321-330

 குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:கொல்லாமை.

குறள்வரிசை: 321 322 323 324 325 326 327 328 329 330
குறள் 321:
அறவினையாதெனின்கொல்லாமைகோறல்
பிறவினைஎல்லாந்தரும்.
கலைஞர்உரை:
எந்தஉயிரையும்கொல்லாதிருப்பதேஅறச்செயலாகும். கொலைசெய்தல்தீயவினைகள்அனைத்தையும்விளைவிக்கும்.
மு.வஉரை:
அறமாகியசெயல்எதுஎன்றால்ஒருஉயிரையும்கொல்லாமையாகும், கொல்லுதல்அறமல்லாதசெயல்கள்எல்லாவற்றையும்விளைக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறச்செயல்எதுஎன்றால், பிறஉயிர்களைக்கொலைசெய்யாதுஇருப்பதே; கொல்வதுஅனைத்துப்பாவங்களையும்தரும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது,ஐயறிவுஉடையனமுதல்ஓர்அறிவுடையனஈறாயஉயிர்களைச்சோர்ந்தும்கொல்லுதலைச்செய்யாமை,இதுமேற்கூறியஅறங்கள்எல்லாவற்றினும்சிறப்புடைத்தாய்க்கூறாதஅறங்களையும்அகப்படுத்துநிற்றலின், இறுதிக்கண்வைக்கப்பட்டது.]
(அறவினையாதுஎனின்கொல்லாமை - அறங்களெல்லாம்ஆகியசெய்கையாதுஎன்றுவினவின், அஃதுஓர்உயிரையும்கொல்லாமையாம், கோறல்பிறவினைஎல்லாம்தரும் - அவற்றைக்கொல்லுதல்பாவச்செய்கைகள்எல்லாவற்றையும்தானேதரும்ஆதலான். (அறம் - சாதியொருமை. விலக்கியதுஒழிதலும்அறஞ்செய்தலாம்ஆகலின், கொல்லாமையைஅறவினைஎன்றார். ஈண்டுப்பிறவினைஎன்றதுஅவற்றின்விளைவை. கொலைப்பாவம்விளைக்கும்துன்பம்ஏனைப்பாவங்களெல்லாம்கூடியும்விளைக்கமாட்டாஎன்பதாம். கொல்லாமைதானேபிறஅறங்கள்எல்லாவற்றின்பயனையும்தரும்என்றுமேற்கோள்கூறி, அதற்குஏதுஎதிர்மறைமுகத்தால்கூறியவாறாயிற்று.).
மணக்குடவர்உரை:
நல்வினையாதெனின்கொல்லாமை; கொல்லுதல்எல்லாத்தீவினைப்பயனையுந்தருமாதலால். இஃதுஅறத்தொழிலாவதுகொல்லாமையென்றது.
Translation:
What is the work of virtue? 'Not to kill';
For 'killing' leads to every work of ill.
Explanation:
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.

குறள் 322:
பகுத்துண்டுபல்லுயிர்ஓம்புதல்நூலோர்
தொகுத்தவற்றுள்எல்லாந்தலை.
கலைஞர்உரை:
இருப்போர்இல்லாதோர்என்றில்லாமல், கிடைத்ததைப்பகிர்ந்துகொண்டு, எல்லாஉயிர்களும்வாழவேண்டும்என்றசமநிலைக்கொள்கைக்குஈ.டானதுவேறுஎதுவுமேஇல்லை.
மு.வஉரை:
கிடைத்ததைப்பகுந்துகொடுத்துத்தானும்உண்டுபலஉயிர்களையும்காப்பாற்றுதல்அறநூலார்தொகுத்தஅறங்கள்எல்லாவற்றிலும்தலையானஅறமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
இருப்பதைப்பகிர்ந்துஉண்டு, பலஉயிர்களையும்பாதுகாப்பது, நூல்எழுதியவர்கள்தொகுத்தஅறங்களுள்எல்லாம்முதன்மையானஅறமாகும்.
பரிமேலழகர்உரை:
பகுத்துஉண்டுபல்உயிர்ஓம்புதல் - உண்பதனைப்பசித்தஉயிர்கட்குப்பகுத்துக்கொடுத்துஉண்டுஐவகைஉயிர்களையும்ஓம்புதல், நூலோர்தொகுத்தவற்றுள்எல்லாம்தலை -அறநூலைஉடையார்துறந்தார்க்குத்தொகுத்தஅறங்கள்எல்லாவற்றினும்தலையாயஅறம். ('பல்லுயிரும்' என்னும்முற்றுஉம்மைவிகாரத்தால்தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும்கொலைவாராமல்குறிக்கொண்டுகாத்தல். அதற்குப்பகுத்துஉண்டல்இன்றியமையாஉறுப்புஆகலின்அச்சிறப்புத்தோன்றஅதனைஇறந்தகாலவினையெச்சத்தால்கூறினார். எல்லாநூல்களிலும்நல்லனஎடுத்துஎல்லார்க்கும்பொதுபடக்கூறுதல்இவர்க்குஇயல்புஆகலின், ஈண்டும்பொதுப்பட 'நூலோர்' என்றும்அவர்எல்லார்க்கும்ஒப்பமுடிதலான் 'இதுதலையாயஅறம்' என்றும்கூறினார்.).
மணக்குடவர்உரை:
பல்லுயிர்களுக்குப்பகுத்துண்டுஅவற்றைப்பாதுகாத்தல், நூலுடையார்திரட்டினஅறங்களெல்லாவற்றினும்தலையானஅறம். இஃதுஎல்லாச்சமயத்தார்க்கும்நன்றென்றது.
Translation:
Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.
Explanation:
The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.

குறள் 323:
ஒன்றாகநல்லதுகொல்லாமைமற்றதன்
பின்சாரப்பொய்யாமைநன்று.
கலைஞர்உரை:
அறங்களின்வரிசையில்முதலில்கொல்லாமையும்அதற்கடுத்துப்பொய்யாமையும்இடம்பெறுகின்றன.
மு.வஉரை:
இணையில்லாதஓர்அறமாகக்கொல்லாமைநல்லது, அதற்குஅடுத்தநிலையில்கூறத்தக்கதாகப்பொய்யாமைநல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
உயிர்களைக்கொல்லாதசெயல், அறங்களுள்எல்லாம்சிறந்ததனிஅறமாம். அதற்குஅடுத்துச்சிறந்தஅறம்பொய்யாமை.
பரிமேலழகர்உரை:
ஒன்றாகநல்லதுகொல்லாமை - நூலோர்தொகுத்தஅறங்களுள்தன்னோடுஇணையொப்பதின்றித்தானேயாகநல்லதுகொல்லாமை; பொய்யாமைஅதன்பின்சாரநன்று - அஃதுஒழிந்தால்பொய்யாமைஅதன்பின்னேநிற்கநன்று. '('நூலோர்தொகுத்தஅறங்களுள்' என்பதுஅதிகாரத்தான்வந்தது. அதிகாரம்கொல்லாமையாயினும் , மேல்பொய்யாமைபொய்யாமைஆற்றின்எனவும், யாம்மெய்யாக்கண்டவற்றுள்இல்லைஎனவும்கூறினார்ஆகலின்இரண்டுஅறத்துள்ளும்யாதுசிறந்ததுஎன்றுஐயம்நிகழுமன்றே; அதுநிகழாமையாற்பொருட்டு, ஈண்டுஅதன்பின்சாரப்பொய்யாமைநன்றுஎன்றார். முன்கூறியதில்பின்கூறியதுவலியுடைத்துஆகலின், அதனைப்பின்சாரநன்றுஎன்றது, நன்மைபயக்கும்வழிப்பொய்யும்மெய்யாயும், தீமைபயக்கும்வழிமெய்யும்பொய்யாயும்இதனைப்பற்றஅதுதிரிந்துவருதலான்எனஉணர்க. இவைமூன்றுபாட்டானும், இவ்வறத்தினதுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
இணையின்றாகநல்லதுகொல்லாமை; அதன்பின்பேஅணைய, பொய்யாமையும்நன்று. இதுசொல்லியஅறத்தினும்பொய்யாமைநன்று: அதினும்நன்றுகொல்லாமையென்றது.
Translation:
Alone, first of goods things, is 'not to slay';
The second is, no untrue word to say.
Explanation:
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.

குறள் 324:
நல்லாறுஎனப்படுவதுயாதெனின்யாதொன்றும்
கொல்லாமைசூழும்நெறி.
கலைஞர்உரை:
எந்தஉயிரையும்கொல்லக்கூடாதுஎனும்நெறிகாப்பதுதான்நல்லறவழிஎனப்படும்.
மு.வஉரை:
நல்லவழிஎன்றுஅறநூல்களால்சொல்லப்படுவதுஎதுஎன்றால், எந்தஉயிரையும்கொல்லாதஅறத்தைப்போற்றும்நெறியாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லவழிஎதுஎன்றால், எந்தஉயிரையும்கொலைசெய்யாமல்அறம்காக்கும்வழிதான்.
பரிமேலழகர்உரை:
நல்ஆறுஎனப்படுவதுயாதுஎனின் - மேற்கதிவீடுபேறுகட்குநல்லநெறிஎன்றுசொல்லப்படுவதுயாதுஎன்றுவினவின், யாதுஒன்றும்கொல்லாமைசூழும்நெறி - அஃதுயாதோர்உயிரையும்கொல்லாமைஆகியஅறத்தினைக்காக்கக்கருதும்நெறி. ('யாதுஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும்அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல்காத்தல். இதனான்இவ்வறத்தினைஉடையதேநல்நெறிஎன்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நல்லவழியென்றுசொல்லப்படுவதுயாதெனின், அதுயாதொருயிரையுங்கொல்லாமையைச்சிந்திக்கும்வழி. இதுநன்னெறியாவதுகொல்லாமையென்றது.
Translation:
You ask, What is the good and perfect way?
'Tis path of him who studies nought to slay.
Explanation:
Good path is that which considers how it may avoid killing any creature.

குறள் 325:
நிலைஅஞ்சிநீத்தாருள்எல்லாம்கொலைஅஞ்சிக்
கொல்லாமைசூழ்வான்தலை.
கலைஞர்உரை:
உலகியல்நிலையைவெறுத்துத்துறவுபூண்டவர்எல்லோரையும்விடக்கொலையைவெறுத்துக்கொல்லாமையைக்கடைப்பிடிப்பவரேசிறந்தவராவார்.
மு.வஉரை:
வாழ்க்கையின்தன்மையைக்கண்டுஅஞ்சித்துறந்தவர்கள்எல்லாரிலும், கொலைசெய்வதற்க்குஅஞ்சிக்கொல்லாதஅறத்தைப்போற்றுகின்றவன்உயர்ந்தவன்.
சாலமன்பாப்பையாஉரை:
வாழ்க்கைநிலைக்குஅஞ்சிமனத்துறவுகொண்டவருள்எல்லாம்கொலைசெய்வதால்வரும்பாவத்திற்குஅஞ்சிவாழ்பவன்உயர்ந்தவன்ஆவான்.
பரிமேலழகர்உரை:
நிலைஅஞ்சிநீத்தாருள்எல்லாம் - பிறப்புநின்றநிலையைஅஞ்சிப்பிறவாமைப்பொருட்டுமனைவாழ்க்கையைத்துறந்தார்எல்லாருள்ளும், கொலைஅஞ்சிக்கொல்லாமைசூழ்வான்தலை - கொலைப்பாவத்தைஅஞ்சிக்கொல்லாமைஆகியஅறத்தைமறவாதவன்உயர்ந்தவன். (பிறப்புநின்றநிலையாவது, இயங்குவநிற்பஎன்னும்இருவகைப்பிறப்பினும்இன்பம்என்பதுஒன்றுஇன்றிஉள்ளனஎல்லாம்துன்பமேயாயநிலைமை. துறவுஒன்றேஆயினும், சமயவேறுபாட்டால்பலவாம்ஆகலின், 'நீத்தாருள்எல்லாம்' என்றார்.இதனான்இவ்வறம்மறவாதவன்உயர்ச்சிகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
மனைவாழ்க்கையில்நிற்றலையஞ்சித்துறந்தவரெல்லாரினும்கொலையையஞ்சிக்கொல்லாமையைச்சிந்திப்பான்தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில்நிற்பினும். இஃதுஎல்லாத்துறவினும்நன்றென்றது.
Translation:
Of those who 'being' dread, and all renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay.
Explanation:
Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.

குறள் 326:
கொல்லாமைமேற்கொண்டொழுகுவான்வாழ்நாள்மேல்
செல்லாதுஉயிருண்ணுங்கூற்று.
கலைஞர்உரை:
கொலைசெய்யாமையைவாழ்வில்அறநெறியாகக்கொண்டவரின்பெருமையைவியந்து, சாவுகூடஅவர்உயிரைப்பறிக்கத்தயங்கிநிற்கும்.
மு.வஉரை:
கொல்லாதஅறத்தைமேற்கொண்டுநடக்கின்றவனுடையவாழ்நாளின்மேல், உயிரைக்கொண்டுசெல்லும்கூற்றுவனும்செல்லமாட்டான்.
சாலமன்பாப்பையாஉரை:
கொலைசெய்யாமல்வாழ்வதைக்குறிக்கோளாகக்கொண்டுவாழ்பவனின்வாழ்நாளின்மேல்உயிர்உண்ணும்கூற்றுகுறுக்கிடாது.
பரிமேலழகர்உரை:
கொல்லாமைமேற்கொண்டுஒழுகுவான்வாழ்நாள்மேல் - கொல்லாமையைவிரதமாகமேற்கொண்டுஒழுகுவானதுவாழ்நாளின்மேல், உயிர்உண்ணும்கூற்றுச்செல்லாது - உயிர்உண்ணும்கூற்றுச்செல்லாது. (மிகப்பெரியஅறம்செய்தாரும்மிகப்பெரியபாவம்செய்தாரும்முறையான்அன்றிஇம்மைதன்னுள்ளேஅவற்றின்பயன்அனுபவிப்பர்என்னும்அறநூல்துணிபுபற்றி, இப்பேரறம்செய்தான்தானும்கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டியவாழ்நாள்இடையூறின்றிஎய்தும்என்பார்வாழ்நாள்மேல்கூற்றுச்செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம்நீட்டிக்கும்; நீட்டித்தால்ஞானம்பிறந்துஉயிர்வீடுபெறும்என்பதுகருத்து. இதனான்அவர்க்குவரும்நன்மைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
கொல்லாமையைவிரதமாகக்கொண்டுஒழுகுமவன்வாழ்நாளின்மேல், உயிருண்ணுங்கூற்றுச்செல்லாது. பிறவாமையுண்டாமாதலால்கூற்றுச்செல்லாதுஎன்றார். இதுகொல்லாமையின்பயன்கூறிற்று.
Translation:
Ev'n death that life devours, their happy days shall spare,
Who law, 'Thou shall not kill', uphold with reverent care.
Explanation:
Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.

குறள் 327:
தன்னுயிர்நீப்பினும்செய்யற்கதான்பிறிது
இன்னுயிர்நீக்கும்வினை.
கலைஞர்உரை:
தன்னுயிரேபோவதாகஇருப்பினும்கூடஅதற்காகஇன்னொருஉயிரைப்போக்கும்செயலில்ஈடுபடக்கூடாது.
மு.வஉரை:
தன்உயிர்உடம்பிலிருந்துநீங்கிச்செல்வதாகஇருந்தாலும், அதைத்தடுப்பதற்காகத்தான்வேறோர்உயிரைநீக்கும்செயலைச்செய்யக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
தன்உயிரையேஇழக்கநேர்ந்தாலும், பிறஇன்னுயிரைஅதன்உடம்பிலிருந்துபோக்கும்செயலைச்செய்யவேண்டா.
பரிமேலழகர்உரை:
தன்உயிர்நீப்பினும் - அதுசெய்யாவழித்தன்னுயிர்உடம்பின்நீங்கிப்போமாயினும்: தான்பிறிதுஇன்உயிர்நீக்கும்வினைசெய்யற்க - தான்பிறிதோர்இன்னுயிரைஅதன்உடம்பின்நீக்கும்தொழிலைச்செய்யற்க. ('தன்னைஅதுகொல்லினும்தான்அதனைக்கொல்லற்க' என்றது, பாவம்கொலையுண்டவழித்தேய்தலும், கொன்றவழிவளர்தலும்நோக்கி. இனி 'தன்உயிர்நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச்செய்யாதவழித்தன்னுயிர்போமாயினும்' என்றுஉரைப்பாரும்உளர். பிறர்செய்தலும்ஆகாமையின்அஃதுஉரையன்மைஅறிக.).
மணக்குடவர்உரை:
தன்னுயிர்நீங்கினும்செய்யாதொழிக. தான்பிறிதொன்றினுடையஇனியவுயிரைவிடுக்குந்தொழிலினை. உயிர்க்குக்கேடுவருங்காலத்துநோய்க்குமருந்தாகக்கொல்லுதல்குற்றமன்றுஎன்பார்க்குஇதுகூறப்பட்டது.
Translation:
Though thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away.
Explanation:
Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.

குறள் 328:
நன்றாகும்ஆக்கம்பெரிதெனினும்சான்றோர்க்குக்
கொன்றாகும்ஆக்கங்கடை.
கலைஞர்உரை:
பெரிதாகநன்மைதரக்கூடியஅளவுக்குஒருகொலைபயன்படக்கூடுமெனினும், நல்லபண்புடையமக்கள், அந்தநன்மையைஇழிவானதாகவேகருதுவார்கள்.
மு.வஉரை:
கொலையால்நன்மையாகவிளையும்ஆக்கம்பெரிதாகஇருந்தாலும், சான்றோர்க்குக்கொலையால்வரும்ஆக்கம்மிகஇழிவானதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
வேள்விகளில்கொலைசெய்வதால்நன்மைவரும், செல்வம்பெருகும்என்றாலும், பிறஉயிரைக்கொல்வதால்வரும்செல்வத்தைச்சான்றோர்இழிவானதாகவேஎண்ணுவர்.
பரிமேலழகர்உரை:
நன்றுஆகும்ஆக்கம்பெரிதுஎனினும் - தேவர்பொருட்டுவேள்விக்கண்கொன்றால்இன்பம்மிகும்செல்வம்பெரிதாம்என்றுஇல்வாழ்வார்க்குக்கூறப்பட்டதாயினும், சான்றோர்க்குகொன்றுஆகும்ஆக்கம்கடை - துறவான்அமைந்தார்க்குஓர்உயிரைக்கொல்லவரும்செல்வம்கடை. (இன்பம்மிகும்செல்வமாவது, தாமும்தேவராய்த்துறக்கத்துச்சென்றுஎய்தும்செல்வம். அதுசிறிதாகலானும். பின்னும்பிறத்தற்குஏதுவாகலானும், வீடாகியஈறுஇல்இன்பம்எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம்எய்துவார்க்குஆம்ஆயினும், வீடுஎய்துவார்க்குக்ஆகாதுஎன்றமையின், விதிவிலக்குகள்தம்முள்மலையாமைவிளக்கியவாறாயிற்று. இஃதுஇல்லறம்அன்மைக்குக்காரணம். இவைஇரண்டுபாட்டானும்கொலையதுகுற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நன்மையாகும்ஆக்கம்பெரியதேயாயினும்ஓருயிரைக்கொன்றுஆகின்றஆக்கம்உயர்ந்தோர்க்குஆகாது. இதுபெரியோர்வீடுபேற்றைவிரும்பிக்கன்மத்தைவிடுத்தலால்வேள்வியின்வருங்கொலையும்ஆகாதென்றது.
Translation:
Though great the gain of good should seem, the wise
Will any gain by staughter won despise.
Explanation:
The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.

குறள் 329:
கொலைவினையராகியமாக்கள்புலைவினையர்
புன்மைதெரிவாரகத்து.
கலைஞர்உரை:
பகுத்தறிவைஇழந்துசெயல்படும்கொலைகாரர்களைச்சான்றோர்உள்ளம், இழிதகைப்பிறவிகளாகவேகருதும்.
மு.வஉரை:
கொலைத்தொழிலினராகியமக்கள்அதன்இழிவைஆராய்ந்தவரிடத்தில்புலைத்தொழிலுடையவராய்த்தாழ்ந்துதோன்றுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
கொலைசெய்வதைத்தொழிலாகக்கொண்டுவாழும்மக்கள், அத்தொழிலின்தீமையைஅறியாதவர்என்றாலும், அறிந்தபெரியோர்மனத்துள்அவர்கள்கீழானசெயல்செய்பவராய்எண்ணப்படுவார்.
பரிமேலழகர்உரை:
கொலைவினையர்ஆகியமாக்கள் - கொலைத்தொழிலையுடையராகியமாந்தர், புன்மைதெரிவார்அகத்துப்புலைவினையர் - அத்தொழிலின்கீழ்மையைஅறியாதநெஞ்சத்தராயினும், அறிவார்நெஞ்சத்துப்புலைத்தொழிலினர். (கொலைவினையர்என்றதனான், வேள்விக்கண்கொலையன்மைஅறிக. 'புலைவினையர்' என்றதுதொழிலால்புலையர்என்றவாறு. இம்மைக்கண்கீழ்மைஎய்துவர்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
கொலைத்தொழிலினையுடையராகியமாக்கள்பொல்லாமையையாராய்வாரிடத்துத்தொழிற்புலையராகுவர். இவரைஉலகத்தர்கன்மசண்டாளரென்றுசொல்லுவார்.
Translation:
Whose trade is 'killing', always vile they show,
To minds of them who what is vileness know.
Explanation:
Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.

குறள் 330:
உயிர்உடம்பின்நீக்கியார்என்ப
செயிர்உடம்பின்செல்லாத்தீவாழ்க்கை
யவர்.
கலைஞர்உரை:
வறுமையும்நோயும்மிகுந்ததீயவாழ்க்கையில்உழல்வோர், ஏற்கனவேகொலைகள்பலசெய்தவராகஇருப்பர்என்றுமுன்னோர்கூறுவர்.
மு.வஉரை:
நோய்மிகுந்தஉடம்புடன்வறுமையானதீயவாழ்க்கைஉடையவர், முன்புகொலைபலசெய்துஉயிர்களைஉடம்புகளில்இருந்துநீக்கினவர்என்றுஅறிஞர்கூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
நோய்நிறைந்தஉடம்புடன், வறுமையால், இழிந்தவாழ்க்கையைஇன்றுவாழ்பவர்கள், முற்பிறப்பில்பிறஉயிர்களைஉடம்பிலிருந்துநீக்கிக்கொலைசெய்தவர்என்றுஅறிந்தோர்கூறுவர்.
பரிமேலழகர்உரை:
செயிர்உடம்பின்செல்லாத்தீவாழ்க்கையவர் - நோக்கலாகாநோய்உடம்புடனேவறுமைகூர்ந்தஇழிதொழில்வாழ்க்கையினைஉடையாரை, உயிர்உடம்பின்நீக்கியார்என்ப - இவர்முற்பிறப்பின்கண்உயிர்களைஅவைநின்றஉடம்பினின்றும்நீக்கினவர்என்றுசொல்லுவர்வினைவிளைவுகளைஅறிந்தோர். (செல்லாவாழ்க்கைதீவாழ்க்கைஎனக்கூட்டுக. செயிர்உடம்பினராதல், அக்கேபோல்அங்கையொழியவிரல்அழுகித் - துக்கத்தொழுநோய்எழுபவே (நாலடி 123) என்பதனாலும்அறிக. மறுமைக்கண்இவையும்எய்துவர்என்பதாம். இவைஇரண்டுபாட்டானும்கொல்வார்க்குவரும்தீங்குகூறப்பட்டது. அருள்உடைமைமுதல்கொல்லாமைஈறாகச்சொல்லப்பட்டஇவற்றுள்ளேசொல்லப்படாதவிரதங்களும்அடங்கும்; அஃதுஅறிந்துஅடக்கிக்கொள்க. ஈண்டுஉரைப்பின்பெருகும்.).
மணக்குடவர்உரை:
முற்பிறப்பின்கண்உயிரையுடம்பினின்றுநீக்கினார்இவரென்றுபெரியோர்கூறுவர்; குற்றமானவுடம்பினையும்ஊணுஞ்செல்லாததீயமனைவாழ்க்கையினையும்உடையாரை. இதுகொலையினால்வருங்குற்றங்கூறிற்று.
Translation:
Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.
Explanation:
(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290