191-200
குறள் 191:
பல்லார்முனியப்பயனிலசொல்லுவான்
எல்லாரும்எள்ளப்படும்.
கலைஞர்உரை:
பலரும்வெறுக்கும்படியானபயனற்றசொற்களைப்பேசுபவரைஎல்லாரும்இகழ்ந்துரைப்பார்கள்.
மு.வஉரை:
கேட்டவர்பலரும்வெறுக்கும்படியாகப்பயனில்லாதசொற்களைச்சொல்லுகின்றவன், எல்லாராலும்இகழப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
பலரும்கேட்டுவெறுக்கப், பயனற்றசொற்களைச்சொல்லுபவன்எல்லாராலும்இகழப்படுவான்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, தமக்கும்பிறர்க்கும்அறம்பொருள்இன்பம்ஆகியபயன்களுள்ஒன்றும்பயவாதசொற்களைச்சொல்லாமை. பொய்,குறளை,கடுஞ்சொல்,பயனில்சொல்எனவாக்கின்கண்நிகழும்பாவம்நான்கனுள், பொய்துறந்தார்க்குஅல்லதுஒருதலையாகக்கடியலாகாமையின், அஃதுஒழித்துஇல்வாழ்வாரால்கடியப்படும்ஏனைமூன்றனுள் , கடுஞ்சொல்இனியவைகூறலானும் , குறளைபுறங்கூறாமையானும்விலக்கி, நின்றபயனில்சொல்இதனான்விலக்குகின்றார்ஆகலின், இதுபுறங்கூறாமையின்பின்வைக்கப்பட்டது.)
பல்லார்முனியப்பயன்இலசொல்லுவான் - அறிவுடையார்பலரும்கேட்டுவெறுப்பப்பயன்இலவாகியசொற்களைச்சொல்லுவான், 'எல்லாரும்எள்ளப்படும்' - எல்லாரானும்இகழப்படும். (அறிவுடையார்பலரும்வெறுப்பவே, ஒழிந்தாரானும்இகழப்படுதலின், எல்லாரும்எள்ளப்படும்என்றார். மூன்றன்உருபுவிகாரத்தால்தொக்கது.).
மணக்குடவர்உரை:
பயனில்லாதவற்றைப்பலர்வெறுக்கச்சொல்லுபவன்எல்லாராலும்இகழப்படுவான்.
Translation:
Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.
Explanation:
He who to the disgust of many speaks useless things will be despised by all.
குறள் 192:
பயனிலபல்லார்முன்சொல்லல்நயனில
நட்டார்கண்செய்தலிற்றீது.
கலைஞர்உரை:
பலர்முன்பயனில்லாதசொற்களைக்கூறுவது, நட்புக்குமாறாகச்செயல்படுவதைக்காட்டிலும்தீமையுடையதாகும்.
மு.வஉரை:
பலர்முன்னேபயனில்லாதசொற்களைச்சொல்லுதல், நண்பரிடத்தில்அறம்இல்லாசெயல்களைச்செய்தலைவிடத்தீமையானதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்பலருக்கும்முன்னேபயனற்றசொற்களைச்சொல்வது, நண்பர்களுக்குத்தீமைசெய்வதைக்காட்டிலும்கொடியது.
பரிமேலழகர்உரை:
பயன்இலபல்லார்முன்சொல்லல் - பயன்இலவாகியசொற்களைஅறிவுடையார்பலர்முன்பேஒருவன்சொல்லுதல், நயன்இலநட்டார்கண்செய்தலின்தீது - விருப்பம்இலவாகியசெயல்களைத்தன்நட்டார்மாட்டுச்செய்தலினும்தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச்சொல்அச்செயலினும்மிகஇகழற்பாடுபயக்கும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
பயனில்லாதசொல்லைக்கொண்டாடுவானைமகனென்னாதொழிக; மக்களில்பதரென்றுசொல்லுக, இதுமக்கட்பண்பிலனென்றது.
Translation:
Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.
Explanation:
To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.
குறள் 193:
நயனிலன்என்பதுசொல்லும்பயனில
பாரித்துரைக்கும்உரை.
கலைஞர்உரை:
பயனற்றவைகளைப்பற்றிஒருவன்விரிவாகப்பேசிக்கொண்டிருப்பதேஅவனைப்பயனற்றவன்என்றுஉணர்த்தக்கூடியதாகும்.
மு.வஉரை:
ஒருவன்பயனில்லாபொருள்களைப்பற்றிவிரிவாகச்சொல்லும்சொற்கள், அவன்அறம்இல்லாதவன்என்பதைஅறிவிக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
பயனற்றசொற்களைவிரித்துப்பேசும்ஒருவன்பேச்சுஅவன்நீதியற்றவன்என்பதைக்காட்டிவிடும்.
பரிமேலழகர்உரை:
பயன்இலபாரித்துஉரைக்கும்உரை - பயன்இலவாகியபொருள்களைஒருவன்விரித்துஉரைக்கும்உரைதானே, நயன்இலன்என்பதுசொல்லும் - இவன்நீதிஇலன்என்பதனைஉரைக்கும். (உரையால்இவன் 'நயனிலன்' என்பதுஅறியலாம்என்பார், அதனைஉரைமேல்ஏற்றி, 'உரைசொல்லும்' என்றார்.).
மணக்குடவர்உரை:
நயனுடையனல்லனென்பதனையறிவிக்கும், பயனில்லாதவற்றைப்பரக்கவிட்டுச்சொல்லுஞ்சொற்கள், இதுபயனிலசொல்வார்இம்மையின்கண்பிறரால்இயம்பப்படாரென்றது.
Translation:
Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.
Explanation:
That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue".
குறள் 194:
நயன்சாராநன்மையின்நீக்கும்பயன்சாராப்
பண்பில்சொல்பல்லாரகத்து.
கலைஞர்உரை:
பயனற்றதும், பண்பற்றதுமானசொற்களைப்பலர்முன்பகர்தல்மகிழ்ச்சியைக்குலைத்து, நன்மையைமாய்க்கும்.
மு.வஉரை:
பயனோடுபொருந்தாதபண்புஇல்லாதசொற்களைப்பலரிடத்தும்சொல்லுதல், அறத்தோடுபொருந்தாமல்நன்மையிலிருந்துநீங்கச்செய்யும்.
சாலமன்பாப்பையாஉரை:
பயனற்ற, பண்பும்இல்லாதசொற்களைஒருவன்பலரிடமும்சொன்னால்அச்சொற்களேஅவனைநீதியுடன்சேராமல்நற்குணங்களிலிருந்துநீக்கிவிடும்.
பரிமேலழகர்உரை:
பயன்சாராப்பண்புஇல்சொல்பல்லார்அகத்து - பயனோடுபடாதபண்புஇல்சொற்களைஒருவன்பலரிடைச்சொல்லுமாயின், நயன்சாராநன்மையின்நீக்கும் - அவைஅவர்மாட்டுநீதியோடுபடாவாய், அவனைநற்குணங்களின்நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும்முதலாயசொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர்மாட்டு' என்பதும், எச்சமாகவருவிக்கப்பட்டன.).
மணக்குடவர்உரை:
ஒருவன்ஒருபயனைச்சாராதபண்பில்லாச்சொல்லைப்பலரிடத்துக்கூறுவானாயின்அவன்நடுசாராதுநன்மையினீங்கும். இதுவிரும்பப்படாமையுமன்றிநன்மையும்பயவாதென்றது.
Translation:
Unmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good.
Explanation:
The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.
குறள் 195:
சீர்மைசிறப்பொடுநீங்கும்பயனில
நீர்மையுடையார்சொலின்.
கலைஞர்உரை:
நல்லபண்புடையவர்பயனில்லாதசொற்களைக்கூறுவாரானால்அவருடையமேம்பாடுஅவர்க்குரியமதிப்போடுநீங்கிவிடும்.
மு.வஉரை:
பயனில்லாதசொற்களைநல்லபண்புஉடையவர்சொல்லுவாரானால், அவனுடையமேம்பாடுஅவர்க்குரியமதிப்போடுநீங்கிவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
இனியகுணத்தவர்பயனற்றசொற்களைச்சொன்னால், அவர்பெருமையும், புகழும்அப்பொழுதேநீங்கிவிடும்.
பரிமேலழகர்உரை:
பயன்இலநீர்மையுடையார்சொலின் - பயன்இலவாகியசொற்களைஇனியநீர்மையுடையார்சொல்லுவாராயின், சீர்மைசிறப்பொடுநீங்கும் - அவரதுவிழுப்பமும்அதனால்வரும்நன்குமதிக்கற்பாடும்உடனேநீங்கும். (நீர்மை: நீரின்தன்மை. 'சொலின்' என்பதுசொல்லாமையைவிளக்கிற்று.).
மணக்குடவர்உரை:
பயனில்லாதவற்றைநீர்மையுடையார்கூறுவாராயின்அவர்க்குஉண்டானசீர்மையும்சிறப்பும்போம்இதுநீர்மையுடையாராயினும்எல்லாநன்மையும்போமென்றது.
Translation:
Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.
Explanation:
If the good speak vain words their eminence and excellence will leave them.
குறள் 196:
பயனில்சொல்பராட்டுவானைமகன்எனல்
மக்கட்பதடியெனல்.
கலைஞர்உரை:
பயனற்றவைகளைச்சொல்லிப்பயன்பெறநினைப்பவனை, மனிதன்என்பதைவிடஅவன்ஒருபதர்என்பதேபொருத்தமானதாகும்.
மு.வஉரை:
பயனில்லாதசொற்களைப்பலமுறையும்சொல்லுகின்றஒருவனைமனிதன்என்றுசொல்லக்கூடாது, மக்களுள்பதர்என்றுசொல்லவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
பயனற்றசொற்களையேபலகாலமும்சொல்பவனைமனிதன்எனவேண்டா; மனிதருள்பதர்என்றேசொல்லுங்கள்.
பரிமேலழகர்உரை:
பயன்இல்சொல்பாராட்டுவானைமகன்எனல் - பயன்இல்லாதசொற்களைப்பலகாலுஞ்சொல்லுவானைமகன்என்றுசொல்லற்க, மக்கட்பதடிஎனல் - மக்களுள்பதர்என்றுசொல்லுக. (அல்விகுதிவியங்கோள், முன்எதிர்மறையினும், பின்உடன்பாட்டினும்வந்தது. அறிவுஎன்னும்உள்ளீடுஇன்மையின், 'மக்கள்பதடி' என்றார். இவைஆறுபாட்டானும்பயன்இல்லாதசொற்களைச்சொல்லுதலின்குற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பயனில்லாதவற்றைப்பலர்முன்புகூறுதல், விருப்பமில்லாதவற்றைநட்டார்மாட்டுச்செய்தலினுந்தீதே, இதுபயனிலசொல்லல்இம்மைமறுமையிரண்டின்கண்ணுந்தீமைபயக்குமென்றது.
Translation:
Who makes display of idle words' inanity,
Call him not man, -chaff of humanity!.
Explanation:
Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.
குறள் 197:
நயனிலசொல்லினுஞ்சொல்லுகசான்றோர்
பயனிலசொல்லாமைநன்று.
கலைஞர்உரை:
பண்பாளர்கள், இனிமையல்லாதசொற்களைக்கூடச்சொல்லிவிடலாம்; ஆனால்பயனில்லாதசொற்களைச்சொல்லாமல்இருப்பதேநல்லது.
மு.வஉரை:
அறம்இல்லாதவற்றைச்சொன்னாலும்சொல்லலாம், சான்றோர்பயன்இல்லாதசொற்களைச்சொல்லாமல்இருத்தல்நன்மையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நீதியற்றசொற்களைச்சொன்னாலும்பயனற்றசொற்களைச்சொல்லாமல்இருப்பதுசான்றோர்க்குநல்லது.
பரிமேலழகர்உரை:
நயன்இலசான்றோர்சொல்லினும்சொல்லுக - சான்றோர்நீதியோடுபடாதசொற்களைச்சொன்னாராயினும்அஃதுஅமையும், பயன்இலசொல்லாமைநன்று - அவர்பயன்இலவற்றைச்சொல்லாமைபெறின், அதுநன்று ('சொல்லினும்' எனவே, சொல்லாமைபெறப்பட்டது. நயன்இலவற்றினும்பயன்இலதீயஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
சான்றோர்நயனில்லாதவற்றைச்சொல்லினுஞ்சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச்சொல்லாமைநன்று. இதுசான்றோர்க்குஆகாதென்றது.
Translation:
Let those who list speak things that no delight afford,
'Tis good for men of worth to speak no idle word.
Explanation:
Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.
குறள் 198:
அரும்பயன்ஆயும்அறிவினார்சொல்லார்
பெரும்பயன்இல்லாதசொல்.
கலைஞர்உரை:
அரும்பயன்களைஆராய்ந்துஅறியக்கூடியஆற்றல்படைத்தவர், பெரும்பயன்விளைவிக்காதஎந்தச்சொல்லையும்பயன்படுத்தமாட்டார்.
மு.வஉரை:
அருமையானபயன்களைஆராயவல்லஅறிவைஉடையஅறிஞர், மிக்கபயன்இல்லாதசொற்களைஒருபோதும்சொல்லமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
அரியபயன்களைஆராயும்அறிவுடையோர், பெரும்பயன்இல்லாதசொற்களைச்சொல்வார்.
பரிமேலழகர்உரை:
அரும்பயன்ஆயும்அறிவினார் - அறிதற்குஅரியபயன்களைஆராயவல்லஅறிவினையுடையார், பெரும்பயன்இல்லாதசொல்சொல்லார் - மிக்கபயனுடையஅல்லாதசொற்களைச்சொல்லார். (அறிதற்குஅரியபயன்களாவன, வீடுபேறும், மேற்கதிச்செலவும்முதலாயின. 'பெரும்பயன்இல்லாத' எனவேபயன்சிறிதுஉடையனவும்ஒழிக்கப்பட்டன.).
மணக்குடவர்உரை:
அரியபொருளையாராயும்அறிவினையுடையார்சொல்லார்; பெரியபயனில்லாதசொற்களை, இதுமேற்கூறியகுற்றமெல்லாம்பயத்தலின்இதனையறிவுடையார்கூறாரென்றது.
Translation:
The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.
Explanation:
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.
குறள் 199:
பொருள்தீர்ந்தபொச்சாந்துஞ்சொல்லார்மருள்தீர்ந்த
மாசறுகாட்சியவர்.
கலைஞர்உரை:
மயக்கம்சிறிதுமில்லாதமாசற்றஅறிவுடையவர்மறந்தும்கூடப்பயனற்றசொற்களைச்சொல்லமாட்டார்.
மு.வஉரை:
மயக்கத்திலிருந்துதெளிந்தமாசற்றஅறிவைஉடையவர், பயன்நீங்கியசொற்களைஒருகால்மறந்தும்சொல்லமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
மயக்கமற்றதூயஅறிவினைஉடையவர், பொருளற்றசொற்களைமறந்தும்சொல்லார்.
பரிமேலழகர்உரை:
பொருள்தீர்ந்தபொச்சாந்தும்சொல்லார் - பயனின்நீங்கியசொற்களைமறந்தும்சொல்லார், 'மருள்தீர்ந்த' மாசுஅறுகாட்சியவர் - மயக்கத்தின்நீங்கியதூயஅறிவினையுடையார். "('தூயஅறிவு' மெய்யறிவு. 'மருள்தீர்ந்த' என்னும்பெயரெச்சம்காட்சியவர்என்னும்குறிப்புப்பெயர்கொண்டது. இவைமூன்றுபாட்டானும்பயன்இலசொல்லாமையின்குணம்கூறப்பட்டது).
மணக்குடவர்உரை:
பொருளில்லாதசொல்லைமறந்துஞ்சொல்லார்; மயக்கந்தீர்ந்தகுற்றமற்றதெளிவினையுடையார், இதுதெளிவுடையார்கூறாரென்றது.
Translation:
The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour, speak words of vanity.
Explanation:
Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.
குறள் 200:
சொல்லுகசொல்லிற்பயனுடையசொல்லற்க
சொல்லிற்பயனிலாச்சொல்.
கலைஞர்உரை:
பயனளிக்காதசொற்களைவிடுத்துமனத்தில்பதிந்துபயனளிக்கக்கூடியசொற்களையேகூறவேண்டும்.
மு.வஉரை:
சொற்களில்பயன்உடையசொற்களைமட்டுமேசொல்லவேண்டும், பயன்இல்லாதவைகளாகியசொற்களைசொல்லவேகூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
சொற்களில்அறம், பொருள், இன்பம்ஆகியபயன்தரும்சொற்களையேசொல்லுக; பயனற்றசொற்களைச்சொல்லவேண்டா.
பரிமேலழகர்உரை:
சொல்லில்பயன்உடையசொல்லுக - சொற்களில்பயன்உடையசொற்களைச்சொல்லுக, சொல்லில்பயனில்லாச்சொல்சொல்லற்க - சொற்களில்பயன்இல்லாதசொற்களைச்சொல்லாதுஒழிக. ('சொல்லில்' என்பதுஇருவழியும்மிகையாயினும், சொற்பொருட்பின்வருநிலைஎன்னும்அணிநோக்கிவந்தது. "வைகலும்வைகல்வரக்கண்டும்" (நாலடி 39) என்பதுபோல. இதனால்சொல்லப்படுவனவும்படாதனவும்நியமிக்கப்பட்டன.).
மணக்குடவர்உரை:
சொல்லுவனாயின்பயனுடையசொற்களைச்சொல்லுக: சொற்களிற்பயனில்லாதசொற்களைச்சொல்லாதொழிக. இதுபயனிலசொல்லாமைவேண்டுமென்றது.
Translation:
If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word.
Explanation:
Speak what is useful, and speak not useless words.
Comments
Post a Comment