1011-1020
குறள் 1011:
கருமத்தால்நாணுதல்நாணுந்திருநுதல்
நல்லவர்நாணுப்பிற.
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
கலைஞர்உரை:
ஒருவர்தமதுதகாதநடத்தையின்காரணமாகநாணுவதற்கும், நல்லபெண்களுக்குஇயல்பாகஏற்படும்நாணத்துக்கும்மிகுந்தவேறுபாடுஉண்டு.
மு.வஉரை:
தகாதசெயல்காரணமாகநாணுவதேநாணமாகும், பெண்களுக்குஇயல்பானமற்றநாணங்கள்வேறுவகையானவை.
சாலமன்பாப்பையாஉரை:
இழிவானசெயல்களுக்குவெட்கப்படுவதேஅனைவர்க்கும்பொதுவானநாணம்; மற்றொன்றுஅழகியநெற்றிகொண்டபெண்களின்இயல்பானவெட்கம்ஆகு
ம்.
Translation:
To shrink abashed from evil deed is 'generous shame'; Other is that of bright-browed one of virtuous fame.
Explanation:
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.
குறள் 1012:
ஊணுடைஎச்சம்உயிர்க்கெல்லாம்வேறல்ல
நாணுடைமைமாந்தர்சிறப்பு.
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
கலைஞர்உரை:
உடைபோன்றஅனைத்தும்எல்லோருக்கும்பொதுவானதேவைகளாகஅமைகின்றன; ஆனால்சிறப்புக்குரியதேவையாகஇருப்பது, பிறரால்பழிக்கப்படும்செயல்களைத்தவிர்த்துவாழும்நாணுடைமைதான்.
மு.வஉரை:
உணவும், உடையும்எஞ்சிநிற்கும்மற்றவையும், எல்லாஉயிர்களுக்கும்பொதுவானவை, மக்களின்சிறப்பியல்பாகவிளங்குவதுநாணுடைமையேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உணவு, உடைஇன்னும்பிறசிறப்புகள், எல்லாமனிதர்க்கும்ஒன்றே; நல்லமனிதர்க்குச்சிறப்பாவதுநாண்உடைமையே.
Translation:
Food, clothing, and other things alike all beings own; By sense of shame the excellence of men is known.
Explanation:
Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.
குறள் 1013:
ஊனைக்குறித்தஉயிரெல்லாம்நாண்என்னும்
நன்மைகுறித்ததுசால்பு.
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
கலைஞர்உரை:
உடலுடன்இணைந்தேஉயிர்இருப்பதுபோல், மாண்புஎன்பதுநாணஉணர்வுடன்இணைந்துஇருப்பதேயாகும்.
மு.வஉரை:
எல்லாஉயிர்களும்ஊனாலாகியஉடம்பைஇருப்பிடமாகக்கொண்டவை, சால்புஎன்பதுநாணம்என்றுசொல்லப்படும்நல்லப்பண்பைஇருப்பிடமாகக்கொண்டது.
சாலமன்பாப்பையாஉரை:
எல்லாஉயிர்களும்உடம்பைஇடமாகக்கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம்என்னும்நல்லகுணத்தைஇடமாகக்கொண்டுள்ளது.
Translation:
All spirits homes of flesh as habitation claim, And perfect virtue ever dwells with shame.
Explanation:
As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.
குறள் 1014:
அணிஅன்றோநாணுடைமைசான்றோர்க்குஅஃதின்றேல்
பிணிஅன்றோபீடுநடை.
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
கலைஞர்உரை:
நடந்ததவறுகாரணமாகத்தமக்குள்வருந்துகிறநாணம்எனும்உணர்வு, பெரியவர்களுக்குஅணிகலன்ஆகவிளங்கும். அந்தஅணிகலன்இல்லாமல்என்னதான்பெருமிதமாகநடைபோட்டாலும், அந்தநடையைஒருநோய்க்குஒப்பானதாகவேகருதமுடியும்.
மு.வஉரை:
சான்றோர்க்குநாணுடைமைஅணிகலம்அன்றோ, அந்தஅணிகலம்இல்லையானால்பெருமிதமாகநடக்கும்நடைஒருநோய்அன்றோ.
சாலமன்பாப்பையாஉரை:
நாணம் இருப்பதுசான்றோர்க்குஆபரணம்; அதுமட்டும்இல்லைஎன்றால்அவர்கள்நடக்கும்பெருமிதநடைபார்ப்பவர்க்குநோயாம்.
Translation:
And is not shame an ornament to men of dignity? Without it step of stately pride is piteous thing to see.
Explanation:
The Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).
குறள்: 1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
உரை :
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
குறள்: 1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
உரை :
நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
குறள் எண்: 1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
உரை :
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
குறள் எண்: 1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
உரை :
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
குறள் எண்: 1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
உரை :
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
குறள் எண்: 1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
உரை :
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
Comments
Post a Comment