31-40
32. அறத்தினூஉங்குஆக்கமும்இல்லைஅதனை
மறத்தலின்ஊங்கில்லைகேடு.
கலைஞர்உரை:
நன்மைகளின்விளைநிலமாகஇருக்கும்அறத்தைப்போல்ஒருவருடையவாழ்க்கைக்குஆக்கம்தரக்கூடியதுஎதுவுமில்லை; அந்தஅறத்தைமறப்பதைவிடத்தீமையானதும்வேறில்லை.
மு.வஉரை:
ஒருவருடையவாழ்கைக்குஅறத்தைவிடநன்மையானதும்இல்லை: அறத்தைபோற்றாமல்மறப்பதைவிடக்கொடியதும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
அறம்செய்வதைவிடநன்மையும்இல்லை. அதைச்செய்யமறப்பதைவிடகெடுதியும்இல்லை.
பரிமேலழகர்உரை:
அறத்தின்ஊங்குஆக்கமும்இல்லை - ஒருவனுக்குஅறஞ்செய்தலின்மேற்பட்டஆக்கமும்இல்லை; அதனைமறத்தலின்ஊங்குகேடுஇல்லை - அதனைமயக்கத்தான்மறத்தலின்மேற்பட்டகேடும்இல்லை. ('அறத்தின்ஊங்குஆக்கமும்இல்லை'. எனமேற்சொல்லியதனையேஅநுவதித்தார், அதனால்கேடுவருதல்கூறுதற்பயன்நோக்கி. இதனான்அதுசெய்யாவழிக்கேடுவருதல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவனுக்குஅறஞ்செய்தலின்மேற்பட்டஆக்கமுமில்லை; அதனைச்செய்யாமையின்மேற்பட்டகேடுமில்லை. இஃதுஅறஞ்செய்யாக்காற்கேடுவருமென்றுகூறிற்று.
Translation:
No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws.
Explanation:
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.
33. ஒல்லும்வகையான்அறவினைஓவாதே
செல்லும்வாய்எல்லாஞ்செயல்.
கலைஞர்உரை:
செய்யக்கூடியசெயல்கள்எவைஆயினும், அவைஎல்லாஇடங்களிலும்தொய்வில்லாதஅறவழியிலேயேசெய்யப்படவேண்டும்.
மு.வஉரை:
செய்யக்கூடியவகையால், எக்காரணத்தாலும்விடாமல்செல்லுமிடமெல்லாம்அறச்செயலைப்போற்றிச்செய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
இடைவிடாமல்இயன்றமட்டும்எல்லாஇடங்களிலும்அறச்செயலைச்செய்க.
பரிமேலழகர்உரை:
ஒல்லும்வகையான் - தத்தமக்குஇயலுந்திறத்தான்அறவினைஓவாதேசெல்லும்வாய்எல்லாம்செயல் - அறம்ஆகியநல்வினையைஒழியாதேஅஃதுஎய்தும்இடத்தான்எல்லாம்செய்க. (இயலுந்திறம்ஆவது - இல்லறம்பொருள்அளவிற்குஏற்பவும், துறவறம்யாக்கைநிலைக்குஏற்பவும்செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும்இடம்ஆவனமனம்வாக்குக்காயம்என்பன. அவற்றால்செய்யும்அறங்கள்ஆவனமுறையேநற்சிந்தையும்நற்சொல்லும்நற்செயலும்எனஇவை. இதனான்அறஞ்செய்யும்ஆறுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தமக்கியலுந்திறத்தானே, அறவினையைஒழியாதேசெய்யலாமிடமெல்லாஞ்செய்க. இயலுந்திறமென்பதுமனமொழிமெய்களும்பொருளும். செல்லும்வாய்என்பதுஅறஞ்செய்தற்கிடமாகியபலவிடங்களும்ஒழியாதென்றதுநாடோறுமென்றது. இஃதுஅறம்வலிதென்றறிந்தவர்கள்இவ்வாறுசெய்கவென்றது.
Translation:
To finish virtue's work with ceaseless effort strive, What way thou may'st, where'er thou see'st the work may thrive.
Explanation:
As much as possible, in every way, incessantly practise virtue.
34. மனத்துக்கண்மாசிலன்ஆதல்அனைத்தறன்
ஆகுலநீரபிற.
கலைஞர்உரை:
மனம்தூய்மையாகஇருப்பதேஅறம்; மற்றவைஆரவாரத்தைத்தவிரவேறொன்றுமில்லை.
மு.வஉரை:
ஒருவன்தன்மனதில்குற்றம்இல்லாதவானாகஇருக்கவேண்டும். அறம்அவ்வளவே: மனத்தூய்மைஇல்லாதமற்றவைஆரவாரத்தன்மைஉடையவை.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்துஅளவில்குற்றம்இல்லாதவனாய்ஆகுக; அறம்என்பதுஅவ்வளவே; பிறவார்த்தைநடிப்பும், வாழ்க்கைவேடங்களுக்கும்மற்றவர்அறியச்செய்யப்படும்ஆடம்பரங்களே.
பரிமேலழகர்உரை:
மனத்துக்கண்மாசுஇலன்ஆதல் - அவ்வாற்றான்அறஞ்செய்வான்தன்மனத்தின்கண்குற்றமுடையன்அல்லன்ஆக; அனைத்துஅறன் - அவ்வளவேஅறம்ஆவது; பிறஆகுலநீர - அஃதுஒழிந்தசொல்லும்வேடமும்அறம்எனப்படா, ஆரவாரநீர்மைய; (குற்றம் - தீயனசிந்தித்தல். பிறர்அறிதல்வேண்டிச்செய்கின்றனஆகலின், 'ஆகுலநீர' என்றார். மனத்துமாசுடையான்ஆயவழிஅதன்வழியஆகியமொழிமெய்களால்செய்வனபயனிலஎன்பதூஉம்பெறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவன்தன்மனத்தின்கட்குற்றமிலனாதலேஎல்லாவறமுமாம்; அதில்அழுக்குண்டாயின்மேற்செய்வனவெல்லாம்ஆரவாரநீர்மைய. பிறரறியவேண்டிச்செய்தானாமென்றவாறாயிற்று. மேல்நான்குபொருளைக்கடியவேண்டுமென்றார்அவைநான்கும்மனமொன்றுந்தூயதாகப்போமென்றுஅதன்பின்இதுகூறினார்.
Translation:
Spotless be thou in mind! This only merits virtue's name; All else, mere pomp of idle sound, no real worth can claim.
Explanation:
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.
35. அழுக்காறுஅவாவெகுளிஇன்னாச்சொல்நான்கும்
இழுக்காஇயன்றதுஅறம்.
கலைஞர்உரை:
பொறாமை, பேராசை, பொங்கும்கோபம், புண்படுத்தும்சொல்ஆகியஇந்தநான்கும்அறவழிக்குப்பொருந்தாதவைகளாகும்.
மு.வஉரை:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல்ஆகியஇந்தநான்குகுற்றங்களுக்கும்இடங்கொடுக்காமல்அவற்றைக்கடித்துஒழுகுவதேஅறமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்மேன்மைகண்டுபொறாமை, புலன்கள்போகும்வழிச்செல்லும்ஆசை, இவைதடைபடும்போதுவரும்கோபம், கோபத்தில்பிறக்கும்தீயசொல்எனும்இந்நான்கையும்விலக்கித்தொடர்ந்துசெய்யப்படுவதுஅறம்.
பரிமேலழகர்உரை:
அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமையும்; அவா - புலன்கள்மேல்செல்கின்றஅவாவும்; வெகுளி - அவைஏதுவாகப்பிறர்பால்வரும்வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றிவரும்கடுஞ்சொல்லும்ஆகிய; நான்கும்இழுக்காஇயன்றதுஅறம் - இந்நான்கினையும்கடிந்துஇடையறாதுநடந்ததுஅறம்ஆவது. (இதனான், இவற்றோடுவிரவிஇயன்றதுஅறம்எனப்படாதுஎன்பதூஉம்கொள்க. இவைஇரண்டுபாட்டானும்அறத்தினதுஇயல்புகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும்என்னும்நான்கினையும்ஒழித்துநடக்குமதுயாதொன்றுஅஃதுஅறமென்றுசொல்லப்படும். பின்னர்ச்செய்யலாகாதென்றுகூறுவனவெல்லாம்இந்நான்கினுள்அடங்குமென்றுகூறியஅறம்எத்தன்மைத்தென்றார்க்குஇதுகூறப்பட்டது.
Translation:
'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path.
Explanation:
That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.
37. அறத்தாறுஇதுவெனவேண்டாசிவிகை
பொறுத்தானோடுஊர்ந்தான்இடை.
கலைஞர்உரை:
அறவழியில்நடப்பவர்கள்பல்லக்கில்உட்கார்ந்துசெல்பவர்களைப்போலவாழ்க்கையில்வரும்இன்பதுன்பங்கள்இரண்டையும்எளியவாகக்கருதிமகிழ்வுடன்பயணத்தைமேற்கொள்வார்கள். தீயவழிக்குத்தங்களைஆட்படுத்திக்கொண்டவர்களோபல்லக்கைத்தூக்கிச்சுமப்பவர்களைப்போலஇன்பத்திலும்அமைதிகொள்ளாமல், துன்பத்தையும்தாங்கிக்கொள்ளும்மனப்பக்குவமின்றிவாழ்வையேபெரும்சுமையாகக்கருதுவார்கள்.
மு.வஉரை:
பல்லக்கைசுமப்பவனும்அதன்மேலிருந்துஊர்ந்துசெல்லுவோனுமாகியஅவர்களிடையேஅறத்தின்பயன்இஃதுஎன்றுகூறவேண்டா.
சாலமன்பாப்பையாஉரை:
அறத்தைச்செய்வதால்வரும்பயன்இதுஎன்றுநூல்களைக்கொண்டுமெய்ப்பிக்கவேண்டியதுஇல்லை. பல்லக்கைத்தூக்கிச்செல்பவனையும்அதில்பயணிப்பவனையும்கண்டஅளவில்பயனைஅறியலாம்.
பரிமேலழகர்உரை:
அறத்துஆறுஇதுஎனவேண்டா - அறத்தின்பயன்இதுஎன்றுயாம்ஆகமஅளவையான்உணர்த்தல்வேண்டா; சிவிகைபொறுத்தானோடுஊர்ந்தான்இடை - சிவிகையைக்காவுவானோடுசெலுத்துவானிடைக்காட்சியளவைதன்னானேஉணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னதுஆகலின். 'என' என்னும்எச்சத்தால்சொல்ஆகியஆகமஅளவையும், 'பொறுத்தானோடுஊர்ந்தானிடை' என்றதனால்காட்சியளவையும்பெற்றாம். உணரப்படும்என்பதுசொல்லெச்சம். இதனான்அறம்பொன்றாத்துணையாதல்தெளிவிக்கப்பட்டது. தன்னானேஉணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னதுஆகலின் 'என' என்னும்எச்சத்தால்சொல்ஆகியஆகமஅளவையும், 'பொறுத்தாணோடுஊர்ந்தானிடை' என்றதனால்காட்சியளவையும்பெற்றாம், உணரப்படும்என்பதுசொல்லெச்சம். இதனான்அறம்பொன்றாத்துணையாதல்தெளிவிக்கப்பட்டது.
மணக்குடவர்உரை:
நீங்கள்அறநெறியித்தன்மைத்தென்றறியவேண்டா, சிவிகைக்காவுவானோடுசெலுத்துவானிடைக்காணலாம். இதுபொன்றினாலுந்துணையாகுமோஎன்றார்க்குத்துணையாயினவாறுகாட்டிற்று.
Translation:
Needs not in words to dwell on virtue's fruits: compare The man in litter borne with them that toiling bear!
Explanation:
The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.
38. வீழ்நாள்படாஅமைநன்றாற்றின்அஃதொருவன்
வாழ்நாள்வழியடைக்கும்கல்.
கலைஞர்உரை:
பயனற்றதாகஒருநாள்கூடக்கழிந்துபோகாமல், தொடர்ந்துநற்செயல்களில்ஈ.டுபடுபவருக்குவாழ்க்கைப்பாதையைச்சீராக்கிஅமைத்துத்தரும்கல்லாகஅந்தநற்செயல்களேவிளங்கும்.
மு.வஉரை:
ஒருவன்அறம்செய்யதவறியநாள்ஏற்படாதவாறுஅறத்தைசெய்வானானால்அதுவேஅவன்உடலோடுவாழும்நாள்வரும்பிறவிவழியைஅடைக்கும்கல்லாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறத்தைசெய்யாதுவிட்டநாள்இல்லைஎன்றுசொல்லும்படிஒருவன்அறம்செய்தால், அச்செயலே, அவன்திரும்பப்பிறக்கும்வழியைஅடைக்கும்கல்ஆகும்.
பரிமேலழகர்உரை:
வீழ்நாள்படாமைநன்றுஆற்றின் - செய்யாதுகழியும்நாள்உளவாகாமல்ஒருவன்அறத்தைச்செய்யுமாயின்; அஃதுஒருவன்வாழ்நாள்வழிஅடைக்கும்கல் - அச்செயல்அவன்யாக்கையோடுகூடும்நாள்வரும்வழியைவாராமல்அடைக்குங்கல்லாம். (ஐவகைக்குற்றத்தான்வரும்இருவகைவினையும்உள்ளதுணையும், உயிர்யாக்கையோடும்கூடிநின்று, அவ்வினைகளதுஇருவகைப்பயனையும்நுகரும்ஆகலான், அந்நாள்முழுவதும்வாழ்நாள்எனப்பட்டது. குற்றங்கள்ஐந்துஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்புஎன்பன. இவற்றைவடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினைஇரண்டுஆவன : நல்வினைதீவினைஎன்பன. பயன்இரண்டுஆவன: இன்பம்துன்பம்என்பன. இதனால்அறம்வீடுபயக்கும்என்பதுகூறப்பட்டது.
மணக்குடவர்உரை:
ஒருவன்ஒருநாளிடைவிடாமல்நன்மையைச்செய்வானாயின்அச்செயல்அவனதுபிறப்பும்இறப்புமாகியநாள்வருகின்றவழியையடைப்பதொருகல்லாம். இதுவீடுதருமென்றது.
Translation:
If no day passing idly, good to do each day you toil, A stone it will be to block the way of future days of moil.
Explanation:
If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.
39. அறத்தான்வருவதேஇன்பம்மற்றெல்லாம்
புறத்தபுகழும்இல.
கலைஞர்உரை:
தூய்மையானநெஞ்சுடன்நடத்தும்அறவழிவாழ்க்கையில்வருகின்றபுகழால்ஏற்படுவதேஇன்பமாகும். அதற்குமாறானவழியில்வருவதுபுகழும்ஆகாது; இன்பமும்ஆகாது.
மு.வஉரை:
அறநெறியில்வாழ்வதன்பயனாகவருவதேஇன்பமாகும். அறத்தோடுபொருந்தாமல்வருவனஎல்லாம்இன்பம்இல்லாதவை: புகழும்இல்லாதவை.
சாலமன்பாப்பையாஉரை:
அறத்துடன்வருவதேஇன்பம்; பிறவழிகளில்வருவனதுன்பமே; புகழும்ஆகா.
பரிமேலழகர்உரை:
அறத்தான்வருவதேஇன்பம் - இல்லறத்தோடுபொருந்திவருவதேஇன்பம்ஆவது; மற்றுஎல்லாம்புறத்த - அதனோடுபொருந்தாதுவருவனஎல்லாம்இன்பம்ஆயினும்துன்பத்தினிடத்த; புகழும்இல - அதுவேயும்அன்றிப்புகழும்உடையஅல்ல. ('ஆன்' உருபுஈண்டுஉடனிகழ்ச்சிக்கண்வந்தது, 'தூங்குகையான்ஓங்குநடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காமநுகர்ச்சி; அஃதுஆமாறுகாமத்துப்பாலின்முதற்கண்சொல்லுதும். இன்பத்தின்புறம்எனவேதுன்பம்ஆயிற்று. பாவத்தான்வரும் 'பிறனில்விழைவு' முதலாயினஅக்கணத்துள்இன்பமாய்த்தோன்றும்ஆயினும், பின்துன்பமாய்விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடுவாராதன 'புகழும்இல' எனவே, வருவதுபுகழும்உடைத்துஎன்பதுபெற்றாம். இதனான்அறம்செய்வாரேஇம்மைஇன்பமும்புகழும்எய்துவர்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அறத்தால்வருவதுயாதொன்று, அதுவேஇன்பமும்புகழுமாம்; அதனாலன்றிவருவனவெல்லாந்துன்பமாம்; புகழுமிலவாம். இஃதுஎல்லாப்போகநுகர்ச்சியும்இதனானேவருமென்றது.
Translation:
What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory's light.
Explanation:
Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.
40. செயற்பாலதோரும்அறனேஒருவற்கு
உயற்பாலதோரும்பழி.
கலைஞர்உரை:
பழிக்கத்தக்கவைகளைச்செய்யாமல்பாராட்டத்தக்கஅறவழிச்செயல்களில்நாட்டம்கொள்வதேஒருவர்க்குப்புகழ்சேர்க்கும்.
மு.வஉரை:
ஒருவன்வாழ்நாளில்முயற்சிமேற்கொண்டுசெய்யத்தக்கதுஅறமே. செய்யாமல்காத்துகொள்ளத்தக்கதுபழியே.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்செய்யத்தக்கதுஅறமே; விட்டுவிடத்தக்கவைதீயசெயல்களே.
பரிமேலழகர்உரை:
ஒருவற்குச்செயற்பாலதுஅறனே - ஒருவனுக்குச்செய்தற்பான்மையானதுநல்வினையே; உயற்பாலதுபழியே- ஒழிதற்பான்மையதுதீவினையே. ( 'ஓரும்' என்பனஇரண்டும்அசைநிலை. தேற்றேகாரம்பின்னும்கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான்செய்வதும்ஒழிவதும்நியமிக்கப்பட்டன.).
மணக்குடவர்உரை:
ஒருவனுக்குச்செய்யும்பகுதியதுஅறமே, தப்பும்பகுதியதுபழியே. மேல்அறஞ்செய்யப்பிறப்பறுமென்றார், அதனோடுபாவமுஞ்செய்யின்அறாதென்றற்குஇதுகூறினார்.
Translation:
'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.
Explanation:
That is virtue which each ought to do, and that is vice which each should shun.
Comments
Post a Comment