301-310
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:வெகுளாமை.
குறள்வரிசை: 301 302 303 304 305 306 307 308 309 310
குறள் 301:
செல்லிடத்துக்காப்பான்சினங்காப்பான்அல்லிடத்துக்
காக்கின்என்காவாக்கா.
கலைஞர்உரை:
தன்சினம்பலிதமாகுமிடத்தில்சினம்கொள்ளாமல்இருப்பவனேசினங்காப்பவன்; பலிக்காதஇடத்தில்சினத்தைக்காத்தால்என்ன? காக்காவிட்டால்என்ன?.
மு.வஉரை:
பலிக்கும்இடத்தில்சினம்வராமல்காப்பவனேசினம்காப்பவன், பலிக்காதஇடத்தில்காத்தால்என்ன, காக்காவிட்டால்என்ன?.
சாலமன்பாப்பையாஉரை:
எங்கேதன்கோபம்பலிக்குமோஅங்கேகோபம்கொள்ளாதவனேஉண்மையாகவேகோபம்கொள்ளாதவன்; பலிக்காதஇடத்தில்கோபத்தைத்தடுத்துஎன்ன? தடுக்காமல்விட்டுத்தான்என்ன?.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, சினத்தைச்செய்தற்குக்காரணம்ஒருவன்மாட்டுஉளதாயஇடத்தும்அதனைச்செய்யாமை. இதுபொய்ம்மைபற்றிநிகழ்வதாயவெகுளியைவிலக்கலின், வாய்மையின்பின்வைக்கப்பட்டது.)
சினம்செல்இடத்துக்காப்பான்காப்பான்-தன்சினம்பலிக்குமிடத்துஅதனைஎழாமல்தடுப்பானேஅருளால்தடுப்பானாவான், அல்இடத்துக்காக்கின்என்காவாக்கால்என் - ஏனைப்பலியாதஇடத்துஅதனைத்தடுத்தால்என்? தடாதுஒழிந்தால்என்? ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால்தன்னின்மெலியாரையும்வலியாரையும். வலியார்மேல்காவாவழியும், அதனான்அவர்க்குவருவதோர்தீங்குஇன்மையின், காத்தவழியும்அறன்இல்லைஎன்பார், 'காக்கின்என்காவாக்கால்என்' என்றார். இதனான்வெகுளாமைக்குஇடம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தனக்குஇயலுமிடத்தேவெகுளாதவன்வெகுளாதவனாவான்; இயலாவிடத்தில்அதனைத்தவிர்ந்ததனாலும்பயனில்லை, தவிராததனாலும்பயனில்லை; இதுவெகுளாமையாவதுவலியவன்வெகுளாமையென்றது.
Translation:
Where thou hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if thou check or give it rein?.
Explanation:
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?.
குறள் 302:
செல்லாஇடத்துச்சினந்தீதுசெல்லிடத்தும்
இல்அதனின்தீயபிற.
கலைஞர்உரை:
வலியோரிடம்சினம்கொண்டால், அதனால்கேடுவிளையும். மெலியோரிடம்சினம்கொண்டாலும்அதைவிடக்கேடுவேறொன்றுமில்லை.
மு.வஉரை:
பலிக்காதஇடத்தில் (தன்னைவிடவலியவரிடத்தில்) சினம்கொள்வதுதீங்கு. பலிக்கும்இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத்தீயவைவேறுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
பலிக்காதஇடத்தில்கோபம்கொள்வதுநமக்கேதீமை; பலிக்கும்இடத்தில்கோபம்கொண்டாலும்அதைவிடத்தீமைவேறுஇல்லை.
பரிமேலழகர்உரை:
சினம்செல்லாஇடத்துத்தீது - ஒருவன்வெகுளிதன்னின்வலியார்மேல்எழின் 'தனக்கேதீதாம்'; செல்இடத்தும்அதனின்தீயபிறஇல் - மற்றைஎளியோர்மேல்எழினும்அதனின்தீயனபிறஇல்லை (செல்லா 'இடத்துச்சினம்பயப்பது' 'இம்மைக்கண்அவரான்வரும்ஏதமே. ஏனையது'இம்மைக்கண்பழியும்' மறுமைக்கண்பாவமும்பயத்தலின்அதனின்தீயனபிறஇல்லை' என்றார், ஓரிடத்தும்ஆகாதுஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
இயலாவிடத்துச்சினந்தீது; இயலுமிடத்திலும்அதிற்றீதாயிருப்பனபிறவில்லை.
Translation:
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.
Explanation:
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.
குறள் 303:
மறத்தல்வெகுளியையார்மாட்டும்தீய
பிறத்தல்அதனான்வரும்.
கலைஞர்உரை:
யார்மீதுசினம்கொண்டாலும்அதைமறந்துவிடவேண்டும். இல்லாவிட்டால்அந்தச்சினமேதீயவிளைவுகளுக்குக்காரணமாகும்.
மு.வஉரை:
யாரிடத்திலும்சினம்கொள்ளாமல்அதைமறந்துவிடவேண்டும், தீமையானவிளைவுகள்அச்சினத்தாலேயேஏற்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
தீமைவருவதுஎல்லாம்கோபத்தால்தான்; அதனால்எவரிடமானாலும்சரி, கோபம்கொள்வதைவிட்டுவிடுக.
பரிமேலழகர்உரை:
யார்மாட்டும்வெகுளியைமறத்தல் - யாவர்மாட்டும்வெகுளியை 'ஒழிக', தீயபிறத்தல் 'அதனான்வரும்' - ஒருவற்குத்தீயனஎல்லாம்உளவாதல்அதனான்வரும்ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார்என்னும்மூவர்மாட்டும்ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால்துறந்தார்க்குஆகாதனவாகியதீச்சிந்தைகள்எல்லாவற்றையும்பிறப்பித்தலின் 'தீயபிறத்தல்அதனான்வரும்', என்றும்கூறினார்.).
மணக்குடவர்உரை:
வெகுளியையார்மாட்டுஞ்செய்தலைமறக்க; தீயனபிறத்தல்அவ்வெகுளியானேவருமாதலான். இதுவெகுளாமைவேண்டுமென்றது.
Translation:
If any rouse thy wrath, the trespass straight forget;
For wrath an endless train of evils will beget.
Explanation:
Forget anger towards every one, as fountains of evil spring from it.
குறள் 304:
நகையும்உவகையும்கொல்லும்சினத்தின்
பகையும்உளவோபிற.
கலைஞர்உரை:
சினம்கொள்கிறவர்களுக்குமுகமலர்ச்சிமாத்திரமின்றிமனமகிழ்ச்சியும்மறைந்துபோய்விடும்.
மு.வஉரை:
முகமலர்ச்சியும்அகமலர்ச்சியும்கொல்லுகின்றசினத்தைவிடஒருவனுக்குபகையானவைவேறுஉள்ளனவோ?.
சாலமன்பாப்பையாஉரை:
முகத்தில்சிரிப்பையும், மனத்துள்மகிழ்ச்சியையும்கொன்றுவிடும்கோபத்தைவிடவேறுபகையும்உண்டோ?.
பரிமேலழகர்உரை:
நகையும்உவகையும்கொல்லும்சினத்தின் - துறந்தார்க்குஅருளான்உளவாயமுகத்தின்கண்நகையையும்மனத்தின்கண்உவகையையும்கொன்றுகொண்டெழுகின்றசினமேஅல்லாது, பிறபகையும்உளவோ - அதனின்பிறவாயபகைகளும்உளவோ? இல்லை. (துறவால்புறப்பகைஇலராயினும்உட்பகையாய்நின்றுஅருள்முதலியநட்பினையும்பிரித்துப்பிறவித்துன்பமும்எய்துவித்தலான், அவர்க்குச்சினத்தின்மிக்கபகைஇல்லையாயிற்று. இவைமூன்றுபாட்டானும்வெகுளியதுதீங்குகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நகுதலையும்மகிழ்தலையுங்கெடுக்கின்றசினத்தைப்போல, பகையாயிருப்பனவும்வேறுசிலவுளவோ? இஃதுஇன்பக்கேடுவருமென்றது.
Translation:
Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?.
Explanation:
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.
குறள் 305:
தன்னைத்தான்காக்கின்சினங்காக்ககாவாக்கால்
தன்னையேகொல்லுஞ்சினம்.
கலைஞர்உரை:
ஒருவன்தன்னைத்தானேகாத்துக்கொள்ளவேண்டுமானால், சினத்தைக்கைவிடவேண்டும். இல்லையேல்சினம், அவனைஅழித்துவிடும்.
மு.வஉரை:
ஒருவன்தன்னைத்தான்காத்துக்கொள்வதானால்சினம்வராமல்காத்துக்கொள்ளவேண்டும், காக்காவிட்டால்சினம்தன்னையேஅழித்துவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
தனக்குத்துன்பம்வராமல்காக்கவிரும்பினால்கோபம்கொள்ளாமல்காக்கவும், காக்கமுடியாதுபோனால்உடையவரையேசினம்கொல்லும்.
பரிமேலழகர்உரை:
தன்னைத்தான்காக்கின்சினம்காக்க - தன்னைத்தான்துன்பம்எய்தாமல்காக்கநினைத்தானாயின்தன்மனத்துச்சினம்வராமல்காக்க, காவாக்கால்சினம்தன்னையேகொல்லும் - காவானாயின், அச்சினம்தன்னையேகெடுக்கும்கடுந்துன்பங்களைஎய்துவிக்கும். ('வேண்டியவேண்டியாங்குஎய்தல்' (குறள் 265) பயத்ததாயதவத்தைப்பிறர்மேல்சாபம்விடுவதற்காகஇழந்து, அத்தவத்துன்பத்தோடுபழையபிறவித்துன்பமும்ஒருங்கேஎய்துதலின் 'தன்னையேகொல்லும்' என்றார். 'கொல்லச்சுரப்பதாங்கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக்கொலைச்சொல்ஈண்டுத்துன்பமிகுதிஉணர்த்திநின்றது.).
மணக்குடவர்உரை:
ஒருவன்தன்னைத்தான்காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற்காக்க; காவானாயின்சினம்தன்னையேகொல்லும், இஃதுஉயிர்க்கேடுவருமென்றது.
Translation:
If thou would'st guard thyself, guard against wrath alway;
'Gainst wrath who guards not, him his wrath shall slay.
Explanation:
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
குறள் 306:
சினமென்னும்சேர்ந்தாரைக்கொல்லிஇனமென்னும்
ஏமப்புணையைச்சுடும்.
கலைஞர்உரை:
சினங்கொண்டவரைஅழிக்கக்கூடியதாகச்சினமென்னும்தீயேஇருப்பதால், அதுஅவரைமட்டுமின்றி, அவரைப்பாதுகாக்கும்தோணிபோன்றசுற்றத்தையும்அழித்துவிடும்.
மு.வஉரை:
சினம்என்னும்சேர்ந்தவரைஅழிக்கும்நெருப்புஒருவனுக்குஇனம்இன்பத்தெப்பத்தையும்சுட்டழிக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
சேர்ந்தவரைக்கொல்லிஎனப்படும்கோபம், சேர்ந்தவரைமட்டும்அன்று; சேர்ந்தவர்க்குத்துணையாகஇருப்பவரையும்எரித்துவிடும்.
பரிமேலழகர்உரை:
சினம்என்னும்சேர்ந்தாரைக்கொல்லி - சினம்என்னும்நெருப்பு; இனம்என்னும்ஏமப்புணையைச்சுடும் - தனக்குஇடமானவரையேயன்றிஅவர்க்குஇனமாகியஏமப்புணையையும்சுடும். ('சேர்ந்தாரைக்கொல்லி' என்பதுஏதுப்பெயர்: 'தான்சேர்ந்தஇடத்தைக்கொல்லும்தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' எனஉயர்திணைப்பன்மைமேல்வைத்து, ஏனைநான்குபாலும்தம்கருத்தோடுகூடியபொருளாற்றலால்கொண்டார். ஈண்டுஉருவகம்செய்கின்றதுதுறந்தார்சினத்தையேஆகலின், 'சினமென்னும்நெருப்பு' என்றவிதப்பு, உலகத்துநெருப்புச்சுடுவதுதான்சேர்ந்தஇடத்தையே , இந்நெருப்புச்சேராதஇடத்தையும்சுடும்என்னும்வேற்றுமைதோன்றநின்றது. ஈண்டு 'இனம்' என்றது, முற்றத்துறந்துதவஞானங்களால்பெரியராய்க்கேட்டார்க்குஉறுதிபயக்கும்மொழிகளைஇனியவாகச்சொல்லுவாரை .உருவகம்நோக்கிச் 'சுடும்' என்னும்தொழில்கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பதுபொருளாகக்கொள்க. ஏமப்புணை - ஏமத்தைஉபதேசிக்கும்புணை. 'இனம்' என்னும்ஏமப்புணைஎன்றஏகதேசஉருவகத்தால், 'பிறவிக்கடலுள்அழுந்தாமல்வீடுஎன்னும்கரையேற்றுகின்ற' எனவருவித்துஉரைக்க. எச்சஉம்மைவிகாரத்தால்தொக்கது. தன்னையும்வீழ்த்து, எடுப்பாரையும்அகற்றும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
சினமென்றுசொல்லப்படுகின்றநெருப்புதான்துன்பக்கடலிலழுந்தாமல்தன்னைக்கரையேறவிடுகின்றநட்டோராகியபுணையைச்சுடும்.
சேர்ந்தாரைக்கொல்லி- நெருப்பு: இதுகாரணக்குறி. இதுசினம்தன்னையடுத்தாரைக்கொல்லுமென்றது.
Translation:
Wrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred dear.
Explanation:
The fire of anger will burn up even the pleasant raft of friendship.
குறள் 307:
சினத்தைப்பொருளென்றுகொண்டவன்கேடு
நிலத்தறைந்தான்கைபிழையாதற்று.
கலைஞர்உரை:
நிலத்தைக்கையால்அறைந்தவனுக்குஅவன்கைதான்வலிக்கும். அதுபோலத்தான்சினத்தைப்பண்பாகக்கொண்டவன்நிலையும்ஆகும்.
மு.வஉரை:
(தன்வல்லமைபுலப்படுத்தச்) சினத்தைபொருளென்றுகொண்டவன்அழிதல், நிலத்தைஅறைந்தவனுடையகைதப்பாததுபோல்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நிலத்தில்அடித்தவன்கை, வேதனையில்இருந்துதப்பமுடியாததுபோலக், கோபத்தைக்குணமாகக்கொண்டவனும்வேதனைஅனுபவத்திலிருந்துதப்பமுடியாது.
பரிமேலழகர்உரை:
சினத்தைப்பொருள்என்றுகொண்டவன்கேடு - சினத்தைத்தன்ஆற்றல்உணர்த்துவதோர்குணம்என்றுதன்கண்கொண்டவன்அவ்வாற்றல்இழத்தல்; நிலத்துஅறைந்தான்கைபிழையாதற்று - நிலத்தின்கண்அறைந்தஅவன்கைஅந்நிலத்தையுறுத்தல்தப்பாதவாறுபோலத்தப்பாது. (வைசேடிகர்பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபுஎன்பவற்றை 'அறுவகைப்பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பதுகுறைந்துநின்றது. இவைமூன்றுபாட்டானும்வெகுண்டார்க்குவரும்தீங்குகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
சினத்தைப்பொருளாகக்கொண்டவன்கெடுதல், நிலத்தெறிந்தவன்கைதப்பாமற்பட்டதுபோலும், இதுபொருட்கேடுவருமென்றது.
Translation:
The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing.
Explanation:
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.
குறள் 308:
இணர்எரிதோய்வன்னஇன்னாசெயினும்
புணரின்வெகுளாமைநன்று.
கலைஞர்உரை:
தீயினால்சுட்டெரிப்பதுபோன்றதுன்பங்களைஒருவன்தொடர்ந்துசெய்தாலும்அதற்காகவருந்திஅவன்உறவுகொள்ளவரும்போதுசினங்கொள்ளாமல்இருப்பதேநல்லது.
மு.வஉரை:
பலச்சுடர்களைஉடையபெருநெருப்பில்தோய்வதுபோன்றதுன்பத்தைஒருவன்செய்தபோதிலும்கூடுமானால்அவன்மேல்சினங்கொள்ளாதிருத்தல்நல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
பலசுடரைஉடையபெருநெருப்புநம்மீதுபட்டதுபோன்றதீமையைஒருவன்நமக்குச்செய்தாலும், நம்மால்கோபம்கொள்ளாதிருக்கமுடியுமானால்அதுநம்உடலுக்கும்நல்லது.
பரிமேலழகர்உரை:
இணர்எரிதோய்வுஅன்னஇன்னாசெயினும் - பலசுடரைஉடைத்தாயபேரெரிவந்துதோய்ந்தாலொத்தஇன்னாதவற்றைஒருவன்செய்தானாயினும்; வெகுளாமைபுணரின்நன்று - அவனைவெகுளாமைஒருவற்குக்கூடுமாயின்அதுநன்று. (இன்னாமையின்மிகுதிதோன்ற 'இணர்எரி' என்றும், அதனைமேன்மேலும்செய்தல்தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல்முனிவரையும்வெகுள்விக்கும்என்பதுதோன்றப் 'புணரின்' என்றும்கூறினார். இதனான்வெகுளாமையதுநன்மைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
சினத்தைப்பொருளாகக்கொண்டவன்கெடுதல், நிலத்தெறிந்தவன்கைதப்பாமற்பட்டதுபோலும், இதுபொருட்கேடுவருமென்றது.
Translation:
Though men should work thee woe, like touch of tongues of fire.
'Tis well if thou canst save thy soul from burning ire.
Explanation:
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.
குறள் 309:
உள்ளியதெல்லாம்உடனெய்தும்உள்ளத்தால்
உள்ளான்வெகுளிஎனின்.
கலைஞர்உரை:
உள்ளத்தால்சினங்கொள்ளாதவனாகஇருந்தால்எண்ணியவற்றையெல்லாம்உடனடியாகப்பெறமுடியும்.
மு.வஉரை:
ஒருவன்தன்மனதால்சினத்தைஎண்ணாதிருப்பானானால்நினைத்தநன்மைகளைஎல்லாம்அவன்ஒருங்கேபெறுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
உள்ளத்துள்கோபம்கொள்ளஒருபோதும்எண்ணாதவன், தான்நினைத்ததைஎல்லாம்உடனேஅடைவான்.
பரிமேலழகர்உரை:
உள்ளத்தால்வெகுளிஉள்ளான்எனின் - தவஞ்செய்யும்அவன், தன்மனத்தால்வெகுளியைஒருகாலும்நினையானாயின், உள்ளியஎல்லாம்உடன்எய்தும் - தான்கருதியபேறுஎல்லாம்ஒருங்கேபெறும். ( 'உள்ளத்தால்' எனவேண்டாதுகூறியஅதனான், 'அருளுடைஉள்ளம்' என்பதுமுடிந்தது. உள்ளாமையாவதுஅவ்வருளாகியபகையைவளர்த்து, அதனான்முற்றக்கடிதல். இம்மைமறுமைவீடுஎன்பனவேறுவேறுதிறத்தனவாயினும், அவைஎல்லாம்இவ்வொன்றானேஎய்தும்என்பார், 'உள்ளியஎல்லாம்உடன்எய்தும்' என்றார். இதனான்வெகுளாதார்க்குவரும்நன்மைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தன்னெஞ்சினால்வெகுளியைநினையானாகில்தானினைத்தனவெல்லாம்ஒருகாலத்தேகூடப்பெறுவன்.
Translation:
If man his soul preserve from wrathful fires,
He gains with that whate'er his soul desires.
Explanation:
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.
குறள் 310:
இறந்தார்இறந்தார்அனையர்சினத்தைத்
துறந்தார்துறந்தார்துணை.
கலைஞர்உரை:
எல்லையற்றசினம்கொள்வார்இறந்தவர்க்குஒப்பாவார். சினத்தைஅறவேதுறந்தவர்துறவிக்குஒப்பாவார்.
மு.வஉரை:
சினத்தில்அளவுகடந்துசென்றவர்இறந்தவரைப்போன்றவர், சினத்தைஅடியோடுதுறந்தவர்துறந்தவர்க்குஒப்பாவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பெருங்கோபம்கொண்டவர்இருந்தாலும்இறந்தவரைப்போன்றவரே; கோபத்தைவிட்டுவிட்டவர். இறக்கவேண்டியவரேஎன்றாலும்சாவைத்தவிர்த்தவர்போன்றவரே.
பரிமேலழகர்உரை:
இறந்தார்இறந்தார்அனையர் - சினத்தின்கண்ணேமிக்கார்உயிருடையராயினும்செத்தாரோடுஒப்பர், சினத்தைத்துறந்தார்துறந்தார்துணை - சினத்தைத்துறந்தார்சாதல்தன்மையராயினும், அதனைஒழிந்தார்அளவினர். (மிக்கசினத்தைஉடையார்க்குஞானம்எய்துதற்குஉரியஉயிர்நின்றதாயினும் , கலக்கத்தான்அஃதுஎய்தாமைஒருதலையாகலின்அவரைவீடுபெற்றாரோடுஒப்பர்என்றும்கூறினார். இதனான்அவ்விருவர்பயனும்ஒருங்குகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
சினத்தைமிகுந்தார்செத்தாரோடுஒப்பர், அதனையொழிந்தார்எல்லாப்பொருளையுந்துறந்தாரோடுஒப்பர், இதுவெகுளாதார்பெரியரென்றது.
Translation:
Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.
Explanation:
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).
Comments
Post a Comment