுஆற்றாதான்செல்வம்மிகநலம்
பெற்றாள்தமியள்மூத்தற்று.

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

கலைஞர்உரை:
வறியவர்க்குஎதுவும்வழங்கிஉதவாதவனுடையசெல்வம், மிகுந்தஅழகியொருத்தி, தன்னந்தனியாகவேஇருந்துமுதுமையடைவதைப்போன்றது.
மு.வஉரை:
பொருள்இல்லாதவறியவர்க்குஒருபொருள்கொடுத்துஉதவாதவனுடையச்செல்வம், மிக்கஅழகுபெற்றவள்தனியாகவாழ்ந்துமுதுமையுற்றாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
ஏதும்இல்லாதவர்க்குஏதாவதுஒன்றைக்கொடுத்துஉதவாதவன்செல்வம், மிகுந்தஅழகுபெற்றபெண், திருமணமாகாமலேமுதுமைஅடைந்ததுபோலாம்.
Translation:
Like woman fair in lonelihood who aged grows, Is wealth of him on needy men who nought bestows.
Explanation:
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

குறள் 1008:
நச்சப்படாதவன்செல்வம்நடுவூருள்
நச்சுமரம்பழுத்தற்று.

பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
கலைஞர்உரை:
வெறுக்கப்படுகிறவரிடம்குவிந்துள்ளசெல்வமும், ஊர்நடுவேநச்சுமரத்தில்காய்த்துக்குலுங்குகின்றபழமும்வெவ்வேறானவையல்ல!.
மு.வஉரை:
பிறர்க்குஉதவாதகாரணத்தால்ஒருவராலும்விரும்பப்படாதவனுடையசெல்வம், ஊர்நடுவில்நச்சுமரம்பழுத்தாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
எவராலும்விரும்பப்படாதவனின்செல்வம்ஊரின்நடுவேநின்றநச்சுமரம்பழுத்ததுபோலாம்.
Translation:
When he whom no man loves exults in great prosperity, 'Tis as when fruits in midmost of the town some poisonous tree.
Explanation:
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.

குறள் 1009:
அன்பொரீஇத்தற்செற்றுஅறநோக்காதுஈட்டிய
ஒண்பொருள்கொள்வார்பிறர்.

பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

கலைஞர்உரை:
அன்பெனும்பண்பைஅறவேநீக்கி, தன்னையும்வருத்திக்கொண்டு, அறவழிக்குப்புறம்பாகச்சேர்த்துக்குவித்திடும்செல்வத்தைப்பிறர்கொள்ளைகொண்டுபோய்விடுவர்.
மு.வஉரை:
பிறரிடம்செலுத்தும்அன்பையும்விட்டுத்தன்னையும்வருத்திஅறத்தையும்போற்றாமல்சேர்த்துவைத்தப்பெரும்பொருளைப்பெற்றுநுகர்பவர்மற்றவரே.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்க்குஈயாமல்அன்பைவிட்டுவிலகி, எதையும்அனுபவிக்காமல்தன்னைவருத்தி, அறத்தைஎண்ணாதுசேர்த்தபொருளைமற்றவர்அனுபவிப்பர்.
Translation:
Who love abandon, self-afflict, and virtue's way forsake To heap up glittering wealth, their hoards shall others take.
Explanation:
Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

குறள் 1010:
சீருடைச்செல்வர்சிறுதுனிமாரி
வறங்கூர்ந்தனையதுஉடைத்து.

புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

கலைஞர்உரை:
சிறந்தஉள்ளம்கொண்டசெல்வர்களுக்கேற்படும்சிறிதளவுவறுமையின்நிழல்கூட, மழைபொய்த்துவிட்டதற்குஒப்பானதாகும்.
மு.வஉரை:
புகழ்பொருந்தியசெல்வர்உற்றசிறியவறுமைஉலகத்தைக்காக்கவல்லமேகம்வறுமைமிகுந்தாற்போன்றதன்மைஉடையது.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்க்குக்கொடுத்துப்புகழ்மிக்கவர்ஆகியசெல்வர்கள்சிறிதுகாலம்வறுமைப்படநேர்ந்தால், அதுமழைதரம்மேகமேவறுமைப்பட்டதுபோலாம்.
Translation:
'Tis as when rain cloud in the heaven grows day, When generous wealthy man endures brief poverty.
Explanation:
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290