141-150

 குறள் 141:

பிறன்பொருளாள்பெட்டொழுகும்பேதைமைஞாலத்து
அறம்பொருள்கண்டார்கண்இல்.
கலைஞர்உரை:
பிறன்மனைவியிடத்துவிருப்பம்கொள்ளும்அறியாமை, உலகில்அறநூல்களையும்பொருள்நூல்களையும்ஆராய்ந்துஉணர்ந்தவர்களிடம்இல்லை.
மு.வஉரை:
பிறனுடையஉரிமையாகியமனைவியைவிரும்பிநடக்கும்அறியாமை, உலகத்தில்அறமும்பொருளும்ஆராய்ந்துகண்டவரிடம்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
இவ்வுலகில்அறத்தையும், பொருளையும்கற்றுஅறிந்தவரிடம்அடுத்தவனின்உரிமைஆகியமனைவிமீதுஆசைப்பட்டுவாழும்அறியாமைஇல்லை.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, காமமயக்கத்தால்பிறனுடையஇல்லாளைவிழையாமை.இஃதுஒழுக்கம்உடையார்மாட்டேநிகழ்வதாகலின், ஒழுக்கம்உடைமையின்பின்வைக்கப்பட்டது.)
பிறன்பொருளாள்பெட்டுஒழுகும்பேதைமை - பிறனுக்குப்பொருளாம்தன்மையுடையாளைக்காதலித்துஒழுகுகின்றஅறியாமை, ஞாலத்துஅறம்பொருள்கண்டார்கண்இல் - ஞாலத்தின்கண்அறநூலையும்பொருள்நூலையும்ஆராய்ந்துஅறிந்தார்மாட்டுஇல்லை. (பிறன்பொருள்: பிறன்உடைமை, அறம், பொருள்என்பனஆகுபெயர். செவ்வெண்ணின்தொகை, விகாரத்தால்தொக்குநின்றது. இன்பம்ஒன்றையேநோக்கும்இன்பநூலுடையார்இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்றுகூறுவராகலின், 'அறம்பொருள்கண்டார்கண்இல்' என்றார்.எனவேஅப்பேதைமைஉடையார்மாட்டுஅறமும்பொருளும்இல்லைஎன்பதுபெறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பிறனுடையபொருளாயிருப்பவளைவிரும்பியொழுகுகின்றஅறியாமைஉலகத்துஅறமும்பொருளும்அறிந்தார்மாட்டுஇல்லையாம்.
Translation:
Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.
Explanation:
The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

குறள் 142:
அறன்கடைநின்றாருள்எல்லாம்பிறன்கடை
நின்றாரின்பேதையார்இல்.
கலைஞர்உரை:
பிறன்மனைவியைஅடைவதற்குத்துணிந்தவர்கள்அறவழியைவிடுத்துத்தீயவழியில்செல்லும்கடைநிலைமனிதர்களைக்காட்டிலும்கீழானவர்கள்.
மு.வஉரை:
அறத்தைவிட்டுத்தீநெறியில்நின்றவர்எல்லாரிலும்பிறன்மனைவியைவிரும்பிஅவனுடையவாயிலில்சென்றுநின்றவரைப்போல்அறிவிலிகள்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
பாவவழியில்நடக்கும்மனிதருள்எல்லாம், அடுத்தவன்மனைவியைவிரும்பிஅவன்வாசலில்நிற்கும்மூடனைப்போன்றகடைநிலைமனிதர்வேறுஇல்லை.
பரிமேலழகர்உரை:
'அறன்கடை' நின்றாருள்எல்லாம் - காமம்காரணமாகப்பாவத்தின்கண்நின்றார்எல்லாருள்ளும்; பிறன்கடைநின்றாரின்பேதையார்இல்- பிறன்இல்லாளைக்காதலித்து, அவன்வாயிற்கண்சென்றுநின்றார்போலப்பேதையார்இல்லை. (அறத்தின்நீக்கப்பட்டமையின்அறன்கடைஎன்றார். அறன்கடைநின்றபெண்வழிச்செல்வாரும், வரைவின்மகளிரோடும்இழிகுலமகளிரோடும்கூடிஇன்பம்நுகர்வாரும்போலஅறமும்பொருளும்இழத்தலேஅன்றிப், பிறன்கடைநின்றார்அச்சத்தால்தாம்கருதியஇன்பமும்இழக்கின்றார்ஆகலின், 'பேதையார்இல்' என்றார், எனவேஇன்பமும்இல்லைஎன்பதுபெறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
காமத்தின்கண்ணேநின்றார்எல்லாரினும், பிறனொருவன்கடைத்தலைபற்றிநின்றவர்களைப்போல்அறியாதாரில்லை.
Translation:
No fools, of all that stand from virtue's pale shut out,
Like those who longing lurk their neighbour's gate without.
Explanation:
Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.

குறள் 143:
விளிந்தாரின்வேறல்லர்மன்றதெளிந்தாரில்
தீமைபுரிந்துதொழுகுவார்.
கலைஞர்உரை:
நம்பிபழகியவர்வீட்டில், அவரதுமனைவியிடம்தகாதசெயலில்ஈ.டுபடமுனைகிறவன், உயிர்இருந்தும்பிணத்திற்குஒப்பானவனேயாவான்.
மு.வஉரை:
ஐயமில்லாமல்தெளிந்துநம்பியவருடையமனைவியிடத்தேவிருப்பம்கொண்டுதீமையைச்செய்துநடப்பவர், செத்தவரைவிடவேறுபட்டவர்அல்லர்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னைச்சந்தேகப்படாதவரின்வீட்டிற்குள்நுழைந்து, அடுத்தவரின்மனைவியுடன்தவறானதொடர்புகொண்டுவாழ்பவன், இறந்துபோனவனேஅன்றிஉயிருடன்வாழ்பவன்அல்லன்.
பரிமேலழகர்உரை:
தெளிந்தார்இல்தீமைபுரிந்துஒழுகுவார் - தம்மைஐயுறாதார்இல்லாள்கண்ணேபாவஞ்செய்தலைவிரும்பிஒழுகுவார், விளிந்தாரின்வேறுஅல்லர்மன்ற- உயிருடையவரேனும்இறந்தாரேஆவர். (அறம்பொருள்இன்பங்கள்ஆகியபயன்உயிர்எய்தாமையின், 'விளிந்தாரின்வேறல்லர்', என்றும், அவர்தீமைபுரிந்துஒழுகுவதுஇல்லுடையவரதுதெளிவுபற்றியாகலின், 'தெளிந்தார்இல்' என்றும்கூறினார்.).
மணக்குடவர்உரை:
தம்மைத்தெளிந்தாரில்லின்கண்ணேதீமையைப்பொருந்திஒழுகுவார்மெய்யாகச்செத்தாரின்வேறல்லர். இஃதுஅறம்பொருளின்பம்எய்தாமையின்பிணத்தோடொப்பரென்றது.
Translation:
They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.
Explanation:
Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.

குறள் 144:
எனைத்துணையர்ஆயினும்என்னாம்தினைத்துணையும்
தேரான்பிறனில்புகல்.
கலைஞர்உரை:
பிழைபுரிகிறோம்என்பதைத்தினையளவுகூடச்சிந்தித்துப்பாராமல், பிறன்மனைவியிடம்விருப்பம்கொள்வது, எத்துணைப்பெருமையுடையவரையும்மதிப்பிழக்கச்செய்துவிடும்.
மு.வஉரை:
தினையளவும்ஆராய்ந்துபார்க்காமல்பிறனுடையமனைவியிடம்செல்லுதல், எவ்வளவுபெருமையைஉடையவராயினும்என்னவாகமுடியும்?.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவன்மனைவியைவிரும்பித்தன்பிழையைச்சிறிதும்எணணாமல்அவ்வீட்டில்நுழைபவன்எத்தனைப்பெருமைஉடையவனாய்இருந்துதான்என்ன?.
பரிமேலழகர்உரை:
எனைத்துணையர்ஆயினும்என்னாம் - எத்துணைப்பெருமையுடையார்ஆயினும்ஒருவர்க்குயாதாய்முடியும், தினைத்துணையும்தேரான்பிறன்இல்புகழ் - காமமயக்கத்தால்தினையளவும்தம்பிழையைஓராதுபிறனுடையஇல்லின்கண்புகுதல். (இந்திரன்போலஎல்லாப்பெருமையும்இழந்துசிறுமைஎய்தல்நோக்கி, 'என்னாம்' என்றார். 'என்நீர்அறியாதீர்போலஇவைகூறின்நின்நீரஅல்லநெடுந்தகாய்' (கலித்.பாலை 6) உயர்த்தற்கண்பன்மைஒருமைமயங்கிற்று. 'தேரான்பிறன்' என்பதனைத் 'தம்மைஐயுறாதபிறன்' என்றுஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
எல்லாவமைதியினையும்உடையவராயினும், தினையளவுந்தேராதுபிறனுடையஇல்லிலேபுகுதல்யாதாய்ப்பயக்குமோ?. பிறனில்விழைவால்வருங்குற்றங்கூறுவார்முற்படவெல்லாக்குணமுமிழியுமென்றுகூறினார்.
Translation:
How great soe'er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbour's wife.
Explanation:
However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?

குறள் 145:
எளிதெனஇல்லிறப்பான்எய்துமெஞ்ஞான்றும்
விளியாதுநிற்கும்பழி.
கலைஞர்உரை:
எளிதாகஅடையலாம்எனஎண்ணிப்பிறனுடையமனைவியிடம்முறைகேடாகநடப்பவன்என்றும்அழியாதபழிக்குஆளாவான்.
மு.வஉரை:
இச்செயல்எளியதுஎனஎண்ணிப்பிறனுடையமனைவியிடம்நெறிதவறிச்செல்கின்றவன், எப்போதும்அழியாமல்நிலைநிற்கும்பழியைஅடைவான்.
சாலமன்பாப்பையாஉரை:
அடைவதுஎளிதுஎனஎண்ணிஅடுத்தவன்மனைவியுடன்தவறானதொடர்புகொள்பவன், சாவாமல்எப்போதும்நிற்கும்பழியைப்பெறுவான்.
பரிமேலழகர்உரை:
எளிதுஎனஇல்இறப்பான் - 'எய்துதல்எளிது' என்றுகருதிப்பின்விளைவுகருதாதுபிறன்இல்லின்கண்இறப்பான், விளியாதுஎஞ்ஞான்றும்நிற்கும்பழிஎய்தும் - மாய்தல்இன்றிஎஞ்ஞான்றும்நிலைநிற்கும்குடிப்பழியினைஎய்தும். (இல்லின்கண்இறத்தல் - இல்லாள்கண்நெறிகடந்துசேறல்.).
மணக்குடவர்உரை:
தனக்குஎளிதென்றுநினைத்துப்பிறனுடையஇல்லின்கண்ணேமிகுமவன்எல்லாநாளும்அழியாதுநிற்கும்பழியைப்பெறுவான். இதுபழியுண்டாமென்றது.
Translation:
'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.
Explanation:
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

குறள் 146:
பகைபாவம்அச்சம்பழியெனநான்கும்
இகவாவாம்இல்லிறப்பான்கண்.
கலைஞர்உரை:
பிறன்மனைவியிடம்முறைகேடாகநடக்கநினைப்பவனிடமிருந்துபகை, தீமை, அச்சம், பழிஆகியநான்கும்நீங்குவதில்லை.
மு.வஉரை:
பகைபாவம்அச்சம்பழிஎன்னும்இந்நான்குகுற்றங்களும்பிறன்மனைவியிடத்துநெறிதவறிநடப்பவனிடத்திலிருந்துநீங்காவாம்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவன்மனைவியிடம்வரம்புகடந்துசெல்பவனைவிட்டுப்பகை, பாவம், பயம், பழிஎன்றநான்கும்விலகமாட்டா.
பரிமேலழகர்உரை:
இல்இறப்பான்கண் - பிறன்இல்லாள்கண்நெறிகடந்துசெல்வானிடத்து, பகைபாவம்அச்சம்பழிஎனநான்கும்இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும்என்னும்இந்நான்குகுற்றமும்ஒருகாலும்நீங்காவாம். (எனவே, இருமையும்இழத்தல்பெற்றாம். இவைஆறுபாட்டானும்பிறன்இல்விழைவான்கண்குற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பகையும்பாவமும்அச்சமும்பழியுமென்னும்நான்குபொருளும்நீங்காவாம்: பிறனில்லின்கண்ணேமிகுவான்மாட்டு.
Translation:
Who home ivades, from him pass nevermore,
Hatred and sin, fear, foul disgrace; these four.
Explanation:
Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.

குறள் 147:
அறனியலான்இல்வாழ்வான்என்பான்பிறனியலாள்
பெண்மைநயவாதவன்.
கலைஞர்உரை:
பிறன்மனைவியிடம்பெண்மைஇன்பத்தைநாடிச்செல்லாதவனேஅறவழியில்இல்வாழ்க்கைமேற்கொண்டவன்எனப்படுவான்.
மு.வஉரை:
அறத்தின்இயல்போடுபொருந்திஇல்வாழ்க்கைவாழ்பவன், பிறனுக்குஉரிமையானவளின்பெண்தன்மையைவிரும்பாதவனே.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவனுக்குஉரிமையானவனின்பெண்மையைவிரும்பாதவன்அறத்துடன்குடும்பம்நடத்துபவன்எனப்படுவான்.
பரிமேலழகர்உரை:
அறன்இயலான்இல்வாழ்வான்என்பான் - அறனாகியஇயல்போடுகூடிஇல்வாழ்வான்என்றுசொல்லப்படுவான், பிறன்இயலாள்பெண்மைநயவாதவன் - பிறனுக்குஉரிமைபூண்டுஅவனுடையஇயல்பின்கண்ணேநிற்பாளதுபெண்தன்மையைவிரும்பாதவன். (ஆன்உருபுஈண்டுஉடன்நிகழ்ச்சிக்கண்வந்தது. இல்லறஞ்செய்வான்எனப்படுவான்அவனேஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
அறநெறியானேயில்வாழ்வானென்றுசொல்லப்படுவான். பிறன்வழியானவளதுபெண்மையைவிரும்பாதவன். இதுபிறனில்விழையாமைவேண்டும்என்றது.
Translation:
Who sees the wife, another's own, with no desiring eye
In sure domestic bliss he dwelleth ever virtuously.
Explanation:
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.

குறள் 148:
பிறன்மனைநோக்காதபேராண்மைசான்றோர்க்கு
அறனொன்றோஆன்றவொழுக்கு.
கலைஞர்உரை:
வெறொருவன்மனைவியைக்காமஎண்ணத்துடன்நோக்காதபெருங்குணம்அறநெறிமட்டுமன்று; அதுஒழுக்கத்தின்சிகரமும்ஆகும்.
மு.வஉரை:
பிறனுடையமனைவியைவிரும்பிநோக்காத பெரியஆண்மை, சான்றோர்க்குஅறம்மட்டும்அன்று; நிறைந்தஒழுக்கமுமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவன்மனைவியைமனத்துள்எண்ணாதபேராண்மைஅறம்மட்டும்அன்று; சான்றோர்க்குநிறைவானஒழுக்கமும்ஆகும்.
பரிமேலழகர்உரை:
பிறன்மனைநோக்காதபேர்ஆண்மை - பிறன்மனையாளைஉட்கொள்ளாதபெரியஆண்தகைமை, சான்றோர்க்குஅறன்ஒன்றோஆன்றஒழுக்கு - சால்புடையார்க்குஅறனும்ஆம், நிரம்பியஒழுக்கமும்ஆம். (புறப்பகைகளைஅடக்கும்ஆண்மையுடையார்க்கும், உட்பகைஆகியகாமம்அடக்குதற்குஅருமையின், அதனைஅடக்கியஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பதுஎண்ணிடைச்சொல். செய்தற்குஅரியஅறனும்ஒழுக்கமும்இதனைச்செய்யாமையேபயக்கும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
பிறனதுமனையாளைப்பாராதபெரியவாண்மைதானேசான்றோர்க்குஅறனும்அமைந்தவொழுக்கமுமாம். இஃதுஇதனைவிரும்பாமைதானேஅறனும்ஒழுக்கமுமென்றது.
Translation:
Manly excellence, that looks not on another's wife,
Is not virtue merely, 'tis full 'propriety' of life.
Explanation:
That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

குறள் 149:
நலக்குரியார்யாரெனின்நாமநீர்வைப்பின்
பிறர்க்குரியாள்தோள்தோயாதார்.
கலைஞர்உரை:
பிறன்மனைவியின்தோளைத்தீண்டாதவரேகடல்சூழ்இவ்வுலகின்பெருமைகளைஅடைவதற்குத்தகுதியுடையவர்.
மு.வஉரை:
கடல்சூழ்ந்தஉலகத்தில்நன்மைக்குஉரியவர்யார்என்றொல்பிறனுக்குஉரிமையானவளின்தோளைப்பொருந்தாதவரேஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
அச்சந்தரும்கடலால்சூழப்பட்டஇவ்வுலகில்எல்லாநன்மைகளும்அடைவதற்குஉரியவர்எவர்என்றால், அடுத்தவனுக்குஉரியவளின்தோளைச்சேராதவரே.
பரிமேலழகர்உரை:
நாமநீர்வைப்பின் - அச்சம்தரும்கடலால்சூழப்பட்டஉலகத்து; நலக்குஉரியார்யார்எனின் - எல்லாநன்மைகளும்எய்துதற்குஉரியார்யார்எனின், பிறர்க்குஉரியாள்தோள்தோயாதார் - பிறனொருவனுக்குஉரிமைஆகியாளுடையதோளைச்சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமைமுதலியவற்றான்அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்துநின்றது. உரிச்சொல் (நாம) ஈறுதிரிந்துநின்றது. இருமையினும்நன்மைஎய்துவர்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
நலத்துக்குஉரியார்யாரெனின்நினைத்ததைத்தருகின்றநீர்சூழ்ந்தவுலகத்தில்பிறனுக்குஉரியவளதுதோளைத்தீண்டாதார். நலக்குரியார்- விரும்புதற்குரியார்.
Translation:
Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?
The men who touch not her that is another's bride.
Explanation:
Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.

குறள் 150:
அறன்வரையான்அல்லசெயினும்பிறன்வரையாள்
பெண்மைநயவாமைநன்று.
கலைஞர்உரை:
பிறன்மனைவியைவிரும்பிச்செயல்படுவதுஅறவழியில்நடக்காதவர்செயலைவிடத்தீமையானதாகும்.
மு.வஉரை:
ஒருவன்அறநெறியில்நிற்காமல்அறமில்லாதவைகளைச்செய்தாலும், பிறனுக்குஉரியவளின்பெண்மையைவிரும்பாமல்வாழ்தல்நல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
அறம்செய்யாமல்பாவத்தையேசெய்பவனாகஇருந்தாலும்அடுத்தவனின்உரிமைஆகியமனைவிமேல்ஆசைப்படாமல்இருப்பதுநல்லது.
பரிமேலழகர்உரை:
அறன்வரையான்அல்லசெயினும் - ஒருவன்அறத்தைத்தனக்குரித்தாகச்செய்யாதுபாவங்களைச்செய்யுமாயினும், பிறன்வரையாள்பெண்மைநயவாமைநன்று - அவனுக்குப்பிறன்எல்லைக்கண்நிற்பாளதுபெண்மையைவிரும்பாமைஉண்டாயின், அதுநன்று. (இக்குணமேமேற்பட்டுத்தோன்றும்என்பதாம். இவைநான்குபாட்டானும்பிறன்இல்விழையாதான்கண், குணம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அறத்தைவரையாதேஅறமல்லாதனசெய்யினும்பிறனிடத்துஆளானவளதுபெண்மையைவிரும்பாமைநன்று. இஃதுஓரறமுஞ்செய்திலனாயினும்நன்மைபயக்குமென்றது.
Translation:
Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;
At least, 'tis good if neighbour's wife he covet not.
Explanation:
Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290