291-300
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:வாய்மை.
குறள்வரிசை: 291 292 293 294 295 296 297 298 299 300
குறள் 291:
வாய்மைஎனப்படுவதுயாதெனின்யாதொன்றும்
தீமைஇலாதசொலல்.
கலைஞர்உரை:
பிறருக்குஎள்முனையளவுதீமையும்ஏற்படாதஒருசொல்லைச்சொல்வதுதான்வாய்மைஎனப்படும்.
மு.வஉரை:
வாய்மைஎன்றுகூறப்படுவதுஎதுஎன்றால், அதுமற்றவர்க்குஒருசிறிதும்தீங்குஇல்லாதசொற்களைக்சொல்லுதல்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உண்மைஎன்றுசொல்லப்படுவதுஎதுஎன்றால், எவர்க்கும்எத்தகையதீங்கையும்தராதசொற்களைச்சொல்வதேஆகும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவதுமெய்யினதுதன்மை. பெரும்பான்மையும்காமமும்பொருளும்பற்றிநிகழ்வதாயபொய்ம்மையைவிலக்கலின் , இது 'கூடாஒழுக்கம்' , 'கள்ளாமை' களின்பின்வைக்கப்பட்டது.)
வாய்மைஎனப்படுவதுயாதுஎனின் - மெய்ம்மைஎன்றுசிறப்பித்துச்சொல்லப்படுவதுயாதுஎன்றுவினவின், தீமையாதொன்றும்இலாதசொலல் - அதுபிறிதோருயிர்க்குத்தீங்குசிறிதும்பயவாதசொற்களைச்சொல்லுதல். ('தீமையாதொன்றும்இலாத' எனஇயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர்எனப்படுவதுஉறையூர்' என்றாற்போலநின்றது. இதனான்நிகழ்ந்ததுகூறல்என்பதுநீக்கப்பட்டது. அதுதானும், தீங்குபயவாதாயின்மெய்ம்மையாம் : பயப்பின்பொய்ம்மையாம்என்பதுகருத்து.).
மணக்குடவர்உரை:
பொய்சொல்லாதமெய்யென்றுசொல்லப்படுவதுயாதென்றுவினவின், பிறர்க்குயாதொன்றானும்தீமைபயவாதசொற்களைச்சொல்லுதல், வாய்மையாதுஎன்றார்க்குஇதுகூறப்பட்டது.
Translation:
You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free.
Explanation:
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
குறள் 292:
பொய்மையும்வாய்மையிடத்தபுரைதீர்ந்த
நன்மைபயக்கும்எனின்.
கலைஞர்உரை:
குற்றமற்றநன்மையைவிளைவிக்கக்கூடுமானால்பொய்யானசொல்லும்கூடவாய்மைஎன்றுகூறத்தக்கஇடத்தைப்பெற்றுவிடும்.
மு.வஉரை:
குற்றம்தீர்த்தநன்மையைவிளைக்குமானால்பொய்யாச்சொற்களும்வாய்மைஎன்றுகருதத்தக்கஇடத்தைப்பெறும்.
சாலமன்பாப்பையாஉரை:
குற்றம்அற்றநன்மையைத்தரும்என்றால்உண்மைசொல்லவேண்டியஇடத்தில்பொய்யும்சொல்லலாம்.
பரிமேலழகர்உரை:
புரைதீர்ந்தநன்மைபயக்கும்எனின் - பிறர்க்குக்குற்றம்தீர்ந்தநன்மையைப்பயக்குமாயின் , பொய்ம்மையும்வாய்மைஇடத்த - பொய்ம்மைச்சொற்களும்மெய்ம்மைச்சொற்களின்பாலஆம். (குற்றம்தீர்ந்தநன்மை : அறம். அதனைப்பயத்தலாவது, கேடாதல்சாக்காடாதல்எய்தநின்றதோர்உயிர், அச்சொற்களின்பொய்ம்மையானேஅதனின்நீங்கிஇன்புறுதல். நிகழாததுகூறலும், நன்மைபயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானேஎன்பதுகருத்து. இவைஇரண்டுபாட்டானும் 'தீங்குபயவாதநிகழ்ந்ததுகூறலும், நன்மைபயக்கும்நிகழாததுகூறலும்மெய்ம்மைஎனவும், நன்மைபயவாதநிகழ்ந்ததுகூறலும், தீங்குபயக்கும்நிகழந்ததுகூறலும்பொய்ம்மை' எனவும்அவற்றதுஇலக்கணம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பொய்யும்மெய்யோடொக்கும், குற்றந்தீர்ந்தநன்மையைப்பயக்குமாயின்.
Translation:
Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford.
Explanation:
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
குறள் 293:
தன்நெஞ்சறிவதுபொய்யற்கபொய்த்தபின்
தன்நெஞ்சேதன்னைச்சுடும்.
கலைஞர்உரை:
மனச்சாட்சிக்குஎதிராகப்பொய்சொல்லக்கூடாது; அப்படிச்சொன்னால், சொன்னவரின்மனமேஅவரைத்தண்டிக்கும்.
மு.வஉரை:
ஒருவன்தன்நெஞ்சம்அறிவதாகியஒன்றைக்குறித்துப்பொய்ச்சொல்லக்கூடாது, பொய்சொன்னால்அதைக்குறித்துத்தன்நெஞ்சமேதன்னைவருத்தும்.
சாலமன்பாப்பையாஉரை:
பொய்என்றுஉள்ளம்உணர்த்துவதைச்சொல்லவேண்டா. சொன்னால், அதைப்பொய்என்றுஉலகுஅறியநேரும்போதுதன்மனமேதன்னைச்சுடும்.
பரிமேலழகர்உரை:
தன்நெஞ்சுஅறிவதுபொய்யற்க - ஒருவன்தன்நெஞ்சுஅறிவதுஒன்றனைப்பிறர்அறிந்திலர்என்றுபொய்யாதொழிக,பொய்த்தபின்தன்நெஞ்சேதன்னைச்சுடும் - பொய்த்ததாயின்அதனைஅறிந்ததன்நெஞ்சேஅப்பாவத்திற்குக்கரியாய்நின்று, தன்னைஅதன்பயனாயதுன்பத்தைஎய்துவிக்கும். (நெஞ்சுகரியாதல் "கண்டவர்இல்லெனஉலகத்துள்உணராதார் - தங்காதுதகைவின்றித்தாம்செய்யும்வினைகளுள் - நெஞ்சுஅறிந்தகொடியவைமறைப்பவும்மறையாவாம் - நெஞ்சத்திற்குறுகியகரிஇல்லைஆகலின்" (கலித்.நெய்தல்.
என்பதனானும்அறிக. பொய்மறையாமையின், அதுகூறலாகாதுஎன்பதுஇதனான்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தன்னெஞ்சினாற்பொய்யைநினையாதுஒழுகுவனாயின்உலகத்தார்நெஞ்சினுளெல்லாம்உளனாவான். இதுபொய்யைநினையாதாரைஎல்லாரும்போற்றுவாரென்றது.
Translation:
Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows.
Explanation:
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).
குறள் 294:
உள்ளத்தாற்பொய்யாதொழுகின்உலகத்தார்
உள்ளத்துளெல்லாம்உளன்.
கலைஞர்உரை:
மனத்தால்கூடப்பொய்யைநினைக்காமல்வாழ்பவர்கள், மக்கள்மனத்தில்நிலையானஇடத்தைப்பெறுவார்கள்.
மு.வஉரை:
ஒருவன்தன்உள்ளம்அறியப்பொய்இல்லாமல்நடப்பானானால்அத்தகையவன்உலகத்தாரின்உள்ளங்களில்எல்லாம்இருப்பவனாவான்.
சாலமன்பாப்பையாஉரை:
உள்ளம்அறியப்பொய்சொல்லாமல்ஒருவன்வாழ்ந்தால்அவன்உயர்ந்தவர்உள்ளத்துள்எல்லாம்குடிஇருப்பான்.
பரிமேலழகர்உரை:
உள்ளத்தால்பொய்யாதுஒழுகின் - ஒருவன்தன்னுள்ளத்திற்கேற்பப்பொய்கூறாதுஒழுகுவானாயின், உலகத்தார்உள்ளத்துள்எல்லாம்உளன் - அவன்உயர்ந்தோர்உள்ளத்தின்கண்எல்லாம்உளனாம். ('உள்ளத்தால்' என்பதுவேற்றுமைமயக்கம். பொய்கூறாதுஒழுகுதலாவதுமெய்கூறிஒழுகுதல்அவனதுஅறத்தினதுஅருமைநோக்கிஉயர்ந்தோர்எப்பொழுதும்அவனையேநினைப்பர்என்பதாம். இதனான்இம்மைப்பயன்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தன்னெஞ்சினாற்பொய்யைநினையாதுஒழுகுவனாயின்உலகத்தார்நெஞ்சினுளெல்லாம்உளனாவான்இதுபொய்யைநினையாதாரைஎல்லாரும்போற்றுவாரென்றது.
Translation:
True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind.
Explanation:
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
குறள் 295:
மனத்தொடுவாய்மைமொழியின்தவத்தொடு
தானஞ்செய்வாரின்தலை.
கலைஞர்உரை:
உதட்டளவில்இன்றிஉளமாரவாய்மைபேசுகிறவர்கள்தவமும், தானமும்செய்கின்றவர்களைவிடஉயர்ந்தவர்களாவார்கள்.
மு.வஉரை:
ஒருவன்தன்மனதோடுபொருந்தஉண்மைபேசுவானானால்அவன்தவத்தேடுதானமும்ஒருங்கேசெய்வாரைவிடச்சிறந்தவன்.
சாலமன்பாப்பையாஉரை:
உள்ளம்அறியஉண்மைபேசுபவன், தவமும்தானமும்செய்பவரைக்காட்டிலும்உயர்ந்தவன்ஆவான்.
பரிமேலழகர்உரை:
மனத்தொடுவாய்மைமொழியின் - ஒருவன்தன்மனத்தொடுபொருந்தவாய்மையைச்சொல்வானாயின், தவத்தொடுதானம்செய்வாரின்தலை - அவன்தவமும்தானமும்ஒருங்குசெய்வாரினும்சிறப்புடையன். (மனத்தொடுபொருந்துதல் - மனத்திற்குஏறுதல். புறமாகியமெய்யால்செய்யும்அவற்றினும்அகமாகியமனம்மொழிகளால்செய்யும்அதுபயனுடைத்துஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
தன்னெஞ்சினாற்பொய்யைநினையாதுஒழுகுவனாயின்உலகத்தார்நெஞ்சினுளெல்லாம்உளனாவான். இதுபொய்யைநினையாதாரைஎல்லாரும்போற்றுவாரென்றது.
Translation:
Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.
Explanation:
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
குறள் 296:
பொய்யாமைஅன்னபுகழில்லைஎய்யாமை
எல்லாஅறமுந்தரும்.
கலைஞர்உரை:
பொய்இல்லாமல்வாழ்வதுபோன்றபுகழ்மிக்கவாழ்வுவேறுஎதுவுமில்லை; என்றும்நீங்காதஅறவழிநலன்களைஅளிப்பதுஅந்தவாழ்வேயாகும்.
மு.வஉரை:
ஒருவனுக்குபொய்இல்லாமல்வாழ்தலைவிடப்புகழ்நிலைவேறொன்றும்இல்லை, அஃதுஅவன்அறியாமலேயெஅவனுக்குஎல்லாஅறமும்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
பொய்சொல்லாமல்இருப்பதுபோலப்புகழ்தருவதுஇல்லை. அதுஅவன்அறியாமலேயேஅவனுக்குஎல்லாப்புண்ணியங்களையும்தரும்.
பரிமேலழகர்உரை:
பொய்யாமைஅன்னபுகழ்இல்லை - ஒருவனுக்குஇம்மைக்குப்பொய்யாமையைஒத்தபுகழ்க்காரணம்இல்லை. எய்யாமைஎல்லாஅறமும்தரும் - மறுமைக்குமெய்வருந்தாமல்அவனுக்குஎல்லாஅறங்களையுமதானேகொடுக்கும். ('புகழ்' ஈண்டுஆகுபெயர். இல்லத்திற்குப்பொருள்கூட்டல்முதலியவற்றானும், துறவறத்திற்குஉண்ணாமைமுதலியவற்றானும்வருந்தல்வேணடுமன்றே? அவ்வருத்தங்கள்புகுதாமல்அவ்விருவகைப்பயனையும்தானேதரும்என்பார், 'எய்யாமைஎல்லாஅறமும்தரும்' என்றார்.).
மணக்குடவர்உரை:
பொய்யாமையையுடையன்என்பதனோடுஒத்தபுகழ்வேறொன்றில்லை; பொய்யாமையானதுஅவனறியாமல்தானேஎல்லாஅறங்களையுங்கொடுக்குமாதலான்.
Translation:
No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.
Explanation:
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.
குறள் 297:
பொய்யாமைபொய்யாமைஆற்றின்அறம்பிற
செய்யாமைசெய்யாமைநன்று.
கலைஞர்உரை:
செய்யக்கூடாததைச்செய்யாததால்விளையும்நன்மையைவிடப்பொய்கூறாதபண்புபொய்த்துப்போகாமல்கடைப்பிடிக்கும்அறவழிநன்மைதருவதாகும்.
மு.வஉரை:
பொய்யாமைஆகியஅறத்தைஉண்மையாகவேபோற்றிவாழமுடிந்தால்மற்றஅறங்களைச்செய்தலும்நல்லதுஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பொய்சொல்லாமல்ஒருவன்வாழ்ந்தால்பிறஅறங்களைச்செய்யாமல்இருப்பதுகூட, அவனுக்குநல்லதாகிவிடும்.
பரிமேலழகர்உரை:
பொய்யாமைபொய்யாமைஆற்றின் - ஒருவன்பொய்யாமையையே, பொய்யாமையையேசெய்யவல்லவனாயின், பிறஅறம்செய்யாமைசெய்யாமைநன்று - அவன்பிறஅறங்களைச்செய்யாமையேசெய்யாமையேநன்று (அடுக்குஇரண்டனுள்முதலதுஇடைவிடாமைமேற்று, ஏனையதுதுணிவின்மேற்று. 'பலஅறங்களையும்மேற்கொண்டுசெய்தற்குஅருமையால்சிலதவறின்குற்றப்படுதலின், அவைஎல்லாவற்றின்பயனையும்தானேதரவற்றாயஇதனையேமேற்கொண்டுதவறாமல்செய்தல்நன்று 'என்பார், 'செய்யாமைசெய்யாமைநன்று' என்றார்.இதனைஇவ்வாறுஅன்றிப் 'பொய்யாமையைப்பொய்யாமல்செய்யின்பிறஅறம்செய்கைநன்று',எனப்பொழிப்பாக்கி, 'பொய்கூறின்பிறவறம்செய்கைநன்றாகாது' என்பது, அதனால்போந்தபொருளாக்கிஉரைப்பாரும்உளர். பிறஅறங்களெல்லாம்தரும்பயனைத்தானேதரும்ஆற்றலுடைத்துஎனமறுமைப்பயனதுமிகுதிஇவைமூன்றுபாட்டானும்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பொய்யாமையைப்பொய்யாமல்செலுத்துவனாயின்பிறஅறங்களைச்செய்தல்நன்றாம்; அல்லதுதீதாம்.
Translation:
If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone.
Explanation:
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.
குறள் 298:
புறள்தூய்மைநீரான்அமையும்அகந்தூய்மை
வாய்மையால்காணப்படும்.
கலைஞர்உரை:
நீரில்குளிப்பதால்உடலின்அழுக்குமட்டுமேநீங்கும்; மனம்அழுக்குப்படாமல்தூய்மையுடன்விளங்கிட, சொல்லிலும்செயலிலும்வாய்மைவேண்டும்.
மு.வஉரை:
புறத்தேதூய்மையாகவிளங்குதல்நீரினால்ஏற்ப்படும், அதுபோலஅகத்தேதூய்மையாகவிளங்குதல்வாய்மையால்உண்டாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உடம்புதண்ணீரால்சுத்தமாகும்; உள்ளம்உண்மையால்சுத்தமாகும்.
பரிமேலழகர்உரை:
புறம்தூய்மைநீரான்அமையும் - ஒருவனுக்குஉடம்புதூய்தாந்தன்மைநீரானேஉண்டாம்: அகம்தூய்மைவாய்மையான்காணப்படும். - அதுபோல, மனம்தூய்தாந்தன்மைவாய்மையான்உண்டாம். "(காணப்படுவதுஉளதாகலின் , 'உண்டாம்' என்றுஉரைக்கப்பட்டது. உடம்புதூய்தாதல்: வாலாமைநீங்குதல்: மனம்தூய்தாதல்மெய்யுணர்தல். புறம்தூய்மைக்குநீரல்லதுகாரணம்இல்லாதாற்போல, அகம்தூய்மைக்குவாய்மையல்லதுகாரணம்இல்லைஎன்பதாம். இதனானே, துறந்தார்க்குஇரண்டுதூய்மையும்வேண்டும்" என்பதூஉம்பெற்றாம்.).
மணக்குடவர்உரை:
உடம்புதூயதாதல்நீரினாலேயமைந்துவிடும்: மனத்தின்தூய்மைமெய்சொல்லுதலினாலேயறியப்படும்.
Translation:
Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.
Explanation:
Purity of body is produced by water and purity of mind by truthfulness.
குறள் 299:
எல்லாவிளக்கும்விளக்கல்லசான்றோர்க்குப்
பொய்யாவிளக்கேவிளக்கு.
கலைஞர்உரை:
புறத்தின்இருளைப்போக்கும்விளக்குகளைவிடஅகத்தின்இருளைப்போக்கும்பொய்யாமைஎனும்விளக்கேஒருவனைஉயர்ந்தோன்எனக்காட்டும்ஒளிமிக்கவிளக்காகும்.
மு.வஉரை:
(புறத்தில்உள்ளஇருளைநீக்கும்) விளக்குகள்எல்லாம்விளக்குகள்அல்ல, சான்றோர்க்கு (அகத்துஇருள்நீக்கும்) பொய்யாமையாகியவிளக்கேவிளக்குஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உலகத்துஇருட்டைப்போக்கும்விளக்குகள், விளக்குஆகா; பொய்சொல்லாமைஎன்னும்விளக்கேசான்றோர்க்குவிளக்குஆகும்.
பரிமேலழகர்உரை:
எல்லாவிளக்கும்விளக்குஅல்ல - புறத்துஇருள்கடியும்உலகத்தார்விளக்குகள்எல்லாம்விளக்குஆகா, சான்றோர்க்குவிளக்குபொய்யாவிளக்கே - துறவான்அமைந்தார்க்குவிளக்காவதுமனத்துஇருள்கடியும்பொய்யாமைஆகியவிளக்கே. (உலகத்தார்விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீஎன்பன. இவற்றிற்குப்போகாதஇருள்போகலின் 'பொய்யாவிளக்கேவிளக்கு' என்றார். அவ்விருளாவதுஅறியாமை. 'பொய்யாதவிளக்கு' என்பதுகுறைந்துநின்றது. பொய்கூறாமையாகியவிளக்குஎன்றவாறு. இனிஇதற்குக் 'கல்விமுதலியவற்றான்வரும்விளக்கம்அல்ல: அமைந்தார்க்குவிளக்கமாவதுபொய்யாமையான்வரும்விளக்கமே', என்றுஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
சான்றோர்க்குஎல்லாவறத்தினாலும்உண்டானஒளியும்ஒளியல்ல: பொய்யாமையானுண்டானஒளியேஒளியாகும். இதுபொய்யாவிளக்குச்சான்றோர்க்குஇன்றியமையாதென்றுகூறிற்று.
Translation:
Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright.
Explanation:
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
குறள் 300:
யாமெய்யாக்கண்டவற்றுள்இல்லைஎனைத்தொன்றும்
வாய்மையின்நல்லபிற.
கலைஞர்உரை:
வாய்மையைப்போல்சிறந்தபண்புவேறொன்றுமேஇல்லைஎன்பதுதான்ஆராய்ந்துஉணரப்பட்டஉண்மையாகும்.
மு.வஉரை:
யாம்உண்மையாககண்டபொருள்களுள்வாய்மைவிடத்எத்தன்மையாலும்சிறந்தவைகளாகச்சொல்லத்தக்கவைவேறுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
சிறந்தவைஎன்றுநான்கண்டுஅறிந்தநூல்களுள்சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச்சொல்லப்பட்டஅறம்வேறுஒன்றும்இல்லை.
பரிமேலழகர்உரை:
யாம்மெய்யாக்கண்டவற்றுள் - யாம்மெய்ந்நூல்களாகக்கண்டநூல்களுள், எனைத்துஒன்றும்வாய்மையின்நல்லபிறஇல்லை - யாதொருதன்மையாலும்வாய்மையின்மிக்கனவாகச்சொல்லப்பட்டபிறஅறங்கள்இல்லை. (மெய்உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தம்கண்மயக்கம்இன்மையின்பொருள்களைஉள்ளவாறுஉணரவல்லராய்க்காமவெகுளிகள்இன்மையின்அவற்றைஉணர்ந்தவாறேஉரைக்கவும்வல்லராயஇறைவர், அருளான்உலகத்தார்உறுதிஎய்துதற்பொருட்டுக்கூறியஆகமங்கள். அவையெல்லாவற்றினும்இஃதுஒப்பமுடிந்ததுஎன்பதாம். இவைமூன்றுபாட்டானும்இவ்வறத்தினதுதலைமைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
யாம்மெய்யாக்கண்டவற்றுள்மெய்சொல்லுதல்போலநன்றாயிருப்பன, வேறுயாதொன்றும்இல்லை. இஃதுஎல்லாஅறமும்இதனோடுஒவ்வாதென்றுஅதன்தலைமைகூறிற்று.
Translation:
Of all good things we've scanned with studious care,
There's nought that can with truthfulness compare.
Explanation:
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.
Comments
Post a Comment