குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:தவம்.
குறள்வரிசை: 261 262 263 264 265 266 267 268 269 270
குறள் 261:
உற்றநோய்நோன்றல்உயிர்க்குறுகண்செய்யாமை
அற்றேதவத்திற்குரு.
கலைஞர்உரை:
எதையும்தாங்கும்இதயத்தைப்பெற்றிருப்பதும், எந்தஉயிருக்கும்தீங்குசெய்யாமல்இருப்பதும்தான்தவம்என்றுகூறப்படும்.
மு.வஉரை:
தான்பெற்றதுன்பத்தைப்பொறுத்தலும்மற்றஉயிர்களுக்குத்துன்பம்செய்யாதிருத்தலும்ஆகியவைகளேதவத்திற்குவடிவமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறரால்தனக்குச்செய்யப்படும்துன்பங்களைப்பொறுத்துக்கொள்வது, துன்பம்செய்தவர்க்கும்துன்பம்செய்யாதிருப்பதுஎன்னும்இவ்வளவுதான், தவம்என்பதன்இலக்கணம்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, மனம்பொறிவழிபோகாதுநிற்றற்பொருட்டுவிரதங்களான்உண்டிசுருக்கலும், கோடைக்கண்வெயில்நிலைநிற்றலும், மாரியினும்பனியினும்நீர்நிலைநிற்றலும்முதலியசெயல்களைமேற்கொண்டு, அவற்றால்தம்உயிர்க்குவரும்துன்பங்களைப்பொறுத்துப்பிறஉயிர்களைஓம்புதல்,புலான்மறுத்துஉயிர்கண்மேல்அருள்முதிர்ந்துழிச்செய்யப்படுவதுஆகலின், இதுபுலால்மறுத்தலின்பின்வைக்கப்பட்டது.)
தவத்திற்குஉரு-தவத்தின்வடிவு; உற்றநோய்நோன்றல்உயிர்க்குஉறுகண்செய்யாமைஅற்றே - உண்டிசுருக்கல்முதலியவற்றால்தம்உயிர்க்குவரும்துன்பங்களைப்பொறுத்தலும், தாம்பிறஉயிர்கட்குத்துன்பம்செய்யாமையும்ஆகியஅவ்வளவிற்று (மற்றுள்ளனஎல்லாம்இவற்றுள்ளேஅடங்குதலின், 'அற்றே,' எனத்தேற்றேகாரம்கொடுத்தார். 'தவத்திற்குஉருஅற்று' என்பது, 'யானையதுகோடுகூரிது' 'என்பதனை,' யானைக்குக்கோடுகூரிது, என்றாற்போலஆறாவதன்பொருட்கண்நான்காவதுவந்தமயக்கம்இதனால்தவத்தினதுஇலக்கணம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தமக்குஉற்றநோயைப்பொறுத்தலும்பிறவுயிர்க்குநோய்செய்யாமையுமாகியஅத்தன்மையேதவத்திற்குவடிவமாம்.
Translation:
To bear due penitential pains, while no offence
He causes others, is the type of 'penitence'.
Explanation:
The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.
262. தவமும்தவமுடையார்க்குஆகும்அதனை
அஃதிலார்மேற்கொள்வது.
கலைஞர்உரை:
உறுதிப்பாடும், மனஅடக்கமும்உடையவருக்கேதவத்தின்பெருமைவாய்க்கும். எனவேகட்டுப்பாடானஒழுக்கம்இல்லாதவர்கள், தவத்தைமேற்கொள்வதுவீண்செயலேயாகும்.
மு.வஉரை:
தவக்கோலமும்தவஒழுக்கமும்உடையவர்க்கேபொருந்துவதாகும்; அக்கோலத்தைதவஒழுக்கம்இல்லாதவர்மேற்கொள்வதுவீண்முயற்சியாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
முற்பிறப்பில்தவநோக்கம்பெற்றிருந்தவர்க்கேஇப்பிறப்பில்தவம்செய்யநேரும். அத்தகையநோக்கம்இல்லாதவர், இப்போதுதவத்தைமேற்கொள்வதும்வீண்தான்.
பரிமேலழகர்உரை:
தவமும்தவம்உடையார்க்குஆகும் - பயனேஅன்றித்தவந்தானும்உண்டாவதுமுன்தவம்உடையார்க்கே, அதனைஅஃதுஇலார்மேற்கொள்வதுஅவம் - ஆகலான், அத்தவத்தைஅம்முன்தவம்இல்லாதார்முயல்வதுபயன்இல்முயற்சியாம். (பரிசயத்தால்அறிவும்ஆற்றலும்உடையராய்முடிவுபோக்கலின், 'தவம்உடையார்க்குஆகும்' என்றும், அஃதுஇல்லாதார்க்குஅவைஇன்மையான்முடிவுபோகாமையின், 'அவம்ஆம்' என்றும்கூறினார்.).
மணக்குடவர்உரை:
தவஞ்செய்தலும்முன்புநல்வினைசெய்தார்க்குவரும்; அந்நல்வினையில்லாதார்அத்தவத்தைமேற்கொள்வதுபயனில்லை. இதுதவமிலார்க்குத்தவம்வாராதுவரினுந்தப்புமென்றது.
Translation:
To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretence.
Explanation:
Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now).
263. துறந்தார்க்குத்துப்புரவுவேண்டிமறந்தார்கொல்
மற்றையவர்கள்தவம்.
கலைஞர்உரை:
துறவிகளுக்குத்துணைநிற்கவிரும்புகிறோம்என்பதற்காகத்தாங்கள்கடைப்பிடிக்கவேண்டியதவஒழுக்கத்தைமற்றவர்கள்மறந்துவிடக்கூடாது.
மு.வஉரை:
துறந்தவர்க்குஉணவுமுதலியனக்கொடுத்துஉதவவேண்டும்எனவிரும்பிமற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம்செய்தலைமறந்தார்களோ?.
சாலமன்பாப்பையாஉரை:
துறவுமேற்கொண்டவர்களுக்குஉதவஎண்ணி, மற்றவர்கள்தவம்செய்வதைமறந்துஇருப்பார்கள்போலும்.
பரிமேலழகர்உரை:
மற்றையவர்கள் - இல்லறத்தையேபற்றிநிற்பார், துறந்தார்க்குத்துப்புரவுவேண்டித்தவம்மறந்தார்கொல் - துறந்தார்க்குஉண்டியும்மருந்தும்உறையுளும்உதவலைவிரும்பித்தாம்தவம்செய்தலைமறந்தார்போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்குஎய்தற்' பயத்ததுஆகலின் (குறள்265) யாவராலும்செய்யப்படுவதாயதவத்தைத்தாம்செய்யும்தானத்தின்மேல்விருப்பம்மிகுதியால்மறந்தார்போலும். எனவே, தானத்தினும்தவம்மிக்கதுஎன்பதுபெற்றாம்.).
மணக்குடவர்உரை:
துறந்தவர்களுக்குஉணவுகொடுத்தலைவேண்டித்தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார்தவஞ்செய்தலை. இதுதானத்திலும்தவம்மிகுதியுடைத்தென்றது.
Translation:
Have other men forgotten 'penitence' who strive
To earn for penitents the things by which they live?.
Explanation:
It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?.
264. ஒன்னார்த்தெறலும்உவந்தாரைஆக்கலும்
எண்ணின்தவத்தான்வரும்.
கலைஞர்உரை:
மனஉறுதியும்கட்டுப்பாடும்கொண்டுதவமென்னும்நோன்புவலிமையுடையதாகஅமைந்தால்தான், எண்ணியமாத்திரத்தில்பகைவரைவீழ்த்தவும்நண்பரைக்காக்கவும்முடியும்.
மு.வஉரை:
தீமைசெய்யும்பகைவரைஅடக்குதலும்நன்மைசெய்யும்நண்பரைஉயர்த்துதலும்நினைத்தஅளவில்தவத்தின்வலிமையால்உண்டாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்களைமாற்றவும், நண்பர்களைப்பெருக்கவும்எண்ணினால், தவத்தால்அதைச்செய்யமுடியும்.
பரிமேலழகர்உரை:
ஒன்னார்த்தெறலும் - அறத்திற்குப்பகையாய்அழிவுசெய்தாரைக்கெடுத்தலும், உவந்தாரைஆக்கலும் - அதனைஉவந்தாரைஉயர்த்தலும்ஆகியஇவ்விரண்டையும்எண்ணின்தவத்தான்வரும் - தவம்செய்வார்நினைப்பராயின், அவர்தவவலியான்அவைஅவர்க்குஉளவாம். (முற்றத்துறந்தார்க்குஒன்னாரும்உவந்தாரும்உண்மைகூடாமையின், தவத்திற்குஏற்றிஉரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்குஅவைஎண்ணாமைஇயல்புஎன்பதுபெற்றாம். ஒன்னார்பெரியராயினும், உவந்தார்சிறியராயினும், கேடும்ஆக்கமும்நினைந்ததுணையானேவந்துநிற்கும்எனத்தவம்செய்வார்மேலிட்டுத்தவத்தினதுஆற்றல்கூறியவாறு.).
மணக்குடவர்உரை:
இவ்விடத்துப்பகைவரைதெறுதலும், நட்டோரையாக்குதலுமாகியவலிஆராயின்முன்செய்ததவத்தினாலேவரும். இதுபிறரையாக்குதலும்கெடுத்தலுந்தவத்தினாலேவருமென்றது.
Translation:
Destruction to his foes, to friends increase of joy.
The 'penitent' can cause, if this his thoughts employ.
Explanation:
If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities.
265. வேண்டியவேண்டியாங்கெய்தலால்செய்தவம்
ஈண்டுமுயலப்படும்.
கலைஞர்உரை:
உறுதிமிக்கநோன்பினால்விரும்பியதைவிரும்பியவாறுஅடையமுடியுமாதலால், அதுவிரைந்துமுயன்றுசெய்யப்படுவதாகும்.
மு.வஉரை:
விரும்பியபயன்களைவிரும்பியவாறேஅடையமுடியுமாகையால்செய்யத்தக்கதவம்இந்நிலையிலும் (இல்லறவாழ்க்கையிலும்) முயன்றுசெய்யப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
விரும்பியவற்றைவிரும்பியபடியேஅடையமுடியுமாதலால்இப்பூமியில்தவம்முயன்றுசெய்யப்படும்.
பரிமேலழகர்உரை:
வேண்டியவேண்டியாங்குஎய்தலால் - முயன்றால்மறுமைக்கண்தாம்வேண்டியபயன்கள்வேண்டியவாறேபெறலாம்ஆதலால்; செய்தவம்ஈண்டுமுயலப்படும் - செய்யப்படுவதாயதவம்இம்மைக்கண்அறிவுடையோரான்முயலப்படும். ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பதுபெற்றாம். மேற்கதி, வீடுபேறுகள்தவத்தானன்றிஎய்தப்படாஎன்பதாம். இவைநான்குபாட்டானும்தவத்ததுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
விரும்பினவிரும்பினபடியேவருதலால், தவஞ்செய்தலைஇவ்விடத்தேமுயலவேண்டும். இதுபோகநுகர்ச்சியும்இதனானேவருமென்றது.
Translation:
That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful 'penance' done.
Explanation:
Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).
266. தவஞ்செய்வார்தங்கருமஞ்செய்வார்மற்றல்லார்
அவஞ்செய்வார்ஆசையுட்பட்டு.
கலைஞர்உரை:
அடக்கமும், அன்புநெறியும், துன்பங்களைத்தாங்கும்பொறுமையும்வாய்ந்ததவம்மேற்கொண்டவர்கள்மட்டுமேதமதுகடமையைச்செய்பவர்கள்; அதற்குமாறானவர்கள், ஆசையால்அலைக்கழிக்கப்பட்டுவீணானசெயல்களில்ஈ.டுபடுபவர்கள்.
மு.வஉரை:
தவம்செய்கின்றவரேதமக்குரியகடமையைச்செய்கின்றவர்ஆவர், அவர்அல்லாதமற்றவர்ஆசைவலையில்அகப்பட்டுவீண்முயற்சிசெய்கின்றவரே.
சாலமன்பாப்பையாஉரை:
தவத்தைச்செய்பவரேதமக்குரியசெயலைச்செய்தவர்; மற்றவர்களோஆசைவலைப்பட்டுவீணானவற்றைச்செய்தவர்ஆவர்.
பரிமேலழகர்உரை:
தம்கருமம்செய்வார்தவம்செய்வார் - தம்கருமம்செய்வாராவார்துறந்துதவத்தைச்செய்வார், மற்றுஅல்லார்ஆசையுள்பட்டுஅவம்செய்வார் - ஒழிந்தபொருள்இன்பங்களைச்செய்வார், அவற்றின்கண்ஆசையாகியவலையுள்பட்டுத்தமக்குக்கேடுசெய்வார். (அநித்தமாய்மூவகைத்துன்பத்ததாய்உயிரின்வேறாயஉடற்குவருத்தம்வரும்என்றுஒழியாதுதவத்தினைச்செய்ய, பிறப்புப்பிணிமூப்புஇறப்புக்களான்அநாதியாகத்துன்பம்எய்திவருகின்றஉயிர்ஞானம்பிறந்துவீடுபெறும்ஆகலின், தவம்செய்வாரைத் 'தம்கருமம்செய்வார்' என்றும், கணத்துள்அழிவதானசிற்றின்பத்தின்பொருட்டுப்பலபிறவியும்துன்புறத்தக்கபாவஞ்செய்துகோடலின், அல்லாதாரை 'அவம்செய்வார்' என்றும்கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண்வந்தது.).
மணக்குடவர்உரை:
தங்கருமஞ்செய்வார்தவம்செய்வார்; அஃதல்லாதனசெய்வாரெல்லாம்ஆசையிலேஅகப்பட்டுப்பயனில்லாதனசெய்கின்றார். இதுதவம்பண்ணவேண்டுமென்றது.
Translation:
Who works of 'penance' do, their end attain,
Others in passion's net enshared, toil but in vain.
Explanation:
Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).
267. சுடச்சுடரும்பொன்போல்ஒளிவிடும்துன்பஞ்
சுடச்சுடநோற்கிற்பவர்க்கு.
கலைஞர்உரை:
தம்மைத்தாமேவருத்திக்கொண்டுஒருகுறிக்கோளுக்காகநோன்புநோற்பவர்களைஎந்தத்துன்பங்கள்தாக்கினாலும்அவர்கள்சுடச்சுடஒளிவிடும்பொன்னைப்போல்புகழ்பெற்றேஉயர்வார்கள்.
மு.வஉரை:
புடமிட்டுசுடச்சுடஒளிவிடுகின்றபொன்னைப்போல்தவம்செய்கின்றவரைதுன்பம்வருத்தவருத்தமெய்யுணர்வுமிகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நெருப்புசுடச்சுடப்பொன்னின்ஒளிபெருகுவதுபோலத்துன்பம்வருத்தவருத்தத்தவம்செய்பவர்க்குஞானம்பெருகும்.
பரிமேலழகர்உரை:
சுடச்சுடரும்பொன்போல் - தீயின்கண்ஓடும்பொன்னுக்குஅதுசுடச்சுடத்தன்னோடுகலந்தகுற்றம்நீங்கிஒளிமிகுமாறுபோல, நோற்கிற்பவர்க்குத்துன்பம்சுடச்சுடஒளிவிடும். தவம்செய்யவல்லார்க்குஅதனான்வரும்துன்பம்வருத்தவருத்தத்தம்மொடுகலந்தபாவம்நீங்கிஞானம்மிகும். ( 'சுடச்சுடரும்பொன்போல்' என்றார்ஆயினும், கருத்துநோக்கிஇவ்வாறுஉரைக்கப்பட்டது. ஒளிபோலப்பொருள்களைவிளக்கலின். 'ஒளி' என்றார்.).
மணக்குடவர்உரை:
நெருப்பின்கண்ணேஇடஇடத்தன்னோடுகலந்தமாசற்றுஒளிவிடுகின்றபொன்னைப்போலத்துன்பம்நலியநலியத்தவஞ்செய்வார்க்குத்தம்மோடுமருவினவினைவிட்டுஒளிவிடும். இதுவினைவிட்டொளியுண்டாம்என்றது.
Translation:
The hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines.
Explanation:
Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).
268. தன்னுயிர்தான்அறப்பெற்றானைஏனைய
மன்னுயிரெல்லாந்தொழும்.
கலைஞர்உரை:
தனதுஉயிர்என்கிறபற்றும், தான்என்கிறசெருக்கும்கொள்ளாதவர்களைஉலகம்புகழ்ந்துபாராட்டும்.
மு.வஉரை:
தவவலிமையால்தன்னுடையஉயிர், தான்என்னும்பற்றுநீங்கப்பெற்றவனைமற்றஉயிர்கள்எல்லாம் (அவனுடையபெருமையைஉணர்ந்து) தொழும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்உயிர், தான்என்னும்எண்ணம்முற்றும்இல்லாதவனைப்பிறஉயிர்கள்எல்லாம்தொழும்.
பரிமேலழகர்உரை:
தன்உயிர்தான்அறப்பெற்றானை - தன்உயிரைத்தான்தனக்குஉரித்தாகப்பெற்றவனை, ஏனையமன்உயிர்எல்லாம்தொழும் - பெறாதனவாகியமன்உயிர்கள்எல்லாம்தொழும். (தனக்குஉரித்தாதல் - தவம்ஆகியதன்கருமம்செய்தல். அதனின்ஊங்குப்பெறுதற்குஅரியதுஇன்மையின், 'பெற்றானை' என்றார். 'அதுபெறாதன' என்றதுஆசையுட்பட்டுஅவம்செய்யும்உயிர்களை. சாபமும்அருளும்ஆகியஇரண்டுஆற்றலும்உடைமையின் 'தொழும்' என்றார்.).
மணக்குடவர்உரை:
தன்னுயிரானதுதானென்றுகருதுங்கருத்துஅறப்பெற்றவனை, ஒழிந்தனவாகியநிலைபெற்றஉயிர்களெல்லாம்தொழும். உயிரென்றதுசலிப்பற்றஅறிவை; தானென்றதுசீவனாகிநிற்கின்றநிலைமையை; தானறுதலாவதுஅகங்காரமறுதல்.
Translation:
Who gains himself in utter self-control,
Him worships every other living soul.
Explanation:
All other creatures will worship him who has attained the control of his own soul.
269. கூற்றம்குதித்தலும்கைகூடும்நோற்றலின்
ஆற்றல்தலைப்பட்டவர்க்குல்.
கலைஞர்உரை:
எத்தனைத்துன்பங்கள்வரினும்தாங்கிக்குறிக்கோளில்உறுதியாகநிற்கும்ஆற்றலுடையவர்கள்சாவையும்வென்றுவாழ்வார்கள்.
மு.வஉரை:
தவம்செய்வதால்பெறத்தக்கஆற்றலைப்பெற்றவர்க்கு (ஓர்இடையூறும்இல்லையாகையால் ) எமனைவெல்லுதலும்கைகூடும்.
சாலமன்பாப்பையாஉரை:
தவத்தால்வரும்வலிமையைப்பெற்றவரால்எமனையும்வெல்லமுடியும்.
பரிமேலழகர்உரை:
கூற்றம்குதித்தலும்கைகூடும் - கூற்றத்தைக்கடத்தலும்உண்டாவதாம், நோற்றலின்ஆற்றல்தலைப்பட்டவர்க்கு - தவத்தான்வரும்ஆற்றலைத்தலைப்பட்டார்க்கு. ( சிறப்புஉம்மைகூடாமைவிளக்கிற்று. மன்உயிர்எல்லாம்தொழுதலேயன்றிஇதுவும்கைகூடும்எனஎச்சஉம்மையாகஉரைப்பினும்அமையும். ஆற்றல் - சாபஅருள்கள். இவைநான்குபாட்டானும்தவம்செய்வாரதுஉயர்ச்சிகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
கூற்றத்தைத்தப்புதலுங்கைகூடும்; தவத்தினாகியவலியைக்கூடினார்க்கு. இதுமார்க்கண்டேயன்தப்பினாற்போலவென்றது.
Translation:
The E'en over death the victory he may gain,
If power by penance won his soul obtain.
Explanation:
Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death).
270. இலர்பலராகியகாரணம்நோற்பார்
சிலர்பலர்நோலாதவர்.
கலைஞர்உரை:
ஆற்றலற்றவர்கள்பலராகஇருப்பதற்குக்காரணம், மனஉறுதிகொண்டவர்சிலராகஇருப்பதும், உறுதியற்றவர்பலராகஇருப்பதும்தான்.
மு.வஉரை:
ஆற்றல்இல்லாதவர்பலராகஉலகில்இருப்பதற்குக்காரணம்தவம்செய்கின்றவர்சிலராகவும், செய்யாதவர்பலராகவும்இருப்பதேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்செய்யும்தீமைகளைப்பொறுத்துக்கொள்வதும், அவர்க்குத்தீமைசெய்யாதுஇருப்பதும்ஆகியதவத்தைச்செய்பவர்சிலர்; செய்யாதவர்பலர்; ஏதுமற்றஏழைகள்பலராகஇருப்பதற்குஇதுவேகாரணம்.
பரிமேலழகர்உரை:
இலர்பலர்ஆகியகாரணம் - உலகத்துச்செல்வர்கள்சிலராகநல்கூர்வார்பலராதற்குக்காரணம்யாதுஎனின், நோற்பார்சிலர்நோலாதார்பலர் - தவம்செய்வார்சிலராக, அதுசெய்யார்பலராதல். (செல்வம்நல்குரவுஎன்பனஈண்டுஅறிவினதுஉண்மைஇன்மைகளையும்குறித்துநின்றன, என்னை? நுண்ணுணர்வுஇன்மைவறுமை, அஃதுடைமைபண்ணப்பணைத்தபெருஞ்செல்வம் (நாலடி.251) என்றார்ஆகலின். 'நோற்பார்சிலர்' எனக்காரணம்கூறினமையான், காரியம்வருவித்துஉரைக்கப்பட்டது. தவம்செய்யாதார்க்குஇம்மைஇன்பமும்இல்லைஎனஇதனால்அவரதுதாழ்வுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பொருளில்லாதார்உலகத்துப்பலராதற்குக்காரணம்தவஞ்செய்வார்சிலராதல்; அதுசெய்யதார்பலராதல்.
Translation:
The many all things lack! The cause is plain,
The 'penitents' are few. The many shun such pain.
Explanation:
Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.
Comments
Post a Comment