1121-1130

குறள் எண்: 1121

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி 

வாலெயிறு ஊறிய நீர்.

உரை :

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

குறள் எண்: 1122

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன 

மடந்தையொடு எம்மிடை நட்பு.

உரை :

இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

குறள் 1123:

கருமணியிற்பாவாய்நீபோதாயாம்வீழும்
திருநுதற்குஇல்லைஇடம்.

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!

கலைஞர்உரை:
நான்விரும்புகின்றஅழகிக்குஎன்கண்ணிலேயேஇடம்கொடுப்பதற்காகஎன்கண்ணின்கருமணியில்உள்ளபாவையே! அவளுக்குஇடமளித்துவிட்டுநீபோய்விடு!.
மு.வஉரை:
என்கண்ணின்கருமணியில்உள்ளபாவையேநீபோய்விடு, யாம்விரும்புகின்றஇவளுக்குஎன்கண்ணில்இருக்கஇடம்இல்லையே!.
சாலமன்பாப்பையாஉரை:
என்கருமணிக்குள்இருக்கும்பாவையே! நீஅதைவிட்டுப்போய்விடு; நான்விரும்பும்என்மனைவிக்குஎன்கண்ணுக்குள்இருக்கஇடம்போதவில்லை.
பரிமேலழகர்உரை:
(இடந்தலைப்பாட்டின்கண்தலைமகள்நீக்கத்துச்சொல்லியது.) கருமணியிற்பாவாய்நீபோதாய் - என்கண்ணிற்கருமணியின்கண்உறையும்பாவாய், நீஅங்குநின்றும்போதருவாயாக; யாம்வீழும்திருநுதற்குஇடம்இல்லை - போதராதிருத்தியாயின்எம்மால்விரும்பப்பட்டதிருநுதலையுடையாட்குஇருக்கஇடமில்லையாம். ('யான்காணாதுஅமையாமையின்இவள்புறத்துப்போகற்பாலளன்றிஎன்கண்ணுள்இருக்கற்பாலள்; இருக்குங்கால்நின்னோடுஒருங்குஇருக்கஇடம்போதாமையின், நின்னினும்சிறந்தஇவட்குஇடத்தைக்கொடுத்துநீபோதுவாயாக' என்பதாம்.).
மணக்குடவர்உரை:
என்கண்ணுட்கருமணியகத்துநிற்கும்பாவாய்! நீஅங்குநின்றுபோதுவாயாக, எம்மால்விரும்பப்பட்டஅழகியநுதலினையுடையாட்குஇருத்தற்கிடம்போதாது.
Translation:
For her with beauteous brow, the maid I love, there place is none;
To give her image room, O pupil of mine eye, begone! .
Explanation:
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.

குறள் எண்: 1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து. உரை : ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.
குறள் எண்: 1125
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் 
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
 உரை :
போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே!
குறள் எண்: 1126 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காத லவர். உரை : எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
குறள் எண்: 1127 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. உரை : எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!
குறள் எண்: 1128 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து. உரை : எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.
குறள் எண்: 1129 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர். உரை : கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.
குறள் 1130:
உவந்துறைவர்உள்ளத்துள்என்றும்இகந்துறைவர்
ஏதிலர்என்னும்இவ்வூர்.

காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

கலைஞர்உரை:
காதலர், எப்போதும்உள்ளதோடுஉள்ளமாய்வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அதைஉணராதஊர்மக்கள்அவர்கள்ஒருவரையொருவர்பிரிந்துவாழ்வதாகப்பழித்துரைப்பதுதவறு.
மு.வஉரை:
காதலர்எப்போதும்என்உள்ளத்தில்மகிழ்ந்துவாழ்கின்றார், ஆனால்அதைஅறியாமல்பிரிந்துவாழ்கின்றார், அன்பில்லாதவர்என்றுஇந்தஊரார்அவரைப்பழிப்பர்.
சாலமன்பாப்பையாஉரை:
என்னவர்எப்போதும்என்நெஞ்சிற்குள்ளேயேமகிழ்ந்துஇருக்கிறார். இதைஅறியாதஉறவினர்அவருக்குஅத்தனைஅன்புஇல்லைஎன்கின்றனர்.
பரிமேலழகர்உரை:
(இதுவும்அது.) என்றும்உள்ளத்துள்உவந்துஉறைவர் - காதலர்எஞ்ஞான்றும்என்உள்ளத்துள்ளேஉவந்துஉறையாநிற்பர்; இகழ்ந்துஉறைவர்ஏதிலர்என்னும்இவ்வூர் - அதனைஅறியாதுஅவரைப்பிரிந்துஉறையாநின்றார், அன்பிலர்என்றுசொல்லாநிற்கும்இவ்வூர். ('உவந்துஉறைவர்' என்றதனால்அன்புடைமைகூறினாள். 'பிரியாமையும்அன்பும்உடையாரைஇலர்எனப்பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.).
மணக்குடவர்உரை:
அவர்எனதுநெஞ்சத்தேஎன்றும்மகிழ்ந்துஉறையாநிற்பர்; அவரைஏதிலராய்நீங்கியுறைவர்என்றேசொல்லாநின்றதுஇவ்வூர். தலைமகள்வேறுபாடுகண்டுதலைமகனைஅன்பிலாரென்றுஇயற்பழித்ததோழிக்குத்தலைமகள்என்னெஞ்சில்நின்றுநீங்காரென்றுநெஞ்சின்மேல்வைத்துக்கூறியது.
Translation:
Rejoicing in my very soul he ever lies;
'Her love estranged is gone far off!' the village cries.
Explanation:
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290