11-20

குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்: பாயிரவியல். அதிகாரம்:வான்சிறப்பு.
குறள் 11:
வான்நின்றுஉலகம்வழங்கிவருதலால்
தான்அமிழ்தம்என்றுணரற்பாற்று.
கலைஞர்உரை:
உலகத்தைவாழவைப்பதுமழையாகஅமைந்திருப்பதால்அதுவேஅமிழ்தம்எனப்படுகிறது.
மு.வஉரை:
மழைபெய்யஉலகம்வாழ்ந்துவருவதால், மழையானதுஉலகத்துவாழும்உயிர்களுக்குஅமிழ்தம்என்றுஉணரத்தக்கதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உரியகாலத்தில்இடைவிடாதுமழைபெய்வதால்தான்உலகம்நிலைபெற்றுவருகிறது; அதனால்மழையேஅமிழ்தம்எனலாம்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது ,அக்கடவுளதுஆணையான்உலகமும், அதற்குஉறுதியாகியஅறம்பொருள்இன்பங்களும்நடத்தற்குஏதுவாகியமழையினதுசிறப்புக்கூறுதல். அதிகாரமுறைமையும்இதனானேவிளங்கும்.]
வான்நின்றுஉலகம்வழங்கிவருதலால் - மழைஇடையறாதுநிற்பஉலகம்நிலைபெற்றுவருதலான்; தான்அமிழ்தம்என்றுஉணரற்பாற்று - அம்மழைதான்உலகிற்குஅமிழ்தம்என்றுஉணரும்பான்மையைஉடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத்திரிந்துநின்றது. 'உலகம்' என்றதுஈண்டுஉயிர்களை. அவைநிலைபெற்றுவருதலாவதுபிறப்புஇடையறாமையின்எஞ்ஞான்றும்உடம்போடுகாணப்பட்டுவருதல். அமிழ்தம்உண்டார்சாவாதுநிலைபெறுதலின், உலகத்தைநிலைபெறுத்துகின்றவானை 'அமிழ்தம்என்றுஉணர்க' என்றார்.).
மணக்குடவர்உரை:
மழைவளம்நிலைநிற்றலானேஉலகநடைதப்பாதுவருதலான், அம்மழைதான்உலகத்தார்அமுதமென்றுணரும்பகுதியது. இஃதுஅறம்பொருளின்பங்களையுண்டாக்குதலானும், பலவகைப்பட்டவுணவுகளைநிலைநிறுத்தலானும். இம்மழையினைமற்றுள்ளபூதமாத்திரமாகநினைக்கப்படாதென்றநிலைமைகூறிற்று.
Translation:
The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.
Explanation:
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.

குறள் 12:
துப்பார்க்குத்துப்பாயதுப்பாக்கித்துப்பார்க்குத்
துப்பாயதூஉம்மழை.
கலைஞர்உரை:
யாருக்குஉணவுப்பொருள்களைவிளைவித்துத்தரமழைபயன்படுகிறதோ, அவர்களுக்கேஅந்தமழைஅவர்கள்அருந்தும்உணவாகவும்ஆகி, அரியதியாகத்தைச்செய்கிறது.
மு.வஉரை:
உண்பவர்க்குத்தக்கஉணவுப்பொருள்களைவிளைவித்துத்தருவதோடு, பருகுவோர்க்குத்தானும்ஓர்உணவாகஇருப்பதுமழையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லஉணவுகளைச்சமைக்கவும், சமைக்கப்பட்டஉணவுகளைஉண்பவர்க்குஇன்னுமோர்உணவாகவும்பயன்படுவதுமழையே.
பரிமேலழகர்உரை:
துப்பார்க்குத்துப்புஆயதுப்புஆக்கி - உண்பார்க்குநல்லஉணவுகளைஉளவாக்கி; துப்பார்க்குத்துப்புஆயதூஉம்மழை - அவற்றைஉண்கின்றார்க்குத்தானும்உணவாய்நிற்பதூஉம்மழை. (தானும்உணவாதலாவது, தண்ணீராய்உண்ணப்படுதல். சிறப்புஉடையஉயர்திணைமேல்வைத்துக்கூறினமையின், அஃறிணைக்கும்இஃதுஒக்கும். இவ்வாறுஉயிர்களதுபசியையும்நீர்வேட்கையையும்நீக்குதலின்அவைவழங்கிவருதலுடையவாயினஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
பிறிதொன்றுண்பார்க்குஅவருண்டற்கானவுணவுகளையுமுண்டாக்கித்தன்னையுண்பார்க்குத்தானேஉணவாவதும்மழையே. இதுபசியைக்கெடுக்குமென்றது.
Translation:
The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.
Explanation:
Rain produces good food, and is itself food.

குறள் 13:
விண்இன்றுபொய்ப்பின்விரிநீர்வியனுலகத்து
உள்நின்றுஉடற்றும்பசி.
கலைஞர்உரை:
கடல்நீர்சூழ்ந்தஉலகமாயினும், மழைநீர்பொய்த்துவிட்டால்பசியின்கொடுமைவாட்டிவதைக்கும்.
மு.வஉரை:
மழைபெய்யாமல்பொய்படுமானால், கடல்சூழ்ந்தஅகன்றஉலகமாகஇருந்தும்பசிஉள்ளேநிலைத்துநின்றுஉயிர்களைவருத்தும்.
சாலமன்பாப்பையாஉரை:
உரியகாலத்தேமழைபெய்யாதுபொய்க்குமானால், கடல்சூழ்ந்தஇப்பேருலகத்தில்வாழும்உயிர்களைப்பசிவருத்தும்.
பரிமேலழகர்உரை:
விண்இன்றுபொய்ப்பின் - மழைவேண்டுங்காலத்துப்பெய்யாதுபொய்க்கும்ஆயின்; விரிநீர்வியன்உலகத்துள் - கடலால்சூழப்பட்டஅகன்றஉலகத்தின்கண்; நின்றுஉடற்றும்பசி - நிலைபெற்றுஉயிர்களைவருத்தும்பசி. (கடலுடைத்தாயினும்அதனால்பயன்இல்லையென்பார், 'விரிநீர்வியன்உலகத்து' என்றார். உணவுஇன்மையின்பசியான்உயிர்கள்இறக்கும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
வானமானதுநிலைநிற்கப்பொய்க்குமாயின், விரிந்தநீரினையுடையஅகன்றவுலகத்திடத்தேபசியானதுநின்றுவருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில்மறுத்தல். இதுபசிஎன்றுபொதுப்படக்கூறியவதனான்மக்களும்விலங்கும்பொருளுங்காமமுந்துய்க்கலாற்றாதுதுன்பமுறுமென்றுகூறிற்று.
Translation:
If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.
Explanation:
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

குறள் 14:
ஏரின்உழாஅர்உழவர்புயல்என்னும்
வாரிவளங்குன்றிக்கால்.
கலைஞர்உரை:
மழைஎன்னும்வருவாய்வளம்குன்றிவிட்டால், உழவுத்தொழில்குன்றிவிடும்.
மு.வஉரை:
மழைஎன்னும்வருவாய்வளம்குன்றிவிட்டால், ( உணவுப்பொருள்களைஉண்டாக்கும்) உழவரும்ஏர்கொண்டுஉழமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
மழைஎன்னும்வருவாய்தன்வளத்தில்குறைந்தால், உழவர்ஏரால்உழவுசெய்யமாட்டார்.
பரிமேலழகர்உரை:
உழவர்ஏரின்உழார்- உழவர்ஏரான்உழுதலைச்செய்யார்; புயல்என்னும்வாரிவளம்குன்றிக்கால் - மழைஎன்னும்வருவாய்தன்பயன்குன்றின். ('குன்றியக்கால்' என்பதுகுறைந்துநின்றது. உணவுஇன்மைக்குக்காரணம்கூறியவாறு.) .
மணக்குடவர்உரை:
ஏரினுழுதலைத்தவிர்வாருழவர், புயலாகியவாரியினுடையவளங்குறைந்தகாலத்து. இஃதுஉழவாரில்லையென்றது.
Translation:
If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more.
Explanation:
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

குறள் 15:
கெடுப்பதூஉம்கெட்டார்க்குச்சார்வாய்மற்றாங்கே
எடுப்பதூஉம்எல்லாம்மழை.
கலைஞர்உரை:
பெய்யாமல்விடுத்துஉயிர்களின்வாழ்வைக்கெடுக்கக்கூடியதும், பெய்வதன்காரணமாகஉயிர்களின்நலிந்தவாழ்வுக்குவளம்சேர்ப்பதும்மழையேஆகும்.
மு.வஉரை:
பெய்யாமல்வாழ்வைக்கெடுக்கவல்லதும்மழை; மழையில்லாமல்வளம்கெட்டுநொந்தவர்க்கும்துணையாய்அவ்வாறேகாக்கவல்லதும்மழையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெய்யாமல்மக்களைக்கெடுப்பதும்; பெய்துகெட்டவரைத்திருத்துவதும்எல்லாமேமழைதான்.
பரிமேலழகர்உரை:
கெடுப்பதூஉம் - பூமியின்கண்வாழ்வாரைப்பெய்யாதுநின்றுகெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய்மற்றுஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறுகெட்டார்க்குத்துணையாய்ப்பெய்துமுன்கெடுத்தாற்போலஎடுப்பதூஉம்; எல்லாம்மழை - இவைஎல்லாம்வல்லதுமழை. ('மற்று' வினைமாற்றின்கண்வந்தது, ஆங்குஎன்பதுமறுதலைத்தொழிலுவமத்தின்கண்வந்தஉவமச்சொல். கேடும்ஆக்கமும்எய்துதற்குஉரியார்மக்கள்ஆதலின், 'கெட்டார்க்குஎன்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள்முயற்சிவேறுபாடுகளால்கெடுத்தல்எடுத்தல்கள்தாம்பலவாதல்நோக்கி. 'வல்லது' என்பதுஅவாய்நிலையான்வந்தது. மழையினதுஆற்றல்கூறியவாறு.).
மணக்குடவர்உரை:
பெய்யாதுநின்றுஎல்லாப்பொருளையுங்கெடுப்பதும்அவைகெடப்பட்டார்க்குத்துணையாய்த்தான்பெய்துபொருள்களெல்லாவற்றையும்அவ்விடத்தேயுண்டாக்குவதும்மழை. இஃதுஇரண்டினையுஞ்செய்யவற்றென்றவாறு.
Translation:
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise.
Explanation:
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

குறள் 16:
விசும்பின்துளிவீழின்அல்லால்மற்றாங்கே
பசும்புல்தலைகாண்புஅரிது.
கலைஞர்உரை:
விண்ணிலிருந்துமழைத்துளிவிழுந்தாலன்றிமண்ணில்பசும்புல்தலைகாண்பதுஅரிதானஒன்றாகும்.
மு.வஉரை:
வானத்திலிருந்துமழைத்துளிவீழ்ந்தால்அல்லாமல், உலகத்தில்ஓரறிவுயிராகியபசும்புல்லின்தலையையும்காணமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
மேகத்திலிருந்துமழைத்துளிவிழாதுபோனால், பசும்புல்லின்நுனியைக்கூடஇங்கேகாண்பதுஅரிதாகிவிடும்.
பரிமேலழகர்உரை:
விசும்பின்துளிவீழின்அல்லால் - மேகத்தின்துளிவீழின்காண்பதுஅல்லது; மற்றுஆங்கேபசும்புல்தலைகாண்பதுஅரிது - வீழாதாயின்அப்பொழுதேபசும்புல்லினதுதலையையும்காண்டல்அரிது. ('விசும்பு' ஆகுபெயர். 'மற்று' வினைமாற்றின்கண்வந்தது. இழிவுசிறப்புஉம்மைவிகாரத்தால்தொக்கது. ஓர்அறிவுஉயிரும்இல்லைஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
வானின்றுதுளிவீழினல்லதுஅவ்விடத்துப்பசுத்தபுல்லினதுதோற்றமுங்காண்டல்அரிது. ஆங்கென்பதனைஅசையாக்கினுமமையும். இஃதுஓரறிவுயிருங்கெடுமென்றது.
Translation:
If from the clouds no drops of rain are shed. 'Tis rare to see green herb lift up its head.
Explanation:
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

குறள் 17:
நெடுங்கடலும்தன்நீர்மைகுன்றும்தடிந்தெழிலி
தான்நல்காதாகிவிடின்.
கலைஞர்உரை:
ஆவியானகடல்நீர்மேகமாகிஅந்தக்கடலில்மழையாகப்பெய்தால்தான்கடல்கூடவற்றாமல்இருக்கும். மனிதசமுதாயத்திலிருந்துபுகழுடன்உயர்ந்தவர்களும்அந்தச்சமுதாயத்திற்கேபயன்பட்டால்தான்அந்தச்சமுதாயம்வாழும்.
மு.வஉரை:
மேகம்கடலிலிருந்துநீரைக்கொண்டுஅதனிடத்திலேயேபெய்யாமல்விடுமானால், பெரியகடலும்தன்வளம்குன்றிப்போகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெய்யும்இயல்பிலிருந்துமாறிமேகம்பெய்யாதுபோனால், நீண்டகடல்கூடவற்றிப்போகும்.
பரிமேலழகர்உரை:
நெடுங்கடலும்தன்நீர்மைகுன்றும் - அளவில்லாதகடலும்தன்இயல்புகுறையும்; எழிலிதான்தடிந்துநல்காதுஆகிவிடின் - மேகம்தான்அதனைக்குறைத்துஅதன்கண்பெய்யாதுவிடுமாயின். (உம்மைசிறப்புஉம்மை. தன்இயல்புகுறைதலாவதுநீர்வாழ்உயிர்கள்பிறவாமையும், மணிமுதலாயினபடாமையும்ஆம். ஈண்டுக்குறைத்தல்என்றதுமுகத்தலை. அது "கடல்குறைபடுத்தநீர்கல்குறைபடவெறிந்து"(பரி.பா.20) என்பதனாலும்அறிக. மழைக்குமுதலாயகடற்கும்மழைவேண்டும்என்பதாம். இவைஏழுபாட்டானும்உலகம்நடத்தற்குஏதுவாதல்கூறப்பட்டது.
மணக்குடவர்உரை:
நிலமேயன்றிநெடியகடலும்தனதுதன்மைகுறையும், மின்னிமழையானதுபெய்யாவிடின். தடிந்தென்பதற்கு, கூறுபடுத்துஎன்றுபொருளுரைப்பாருமுளர். இதுநீருள்வாழ்வனவும்படுவனவுங்கெடுமென்றது. இவைநான்கினானும்பொருட்கேடுகூறினார், பொருள்கெடஇன்பங்கெடுமென்பதனால்இன்பக்கேடுகூறிற்றிலர்.
Translation:
If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean's wide domain.
Explanation:
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

குறள் 18:
சிறப்பொடுபூசனைசெல்லாதுவானம்
வறக்குமேல்வானோர்க்கும்ஈண்டு.
கலைஞர்உரை:
வானமேபொய்த்துவிடும்போது, அதன்பின்னர்அந்தவானத்தில்வாழ்வதாகச்சொல்லப்படுகிறவர்களுக்குவிழாக்கள்ஏது?வழிபாடுதான்ஏது?.
மு.வஉரை:
மழைபெய்யாமல்போகுமானால்இவ்வுலகத்தில்வானோர்க்காகநடைபெறும்திருவிழாவும்நடைபெறாது; நாள்வழிபாடும்நடைபெறாது.
சாலமன்பாப்பையாஉரை:
மழைபொய்த்துப்போனால்தெய்வத்திற்குத்தினமும்நடக்கும்பூசனையும்நடக்காது; ஆண்டுதோறும்கொண்டாடப்படும்திருவிழாவும்நடைபெறாது.
பரிமேலழகர்உரை:
வானோர்க்கும்ஈண்டுச்சிறப்போடுபூசனைசெல்லாது - தேவர்கட்கும்இவ்வுலகில்மக்களால்செய்யப்படும்விழவும்பூசையும்நடவாது; வானம்வறக்குமேல் - மழைபெய்யாதாயின் (நைமித்திகத்தோடுகூடியநித்தியம்என்றார்ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்புஉம்மை. நித்தியத்தில்தாழ்வுதீரச்செய்வதுநைமித்திகம்ஆதலின், அதனைமுற்கூறினார்.)
மணக்குடவர்உரை:
சிறப்புச்செய்யப்படுகின்றவிழவுபூசனைநடவாது, வானம்புலருமாகில்தேவர்களுக்கும்இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால்வருங்குற்றங்கூறுவார்முற்படநான்குவகைப்பட்டஅறங்களில்பூசைகெடுமென்றார்.
Translation:
If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore.
Explanation:
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.

குறள் 19:
தானம்தவம்இரண்டும்தங்காவியன்உலகம்
வானம்வழங்காதெனின்.
கலைஞர்உரை:
இப்பேருலகில்மழைபொய்த்துவிடுமானால்அது, பிறர்பொருட்டுச்செய்யும்தானத்திற்கும், தன்பொருட்டுமேற்கொள்ளும்நோன்புக்கும்தடங்கலாகும்.
மு.வஉரை:
மழைபெய்யவில்லையானால், இந்தபெரியஉலகத்தில்பிறர்பொருட்டுசெய்யும்தானமும், தம்பொருட்டுசெய்யும்தவமும்இல்லையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மழைபொய்த்துப்போனால், விரிந்தஇவ்வுலகத்தில்பிறர்க்குத்தரும்தானம்இராது; தன்னைஉயர்த்தும்தவமும்இராது.
பரிமேலழகர்உரை:
வியன்உலகம்தானம்தவம்இரண்டும்தங்கா - அகன்றஉலகின்கண்தானமும்தவமும்ஆகியஇரண்டுஅறமும்உளவாகா; வானம்வழங்காதுஎனின் - மழைபெய்யாதுஆயின். (தானமாவதுஅறநெறியான்வந்தபொருள்களைத்தக்கார்க்குஉவகையோடும்கொடுத்தல்; தவம்ஆவதுமனம்பொறிவழிபோகாதுநிற்றற்பொருட்டுவிரதங்களான்உண்டிசுருக்கல்முதலாயின. பெரும்பான்மைபற்றித்தானம்இல்லறத்தின்மேலும், தவம்துறவறத்தின்மேலும்நின்றன.).
மணக்குடவர்உரை:
தானமும்தவமுமாகியவிரண்டறமுமுளவாகா; அகன்றவுலகத்துக்கண்மழைபெய்யாதாயின். இதுதானமும்தவமுங்கெடுமென்றது.
Translation:
If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'.
Explanation:
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

குறள் 20:
நீர்இன்றுஅமையாதுஉலகெனின்யார்யார்க்கும்
வான்இன்றுஅமையாதுஒழுக்கு.
கலைஞர்உரை:
உலகில்மழையேஇல்லையென்றால்ஒழுக்கமேகெடக்கூடும்என்றநிலைஇருப்பதால், நீரின்இன்றியமையாமையைஉணர்ந்துசெயல்படவேண்டும்.
மு.வஉரை:
எப்படிப்பட்டவர்க்கும்நீர்இல்லாமல்உலகவாழ்க்கைநடைபெறாதுஎன்றால், மழைஇல்லையானால்ஒழுக்கமும்நிலைபெறாமல்போகும்.
சாலமன்பாப்பையாஉரை:
எத்தனைபெரியவரானாலும்நீர்இல்லாமல்வாழமுடியாது; அந்தநீரோமழைஇல்லாமல்கிடைக்காது.
பரிமேலழகர்உரை:
யார்யார்க்கும்நீர்இன்றுஉலகுஅமையாதுஎனின் - எவ்வகைமேம்பாட்டார்க்கும்நீரைஇன்றிஉலகியல்அமையாதுஆயின்; ஒழுக்குவான்இன்றுஅமையாது - அந்நீர்இடையறாதுஒழுகும்ஒழுக்கும்வானைஇன்றிஅமையாது. ( பொருள்இன்பங்களை 'உலகியல்' என்றார், அவைஇம்மைக்கண்ணஆகலின், இடையறாதுஒழுகுதல்எக்காலத்தும்எவ்விடத்தும்உளதாகல், நீர்இன்றுஅமையாதுஉலகுஎன்பதுஎல்லாரானும்தெளியப்படுதலின்,அதுபோலஒழுக்கும்வான்இன்றுஅமையாமைதெளியப்படும்என்பார், 'நீர்இன்றுஅமையாதுஉலகம்எனின்' என்றார். இதனை,'நீரைஇன்றிஅமையாதுஉலகுஆயின்எத்திறத்தார்க்கும்மழையைஇன்றிஒழுக்கம்நிரம்பாது' எனஉரைப்பாரும்உளர். இவைமூன்றுபாட்டானும்அறம்பொருள்இன்பங்கள்நடத்தற்குஏதுவாதல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நீரையின்றியுலகம்அமையாதாயின்யாவர்க்கும்மழையையின்றிஒழுக்கம்உண்டாகாது. ஒழுக்கம்- விரதம். இஃதுஆசாரங்கெடுமென்றது. இவைமூன்றினானும்நான்கறமுங்கெடுமென்றுகூறினார்.
Translation:
When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'.
Explanation:
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290