241-250

 குறள் 241:

அருட்செல்வம்செல்வத்துள்செல்வம்பொருட்செல்வம்
பூரியார்கண்ணும்உள.
கலைஞர்உரை:
கொடியஉள்ளம்கொண்டஇழிமக்களிடம்கூடக்கோடிக்கணக்கில்செல்வம்குவிந்திருக்கலாம்; ஆனாலும்அந்தச்செல்வம்அருட்செல்வத்துக்குஈ.டாகாது.
மு.வஉரை:
பொருள்களாகியசெல்வங்கள்இழிந்தவரிடத்திலும்உள்ளன; (உயர்ந்தவரிடத்தில்மட்டுமேஉள்ள) அருளாகியசெல்வமேசெல்வங்களில்சிறந்தசெல்வமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
செல்வங்கள்பலவற்றுள்ளும்சிறந்ததுஅருள்என்னும்செல்வமே. பொருட்செல்வம்இழிந்தமனிதரிடமும்உண்டு.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, தொடர்புபற்றாதுஇயல்பாகஎல்லாஉயிர்கள்மேலும்செல்வதாகியகருணை. இல்லறத்திற்குஅன்புடைமைபோலஇதுதுறவறத்திற்குச்சிறந்தமையின்முன்கூறப்பட்டது.)
செல்வத்துள்செல்வம்அருட்செல்வம் - செல்வங்கள்பலவற்றுள்ளும்ஆராய்ந்தெடுக்கப்பட்டசெல்வமாவதுஅருளான்வரும்செல்வம், பொருட்செல்வம்பூரியார்கண்ணும்உள - அஃதுஒழிந்தபொருளான்வரும்செல்வங்கள்இழிந்தார்கண்ணும்உளவாம்ஆகலான். ( அருளான்வரும்செல்வமாவது, உயிர்களைஓம்பிஅவ்வறத்தான்மேம்படுதல். உயர்ந்தார்கண்ணேஅல்லதுஇல்லாதஅருட்செல்வமேசிறப்புடையசெல்வம், ஏனைநீசர்கண்ணும்உளவாம்பொருட்செல்வங்கள்சிறப்புஇலஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
செல்வத்துள்வைத்துச்செல்வமாவதுஅருளுடைமையாகியசெல்வமாம்; பொருட்செல்வமானதுகீழாயினோர்மாட்டும்உளவாதலால். இஃதுஅருள்நிலைகூறிற்று.
Translation:
Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the vilest too possess.
Explanation:
The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.

குறள் 242:
நல்லாற்றாள்நாடிஅருளாள்கபல்லாற்றால்
தேரினும்அஃதேதுணை.
கலைஞர்உரை:
பலவழிகளால்ஆராய்ந்துகண்டாலும்அருள்உடைமையேவாழ்க்கைக்குத்துணையாய்விளங்கும்நல்வழிஎனக்கொள்ளல்வேண்டும்.
மு.வஉரை:
நல்லவழியால்ஆராய்ந்துஅருளுடையவர்களாகவிளங்கவேண்டும்; பலவழிகளால்ஆராய்ந்துகண்டாலும்அருளேவாழ்க்கைக்குத்துணையாகஇருக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லநெறியில்வாழ்ந்து, நமக்குஉதவும்அறம்எதுஎனஆய்ந்து, அருளுடன்வாழ்க; எல்லாச்சமயநெறிகளால்ஆய்ந்தாலும்அருளேநமக்குத்துணையாகும்.
பரிமேலழகர்உரை:
நல்ஆற்றான்நாடிஅருள்ஆள்க - அளவைகளானும்பொருந்துமாற்றானும்நன்றானநெறியிலேநின்று, நமக்குத்துணையாம்அறம்யாது? என்றுஆராய்ந்து, அருளுடையராக, பல்ஆற்றான்தேரினும்துணைஅஃதே - ஒன்றையொன்றுஒவ்வாதசமயநெறிகள்எல்லாவற்றானும்ஆராய்ந்தாலும்துணையாவதுஅவ்வருளே, பிறிதுஇல்லை. (அளவைகளாவன: பொறிகளான்காணும்காட்சியும், குறிகளான்உய்த்துணரும்அனுமானமும், கருத்தாமொழிஆகியஆகமமும்எனமூன்று. ஒப்புப்பற்றிஉணரும்உவமையும், இங்ஙனம்அன்றாயின்இதுகூடாதுஎன்றுஉணரும்அருத்தாபத்தியும், உண்மைக்குமாறாயஇன்மையும்எனஇவற்றைக்கூட்டி, ஆறுஎன்பாரும்உளர். இவையும்ஒருஆற்றான்அவற்றுள்ளேஅடங்குதலின்மூன்றுஎன்றலேகருத்து. பொருந்தும்ஆறாவது, 'இதுகூடும் , இதுகூடாது' எனத்தன்கண்ணேதோன்றுவது. இதனைவடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பதுவேற்றுமைமயக்கம். ஒன்றைஒன்றுஒவ்வாமையாவதுமதவேறுபாட்டான்அளவைகளும்பொருள்களும்தம்முள்மாறுகோடல்; அன்னவாயினும், அருள்துணைஎன்றற்கண்ஒக்கும்என்பதாம். உயிரைவிட்டுநீங்காதுஇருமையினும்உதவலின், 'துணை' என்றார். இவைஇரண்டுபாட்டானும்அருளினதுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நல்லவழியாலேநாடிஅருளையுண்டாக்குக: பலவழியினும்ஓடியாராயினும்தமக்குஅவ்வருளேதுணையாம். நல்லாற்றானாடியருளாள்கஎன்றதுஅருளுடைமையுண்டாகப்பலவறங்களையுஞ்செய்கவென்றவாறு. இஃதுஅருளுடைமைவேண்டுமென்றது.
Translation:
The law of 'grace' fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.
Explanation:
(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss).

குறள் 243:
அருள்சேர்ந்தநெஞ்சினார்க்கில்லைஇருள்சேர்ந்த
இன்னாஉலகம்புகல்.
கலைஞர்உரை:
அருள்நிறைந்தமனம்படைத்தவர்அறியாமைஎனும்இருள்சூழ்ந்ததுன்பஉலகில்உழலமாட்டார்.
மு.வஉரை:
அறியாமையாகியஇருள்பொருந்தியதுன்பஉலகில்இருந்துவாழும்வாழ்க்கை, அருள்பொருந்தியநெஞ்சம்உடையவர்களுக்குஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
அருள்நிறைந்தநெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்பஉலகமாகியநரகம்புகும்நெருக்கடிஇல்லை.
பரிமேலழகர்உரை:
இருள்சேர்ந்தஇன்னாஉலகம்புகல் - இருள்செறிந்ததுன்பஉலகத்துள்சென்றுபுகுதல், அருள்சேர்ந்தநெஞ்சினார்க்குஇல்லை - அருள்செறிந்தநெஞ்சினைஉடையார்க்குஇல்லை. ('இருள்செறிந்ததுன்பஉலகம்' என்றது, திணிந்தஇருளைஉடைத்தாய்த்தன்கண்ணேபுக்கார்க்குத்துன்பம்செய்வதோர்நரகத்தை, அதுகீழுலகத்துள்ஓர்இடம்ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அருளைப்பொருந்தினநெஞ்சினையுடைவர்க்குஇருளைப்பொருந்தினநரகலோகம்புகுதலில்லை. இதுநரகம்புகாரென்றது.
Translation:
They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world, where darkness drear abides.
Explanation:
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.

குறள் 244:
மன்னுயிர்ஓம்பிஅருளாள்வார்க்குஇல்லென்ப
தன்னுயிர்அஞ்சும்வினை.
கலைஞர்உரை:
எல்லாஉயிர்களிடத்தும்கருணைக்கொண்டுஅவற்றைக்காத்திடுவதைக்கடமையாகக்கொண்டசான்றோர்கள்தமதுஉயிரைப்பற்றிக்கவலைஅடையமாட்டார்கள்.
மு.வஉரை:
தன்உயிரின்பொருட்டுஅஞ்சிவாழ்கின்றதீவினை, உலகில்நிலைபெற்றுள்ளமற்றஉயிர்களைப்போற்றிஅருளுடையவனாகஇருப்பவனுக்குஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
நிலைத்துவரும்உயிர்களைக்காத்துஅவற்றின்மீதுஅருள்உள்ளவனுக்குத்தன்உயிரைப்பற்றியபயம்வராது.
பரிமேலழகர்உரை:
மன்உயிர்ஓம்பிஅருள்ஆள்வாற்கு - நிலைபேறுடையஉயிர்களைப்பேணிஅவற்றின்கண்அருளுடையன்ஆவானுக்கு, தன்உயிர்அஞ்சும்வினைஇல்என்ப - தன்உயிர்அஞ்சுதற்குஏதுவாகியதீவினைகள்உளவாகாஎன்றுசொல்லுவர்அறிந்தோர். (உயிர்கள்எல்லாம்நித்தம்ஆகலின், 'மன்உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம்நோக்கிஅஞ்சுதல். அன்னஅறத்தினோன்கொலைமுதலியபாவங்கள்செய்யான்எனவேமறுமைக்கண்நரகம்புகாமைக்குஏதுகூறியவாறாயிற்று.).
மணக்குடவர்உரை:
நிலைபெற்றஉயிரைஓம்பிஅருளைஆள்வானுக்குத்தன்னுயிரஞ்சவரும்வினைவருவதில்லையென்றுசொல்லுவார். இதுதீமைவாராதென்றது.
Translation:
Who for undying souls of men provides with gracious zeal,
In his own soul the dreaded guilt of sin shall never feel.
Explanation:
(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).

குறள் 245:
அல்லல்அருளாள்வார்க்குஇல்லைவளிவழங்கும்
மல்லன்மாஞாலங்கரி.
கலைஞர்உரை:
உள்ளத்தில்ஊறிடும்அருளின்இயக்கத்தினால்துன்பத்தைஉணராமல்கடமையாற்றலாம்என்பதற்கு, காற்றின்இயக்கத்தினால்வலிமையுடன்திகழும்இந்தப்பெரியஉலகமேசான்று.
மு.வஉரை:
அருளுடையவராகவாழ்கின்றவர்களுக்குத்துன்பம்இல்லை, காற்றுஇயங்குகின்றவளம்பெரியஉலகத்தில்வாழ்வோரேஇதற்குச்சான்றுஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
அருள்உடையவர்க்குஇவ்வுலகில்துன்பம்வராது; இதற்குக்காற்றுஉலவும், வளம்மிக்கஇந்தப்பேருலகமேசான்று.
பரிமேலழகர்உரை:
அருள்ஆள்வார்க்குஅல்லல்இல்லை - அருளுடையார்க்குஇம்மையினும்ஒருதுன்பம்உண்டாகாது, வளிவழங்கும்மல்லல்மாஞாலம்கரி - அதற்குக்காற்றுஇயங்குகின்றவளப்பத்தைஉடையபெரியஞாலத்துவாழ்வார்சான்று. ( சான்றுஆவார்தாம்கண்டுதேறியபொருளைக்காணாதார்க்குத்தேற்றுதற்குஉரியவர். அருள்ஆள்வார்க்குஅல்லல்உண்டாகஒருகாலத்தும்ஒருவரும்கண்டறிவார்இன்மையின், இன்மைமுகத்தான்ஞாலத்தார்யாவரும்சான்றுஎன்பார். 'வளிவழங்கும்மல்லல்மாஞாலம்கரி' என்றார். எனவே, இம்மைக்கண்என்பதுபெற்றாம். 'ஞாலம்' ஆகுபெயர். இவைமூன்றுபாட்டானும்அத்துணையுடையார்க்குஇருமையினும்துன்பம்இல்லாமைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அருளுடையார்க்குஅல்லலில்லை: அதற்குச்சான்றுகாற்றியங்குகின்றவளப்பத்தினையுடையபெரியவுலகம். இஃதுஅருளுடையார்க்குஅல்லலின்மைஉலகத்தார்மாட்டேகாணப்படுமென்றது.
Translation:
The The teeming earth's vast realm, round which the wild winds blow,
Is witness, men of 'grace' no woeful want shall know.
Explanation:
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.

குறள் 246:
பொருள்நீங்கிப்பொச்சாந்தார்என்பர்அருள்நீங்கி
அல்லவைசெய்தொழுகுவார்.
கலைஞர்உரை:
அருளற்றவர்களாய்த்தீமைகளைச்செய்துவாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமைமறந்தவர்களாகவும்ஆவர்.
மு.வஉரை:
அருள்இல்லாதவராய்அறமல்லாதவைகளைச்செய்துநடப்பவர்களை, உறுதிப்பொருளாகியஅறத்திலிருந்துநீங்கித்தம்வாழ்க்கையின்குறிக்கோளைமறந்தவர்என்பார்.
சாலமன்பாப்பையாஉரை:
அருள்இல்லாமல்தீமைகளைச்செய்துவாழ்பவரைப்பொருளையும்இழந்துதாம்துன்பம்அடைந்ததையும்மறந்தவர்என்றுஅறிஞர்கூறுவர்.
பரிமேலழகர்உரை:
அருள்நீங்கிஅல்லவைசெய்துஒழுகுவார் - உயிர்கள்மாட்டுச்செய்யப்படும்அருளைத்தவிர்ந்துதவிரப்படும்கொடுமைகளைச்செய்துஒழுகுவாரை, பொருள்நீங்கிப்பொச்சாந்தார்என்பர் - முன்னும்உறுதிப்பொருளைச்செய்யாதுதாம்துன்புறுகின்றமையைமறந்தவர்என்றுசொல்லுவர்நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம்மூன்றனையும்அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறுஒழுகார்என்பதுகருத்து.).
மணக்குடவர்உரை:
முற்பிறப்பின்கண்அருளினின்றுநீங்கிஅல்லாதவற்றைச்செய்தொழுகினவர்இப்பிறப்பின்கண்பொருளினின்றுநீங்கிமறவியுமுடையவரென்றுசொல்லுவர். இதுபொருளில்லையாமென்றது.
Translation:
AGain of true wealth oblivious they eschew,
Who 'grace' forsake, and graceless actions do.
Explanation:
(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer).

குறள் 247:
அருளில்லார்க்குஅவ்வுலகம்இல்லைபொருளில்லார்க்கு
இவ்வுலகம்இல்லாகியாங்கு.
கலைஞர்உரை:
பொருள்இல்லாதவர்களுக்குஇல்லறவாழ்க்கைசிறப்பாகஇராது. அதுபோலவேகருணைஉள்ளம்இல்லாதவர்களின்துறவறவாழ்க்கையும்சிறப்பாகஅமையாது.
மு.வஉரை:
பொருள்இல்லாதவர்க்குஇவ்வுலகத்துவாழ்க்கைஇல்லாதவாறுபோலஉயிர்களிடத்தில்அருள்இல்லாதவர்க்குஅவ்வுலகத்துவாழ்க்கைஇல்லையாம்.
சாலமன்பாப்பையாஉரை:
பொருள்இல்லாதவர்க்குஇப்பூவுலகஇன்பம்இல்லாததுபோலவே, அருள்இல்லாதவர்க்குமேல்உலகஇன்பம்இல்லை.
பரிமேலழகர்உரை:
அருள்இல்லார்க்குஅவ்வுலகம்இல்லை - உயிர்கள்மேல்அருள்இல்லாதார்க்குவீட்டுலகத்துஇன்பம்இல்லை, பொருள்இல்லார்க்குஇவ்வுலகம்இல்லாகியாங்கு - பொருள்இல்லாதார்க்குஇவ்வுலகத்துஇன்பம்இல்லையாயினாற்போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பனஆகுபெயர். இவ்வுலகத்துஇன்பங்கட்குப்பொருள்காரணமானாற்போலஅவ்வுலகத்துஇன்பங்கட்குஅருள்காரணம்என்பதாயிற்று.).
மணக்குடவர்உரை:
அருள்இல்லாதார்க்குமேலுலகமுறுங்காட்சியில்லை; பொருள்இல்லாதார்க்குஇவ்வுலகின்கண்இன்பமுறுங்காட்சியில்லையானாற்போல. இஃதுஅருளில்லாதார்சுவர்க்கம்புகாரென்றது.
Translation:
As to impoverished men this present world is not;
The 'graceless' in you world have neither part nor lot.
Explanation:
As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.

குறள் 248:
பொருளற்றார்பூப்பர்ஒருகால்அருளற்றார்
அற்றார்மற்றாதல்அரிது.
கலைஞர்உரை:
பொருளைஇழந்தவர்அதனைமீண்டும்தேடிப்பெறலாம். அருளைஇழந்தால்இழந்ததுதான்; மீண்டும்பெறஇயலாது.
மு.வஉரை:
பொருள்இல்லாதவர்ஒருகாலத்தில்வளம்பெற்றுவிளங்குவர், அருள்இல்லாதவர்வாழ்க்கையின்பயம்அற்றவரேஅவர்ஒருகாலத்திலும்சிறந்துவிளங்குதல்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
பொருள்இல்லாமல்ஏழையாய்ப்போனவர்திரும்பவும்செல்வத்தால்பொலிவுபெறலாம்; அருள்இல்லாமல்போனவரோ, போனவர்தாம்; மீண்டும்அருள்உள்ளவராய்ஆவதுகடினம்.
பரிமேலழகர்உரை:
பொருள்அற்றார்ஒருகால்பூப்பர்- ஊழான்வறியராயினார்அதுநீங்கிப்பின்ஒருகாலத்துச்செல்வத்தால்பொலிவர், அருள்அற்றார்அற்றார்மற்றுஆதல்அரிது - அவ்வாறுஅன்றிஅருளிலாதார்பாவம்அறாமையின்அழிந்தாரே; பின்ஒருகாலத்தும்ஆதல்இல்லை. ( 'மற்று' வினைமாற்றின்கண்வந்தது, மேல்பொருள்இன்மையொடுஒருவாற்றான்ஒப்புமைகூறினார்ஆகலின், அதுமறுத்து, பிறஆற்றான்அதனினும்கொடியதுஎன்பதுகூறியவாறு.).
மணக்குடவர்உரை:
பொருளில்லாதார்ஒருகாலத்தேபொருளுடையராதலும்கூடும்; அருளில்லாதார்கெட்டார், பின்புஆக்கமுண்டாகாது. இதுபொருளின்மையேயன்றிஎல்லாக்கேடுமுண்டாமென்றது.
Translation:
Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose 'benevolence', lose all; nothing can change their doom.
Explanation:
Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.

குறள் 249:
தெருளாதான்மெய்ப்பொருள்கண்டற்றால்தேரின்
அருளாதான்செய்யும்அறம்.
கலைஞர்உரை:
அறிவுத்தெளிவுஇல்லாதவன்ஒருநூலின்உண்மைப்பொருளைக்கண்டறியமுடியுமா? அதுபோலத்தான்அருள்இல்லாதவன்செய்யும்அறச்செயலும்இருக்கும்.
மு.வஉரை:
அருள்மேற்கொள்ளாதவன்செய்கின்றஅறச்செயலைஆராய்ந்தால், அஃதுஅறிவுதெளியாதவன்ஒருநூலின்உண்மைப்பொருளைக்கண்டாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்துள்அருள்இல்லாதவன்செய்யும்அறத்தைஆராய்ந்துபார்த்தால், ஞானம்இல்லாதவன்மெய்ப்பொருளைஉணர்ந்ததுபோலஆகும்.
பரிமேலழகர்உரை:
அருளாதான்செய்யும்அறம்தேரின் - உயிர்கள்மாட்டுஅருள்செய்யாதவன்செய்யும்அறத்தைஆராயின், தெருளாதான்மெய்ப்பொருள்கண்டற்று - ஞானம்இல்லாதவன்ஒருகால்மெய்ப்பொருளைஉணர்ந்தாற்போலும். (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில்சொல்லும்பொருள். நிலைபெற்றஞானம்இல்லாதவன்இடையேமெய்ப்பொருளைஉணர்ந்தால்அதனைத்தன்ஞானம்இலாமையால்தானேஅழித்துவிடும் : அதுபோலஅருளாதான்இடையேஅறஞ்செய்தால்அதனைத்தன்அருளாமையால்தானேஅழித்துவிடும்என்பதுஆயிற்று: ஆகவே, பிறஅறங்கட்கெல்லாம்அருள்உடைமைமூலம்என்பதுபெற்றாம். இவைநான்குபாட்டானும்அத்துணைஇல்லாதார்க்குவரும்குற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தெளிவில்லாதான்மெய்ப்பொருளைத்தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான்செய்யும்அறமும். இஃதுஅறஞ்செய்யவும்மாட்டாரென்றது.
Translation:
When souls unwise true wisdom's mystic vision see,
The 'graceless' man may work true works of charity.
Explanation:
If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

குறள் 250:
வலியார்முன்தன்னைநினைக்கதான்தன்னின்
மெலியார்மேல்செல்லுமிடத்து.
கலைஞர்உரை:
தன்னைவிடமெலிந்தவர்களைத்துன்புறுத்தநினைக்கும்போது, தன்னைவிடவலியவர்முன்னால்அஞ்சிநிற்கும்நிலைமைதனக்குஇருப்பதைமறந்துவிடக்கூடாது.
மு.வஉரை:
(அருள்இல்லாதவன் ) தன்னைவிடமெலிந்தவர்மேல்துன்புறுத்தசெல்லும்போது, தன்னைவிடவலியவரின்முன்தான்அஞ்சிநிற்கும்நிலைமையைநினைக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
அருள்இல்லாதவள், தன்னைவிடஎளியமனிதரைத்துன்புறுத்தச்செல்லும்போது, தன்னைவிடபலசாலிதன்னைத்துன்புறுத்தவந்தால்அவருக்குமுன்தான்அஞ்சிநிற்பதாகஎண்ணிப்பார்க்க.
பரிமேலழகர்உரை:
வலியார்முன்தன்னைநினைக்க - தன்னின்வலியார்தன்னைநலியவரும்பொழுதுஅவர்முன்தான்அஞ்சிநிற்கும்நிலையினைநினைக்க, தான்தன்னின்மெலியார்மேல்செல்லுமிடத்து - அருளில்லாதவன்தன்னின்எளியார்மேல்தான்நலியச்செல்லும்பொழுது. ('மெலியார்' எனச்சிறப்புடையஉயர்திணைமேல்கூறினாராயினும், ஏனையஅஃறிணையும்கொள்ளப்படும். அதனைநினைக்கவே, இவ்வுயிர்க்கும்அவ்வாறேஅச்சம்ஆம்என்றுஅறிந்து, அதன்மேல்அருள்உடையன்ஆம்என்பதுகருத்து. இதனால்அருள்பிறத்தற்குஉபாயம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தாம்தம்மின்மெலியார்மேல்வெகுண்டெழுமிடத்துத்தம்மின்வலியார்முன்தாம்நிற்கும்நிலையைநினைக்க.
Translation:
When weaker men you front with threat'ning brow,
Think how you felt in presence of some stronger foe.
Explanation:
When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.


Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290