131-140

 குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:இல்லறவியல். அதிகாரம்:ஒழுக்கமுடைமை.

குறள்வரிசை: 131 132 133 134 135 136 137 138 139 140
குறள் 131:
ஒழுக்கம்விழுப்பந்தரலான்ஒழுக்கம்
உயிரினும்ஓம்பப்படும்.
கலைஞர்உரை:
ஒருவர்க்குஉயர்வுதரக்கூடியதுஒழுக்கம்என்பதால், அந்தஒழுக்கமேஉயிரைவிடமேலானதாகப்போற்றப்படுகிறது.
மு.வஉரை:
ஒழுக்கமேஎல்லார்க்கும்மேன்மையைத்தருவதாகஇருப்பதால், அந்தஒழுக்கமேஉயிரைவிடச்சிறந்ததாகப்போற்றப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒழுக்கம், அதைஉடையவர்க்குச்சிறப்பைத்தருவதால்உயிரைக்காட்டிலும்மேலானதாகஅதைக்காக்கவேண்டும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, தத்தம்வருணத்திற்கும்நிலைக்கும்ஓதப்பட்டஒழுக்கத்தினையுடையர்ஆதல்.இது, மெய்ம்முதலியஅடங்கினார்க்குஅல்லதுமுடியாதுஆகலின் , அடக்கம்உடைமையின்பின்வைக்கப்பட்டது.)
ஒழுக்கம்விழுப்பம்தரலான் - ஒழுக்கம்எல்லார்க்கும்சிறப்பினைத்தருதலான், ஒழுக்கம்உயிரினும்ஓம்பப்படும் - அவ்வொழுக்கம்உயிரினும்பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும்இழிந்தார்க்கும்ஒப்பவிழுப்பம்தருதலின், பொதுப்படக்கூறினார். சுட்டுவருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம்விழுப்பந்தருவதாயதுஒழுக்கம்என்பதுபெற்றாம். 'உயிர்எல்லாப்பொருளினும்சிறந்ததுஆயினும், ஒழுக்கம்போலவிழுப்பம்தாராமையின்உயிரினும்ஓம்பப்படும்' என்றார்.).
மணக்குடவர்உரை:
ஒழுக்கமுடைமைசீர்மையைத்தருதலானே, அவ்வொழுக்கத்தைத்தனதுஉயிரைக்காட்டினும்மிகக்காக்கவேண்டும். இஃதுஒழுக்கம்மேற்கூறியநன்மையெல்லாந்தருமாதலின், அதனைத்தப்பாமற்செய்யவேண்டுமென்றுவலியுறுத்திற்று.
Translation:
'Decorum' gives especial excellence; with greater care
'Decorum' should men guard than life, which all men share.
Explanation:
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.

குறள் 132:
பரிந்தோம்பிக்காக்கஒழுக்கம்தெரிந்தோம்பித்
தேரினும்அஃதேதுணை.
கலைஞர்உரை:
எந்தெந்தவழிகளில்ஆராய்ந்தாலும்வாழ்க்கையில்ஒழுக்கமேசிறந்ததுணைஎன்பதால், எத்தகையதுன்பத்தைஏற்றாவதுஅதைக்காக்கவேண்டும்.
மு.வஉரை:
ஒழுக்கத்தைவருந்தியும்போற்றிக்காக்கவேண்டும்; பலவற்றையும்ஆராய்ந்துபோற்றித்தெளிந்தாலும், அந்தஒழுக்கமேவாழ்க்கையில்துணையாகவிளங்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
எதனாலும், அழிந்துபோகாமல்ஒழுக்கத்தைவிரும்பிக்காத்துக்கொள்க; அறங்கள்பலவற்றையும்ஆய்ந்து, இம்மைமறுமைக்குத்துணையாவதுஎதுஎனத்தேர்வுசெய்தால்ஒழுக்கமேதுணையாகும்.
பரிமேலழகர்உரை:
ஒழுக்கம்ஓம்பிப்பரிந்துகாக்க - ஒழுக்கத்தினைஒன்றானும்அழிவுபடாமல்பேணிவருந்தியும்காக்க, தெரிந்துஓம்பித்தேரினும்துணைஅஃதே - அறங்கள்பலவற்றையும்ஆராய்ந்து, இவற்றுள்இருமைக்கும். துணையாவதுயாது? எனதுமனத்தைஒருக்கித்தேர்ந்தாலும், துணையாய்முடிவதுஅவ்வொழுக்கமேஆகலான். ('பரிந்தும்' என்னும்உம்மைவிகாரத்தால்தொக்கது. இவைஇரண்டுபாட்டானும்ஒழுக்கத்ததுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
வருந்திப்போற்றியொழுக்கத்தினைக்காக்க: எல்லாவறங்களினும்நல்லதனைத்தெரிந்துஅதனையுந்தப்பாமலாராய்ந்துபார்ப்பினும்தமக்குஅவ்வொழுக்கமேதுணையாமாதலால். இஃதுஒழுக்கங்காக்கவேண்டுமென்றது.
Translation:
Searching, duly watching, learning, 'decorum' still we find;
Man's only aid; toiling, guard thou this with watchful mind.
Explanation:
Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.

குறள் 133:
ஒழுக்கம்உடைமைகுடிமைஇழுக்கம்
இழிந்தபிறப்பாய்விடும்.
கலைஞர்உரை:
ஒழுக்கம்உடையவராகவாழ்வதுதான்உயர்ந்தகுடிப்பிறப்புக்குஎடுத்துக்காட்டாகும். ஒழுக்கம்தவறுகிறவர்கள்யாராயினும்அவர்கள்இழிந்தகுடியில்பிறந்தவர்களாகவேகருதப்படுவர்.
மு.வஉரை:
ஒழுக்கம்உடையவராகவாழ்வதேஉயர்ந்தகுடிப்பிறப்பின்தன்மையாகும்; ஒழுக்கம்தவறுதல்இழிந்தகுடிப்பிறப்பின்தன்மையாகிவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
தனிமனிதன்தான்வகிக்கும்பாத்திரத்திற்குஏற்றஒழுக்கம்உடையவனாகவாழ்வதேகுடும்பப்பெருமை; அத்தகையஒழுக்கம்இல்லாதுபோனால்இழிந்தகுடும்பத்தில்பிறந்ததுஆகிவிடும்.
பரிமேலழகர்உரை:
ஒழுக்கம்உடைமைகுடிமை - எல்லார்க்கும்தத்தம்வருணத்திற்குஏற்றஒழுக்கம்உடைமைகுலனுடைமையாம் , இழுக்கம்இழிந்தபிறப்பாய்விடும் - அவ்வொழுக்கத்தில்தவறுதல்அவ்வருணத்தில்தாழ்ந்தவருணமாய்விடும். (பிறந்தவருணத்துள்இழிந்தகுலத்தாராயினும்ஒழுக்கம்உடையராகஉயர்குலத்தராவார்ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்தவருணத்துப்பிறந்தாராயினும்ஒழுக்கத்தில்தவறத்தாழ்ந்தவருணத்தராவர்ஆகலின்இழிந்தபிறப்பாய்விடும்என்றுங்கூறினார். உள்வழிப்படும்குணத்தினும்இல்வழிப்படும்குற்றம்பெரிதுஎன்றவாறு. பயன்இடையீடுஇன்றிஎய்துதலின், அவ்விரைவுபற்றிஅவ்வேதுவாகியவினைகளேபயனாகஓதப்பட்டன.).
மணக்குடவர்உரை:
ஒருவன்இழிந்தகுலத்தானாயினும்ஒழுக்கமுடையவனாகஉயர்குலத்தனாம்; அதனைத்தப்பிஒழுகுவானாயின், உயர்குலத்தினாயினும்இழிகுலத்தானாயேவிடும். இதுகுலங்கெடுமென்றது.
Translation:
'Decorum's' true nobility on earth;
'Indecorum's' issue is ignoble birth.
Explanation:
Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.

குறள் 134:
மறப்பினும்ஓத்துக்கொளலாகும்பார்ப்பான்
பிறப்பொழுக்கங்குன்றக்கெடும்.
கலைஞர்உரை:
பார்ப்பனன்ஒருவன்கற்றதைமறந்துவிட்டால்மீண்டும்படித்துக்கொள்ளமுடியும்; ஆனால், பிறப்புக்குச்சிறப்புசேர்க்கும்ஒழுக்கத்திலிருந்துஅவன்தவறினால்இழிமகனேஆவான்.
மு.வஉரை:
கற்றமறைப்பொருளைமறந்தாலும்மீண்டும்அதனைஓதிக்கற்றுக்கொள்ளமுடியும்; ஆனால்மறைஓதுவனுடையகுடிப்பிறப்பு, ஒழுக்கம்குன்றினால்கெடு்ம்.
சாலமன்பாப்பையாஉரை:
பார்ப்பான்தான்கற்றவேதத்தைமறந்துபோனாலும்பிறகுகற்றுக்கொள்ளலாம்; ஆனால், அவன்பிறந்தகுலத்திற்குஏற்ற, மேலானஒழுக்கத்திலிருந்துதாழ்ந்தால்அவன்குலத்தாலும்தாழ்வான்.
பரிமேலழகர்உரை:
ஓத்துமறப்பினும்கொளலாகும் - கற்றவேதத்தினைமறந்தானாயினும்அவ்வருணம்கெடாமையின்பின்னும்அஃதுஓதிக்கொள்ளலாம், பார்ப்பான்பிறப்புஒழுக்கம்குன்றக்கெடும்.- அந்தணதுஉயர்ந்தவருணம்தன்ஒழுக்கம்குன்றக்கெடும். (மறந்தவழிஇழிகுலத்தனாம்ஆகலின், மறக்கலாகாதுஎன்னும்கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடைவருணத்திற்குமொழிந்தமையின், இஃதுஏனையவருணங்கட்கும்கொள்ளப்படும்.).
மணக்குடவர்உரை:
பிராமணன்வேதத்தினைஓதிமறந்தானாயினும்பின்னும்ஓதிக்கொள்ளலாம்: ஒழுக்கங்குறையுமாயின்குலங்கெடும். இஃதுஒழுக்கம்கல்வியிலும்வலிதானவாறுகூறிற்று.
Translation:
Though he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in 'decorum due,' birthright's gone for evermore.
Explanation:
A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

குறள் 135:
அழுக்காறுடையான்கண்ஆக்கம்போன்றுஇல்லை
ஒழுக்கமிலான்கண்உயர்வு.
கலைஞர்உரை:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும்அமையும்வாழ்வு, உயர்வானவாழ்வாகக்கருதப்படமாட்டாது.
மு.வஉரை:
பொறாமைஉடையவனிடத்தில்ஆக்கம்இல்லாதவாறுபோல, ஒழுக்கம்இல்லாதவனுடையவாழ்க்கையில்உயர்வுஇல்லையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பொறாமைஉள்ளவனுக்குச்செல்வம்இல்லைஎன்பதுபோல், ஒழுக்கம்இல்லாதவனுக்குஉயர்குலம்என்பதும்இல்லை.
பரிமேலழகர்உரை:
அழுக்காறுஉடையான்கண்ஆக்கம்போன்று - அழுக்காறுடையான்மாட்டுஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம்இலான்கண்உயர்வுஇல்லை - ஒழுக்கம்இல்லாதவன்மாட்டும்உயர்ச்சிஇல்லை. (உவமையான்ஒழுக்கம்இல்லாதவன்சுற்றத்திற்கும்உயர்ச்சிஇல்லைஎன்பதுபெற்றாம்; என்னை? கொடுப்பதுஅழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர்குலமாதல்.).
மணக்குடவர்உரை:
மனக்கோட்டமுடையவன்மாட்டுஆக்கம்இல்லையானாற்போலஒழுக்கமில்லாதான்மாட்டுமிகுதியில்லையாம். இஃதுஉயர்ச்சியில்லையாமென்றது.
Translation:
The envious soul in life no rich increase of blessing gains,
So man of 'due decorum' void no dignity obtains.
Explanation:
Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.

குறள் 136:
ஒழுக்கத்தின்ஒல்கார்உரவோர்இழுக்கத்தின்
ஏதம்படுபாக்கறிந்து.
கலைஞர்உரை:
மனஉறுதிகொண்டவர்கள்ஒழுக்கம்தவறுவதால்ஏற்படும்இழிவைஉணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம்குன்றிடுமளவிற்குநடக்கமாட்டார்கள்.
மு.வஉரை:
ஒழுக்கம்தவறுதலால்குற்றம்உண்டாவதைஅறிந்து, மனவலிமைஉடையசான்றோர்ஒழுக்கத்தில்தவறாமல்காத்துக்கொள்வர்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒழுக்கம்இழந்தால்தனக்குக்குலத்தாழ்வுஉண்டாகும்எனஅறியும்மனஉறுதிஉடையபெரியோர், கடினமேஎன்றாலும்ஒழுக்கத்திலிருந்துவிலகமாட்டார்.
பரிமேலழகர்உரை:
ஒழுக்கத்தின்ஒல்கார்உரவோர் - செய்தற்குஅருமைநோக்கிஒழுக்கத்தின்சுருங்கார்மனவலிஉடையார்; இழுக்கத்தின்ஏதம்படுபாக்குஅறிந்து - அவ்விழுக்கத்தால்தமக்குஇழிகுலம்ஆகியகுற்றம்உண்டாம்ஆற்றைஅறிந்து. (ஒழுக்கத்தின்சுருக்கம்அதனைஉடையார்மேல்ஏற்றப்பட்டது. கொண்டவிரதம்விடாமைபற்றி 'உரவோர்' என்றார்.).
மணக்குடவர்உரை:
ஒழுக்கத்தினின்றுநீங்கார்அறிவுடையார்: அதனைத்தப்பினாற்குற்றம்வருதலையறிந்து. இஃதுஇதனைஅறிவுடையார்தவிராரென்றது. குற்றம்வருதல்பின்னேகாணப்படும்.
Translation:
The strong of soul no jot abate of 'strict decorum's' laws,
Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause.
Explanation:
Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.

குறள் 137:
ஒழுக்கத்தின்எய்துவர்மேன்மைஇழுக்கத்தின்
எய்துவர்எய்தாப்பழி.
கலைஞர்உரை:
நல்லநடத்தையினால்உயர்வுஏற்படும்; இல்லையேல்இழிவானபழிவந்துசேரும்.
மு.வஉரை:
ஒழுக்கத்தால்எவரும்மேம்பாட்டைஅடைவர்; ஒழுக்கத்திலிருந்துதவறுதலால்அடையத்தகாதபெரும்பழியைஅடைவர்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒழுக்கத்தினால்உயர்வைஅடைவர்; ஒழுக்கம்இல்லாதவர்வேண்டாதபழியைஅடைவர்.
பரிமேலழகர்உரை:
ஒழுக்கத்தின்மேன்மைஎய்துவர் - எல்லாரும்ஒழுக்கத்தானேமேம்பாட்டைஎய்துவர்; இழுக்கத்தின்எய்தாப்பழிஎய்துவர் - அதனின்றும்இழுக்குதலானேதாம்எய்துவதற்குஉரித்தல்லாதபழியைஎய்துவர். (பகைபற்றிஅடாப்பழிகூறியவழி, அதனையும்இழுக்கம்பற்றிஉலகம்அடுக்கும்என்றுகொள்ளுமாகலின், எய்தாப்பழிஎய்துவர்என்றார். இவைஐந்துபாட்டானும்ஒழுக்கம்உள்வழிப்படும்குணமும், இல்வழிப்படும்குற்றமும்கூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
ஒழுக்கத்தாலேதமக்குஎய்தாதமேம்பாட்டைஎய்துவர்; அஃதின்மையாலேதமக்குஅடாதபழியைஎய்துவர்.
Translation:
'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved.
Explanation:
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

குறள் 138:
நன்றிக்குவித்தாகும்நல்லொழுக்கம்தீயொழுக்கம்
என்றும்இடும்பைதரும்.
கலைஞர்உரை:
நல்லொழுக்கம், வாழ்க்கையில்நன்மைக்குவித்தாகஅமையும். தீயொழுக்கம், தீராததுன்பம்தரும்.
மு.வஉரை:
நல்லொழுக்கம்இன்பமானநல்வாழ்க்கைக்குக்காரணமாகஇருக்கும்; தீயொழுக்கம்எப்போதும்துன்பத்தைக்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லொழுக்கம், அறமாகியநன்மைக்குவித்தாகஅமைந்துஇம்மைமறுமையிலும்இன்பம்தரும்; தீயொழுக்கமோதுன்பமேதரும்.
பரிமேலழகர்உரை:
நல்ஒழுக்கம்நன்றிக்குவித்துஆகும். - ஒருவனுக்குநல்ஒழுக்கம்அறத்திற்குக்காரணமாய்இருமையினும்இன்பம்பயக்கும்; தீயொழுக்கம்என்றும்இடும்பைதரும் - தீயஒழுக்கம்பாவத்திற்குக்காரணமாய்இருமையினும்துன்பம்பயக்கும். ('நன்றிக்குவித்தாகும்' என்றதனால்தீயொழுக்கம்பாவத்திற்குக்காரணமாதலும் 'இடும்பைதரும்' என்றதனால்நல்ஒழுக்கம்இன்பம்தருதலும்பெற்றாம், ஒன்றுநின்றேஏனையதைமுடிக்கும்ஆகலின். இதனான்பின்விளைவுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
முத்திக்குவிதையாகும்நல்லொழுக்கம்: தீயவொழுக்கம்என்றும்இடும்பையைத்தரும். தீயவொழுக்கம்நாடோறுந்துன்பத்தையேதருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.
Translation:
'Decorum true' observed a seed of good will be;
'Decorum's breach' will sorrow yield eternally.
Explanation:
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.

குறள் 139:
ஒழுக்கமுடையவர்க்குஒல்லாவேதீய
வழுக்கியும்வாயாற்சொலல்.
கலைஞர்உரை:
தவறியும்கூடத்தம்வாயால்தகாதசொற்களைச்சொல்வதுஒழுக்கம்உடையவர்களிடம்இல்லாதபண்பாகும்.
மு.வஉரை:
தீயசொற்களைத்தவறியும்தம்முடையவாயால்சொல்லும்குற்றம், ஒழுக்கம்உடையவர்க்குப்பொருந்தாததாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மறந்தும்தீயசொற்களைத்தம்வாயால்கூறுவது, ஒழுக்கம்உடையவர்க்குமுடியாது.
பரிமேலழகர்உரை:
வழுக்கியும்தீயவாயால்சொலல் - மறந்தும்தீயசொற்களைத்தம்வாயால்சொல்லும்தொழில்கள்; ஒழுக்கம்உடையவர்க்குஒல்லா - ஒழுக்கம்உடையவர்க்குமுடியா. (தீயசொற்களாவன: பிறர்க்குத்தீங்குபயக்கும்பொய்முதலியனவும், வருணத்திற்குஉரியஅல்லனவும்ஆம். அவற்றதுபன்மையால், சொல்லுதல்தொழில்பலவாயின. சொல்சாதியொருமை. சொல்எனவேஅமைந்திருக்கவாயால்எனவேண்டாதுகூறினார், 'நல்லசொற்கள்பயின்றது' எனத்தாம்வேண்டியதன்சிறப்புமுடித்தற்கு, இதனைவடநூலார் 'தாற்பரியம்' என்ப.).
மணக்குடவர்உரை:
தீமைபயக்குஞ்சொற்களைமறந்தும்தம்வாயாற்சொல்லுதல்ஒழுக்கமுடையார்க்குஇயலாது.
Translation:
It cannot be that they who 'strict decorum's' law fulfil,
E'en in forgetful mood, should utter words of ill.
Explanation:
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.

குறள் 140:
உலகத்தோடுஒட்டஒழுகல்பலகற்றும்
கல்லார்அறிவிலாதார்.
கலைஞர்உரை:
உயர்ந்தோர்ஏற்றுக்கொண்டஒழுக்கம்எனும்பண்போடுவாழக்கற்காதவர்கள்பலநூல்களைப்படித்திருந்தும்கூடஅறிவில்லாதவர்களேஆவார்கள்.
மு.வஉரை:
உலகத்துஉயர்ந்தவரோடுபொருந்தஒழுகும்முறையைக்கற்காதவர், பலநூல்களைக்கற்றிருந்தபோதிலும்அறிவில்லாதவரேஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
முந்தியஅறநூல்கள்கூறியவற்றுள்இன்றைக்குப்பொருந்தாதவற்றைவிலக்கியும், கூறாதனவற்றுள்பொருந்துவனவற்றைஏற்றும்வாழக்கல்லாதவர், பல்வேறுநூல்களைக்கற்றவரேஎன்றாலும்அறிவில்லாதவரே.
பரிமேலழகர்உரை:
உலகத்தோடுஒட்டஒழுகல்கல்லார் - உலகத்தோடுபொருந்தஒழுகுதலைக்கல்லாதார், பலகற்றும்அறிவிலாதார் - பலநூல்களையும்கற்றாராயினும்அறிவிலாதார். (உலகத்தோடுபொருந்தஒழுகுதலாவது, உயர்ந்தோர்பலரும்ஒழுகியஆற்றான்ஒழுகுதல். அறநூல்சொல்லியவற்றுள்இக்காலத்திற்குஏலாதனஒழிந்து, சொல்லாதனவற்றுள்ஏற்பனகொண்டுவருதலான்அவையும்அடங்க 'உலகத்தோடுஒட்ட' என்றும்அக்கல்விக்குப்பயன்அறிவும், அறிவிற்குப்பயன்ஒழுக்கமும்ஆகலின், அவ்வொழுகுதலைக்கல்லாதார் 'பலகற்றும்அறிவிலாதார்' என்றும்கூறினார்.ஒழுகுதலைக்கற்றலாவது, அடிப்படுதல். இவைஇரண்டுபாட்டானும், சொல்லானும், செயலானும்வரும்ஒழுக்கங்கள்எல்லாம்தொகுத்துக்கூறப்பட்டன.)
.
மணக்குடவர்உரை:
அறிவிலாதார்பலநூல்களைக்கற்றாலும்உயர்ந்தாரோடுபொருந்தஒழுகுதலைஅறியார். இஃதுஒழுக்கமாவதுஉயர்ந்தாரொழுகினநெறியில்ஒழுகுதலென்பதூஉம்அவ்வொழுக்கம்கல்வியினும்வலியுடைத்தென்பதூஉம்கூறிற்று.
Translation:
Who know not with the world in harmony to dwell,
May many things have learned, but nothing well.
Explanation:
Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290