731-740
குறள் 731:
தள்ளாவிளையுளும்தக்காரும்தாழ்விலாச்
செல்வரும்சேர்வதுநாடு.
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
கலைஞர்உரை:
செழிப்புக்குறையாதவிளைபொருள்களும், சிறந்தபெருமக்களும், செல்வத்தைத்தீயவழியில்செலவிடாதவர்களும்அமையப்பெற்றதேநல்லநாடாகும்.
மு.வஉரை:
குறையாதவிளைபொருளும்தக்கஅறிஞரும்கேடில்லாதசெல்வம்உடையவரும்கூடிப்பொருந்தியுள்ளநாடேநாடாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
குறையாதஉற்பத்தியைத்தரும்உழைப்பாளர்களும், அறஉணர்வுஉடையவர்களும், சுயநலம்இல்லாதசெல்வரும்சேர்ந்துவாழ்வதேநாடு.
Translation:
Where spreads fertility unfailing, where resides a band, Of virtuous men, and those of ample wealth, call that a 'land' .
Explanation:
A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.
குறள் 732:
பெரும்பொருளால்பெட்டக்கதாகிஅருங்கேட்டால்
ஆற்றவிளைவதுநாடு.
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
கலைஞர்உரை:
பொருள்வளம்நிறைந்ததாகவும், பிறர்போற்றத்தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்லவிளைச்சல்கொண்டதாகவும்அமைவதேசிறந்தநாடாகும்.
மு.வஉரை:
மிக்கபொருள்வளம்உடையதாய், எல்லோரும்விரும்பத்தக்கதாய்கேடுஇல்லாததாய், மிகுதியாகவிளைபொருள்தருவதேநாடாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மிகுந்தபொருளைஉடையது; அதனால்அயல்நாட்டாரால்விரும்பப்படுவது; பெரும்மழை, கடும்வெயில், கொடுவிலங்கு, தீயபறவைகள், முறையற்றஅரசுஆகியகேடுகள்இல்லாதது; அதிகவிளைச்சலைஉடையது; இதுவேநாடு.
Translation:
That is a 'land' which men desire for wealth's abundant share, Yielding rich increase, where calamities are rare.
Explanation:
A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.
குறள் 733:
பொறையொருங்குமேல்வருங்கால்தாங்கிஇறைவற்கு
இறையொருங்குநேர்வதுநாடு.
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.
கலைஞர்உரை:
புதியசுமைகள்ஒன்றுணிரண்டுவரும்போதும்அவற்றைத்தாங்கிக்கொண்டு, அரசுக்குரியவரிவகைகளைச்செலுத்துமளவுக்குவளம்படைத்ததேசிறந்தநாடாகும்.
மு.வஉரை:
(மற்றநாட்டுமக்கள்குடியேறுவதால்) சுமைஒருசேரத்தன்மேல்வரும்போதுதாங்கி, அரசனுக்குஇறைபொருள்முழுதும்தரவல்லதுநாடாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
போர், இயற்கைஅழிவுஆகியவற்றால்மக்கள்பிறநாடுகளில்இருந்துவந்தால்அந்தபாரத்தையும்தாங்கும்; தன்அரசிற்குத்தான்தரவேண்டியவரியையும்மகிழ்வோடுதரும்; இதுவேநாடு.
Translation:
When burthens press, it bears; Yet, With unfailing hand To king due tribute pays: that is the 'land' .
Explanation:
A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.
குறள் 734:
உறுபசியும்ஓவாப்பிணியும்செறுபகையும்
சேராதியல்வதுநாடு.
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
கலைஞர்உரை:
பசியும், பிணியும், பகையுமற்றநாடுதான்சிறந்தநாடுஎனப்பாராட்டப்படும்.
மு.வஉரை:
மிக்கபசியும், ஓயாதநோயும் (வெளியேவந்துதாக்கி) அழிவுசெய்யும்பகையும்தன்னிடம்சேராமல்நல்லவகையில்நடைபெறுவதேநாடாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மிகுந்தபசி, நீங்காதநோய், வெளியில்இருந்துவந்துதாக்கும்பகைஆகியஇவைஇல்லாமல்இருப்பதுநாடு.
Translation:
That is a 'land' whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.
Explanation:
kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.
குறள் 735:
பல்குழுவும்பாழ்செய்யும்உட்பகையும்வேந்தலைக்கும்
கொல்குறும்பும்இல்லதநாடு.
பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
கலைஞர்உரை:
பலகுழுக்களாகப்பிரிந்துபாழ்படுத்தும்உட்பகையும், அரசில்ஆதிக்கம்செலுத்தும்கொலைகாரர்களால்விளையும்பொல்லாங்கும்இல்லாததேசிறந்தநாடாகும்.
மு.வஉரை:
பலவகைமாறுபடும்கூட்டங்களும், உடனிருந்தேஅழிவுசெய்யும்பகையும், அரசனைவருத்துகின்றகொலைத்தொழில்பொருந்தியகுறுநிலமன்னரும்இல்லாததுநாடு.
சாலமன்பாப்பையாஉரை:
சாதி, சமய, அரசியல், கருத்துமுரண்பாடுகளால்வளரும்பல்வேறுகுழுக்கள், கூடஇருந்தேகுழிபறிக்கும்சொந்தக்கட்சியினர், அரசைநெரக்கடிக்குஉள்ளாக்கும்சிறுகலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப்போக்கிரிகள்) ஆகியோர்இல்லாதுஇருப்பதேநாடு.
Translation:
From factions free, and desolating civil strife, and band Of lurking murderers that king afflict, that is the 'land'.
Explanation:
A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.
குறள் 736:
கேடறியாக்கெட்டஇடத்தும்வளங்குன்றா
நாடென்பநாட்டின்தலை.
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
கலைஞர்உரை:
எந்தவகையிலும்கெடுதலைஅறியாமல், ஒருவேளைகெடுதல்ஏற்படினும்அதனைச்சீர்செய்யுமளவுக்குவளங்குன்றாநிலையில்உள்ளநாடுதான், நாடுகளிலேயேதலைசிறந்ததாகும்.
மு.வஉரை:
பகைவரால்கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்டகாலத்திலும்வளம்குன்றாததாய்உள்ளநாடேநாடுகள்எல்லாவற்றிலும்தலைமையானதுஎன்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவரால்கெடுதலைஅறியாததாய், அறிந்தாலும்வளம்தருவதில்குறையாததாய்இருப்பதையேநாடுகளில்சிறந்ததுஎன்றுஅறிந்தோர்கூறுவர்.
Translation:
Chief of all lands is that, where nought disturbs its peace; Or, if invaders come, still yields its rich increase.
Explanation:
The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.
குறள் 737:
இருபுனலும்வாய்ந்தமலையும்வருபுனலும்
வல்லரணும்நாட்டிற்குஉறுப்பு.
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
கலைஞர்உரை:
ஆறு, கடல்எனும்இருபுனலும், வளர்ந்தோங்கிநீண்டமைந்தமலைத்தொடரும், வருபுனலாம்மழையும், வலிமைமிகுஅரணும், ஒருநாட்டின்சிறந்தஉறுப்புகளாகும்.
மு.வஉரை:
ஊற்றும்மழையும்மாகியஇருவகைநீர்வளமும், தக்கவாறுஅமைந்தமலையும்அந்தமலையிலிருந்துஆறாகவரும்நீர்வளமும்வலியஅரணும்நாட்டிற்குஉறுப்புகளாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆற்றுநீரும், ஊற்றுநீரும்உயரமும்அகலமும்உடையவாய்ப்பானமலையும், மழைநீரும், அழிக்கமுடியாதகோட்டையும்நாட்டிற்குத்தேவையானஉறுப்புகளாம்.
Translation:
Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress' sure defence.
Explanation:
The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.
குறள் 738:
பிணியின்மைசெல்வம்விளைவின்பம்ஏமம்
அணியென்பநாட்டிவ்வைந்து.
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
கலைஞர்உரை:
மக்களுக்குநோயற்றவாழ்வு, விளைச்சல்மிகுதி, பொருளாதாரவளம், இன்பநிலை, உரியபாதுகாப்புஆகியஐந்தும்ஒருநாட்டுக்குஅழகுஎனக்கூறப்படுபவைகளாகும்.
மு.வஉரை:
நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்லகாவல்இந்தஐந்தும்நாட்டிற்குஅழகுஎன்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
நோய்இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்லகாவல்இவைஐந்தும்ஒருநாட்டிற்குஅழகுஎன்றுநூலோர்கூறுவர்.
Translation:
A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealth.
Explanation:
Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.
குறள் 739:
நாடென்பநாடாவளத்தனநாடல்ல
நாடவளந்தருநாடு.
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
கலைஞர்உரை:
இடைவிடாமல்முயற்சிமேற்கொண்டுவளம்பெறும்நாடுகளைவிட, இயற்கையிலேயேஎல்லாவளங்களையும்உடையநாடுகள்சிறந்தநாடுகளாகும்.
மு.வஉரை:
முயற்சிசெய்துதேடாமலேயேதரும்வளத்தைஉடையநாடுகளைச்சிறந்தநாடுகள்என்றுகூறுவர், தேடிமுயன்றால்வளம்தரும்நாடுகள்சிறந்தநாடுகள்அல்ல.
சாலமன்பாப்பையாஉரை:
தன்மக்கள்சிரமப்படாமல்இருக்கஅதிகஉற்பத்தியைத்தருவதேநாடுஎன்றுநூலோர்கூறுவர்; தேடிவருந்திப்பெறும்நிலையில்இருப்பதுநாடுஅன்று.
Translation:
That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are bought.
Explanation:
The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.
குறள் 740:
ஆங்கமைவெய்தியக்கண்ணும்பயமின்றே
வேந்தமைவில்லாதநாடு.
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.
கலைஞர்உரை:
நல்லஅரசுஅமையாதநாட்டில்எல்லாவிதவளங்களும்இருந்தாலும்எந்தப்பயனும்இல்லாமற்போகும்.
மு.வஉரை:
நல்லஅரசன்பொருந்தாதநாடு, மேற்சொன்னநன்மைகள்எல்லாம்அமைதிருந்தபோதிலும்அவற்றால்பயன்இல்லாமல்போகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மேலேசொல்லப்பட்டஎல்லாம்இருந்தாலும்குடிமக்கள்மீதுஅன்புஇல்லாதஅரசுஅமைந்துவிட்டால்அதனால்ஒருநன்மையும்இல்லை.
Translation:
Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peace.
Explanation:
Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.
Comments
Post a Comment