1021-1030

 குறள் 1021:

கருமம்செயஒருவன்கைதூவேன்என்னும்
பெருமையின்பீடுடையதுஇல்.

குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
கலைஞர்உரை:
உரியகடமையைச்செய்வதில்சோர்வுகாணாமல்எவனொருவன்முயற்சிகளைவிடாமல்மேற்கொள்கிறானோஅந்தப்பெருமைக்குமேலாகவேறொருபெருமைகிடையாது.
மு.வஉரை:
குடிப்பெருமைக்குஉரியகடமையைச்செய்வதற்குச்சோர்வடையமாட்டேன்என்றுஒருவன்முயலும்பெருமையைப்போலமேம்பாடானதுவேறொன்றும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
வீட்டையும்நாட்டையும்மேன்மைஅடையச்செயல்செய்யாமல்விடமாட்டேன்எனமனஉறுதிகொள்ளும்பெருமையைக்காட்டிலும்மேலானபெருமைவேறுஇல்லை.
Translation:
Who says 'I'll do my work, nor slack my hand', His greatness, clothed with dignity supreme, shall stand.
Explanation:
There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

குறள் எண்: 1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. உரை : முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

குறள் 1023:
குடிசெய்வல்என்னும்ஒருவற்குத்தெய்வம்
மடிதற்றுத்தான்முந்துறும்.

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
கலைஞர்உரை:
தன்னைச்சேர்ந்தகுடிமக்களைஉயர்வடையச்செய்திடஓயாதுஉழைப்பவனுக்குத்தெய்வச்செயல்எனக்கூறப்படும்இயற்கையின்ஆற்றல்கூடவரிந்துகட்டிக்கொண்டுவந்துதுணைபுரியும்.
மு.வஉரை:
என்குடியைஉயரச்செய்வேன்என்றுமுயலும்ஒருவனுக்குஊழ், ஆடையைக்கட்டிக்கொண்டுதானேமுன்வந்துதுணைசெய்யும்.
சாலமன்பாப்பையாஉரை:
என்குடியையும்நாட்டையும்மேனமைஅடையச்செய்வேன்என்றுசெயல்செய்யும்ஒருவனுக்குதெய்வம்தன்ஆடையைஇறுகஉடுத்திக்கொண்டுஉதவமுன்வந்துநிற்கும்.
Translation:
'I'll make my race renowned,' if man shall say, With vest succinct the goddess leads the way.
Explanation:
The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.

குறள் : 1024 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. உரை : தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

குறள் எண்: 1025 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. உரை : குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

குறள் எண்: 1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த 
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

 உரை :
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

குறள் எண்: 1027

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் 
ஆற்றுவார் மேற்றே பொறை.

உரை :
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

குறள் எண்: 1028 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். உரை : குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

குறள் 1029:
இடும்பைக்கேகொள்கலம்கொல்லோகுடும்பத்தைக்
குற்றமறைப்பான்உடம்பு.

தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.
கலைஞர்உரை:
தன்னைச்சார்ந்துள்ளகுடிகளுக்குத்துன்பம்வராமல்தடுத்துத்தொடர்ந்துஅக்குடிகளைக்காப்பாற்றமுயலுகிறஒருவன், துன்பத்தைத்தாங்கிகொள்ளவேபிறந்தவனாகப்போற்றப்படுவான்.
மு.வஉரை:
தன்குடிக்குவரக்குடியகுற்றத்தைவராமல்நீக்கமுயல்கின்றஒருவனுடையஉடம்புதுன்பத்திற்கேஇருப்பிடமானதோ.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னால், விலங்குளால், பருவமாற்றங்களால்துன்பப்படும்வீட்டையும், நாட்டையும்அத்துன்பங்களில்இருந்துகாக்கமுயல்பவனின்உடம்பு, துன்பத்திற்குமட்டுமேகொள்கலமோ? இன்பத்திற்கும்இல்லையோ?.
Translation:
Is not his body vase that various sorrows fill, Who would his household screen from every ill?.
Explanation:
Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?.

குறள் எண்: 1030 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி. உரை : துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290