351-360
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:மெய்யுணர்தல்.
குறள்வரிசை: 351 352 353 354 355 356 357 358 359 360
குறள் 351:
பொருளல்லவற்றைப்பொருளென்றுஉணரும்
மருளானாம்மாணாப்பிறப்பு.
கலைஞர்உரை:
நிலையற்றவைகளைநிலையானவைஎனநம்புகின்றஅறியாமைமிகஇழிவானதாகும்.
மு.வஉரை:
மெய்ப்பொருள்அல்லாதவைகளைமெய்ப்பொருள்என்றுதவறாகஉணர்கின்றமயக்கஉணர்வால்சிறப்பில்லாததுன்பப்பிறவிஉண்டாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பொய்யானவற்றைமெய்என்றுஎண்ணும்மயக்கத்தால்இழிவானபிறப்புவரும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது,பிறப்புவீடுகளையும்அவற்றின்காரணங்களையும்விபரீதஐயங்களானன்றிஉண்மையான்உணர்தல். இதனைவடநூலார் 'தத்துவஞானம்' என்ப. இதுவும்பற்றற்றான்பற்றினைப்பற்றியவாறுஉளதாவதுஆகலின்,அக்காரணஒற்றுமைபற்றித்துறவின்பின்வைக்கப்பட்டது.
பொருள்அல்லவற்றைப்பொருள்என்றுஉணரும்மருளான்ஆம் - மெய்ப்பொருள்அல்லவற்றைமெய்ப்பொருள்என்றுஉணரும்விபரீதஉணர்வானேஉளதாம், மாணாப்பிறப்பு - இன்பம்இல்லாதபிறப்பு. (அவ்விபரீதஉணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப்பயனும், கடவுளும்இல்லைஎனவும்மற்றும்இத்தன்மையவும்சொல்லும்மயக்கநூல்வழக்குகளைமெய்ந்நூல்வழக்குஎனத்துணிதல். குற்றியைமகன்என்றும்இப்பியைவெள்ளிஎன்றும்இவ்வாறேஒன்றனைப்பிறிதொன்றாகத்துணிதலும்அது. 'மருள், மயக்கம், விபரீதஉணர்வு, அவிச்சை' என்பனஒருபொருட்கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர்என்னும்நால்வகைப்பிறப்பினும்உள்ளதுதுன்பமேஆகலின், 'மாணாப்பிறப்பு' என்றார். இதனால்பிறப்புத்துன்பம்என்பதூஉம், அதற்குமுதற்காரணம்அவிச்சைஎன்பதூஉம்கூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
பொருளல்லாதவற்றைப்பொருளாகக்கொள்கின்றமயக்கத்தினாலேஉண்டாம்; மாட்சிமையில்லாதபிறப்பு. இதுமெய்யுணருங்கால்மயக்கங்காண்பானாயின்பிறப்புண்டாமென்றது.
Translation:
Of things devoid of truth as real things men deem;-
Cause of degraded birth the fond delusive dream!.
Explanation:
Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.
குறள் 352:
இருள்நீங்கிஇன்பம்பயக்கும்மருள்நீங்கி
மாசறுகாட்சியவர்க்கு.
கலைஞர்உரை:
மயக்கம்தெளிந்துமாசற்றஉண்மையைஉணர்ந்தால்அறியாமைஅகன்றுநலம்தோன்றும்.
மு.வஉரை:
மயக்கம்நீங்கிக்குற்றம்அற்றமெய்யுணர்வைஉடையவர்க்கு, அம்மெய்யுணர்வுஅறியாமையைநீக்கிஇன்பநிலையைக்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
மயக்கத்திலிருந்துவிலகிக்குற்றமற்றமெய்யைஉணரும்நிலையைஅடைந்தவர்க்கு, அந்நிலைதுன்பஇருளைவிலக்கும்; இன்பநிலையைக்கொடுக்கும்.
பரிமேலழகர்உரை:
மருள்நீங்கிமாசுஅறுகாட்சியவர்க்கு - அவிச்சையின்நீங்கிமெய்யுணர்வுடையார்ஆயினார்க்கு, இருள்நீங்கிஇன்பம்பயக்கும் - அம்மெய்யுணர்வுபிறப்பினைநீங்கிவீட்டினைக்கொடுக்கும். (இருள்: நரகம், அஃதுஆகுபெயராய்க்காரணத்தின்மேல்நின்றது. 'நீக்கி' எனத்தொடைநோக்கிமெலிந்துநின்றது; நீங்கஎன்பதன்திரிபுஎனினும்அமையும். 'மருள்நீங்கி' என்னும்வினையெச்சம், காட்சியவரென்னும்குறிப்புவினைப்பெயர்கொண்டது. 'மாசுஅறுகாட்சி' என்றதுகேவலஉணர்வினை. இதனான்வீடாவது 'நிரதிசயஇன்பம்' என்பதூஉம், அதற்குநிமித்தகாரணம்கேவலப்பொருள்என்பதூஉம்கூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
மயக்கத்தினின்றுநீங்கிக்குற்றமற்றஅறிவுடையார்க்கு, அறியாமையாகியவிருள்நீங்கமுத்தியாகியஇன்பமுண்டாம். இதுமெய்யுணர்ந்தார்க்குவினைவிட்டுமுத்தியின்பமுண்டாமென்றது.
Translation:
Darkness departs, and rapture springs to men who see,
The mystic vision pure, from all delusion free.
Explanation:
A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).
குறள் 353:
ஐயத்தின்நீங்கித்தெளிந்தார்க்குவையத்தின்
வானம்நணியதுடைத்து.
கலைஞர்உரை:
ஐயப்பாடுகளைத்தெளிந்தஆராய்ச்சிவாயிலாகத்தீர்த்துக்கொண்டவர்களுக்குப்பூமியைவிடவானம்மிகஅருகில்இருப்பதாகக்கருதுகின்றஊக்கம்ஏற்படும்.
மு.வஉரை:
ஐயத்திலிருந்துநீங்கிமெய்யுணர்வுபெற்றவர்க்குஅடைந்துள்ளஇவ்வுலகைவிடஅடையவேண்டியமேலுலகம்அண்மையில்உள்ளதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
சந்தேகத்திலிருந்துவிலகிமெய்ப்பொருளைத்தெளிவாகஉணர்ந்தவருக்கு, அவர்வாழும்பூமியைவிட, விரும்பும்வானஉலகம்மிகஅருகில்இருப்பதாகும்.
பரிமேலழகர்உரை:
ஐயத்தின்நீங்கித்தெளிந்தார்க்கு - ஐயத்தினின்றுநீங்கிஉணர்ந்தார்க்கு; வையத்தின்வானம்நணியதுடைத்து - எய்திநின்றநிலஉலகத்தினும்எய்தக்கடவதாயவீட்டுலகம்நணித்தாதலுடைத்து. (ஐயமாவது, பலதலையாயஉணர்வு. அஃதாவதுமறுபிறப்பும்இருவினைப்பயனும், கடவுளும்உளவோஇலவோஎனஒன்றின்துணிவுபிறவாதுநிற்றல், பேய்த்தேரோபுனலோ? கயிறோஅரவோ? எனத்துணியாதுநிற்பதும்அது. ஒருவாற்றான்பிறர்மதம்களைந்துதம்மதம்நிறுத்தல்எல்லாச்சமயநூல்கட்கும்இயல்புஆகலின், அவைகூறுகின்றபொருள்களுள்யாதுமெய்யெனநிகழும்ஐயத்தினையோகமுதிர்ச்சிஉடையார்தம்அனுபவத்தான்நீக்கிமெய்யுணர்வார்ஆகலின், அவரைஐயத்தின்நீங்கித்தெளிந்தார்என்றும்அவர்க்குஅவ்வனுபவஉணர்வுஅடிப்பட்டுவரவரப்பண்டைஉலகியல்உணர்வுதூர்ந்துவரும்ஆகலின், அதனைப்பயன்மேலிட்டு 'வையத்தன்வானம்நணியதுடைத்து' என்றும்கூறினார். கூறவேஐயஉணர்வும்பிறப்பிற்குக்காரணமாதல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
மெய்ப்பொருளைஐயப்படுதலினின்றுநீங்கித்துணிந்தவர்க்குஇவ்வுலகத்தினும்மேலுலகம்நணித்தாம்தன்மையுடத்து. துணிந்தஅறிவின்கண்ணதுஎல்லாவுலகுமாதலின்அவ்வறிவுடையார்க்குஉலகம்ஒருங்குதோற்றுதலின்நணித்தாமென்றவாறு. இதுமெய்யுணர்வுஎவ்விடமும்அறியுமென்றது.
Translation:
When doubts disperse, and mists of error roll
Away, nearer is heav'n than earth to sage's soul.
Explanation:
Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.
குறள் 354:
ஐயுணர்வுஎய்தியக்கண்ணும்பயமின்றே
மெய்யுணர்வுஇல்லாதவர்க்கு.
கலைஞர்உரை:
உண்மையைக்கண்டறிந்துதெளிவடையாதவர்கள், தமதுஐம்புலன்களையும்அடக்கிவெற்றிகண்டிருந்தாலும்கூடஅதனால்அவர்களுக்குஎந்தப்பயனும்இல்லை.
மு.வஉரை:
மெய்யுணர்வுஇல்லாதவர்க்குஐந்துபுலன்களின்வேறுபாட்டால்வளர்ந்தஐந்துவகைஉணர்வும்முற்றப்பெற்றபோதிலும்பயன்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
மனம்அடங்கக்கற்றவர்என்றாலும், உண்மையைஉணரும்உணர்வுஇல்லாதவர்க்குஒருபயனும்இல்லை.
பரிமேலழகர்உரை:
ஐயுணர்வுஎய்தியக்கண்ணும்பயம்இன்றே - சொல்லப்படுகின்றபுலன்கள்வேறுபாட்டான்ஐந்தாகியஉணர்வுஅவற்றைவிட்டுத்தம்வயத்ததாயவழியும், அதனால்பயனில்லையேயாம், மெய்யுணர்வுஇல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல்இல்லாதார்க்கு. (ஐந்தாகியஉணர்வு : மனம் , அஃதுஎய்துதலாவது, மடங்கிஒருதலைப்பட்டுத்தாரணைக்கண்நிற்றல். அங்ஙனம்நின்றவழியும்வீடுபயவாமையின் 'பயம்இன்று' என்றார். சிறப்புஉம்மைஎய்துதற்குஅருமைவிளக்கிநின்றது. இவைஇரண்டுபாட்டானும்மெய்யுணர்வுஉடையார்க்கேவீடுஉளதுஎனமெய்உணர்வின்சிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
மெய்முதலாகியபொறிகளைந்தினானும்அறியப்படுவனவெல்லாம்அறிந்தவிடத்தும், அதனான்ஒருபயனுண்டாகாது; உண்மையையறியும்அறிவிலாதார்க்கு.
Translation:
Five-fold perception gained, what benefits accrue
To them whose spirits lack perception of the true?.
Explanation:
Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.
குறள் 355:
எப்பொருள்எத்தன்மைத்தாயினும்அப்பொருள்
மெய்ப்பொருள்காண்பதுஅறிவு.
கலைஞர்உரை:
வெளித்தோற்றத்தைப்பார்த்துஏமாந்துவிடாமல், அதுபற்றியஉண்மையைஉணர்வதுதான்அறிவுடைமையாகும்.
மு.வஉரை:
எப்பொருள்எத்தன்மையதாய்த்தோன்றினாலும் (அத்தோற்றத்தைமட்டும்கண்டுமங்காமல்) அப்பொருளின்உண்மையானஇயல்பைஅறிவதேமெய்யுணர்வாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
எந்தப்பொருளானாலும், அதுஎப்படிக்காட்சிதந்தாலும், அப்பொருளின்வெளித்தோற்றத்தைக்காணாமல், உள்ளடக்கமாகியஉண்மைப்பொருளைக்காண்பதேமெய்யுணர்தல்.
பரிமேலழகர்உரை:
எப்பொருள்எத்தன்மைத்துஆயினும் - யாதொருபொருள்யாதோர்இயல்பிற்றாய்த்தோன்றினும், அப்பொருள்மெய்ப்பொருள்காண்பதுஅறிவு - அத்தோன்றியஆற்றைக்கண்டொழியாது, அப்பொருளின்கண்நின்றுமெய்யாகியபொருளைக்காண்பதேமெய்உணர்வாவது. (பொருள்தோறும்உலகத்தார்கற்பித்துக்கொண்டுவழங்குகின்றகற்பனைகளைக்கழித்து, நின்றஉண்மையைக்காண்பதுஎன்றவாறாயிற்று. அஃதாவதுகோச்சேரமான்யானைக்கட்சேஎய்மாந்தரஞ்சேரல்இரும்பொறைஎன்றவழி. அரசன்என்பதோர்சாதியும்சேரமான்என்பதொருகுடியும், வேழநோக்கினையுடையான்என்பதோர்வடிவும், சேய்என்பதோர்இயற்பெயரும், மாந்தரஞ்சேரல்இரும்பொறைஎன்பதோர்சிறப்புப்பெயரும், ஒருபொருளின்கண்கற்பனைஆகலின், அவ்வாறுஉணராது, நிலம்முதல்உயிர்ஈறாகியதத்துவங்களின்தொகுதிஎனஉணர்ந்து, அவற்றைநிலம்முதலாகத்தத்தம்காரணங்களுள்ஒடுக்கிக்கொண்டுசென்றால் , காரணகாரியங்கள்இரண்டும்இன்றிமுடிவாய்நிற்பதனைஉணர்தலாம். 'எப்பொருள்' என்றபொதுமையான்,இயங்குதிணையும்நிலைத்திணையும்ஆகியபொருள்கள்எல்லாம்இவ்வாறேஉணரப்படும். இதனான்மெய்உணர்வினதுஇலக்கணம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
யாதொருபொருள்யாதொருதன்மைத்தாயினும்அப்பொருளினுடையவுண்மையைத்தான்உண்மையாகக்காண்பதுயாதொன்றுஅஃதுஅறிவாம். மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம்ஒன்று: என்னை? எக்காலத்தும்எவ்விடத்தும்ஒருதன்மையாகஅழியாதுநிற்றலின்மெய்யாயிற்று: எல்லாப்பொருளையுங்காண்டலால்அறிவாயிற்று.
Translation:
Whatever thing, of whatsoever kind it be,
'Tis wisdom's part in each the very thing to see.
Explanation:
(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.
குறள் 356:
கற்றீண்டுமெய்ப்பொருள்கண்டார்தலைப்படுவர்
மற்றீண்டுவாராநெறி.
கலைஞர்உரை:
துறவறவாழ்வுக்குத்தகுதியுடையவராகச்செய்திடும்அனைத்தையும்கற்று, உண்மைப்பொருள்உணர்ந்துஅதன்படிஒழுகுபவர், மீண்டும்இல்லறவாழ்க்கையைவிரும்பமாட்டார்கள்.
மு.வஉரை:
கற்கவேண்டியவற்றைக்கற்றுஇங்குமெய்ப்பொருளைஉணர்ந்தவர் , மீண்டும்இப்பிறப்பிற்குவராதவழியைஅடைவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பெரியவர்களிடம்கற்று, மெய்ப்பொருளைஇவ்வுலகில்உணர்ந்தவர்கள்திரும்பவும்பிறக்காமல்இருக்கும்வழியில்செயல்படுவர்.
பரிமேலழகர்உரை:
ஈண்டுக்கற்றுமெய்ப்பொருள்கண்டார் - இம்மக்கட்பிறப்பின்கண்ணேஉபதேசமொழிகளைஅனுபவம்உடையதேசிகர்பால்கேட்டுஅதனான்மெய்ப்பொருளைஉணர்ந்தவர், மற்றுஈண்டுவாராநெறிதலைப்படுவர் - மீண்டுஇப்பிறப்பின்கண்வாராதநெறியைஎய்துவர். ('கற்று' என்றதனால்பலர்பக்கலினும்பலகாலும்பயிறலும், 'ஈண்டு' என்றதனால்வீடுபேற்றிற்குரியமக்கட்பிறப்பினதுபெறுதற்குஅருமையும்பெற்றாம். ஈண்டுவாராநெறி: வீட்டுநெறி. வீட்டிற்குநிமித்தகாரணமாயமுதற்பொருளைஉணர்தற்குஉபாயம்மூன்று: அவைகேள்வி, விமரிசம், பாவனைஎன்பன. அவற்றுள்கேள்விஇதனால்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
இவ்விடத்தேமெய்ப்பொருளையறிந்துதெளிந்தாரேஅடைவார்; மீண்டுஇவ்விடத்துவாராதவழியினை. கல்வியறிவால்அறிவைஅறியப்பிறப்பறுமென்றவாறு.
Translation:
Who learn, and here the knowledge of the true obtain,
Shall find the path that hither cometh not again.
Explanation:
They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.
குறள் 357:
ஓர்த்துள்ளம்உள்ளதுஉணரின்ஒருதலையாப்
பேர்த்துள்ளவேண்டாபிறப்பு.
கலைஞர்உரை:
உண்மையைஆராய்ந்துஉறுதியாகஉணர்பவர்கள்மீண்டும்பிறப்புஉண்டுஎனக்கருதமாட்டார்கள்.
மு.வஉரை:
ஒருவனுடையஉள்ளம்உண்மைப்பொருளைஆராய்ந்துஉறுதியாகஉணர்ந்தால், அவனுக்குமீண்டும்பிறப்புஉள்ளதெனஎண்ணவேண்டா.
சாலமன்பாப்பையாஉரை:
பெரியவர்களிடம்கேட்டவற்றைமனத்துள்முழுமையாகக்கொண்டு, இடைவிடாமல்மெய்ப்பொருளைஉணர்பவருக்குத் திரும்பவும்ஒருபிறவிஇருக்கும்என்றுஎண்ணவேண்டா.
பரிமேலழகர்உரை:
உள்ளம்ஒருதலையாஓர்த்துஉள்ளதுஉணரின் - அங்ஙனம்கேட்டஉபதேசமொழிப்பொருளை, ஒருவன்உள்ளம்அளவைகளானும்பொருந்துமாற்றானும்தெளியஆராய்ந்துஅதனான்முதற்பொருளைஉணருமாயின், பேர்த்துப்பிறப்புஉள்ளவேண்டா - அவனுக்குமாறிப்பிறப்புளதாகநினைக்கவேண்டா. ('ஒருதலையாஓர்த்து' எனஇயையும். அளவைகளும்பொருந்தும்ஆறும்மேலேஉரைத்தாம். இதனான்விமரிசம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
உள்ளமானதுஉள்ளபொருளையாராய்ந்துஒருதலையாகவுணருமாயின், பின்னைப்பிறப்புண்டென்றுநினையாதொழிக. மெய்யுணர்ந்தவர்பிறப்புண்டென்றுநினையாதொழிகவென்றவாறு.
Translation:
The mind that knows with certitude what is, and ponders well,
Its thoughts on birth again to other life need not to dwell.
Explanation:
Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.
குறள் 358:
பிறப்பென்னும்பேதைமைநீங்கச்சிறப்பென்னும்
செம்பொருள்காண்பதுஅறிவு.
கலைஞர்உரை:
அடுத்தபிறப்புஎனக்கூறப்படும்அறியாமையைப்போக்கித்தெளிந்தஉண்மையைநிலைநாட்டுவதுதான்அறிவுடைமையாகும்.
மு.வஉரை:
பிறவித்துன்பத்திற்குகாரணமானஅறியாமைநீங்குமாறுமுக்திஎனும்சிறந்தநிலைக்குக்காரணமானசெம்பொருளைக்காண்பதேமெய்யுணர்வு.
சாலமன்பாப்பையாஉரை:
பிறவிஎன்னும்அறியாமையிலிருந்துவிலகப்பிறவாமைஎன்னும்செவ்வியபொருளைக்காண்பதேமெய்யுணர்தல்.
பரிமேலழகர்உரை:
பிறப்புஎன்னும்பேதைமைநீங்க - பிறப்பிற்குமுதற்காரணமாயஅவிச்சைகெட, சிறப்புஎன்னும்செம்பொருள்காண்பதுஅறிவு - வீட்டிற்குநிமித்தகாரணமாயசெவ்வியபொருளைக்காண்பதேஒருவர்க்குமெய்உணர்வாவது. (பிறப்பென்னும்பேதைமைஎனவும் 'சிறப்புஎன்னும்செம்பொருள்' எனவும், காரியத்தைக்காரணமாகஉபசரித்தார். ஐவகைக்குற்றங்களுள்அவிச்சைஏனையநான்கிற்கும்காரணமாதல்உடைமையின், அச்சிறப்புப்பற்றிஅதனையேபிறப்பிற்குக்காரணமாகக்கூறினார். எல்லாப்பொருளினும்சிறந்ததாகலான், வீடுசிறப்புஎனப்பட்டது. தோற்றக்கேடுகள்இன்மையின்நித்தமாய்நோன்மையால்தன்னையொன்றும்கலத்தல்இன்மையின்தூய்தாய் , தான்எல்லாவற்றையும்கலந்துநிற்கின்றமுதற்பொருள்விகாரமின்றிஎஞ்ஞான்றும்ஒருதன்மைத்தாதல்பற்றி , அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும் 'உள்ளது' எனவும்கூறியதூஉம்இதுபற்றிஎனஉணர்க. அதனைக்காண்கையாவதுஉயிர்தன்அவிச்சைகெட்டுஅதனொடுஒற்றுமையுறஇடைவிடாதுபாவித்தல், இதனைச் 'சமாதிஎனவும்' 'சுக்கிலத்தியானம்' எனவும்கூறுப. உயிர்உடம்பின்நீங்கும்காலத்துஅதனான்யாதொன்றுபாவிக்கப்பட்டது, அஃதுஅதுவாய்த்தோன்றும்என்பதுஎல்லாஆகமங்கட்கும்துணிபுஆகலின், வீடுஎய்துவார்க்குஅக்காலத்துப்பிறப்பிற்குஏதுவாயபாவனைகெடுதற்பொருட்டுக்கேவலப்பொருளையேபாவித்தல்வேண்டுதலான், அதனைமுன்னேபயில்தலாயஇதனின்மிக்கஉபாயம்இல்லைஎன்பதுஅறிக. இதனான்பாவனைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பிறப்பாகியஅறியாமையினின்றுநீங்கப்பிறவாமையாகியசெவ்வியபொருளைக்காண்பதுஅறிவாம். பிறவாமைசிறந்ததாதலின், சிறப்புஎன்னப்பட்டது. தான்பிறந்தானாகவும்செத்தானாகவும்கருதுகின்றஅறியாமையைவிட்டுத்தனக்குச்சாவில்லையாகவும்பிறப்பில்லையாகவும்தான்நிற்கின்றநிலைமையைக்காணவேண்டுமென்றவாறாயிற்று.
Translation:
When folly, cause of births, departs; and soul can view
The truth of things, man's dignity- 'tis wisdom true.
Explanation:
True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven.
குறள் 359:
சார்புணர்ந்துசார்புகெடஒழுகின்மற்றழித்துச்
சார்தராசார்தருநோய்.
கலைஞர்உரை:
துன்பங்கள்நம்மைச்சாராமல்இருக்கவேண்டுமானால், அத்துன்பங்களுக்குக்காரணமானவற்றைஉணர்ந்துஅவற்றின்மீதுள்ளபற்றைவிலக்கிக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
எல்லாப்பொருளுக்கும்சார்பானசெம்பொருளைஉணர்ந்துபற்றுக்கெடுமாறுஒழுகினால், சார்வதற்க்குஉரியதுன்பங்கள்திரும்பவந்துஅடையா.
சாலமன்பாப்பையாஉரை:
எல்லாப்பொருள்களுக்கும்இடமாகியமெய்ப்பொருளைஉணர்ந்துபற்றின்றிவாழ்ந்தால், பற்றவரும்துன்பங்கள்ஒழுக்கஉணர்வைஅழி்த்துப்பற்றமாட்டா.
பரிமேலழகர்உரை:
சார்புஉணர்ந்துசார்புகெடஒழுகின் - ஒருவன்எல்லாப்பொருட்கும்சார்பாயஅச்செம்பொருளைஉணர்ந்து, இருவகைப்பற்றும்அறஒழுகவல்லனாயின்; சார்தரும்நோய்அழித்துமற்றுச்சார்தரா - அவனைமுன்சாரக்கடவனவாய்நின்றதுன்பங்கள்அவ்வுணர்வுஒழுக்கங்களைஅழித்துப்பின்சாரமாட்டா. (ஆகுபெயரால்சாரும்இடத்தையும்சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு'ஒழுக்கம்என்றதுயோகநெறியொழுகுதலை. அஃதுஇயமம், நியமம், இருப்பு, உயிர்நிலை, மனஒடுக்கம், தாரணை, தியானம், சமாதிஎனஎண்வகைப்படும். அவற்றின்பரப்பெல்லாம்ஈண்டுஉரைப்பின்பெருகும். யோகநூல்களுள்காண்க. 'மற்றுச்சார்தரா' எனஇயையும். சாரக்கடவனவாய்நின்றதுன்பங்களாவன: பிறப்புஅநாதியாய்வருதலின்உயிரான்அளவின்றிஈட்டப்பட்டவினைகளின்பயன்களுள்இறந்தஉடம்புகளான்அனுபவித்தனவும் 'பிறந்தஉடம்பான்முகந்துநின்றனவும்ஒழியப்பின்னும்அனுபவிக்கக்கடவனவாய்க்கிடந்தன. அவைவிளக்கின்முன்இருள்போலஞானயோகங்களின்முன்னர்க்கெடுதலான், 'அழித்துச்சார்தரா' என்றார். இதனைஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக்காரணம்ஆகலான்' நல்வினைப்பயனும் 'நோய்'எனப்பட்டது. மேல்மூன்றுஉபாயத்தானும்பரம்பொருளைஉணரப்பிறப்புஅறும்என்றார். அஃதுஅறும்வழிக்கிடந்ததுன்பங்கள்எல்லாம்என்செய்யும்என்னும்கடாவைஆசங்கித்து. அவைஞானயோகங்களின்முதிர்ச்சிஉடையஉயிரைச்சாரமாட்டாமையானும், வேறுசார்புஇன்மையானும் 'கெட்டுவிடும்'என்பதுஇதனால்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தன்னைச்சார்வனவற்றையறிந்துஅவையிற்றின்சார்வுகெடஒழுகுவானாயின்அவ்வொழுக்கத்தினையழித்துச்சார்தலைச்செய்யா: சாரக்கடவனவாயதுன்பங்கள். சார்பு - வினைச்சார்பு. கெடஒழுகல் - காமம், வெகுளி, மயக்கமின்றிமெய்யுணர்ச்சியான்ஒழுகுதல். இஃதுஉண்மையைக்கண்டுஅக்காட்சியைத்தப்பாமல்முடியநிற்பனாயின்சாரக்கடவதாய்நிற்கின்றவினைசாராதேவிட்டுப்போமென்றது.
Translation:
The true 'support' who knows- rejects 'supports' he sought before-
Sorrow that clings all destroys, shall cling to him no more.
Explanation:
He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).
குறள் 360:
காமம்வெகுளிமயக்கம்இவ்முன்றன்
நாமம்கெடக்கெடும்நோய்.
கலைஞர்உரை:
விருப்பு, வெறுப்பு, அறியாமைஇவற்றுக்குஇடம்தராதவர்களைநெருங்குகிறதுன்பம்அழிந்துவிடும்.
மு.வஉரை:
விருப்பு, வெறுப்பு, அறியாமைஆகியஇக்குற்றங்கள்மூன்றனுடையபெயரும்கெடுமாறுஒழுகினால்துன்பங்கள்வராமற்கெடும்.
சாலமன்பாப்பையாஉரை:
விருப்பு, வெறுப்பு, மயக்கம்என்னும்இம்மூன்றன்பெயருங்கூடஉள்ளத்திற்குள்இல்லாதுபோனால், அவற்றால்வரும்துன்பங்களும்இல்லாமல்போகும்.
பரிமேலழகர்உரை:
காமம்வெகுளிமயக்கம்இவைமூன்றன்நாமம்கெட - ஞானயோகங்களின்முதிர்ச்சியுடையார்க்குவிழைவு, வெறுப்பு, அவிச்சைஎன்னும்இக்குற்றங்கள்மூன்றனுடையபெயருங்கூடக்கெடுதலான், நோய்கெடும் - அவற்றின்காரியமாயவினைப்பயன்கள்உளவாகா. (அநாதியாயஅவிச்சையும் 'அதுபற்றியான்' எனமதிக்கும்அகங்காரமும், அதுபற்றிஎனக்குஇதுவேண்டும்என்னும்அவாவும், அதுபற்றிஅப்பொருட்கண்செல்லும்ஆசையும், அதுபற்றிஅதன்மறுதலைக்கண்செல்லும்கோபமும், எனவடநூலார்குற்றம்ஐந்துஎன்றார். இவர்அவற்றுள்அகங்காரம்அவிச்சைக்கண்ணும்அவாவுதல்என்பதுஆசைக்கண்ணும்அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாதஞானயோகங்களின்முன்னர்இக்குற்றங்கள்மூன்றும்காட்டுத்தீமுன்னர்ப்பஞ்சுத்துய்போலும்ஆகலின், அம்மிகுதிதோன்ற 'இவைமூன்றன்நாமங்கெட' என்றார். இழிவுசிறப்புஉம்மைவிகாரத்தால்தொக்கது. 'கெட' என்பதுஎச்சத்திரிவு. 'நோய்' சாதியொருமை. காரணமாயஅக்குற்றங்களைக்கொடுத்தார்காரியமாகியவினைகளைச்செய்யாமையின், அவர்க்குவரக்கடவதுன்பங்களும்இலவாதல்மெய்உணர்வின்பயன்ஆகலின், இவைஇரண்டுபாட்டும்இவ்வதிகாரத்தவாயின. இவ்வாற்றானேமெய்யுணர்ந்தார்க்குநிற்பனஎடுத்தஉடம்பும்அதுகொண்டவினைப்பயன்களுமேஎன்பதுபெற்றாம்.).
மணக்குடவர்உரை:
ஆசையும்வெகுளியும்மயக்கமுமென்னும்இவைமூன்றினதுநாமம்போகவினைபோம். வினைகெடுதற்குவழிஇதுவென்றுகூறுதலான்இதுமெய்யுணர்தலாயிற்று.
Translation:
When lust and wrath and error's triple tyranny is o'er,
Their very names for aye extinct, then pain shall be no more.
Explanation:
If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish the evils (which flow from them).
Comments
Post a Comment