1061-1070

                                                                                இரவச்சம்

குறள் எண்: 1061

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் 

இரவாமை கோடி உறும்.

உரை :

உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

குறள் 1062:

இரந்தும்உயிர்வாழ்தல்வேண்டின்பரந்து
கெடுகஉலகியற்றியான்.
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
கலைஞர்உரை:
பிச்சையெடுத்துதான்சிலர்உயிர்வாழவேண்டும்என்றநிலையிருந்தால்இந்தஉலகத்தைப்படைத்தவனாகச்சொல்லப்படுபவனும்கெட்டொழிந்துதிரியட்டும்.
மு.வஉரை:
உலகத்தைபடைத்தவன்உலகில்சிலர்இரந்தும்உயிர்வாழுமாறுஏற்படுத்தியிருந்தால், அவன்இரப்பவரைப்போல்எங்கும்அலைந்துகெடுவானாக.
சாலமன்பாப்பையாஉரை:
பிச்சைஎடுத்துத்தான்உயிர்வாழவேண்டும்என்றநிலைஇருந்தால், இந்தஉலகைப்படைத்தவன்அங்கும்இங்கும்அலைந்துகெடுவானாக.
Translation:
If he that shaped the world desires that men should begging go, Through life's long course, let him a wanderer be and perish so.
Explanation:
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.

குறள் எண்: 1063 இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். உரை : வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

குறள் எண்: 1064 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. உரை : வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.

குறள் எண் : 1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில். உரை : தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

குறள் எண்: 1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு 
இரவின் இளிவந்த தில்.
உரை :
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

குறள் எண்: 1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் 
பார்தாக்கப் பக்கு விடும்.
உரை :
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.

குறள் எண்: 1069 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். உரை : இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

குறள் எண்: 1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் 
சொல்லாடப் போஒம் உயிர்.
உரை :
இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290