161-170
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:இல்லறவியல். அதிகாரம்:அழுக்காறாமை.
குறள் 161:
ஒழுக்காறாக்கொள்கஒருவன்தன்நெஞ்சத்து
அழுக்காறுஇலாதஇயல்பு.
கலைஞர்உரை:
மனத்தில்பொறாமையில்லாமல்வாழும்இயல்பைஒழுக்கத்திற்குரியநெறியாகப்பெற்றுவிளங்கிடவேண்டும்.
மு.வஉரை:
ஒருவன்தன்நெஞ்சில்பொறாமைஇல்லாமல்வாழும்இயல்பைத்தனக்குஉரியஒழுக்கநெறியாகக்கொண்டுபோற்றவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
உள்ளத்துள்பொறாமைஇல்லாமல்வாழும்குணத்தை, ஒருவன்தனக்குஉரியஒழுக்கமாகக்கொள்க.
பரிமேலழகர்உரை:
(இதனுள் 'அழுக்காறு' என்பதுஒருசொல்.அதற்குப்பொருள்மேலே (குறள்: 35) உரைத்தாம். அச்சொல்பின்அழுக்காற்றைச்செய்யாமைஎன்னும்பொருள்படஎதிர்மறைஆகாரமும்மகரஐகாரவிகுதியும்பெற்று 'அழுக்காறாமை' எனநின்றது. இப்பொறாமையும்பொறைக்குமறுதலையாகலின், இதனைவிலக்குதற்குஇதுபொறைஉடைமையின்பின்வைக்கப்பட்டது.)
ஒருவன்தன்நெஞ்சத்துஅழுக்காறுஇலாதஇயல்பு - ஒருவன்தன்நெஞ்சத்தின்கண்அழுக்காறுஎன்னும்குற்றம்இல்லாதஇயல்பினை; ஒழுக்காறாக்கொள்க - தனக்குஓதியஒழுக்கநெறியாகக்கொள்க. [இயல்பு - அறிவோடுகூடியதன்மை. அத்தன்மையும்நன்மைபயத்தலின், ஒழுக்கநெறிபோலஉயிரினும்ஓம்புகஎன்பதாம்.].
மணக்குடவர்உரை:
ஒருவன்தன்னெஞ்சத்துஅழுக்காறுஇல்லாதவியல்பைத்தனக்குஒழுக்கநெறியாகக்கொள்க. இஃதுஅழுக்காறுதவிரவேண்டுமென்றது.
Translation:
As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.
Explanation:
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.
குறள் 162:
விழுப்பேற்றின்அஃதொப்பதுஇல்லையார்மாட்டும்
அழுக்காற்றின்அன்மைபெறின்.
கலைஞர்உரை:
யாரிடமும்பொறாமைகொள்ளாதபண்புஒருவர்க்குவாய்க்கப்பெறுமேயானால்அதற்குமேலானபேறுஅவருக்குவேறுஎதுவுமில்லை.
மு.வஉரை:
யாரிடத்திலும்பொறாமைஇல்லாதிருக்கப்பெற்றால், ஒருவன்பெறத்தக்கமேம்பாடானபேறுகளில்அதற்குஒப்பானதுவேறொன்றும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
எவர்இடத்தும்பொறாமைகொள்ளாதிருப்பதைஒருவன்பெற்றால்சீரியசிறப்புகளுள்அதுபோன்றதுவேறுஇல்லை.
பரிமேலழகர்உரை:
யார்மாட்டும்அழுக்காற்றின்அன்மைபெறின் - யாவர்மாட்டும்அழுக்காற்றினின்றுநீங்குதலைஒருவன்பெறுமாயின்; விழுப்பேற்றின்அஃதுஒப்பதுஇல்லை - மற்றுஅவன்பெறும்சீரியபேறுகளுள்அப்பேற்றினைஒப்பதுஇல்லை. (அழுக்காறுபகைவர்மாட்டும்ஒழிதற்பாற்றுஎன்பார், 'யார்மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவைஇரண்டுபாட்டானும்அழுக்காறுஇன்மையதுகுணம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
விழுமியபேறுகளுள்யார்மட்டும்அழுக்காறுசெய்யாமையைப்பெறுவனாயின், அப்பெற்றியினையொப்பதுபிறிதில்லை. இஃதுஅழுக்காறுசெய்யாமையெல்லாநன்மையினும்மிக்கதென்றது.
Translation:
If man can learn to envy none on earth,
'Tis richest gift, -beyond compare its worth.
Explanation:
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.
குறள் 163:
அறன்ஆக்கம்வேண்டாதான்என்பான்பிறனாக்கம்
பேணாதுஅழுக்கறுப்பான்.
கலைஞர்உரை:
அறநெறியையும், ஆக்கத்தையும்விரும்பிப்போற்றாதவன்தான், பிறர்பெருமையைப்போற்றாமல்பொறாமைக்களஞ்சியமாகவிளங்குவான்.
மு.வஉரை:
தனக்குஅறமும்ஆக்கமும்விரும்பாதவன்என்றுகருதத்தக்கவனே, பிறனுடையஆக்கத்தைக்கண்டுமகிழாமல்அதற்காகப்பொறாமைப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்உயர்வுகண்டுமகிழாமல்பொறாமைப்படுபவன், அறத்தால்வரும்புண்ணியத்தைவேண்டாஎனமறுப்பவன்ஆவான்.
பரிமேலழகர்உரை:
அறன்ஆக்கம்வேண்டாதான்என்பான் - மறுமைக்கும்இம்மைக்கும்அறமும்செல்வமும்ஆகியஉறுப்புக்களைத்தனக்குவேண்டாதான்என்றுசொல்லப்படுவான்; பிறன்ஆக்கம்பேணாதுஅழுக்குஅறுப்பான் - பிறன்செல்வம்கண்டவழிஅதற்குஉதவாதுஅழுக்காற்றைச்செய்வான். ('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும்ஒக்கும். அழுக்காறுசெய்யின்தனக்கேஏதமாம்என்பதாகும்.).
மணக்குடவர்உரை:
தனக்குஅறனாகியவாழ்வுவேண்டாதானென்றுசொல்லப்படுவான், பிறனுடையஆக்கத்தைவிரும்பாதேஅழுக்காறுசெய்வான். இஃதுஅழுக்காறுடையார்க்குப்புண்ணியமில்லையாமென்றுகூறிற்று.
Translation:
Nor wealth nor virtue does that man desire 'tis plain,
Whom others' wealth delights not, feeling envious pain.
Explanation:
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth".
குறள் 164:
அழுக்காற்றின்அல்லவைசெய்யார்இழுக்காற்றின்
ஏதம்படுபாக்குஅறிந்து.
கலைஞர்உரை:
தீயவழியில்சென்றால்துன்பம்ஏற்படுமென்பதைஅறிந்தவர்கள்பொறாமையினால்தீச்செயல்களில்ஈ.டுபடமாட்டார்கள்.
மு.வஉரை:
பொறாமைப்படுதலாகியதவறானநெறியில்துன்பம்ஏற்படுதைஅறிந்து, பொறாமைகாரணமாகஅறமல்லாதவைகளைச்செய்யார்அறிவுடையோர்.
சாலமன்பாப்பையாஉரை:
பொறாமைகொண்டால்துன்பம்வரும்என்பதைஅறிந்துஅறிவுடையோர்பொறாமைகாரணமாகத்தீமைகளைச்செய்யமாட்டார்.
பரிமேலழகர்உரை:
அழுக்காற்றின்அல்லவைசெய்யார் - அழுக்காறுஏதுவாகஅறனல்லவற்றைச்செய்யார்அறிவுடையார்; இழுக்குஆற்றின்ஏதம்படுபாக்குஅறிந்து - அத்தீநெறியால்தமக்குஇருமையினும்துன்பம்வருதலைஅறிந்து. (அறன்அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியனஉடையார்கண்தீங்குநினைத்தலும், சொல்லுதலும், செய்தலும்ஆம்.).
மணக்குடவர்உரை:
அழுக்காற்றினானேஅறமல்லாதவற்றைச்செய்யார்: நல்லோர்அவ்வறத்தைத்தப்பினநெறியினாற்குற்றம்வருவதையறிந்து.
Translation:
The wise through envy break not virtue's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.
Explanation:
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
குறள் 165:
அழுக்காறுஉடையார்க்குஅதுசாலும்ஒன்னார்
வழுக்காயும்கேடீன்பது.
கலைஞர்உரை:
பொறாமைக்குணம்கொண்டவர்களுக்குஅவர்களைவீழ்த்தவேறுபகையேவேண்டா. அந்தக்குணமேஅவர்களைவீழ்த்திவிடும்.
மு.வஉரை:
பொறாமைஉடையவர்க்குவேறுபகைவேண்டா. அஃதுஒன்றேபோதும், பகைவர்தீங்குசெய்யத்தவறினாலும்தவறாதுகேட்டைத்தருவதுஅது.
சாலமன்பாப்பையாஉரை:
பொறாமைஉடையவர்க்குத்தீமைதரப்பகைவர்வேண்டியதில்லை; பொறாமையேபோதும்.
பரிமேலழகர்உரை:
ஒன்னார்வழுக்கியும்கேடுஈன்பது - அழுக்காறுபகைவரைஒழிந்தும்கேடுபயப்பதொன்றுஆகலின்; அழுக்காறுஉடையார்க்குஅதுசாலும் - அவ்வழுக்காறுஉடையார்க்குப்பகைவர்வேண்டா; கேடுபயப்பதற்குஅதுதானேஅமையும். ('அதுவே' என்னும்பிரிநிலைஏகாரம்விகாரத்தால்தொக்கது.).
மணக்குடவர்உரை:
அழுக்காறுடையார்க்குஅவ்வழுக்காறுதானேஅமையும்: பகைவர்கேடுபயத்தல்தப்பியும்கெடுப்பதற்கு, இஃதுஉயிர்க்குக்கேடுவருமென்றுகூறிற்று.
Translation:
Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate..
Explanation:
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
குறள் 166:
கொடுப்பதுஅழுக்கறுப்பான்சுற்றம்உடுப்பதூஉம்
உண்பதூஉம்இன்றிக்கெடும்.
கலைஞர்உரை:
உதவியாகஒருவருக்குக்கொடுக்கப்படுவதைப்பார்த்துப்பொறாமைகொண்டால்அந்தத்தீயகுணம், அவனைமட்டுமின்றிஅவனைச்சார்ந்திருப்போரையும்உணவுக்கும், உடைக்கும்கூடவழியில்லாமல்ஆக்கிவிடும்.
மு.வஉரை:
பிறர்க்குஉதவியாகக்கொடுக்கப்படும்பொருளைக்கண்டுபொறாமைப்படுகின்றவனுடையசுற்றம், உடையும்உணவும்இல்லாமல்கெடும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்க்குக்கொடுப்பதைக்கண்டுபொறாமைப்படுகிறவனின்குடும்பம், உடுக்கவும், உண்ணவும்இல்லாமல்அலையும்.
பரிமேலழகர்உரை:
கொடுப்பதுஅழுக்கறுப்பான்சுற்றம் - ஒருவன்பிறர்க்குக்கொடுப்பதன்கண்அழுக்காற்றைச்செய்வானதுசுற்றம்; உடுப்பதும்உண்பதும்இன்றிக்கெடும் - உடுக்கப்படுவதும்உண்ணப்படுவதும்இன்றிக்கெடும். (கொடுப்பதன்கண்அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும்பொருள்களைப்பற்றிப்பொறாமைசெய்தல். 'சுற்றம்கெடும்' எனவேஅவன்கேடுசொல்லாமையேபெறப்பட்டது. பிறர்பேறுபொறாமைதன்பேற்றையேஅன்றித்தன்சுற்றத்தின்பேற்றையும்இழப்பிக்கும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
பிறனொருவன்மற்றொருவனுக்குக்கொடுப்பதனைஅழுக்காற்றினாலேவிலக்குமவனதுசுற்றம்உடுப்பதும்உண்பதும்இன்றிக்கெடும். இதுநல்குரவுதருமென்றது.
Translation:
Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.
Explanation:
He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
குறள் 167:
அவ்வித்துஅழுக்காறுஉடையானைச்செய்யவள்
தவ்வையைக்காட்டிவிடும்.
கலைஞர்உரை:
செல்வத்தைஇலக்குமிஎன்றும், வறுமையைஅவளதுஅக்காள்மூதேவிஎன்றும்வர்ணிப்பதுண்டு. பொறாமைக்குணம்கொண்டவனைஅக்காளுக்குஅடையாளம்காட்டிவிட்டுத்தங்கைஇலக்குமிஅவனைவிட்டுஅகன்றுவிடுவாள்.
மு.வஉரை:
பொறாமைஉடையவனைத்திருமகள்கண்டுபொறாமைப்பட்டுத்தன்தமக்கைக்குஅவனைக்காட்டிநீங்கிவிடுவாள்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்உயர்வுகண்டுபொறாமைப்படுபவனைப்பார்க்கும்திருமகள்வெறுப்புக்கொண்டுதன்அக்காள்மூதேவிக்குஅவனைஅடையாளம்காட்டிவிட்டுவிலகிப்போய்விடுவாள்.
பரிமேலழகர்உரை:
அழுக்காறுஉடையானை - பிறர்ஆக்கம்கண்டவழிப்பொறாமையுடையானை; செய்யவள்அவ்வித்துத்தவ்வையைக்காட்டிவிடும் - திருமகள்தானும்பொறாது, தன்தவ்வைக்குக்காட்டிநீங்கும். (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக்காட்டி' என்பது 'அறிவுடைஅந்தணன்அவளைக்காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பதுபோலஉருபுமயக்கம். 'மனத்தைக்கொடுவித்துஅழுக்காறுடையன்ஆயினானை' என்றுஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
அழுக்காறுடையானைத்திருமகள்தானும்அழுக்காறுசெய்து, தன்தவ்வையாகியமூதேவிக்குக்காட்டிஇவன்பாற்செல்லென்றுபோம், இதுநல்குரவிற்குக்காரணங்கூறிற்று.
Translation:
From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey.
Explanation:
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.
குறள் 168:
அழுக்காறுஎனஒருபாவிதிருச்செற்றுத்
தீயுழிஉய்த்துவிடும்.
கலைஞர்உரை:
பொறாமைஎனும்தீமைஒருவனுடையசெல்வத்தையும்சிதைத்துத்தீயவழியிலும்அவனைவிட்டுவிடும்.
மு.வஉரை:
பொறாமைஎன்றுகூறப்படும்ஒப்பற்றபாவி, ஒருவனுடையசெல்வத்தைக்கெடுத்துத்தீயவழியில்அவனைச்செலுத்திவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
பொறாமைஎனப்படும்ஒப்பில்லாதபாவிஎவனிடம்இருக்கிறதோ, அவனதுசெல்வத்தைஅழிப்பதோடு, அவனைநரகத்திலும்அதுசேர்க்கும்.
பரிமேலழகர்உரை:
அழுக்காறுஎனஒருபாவி - அழுக்காறுஎன்றுசொல்லப்பட்டஒப்பில்லாதபாவி; திருச்செற்றுத்தீயுழிஉய்த்துவிடும் - தன்னைஉடையானைஇம்மைக்கண்செல்வத்தைக்கெடுத்து,மறுமைக்கண்நரகத்தில்செலுத்திவிடும். (பண்பிற்குப்பண்பிஇல்லையேனும், தன்னைஆக்கினானைஇருமையுங்கெடுத்தற்கொடுமைபற்றி, அழுக்காற்றினைப்'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும்வழக்குஉண்மையின். இவைஆறுபாட்டானும்அழுக்காறுஉடைமையதுகுற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அழுக்காற்றைச்செய்துபெரியராயினாரும்இல்லை: அச்செயலிலாதார்பெருக்கத்தினீங்கினாருமில்லை.
Translation:
Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.
Explanation:
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come).
குறள் 169:
அவ்வியநெஞ்சத்தான்ஆக்கமும்செவ்வியான்
கேடும்நினைக்கப்படும்.
கலைஞர்உரை:
பொறாமைக்குணம்கொண்டவனின்வாழ்க்கைவளமாகஇருப்பதும், பொறாமைக்குணம்இல்லாதவனின்வாழ்க்கைவேதனையாகஇருப்பதும்வியப்புக்குரியசெய்தியாகும்.
மு.வஉரை:
பொறாமைபொருந்தியநெஞ்சத்தானுடையஆக்கமும், பொறாமைஇல்லாதநல்லவனுடையகேடும்ஆராயத்தக்கவை.
சாலமன்பாப்பையாஉரை:
பொறாமைகொண்டமனத்தவனின்உயர்வும், அதுஇல்லாதநல்லவனின்தாழ்வும்பற்றிஆராய்க.
பரிமேலழகர்உரை:
அவ்வியநெஞ்சத்தான்ஆக்கமும் - கோட்டத்தினைப்பொருந்தியமனத்தைஉடையவனதுஆக்கமும், செவ்வியான்கேடும்நினைக்கப்படும் - ஏனைச்செம்மையுடையவனதுகேடும்உளவாயின், அவைஆராயப்படும். (கோட்டம்: ஈண்டுஅழுக்காறு. 'உளவாயின்' என்பதுஎஞ்சிநின்றது. ஆக்கக்கேடுகள்கோட்டமும்செம்மையும்ஏதுவாகவருதல்கூடாமையின், அறிவுடையரால், 'இதற்குஏதுஆகியபழவினையாது?' என்றுஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச்செய்தனயான்அறிநல்வினை; உம்மைப்பயன்கொல்ஒருதனிஉழந்துஇத்திருத்தகுமாமணிக்கொழுந்துடன்போந்தது" (சிலப். 15: 91-93) எனநினைக்கப்பட்டவாறுஅறிக.).
மணக்குடவர்உரை:
அழுக்காற்றுநெஞ்சத்தானுடையஆக்கமும்செவ்வியநெஞ்சத்தானுடையகேடும்விசாரிக்கப்படும்.
Translation:
To men of envious heart, when comes increase of joy,
Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ.
Explanation:
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.
குறள் 170:
அழுக்கற்றுஅகன்றாரும்இல்லைஅஃதுஇல்லார்
பெருக்கத்தில்தீர்ந்தாரும்இல்.
கலைஞர்உரை:
பொறாமைகொண்டதால்புகழ்பெற்றுஉயர்ந்தோரும்இல்லை; பொறாமைஇல்லாதகாரணத்தால்புகழ்மங்கிவீழ்ந்தோரும்இல்லை.
மு.வஉரை:
பொறாமைப்பட்டுப்பெருமையுற்றவரும்உலகத்தில்இல்லை; பொறாமைஇல்லாதவராய்மேம்பாட்டிலிருந்துநீங்கியவரும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
பொறாமைகொண்டுஉயர்ந்தவரும்இல்லை. அதுஇல்லாதபோதுதாழ்ந்தவரும்இல்லை.
பரிமேலழகர்உரை:
அழுக்கற்றுஅகன்றாரும்இல்லை - அழுக்காற்றைச்செய்துபெரியராயினாரும்இல்லை; அஃதுஇல்லார்பெருக்கத்தின்தீர்ந்தாரும்இல் - அச்செயல்இலாதார்பெருக்கத்தின்நீங்கினாரும்இல்லை. (இவைஇரண்டுபாட்டானும்கேடும்ஆக்கமும்வருவதற்குஏதுஒருங்குகூறப்பட்டது).
மணக்குடவர்உரை:
அழுக்காறென்றுசொல்லப்படுகின்றவொருபாவிசெல்வத்தையுங்கெடுத்துத்தீக்கதியுள்ளுங்கொண்டுசெலுத்திவிடும். ஒருபாவி- நிகரில்லாதபாவி, இதுசெல்வங்கெடுத்தலேயன்றிநரகமும்புகுவிக்குமென்றது..
Translation:
No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.
Explanation:
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.
Comments
Post a Comment