361-370
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:அவாவறுத்தல்.
குறள்வரிசை: 361 362 363 364 365 366 367 368 369 370
குறள் 361:
அவாஎன்பஎல்லாஉயிர்க்கும்எஞ்ஞான்றும்
தவாஅப்பிறப்பீனும்வித்து.
கலைஞர்உரை:
ஆசையை, எல்லாஉயிர்களிடமும், எல்லாக்காலத்திலும்தவறாமல்தோன்றிமுளைக்கும்விதைஎன்றுகூறலாம்.
மு.வஉரை:
எல்லாஉயிர்களுக்கும்எக்காலத்திலும்ஒழியாமல்வருகின்றபிறவித்துன்பத்தைஉண்டாக்கும்வித்துஅவாஎன்றுக்கூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
எல்லாஉயிர்களுக்கும், எந்தக்காலத்திலும்அழியாமல்வரும்பிறப்பைஉண்டாக்கும்விதைதான்ஆசைஎன்றுபெரியோர்கூறுவர்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, முன்னும்பின்னும்வினைத்தொடர்புஅறுத்தார்க்குநடுவுநின்றஉடம்பும்அதுகொண்டவினைப்பயன்களும்நின்றமையின் , வேதனைபற்றிஒரோவழித்துறக்கப்பட்டபுலன்கள்மேல்பழையபயிற்சிவயத்தான்நினைவுசெல்லுமன்றே? அந்நினைவும்அவிச்சைஎனப்பிறவிக்குவித்துஆம்ஆகலின், அதனைஇடைவிடாதுமெய்ப்பொருள்உணர்வான்அறுத்தல். அதிகாரமுறைமையும்இதனானேவிளங்கும்]
எல்லாஉயிர்க்கும்எஞ்ஞான்றும்தவாஅப்பிறப்புஈனும்வித்து - எல்லாஉயிர்கட்கும்எக்காலத்தும்கெடாதுவருகின்றபிறப்பினைவிளைவிக்கும்வித்து: அவாஅஎன்ப - அவாஎன்றுசொல்லுவர்நூலோர். (உடம்புநீங்கிப்போம்காலத்துஅடுத்தவினையும், அதுகாட்டும்கதிநிமித்தங்களும்அக்கதிக்கண்அவாவும்உயிரின்கண்முறையேவந்துதிப்ப, அறிவைமோகம்மறைப்ப, அவ்வுயிரைஅவ்வவாஅக்கதிக்கண்கொண்டுசெல்லும்ஆகலான், அதனைப்பிறப்பீனும்வித்துஎன்றும்கதிவயத்தான்உளதாயஅவ்வுயிர்வேறுபாட்டினும்அவைதன்மைதிரியும்உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணிஎன்னும்காலவேறுபாட்டினும்அதுவித்தாதல்வேறுபடாமையின், 'எல்லாஉயிர்க்கும்எஞ்ஞான்றும்'என்றும்இஃதுஎல்லாச்சமயங்கடகும்ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான், பிறப்பிற்குஅவாவித்துஆதல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
எல்லாவுயிர்க்கும்எல்லாநாளுங்கேடில்லாதபிறப்பைக்கொடுக்கும்விதையாவதுஆசையென்றுசொல்லுவர். இஃதுஆசைதுன்பம்தருதலேயன்றிப்பிறப்பையும்தருமென்றது.
Translation:
The wise declare, through all the days, to every living thing.
That ceaseless round of birth from seed of strong desire doth spring.
Explanation:
(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.
குறள் 362:
வேண்டுங்கால்வேண்டும்பிறவாமைமற்றது
வேண்டாமைவேண்டவரும்.
கலைஞர்உரை:
விரும்புவதானால்பிறக்காமலேஇருந்திருக்கவேண்டும்என்றுஒருவன்எண்ணுகிறஅளவுக்குஏற்படுகிறதுன்பநிலை, ஆசைகளைஒழிக்காவிடில்வரும்.
மு.வஉரை:
ஒருவன்ஒன்றைவிரும்புவதனால்பிறவாநிலைமையைவிரும்பவேண்டும், அதுஅவாஅற்றநிலையைவிரும்பினால்உண்டாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறவாமையைஎப்போதுவிரும்புகிறோமோஅப்போதுஅந்தநிலைநமக்குவரவேண்டும். ஆசையற்றுஇருப்பதைவிரும்பும்போதுதான்அந்தநிலைநமக்குஉண்டாகும்.
பரிமேலழகர்உரை:
வேண்டுங்கால்பிறவாமைவேண்டும் - பிறப்புத்துன்பம்ஆதல்அறிந்தவன்ஒன்றைவேண்டின்பிறவாமையைவேண்டும், அதுவேண்டாமைவேண்டவரும் - அப்பிறவாமைதான்ஒருபொருளையும்அவாவாமையைவேண்டஅவனுக்குத்தானேஉண்டாம். (அநாதியாகத்தான்பிறப்புப்பிணிமூப்புஇறப்புக்களால்துன்பமுற்றுவருகின்றமையைஉணர்ந்தவனுக்குஆசைஇன்பத்தின்கண்ணேயாகலின், பிறவாமையைவேண்டும்என்றும்ஈண்டைச்சிற்றின்பம்கருதிஒருபொருளைஅவாவின்அதுபிறப்பீனும்வித்தாய்ப்பின்னும்முடிவில்லாததுன்பமேவிளைத்தலின், அதுவேணடாமைவேண்டவரும்என்றும்கூறினார். பிறவாமையின்சிறப்புக்கூறி, பின்அதுவரும்வழிகூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினைமாற்றின்கண்வந்தது.).
மணக்குடவர்உரை:
வேண்டுங்கால்பிறவாமையைவிரும்புதல்வேண்டும்: அப்பிறவாமைபொருளைவிரும்பாமையைவிரும்பத்தானேவரும். இதுபிறவாமையும்இதனாலேவருமென்றது.
Translation:
If desire you feel, freedom from changing birth require!
'I' will come, if you desire to 'scape, set free from all desire.
Explanation:
If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.
குறள் 363:
வேண்டாமைஅன்னவிழுச்செல்வம்ஈண்டில்லை
ஆண்டும்அஃதொப்பதுஇல்.
கலைஞர்உரை:
தீமைவிளைவிக்கும்ஆசைகளைவேண்டாம்என்றுபுறக்கணிப்பதைப்போன்றசெல்வம்இங்குஎதுவுமில்லை; வேறுஎங்கும்கூடஅத்தகையஒப்பற்றசெல்வம்இல்லையென்றேகூறலாம்.
மு.வஉரை:
அவாஅற்றநிலைமைபோன்றசிறந்தசெல்வம்இவ்வுலகில்இல்லை, வேறுஎங்கும்அதற்க்குநிகரானஒன்றுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
எந்தப்பொருளையும்விரும்பாமல்இருப்பதுபோன்றசிறந்தசெல்வம்இப்பூமியில்வேறுஒன்றுஇல்லை; வான்உலகத்திலும்இதற்குஒப்பானதுஇல்லை.
பரிமேலழகர்உரை:
வேண்டாமைஅன்னவிழுச்செல்வம்ஈண்டுஇல்லை - ஒருபொருளையும்அவாவாமையைஒக்கும்விழுமியசெல்வம்காணப்படுகின்றஇவ்வுலகின்கண்இல்லை, ஆண்டும்அஃதுஒப்பதுஇல் -இனிஅவ்வளவேயன்று, கேட்கப்படுகின்றதுறக்கத்தின்கண்ணும்அதனைஒப்பதுஇல்லை. (மக்கள்செல்வமும்தேவர்செல்வமும்மேன்மேல்நோக்கக்கீழாதல்உடைமையின், தனக்குமேலில்லாதவேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்குஇரண்டுஉலகினும்ஒப்பதில்லைஎன்றும்கூறினார். ஆகமஅளவைபோலாதுகாட்சிஅளவைஎல்லாரானும்தெளியப்படுதலின், மக்கள்செல்வம்வகுத்துமுன்கூறப்பட்டது. பிறவாமைக்குவழியாம்எனவும், விழுச்செல்வமாம்எனவும்வேண்டாமையின்சிறப்புஇவ்விரண்டுபாட்டானும்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அவாவின்மைபோலமிக்கசெல்வம்இவ்விடத்தில்இல்லை: அவ்விடத்தினும்அதனையொப்பதுபிறிதில்லை. இஃதுஇதனின்மிக்கதொருபொருளுமில்லையென்றது.
Translation:
No glorious wealth is here like freedom from desire;
To bliss like this not even there can soul aspire.
Explanation:
There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.
குறள் 364:
தூஉய்மைஎன்பதுஅவாவின்மைமற்றது
வாஅய்மைவேண்டவரும்.
கலைஞர்உரை:
தூய்மைஎன்பதுபேராசையற்றதன்மையாகும். அத்தூய்மைவாய்மையைநாடுவோர்க்கேவாய்க்கும்.
மு.வஉரை:
தூயநிலைஎன்றுக்கூறப்படுவதுஅவாஇல்லாதிருத்தலேயாகும், அவாஅற்றஅத்தன்மைமெய்ப்பொருளைவிரும்புவதால்உண்டாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்தூய்மைஎன்பதுஆசைஇல்லாமல்இருப்பதே; ஆசைஇல்லாமல்இருப்பதோமெய்ப்பொருளைவிரும்புவதால்உண்டாகும்.
பரிமேலழகர்உரை:
தூஉய்மைஎன்பதுஅவாஇன்மை - ஒருவர்க்குவீடுஎன்றுசொல்லப்படுவதுஅவாஇல்லாமை,அதுவாஅய்மைவேண்டவரும் - அவ்வவாஇல்லாமைதான்மெய்ம்மையைவேண்டத்தானேஉண்டாம். (வீடாவது: உயிர்அவிச்சைமுதலியமாசுநீங்குதல்ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக்காரியமாகஉபசரித்து, 'தூய்மை' என்பதுஅவாஇன்மைஎன்றும்மெய்ம்மையுடையபரத்தைஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும்கூறினார். 'மற்று' மேலையதுபோலவினைமாற்றின்கண்வந்தது. வேண்டுதல் - இடைவிடாதுபாவித்தல். அவாஅறுத்தல், வீட்டிற்குப்பரம்பரையான்அன்றிநேரேஏதுஎன்பதூஉம்அதுவரும்வழியும்இதனால்கூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
ஒருவர்க்குஅழுக்கறுத்தலாவதுஆசையின்மை; அவ்வாசையின்மைமெய்சொல்லுதலைவிரும்பவரும். இதுபொருள்மேலாசையில்லாதார்பொய்கூறாராதலின்மெய்சொல்லஅவாவின்மைவரும்என்றுஅவாவறுத்தற்குக்கருவிகூறிற்று.
Translation:
Desire's decease as purity men know;
That, too, from yearning search for truth will grow.
Explanation:
Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.
குறள் 365:
அற்றவர்என்பார்அவாஅற்றார்மற்றையார்
அற்றாகஅற்றதுஇலர்.
கலைஞர்உரை:
ஆசையனைத்தும்விட்டவரேதுறவிஎனப்படுவார். முற்றும்துறவாதவர், தூயதுறவியாகமாட்டார்.
மு.வஉரை:
பற்றற்றவர்என்றுக்கூறப்படுவோர்அவாஅற்றவரே, அவாஅறாதமற்றவர்அவ்வளவாகப்பற்றுஅற்றவர்அல்லர்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆசைஇல்லாதவரேஎதுவும்இல்லாதவர்; மற்றவரோமுழுவதும்இல்லாதவர்ஆகார்.
பரிமேலழகர்உரை:
அற்றவர்என்பார்அவாஅற்றார் - பிறவியற்றவர்என்றுசொல்லப்படுவார்அதற்குநேரேஏதுவாகியஅவாஅற்றவர்கள், மற்றையார்அற்றாகஅற்றதுஇலர் - பிறஏதுக்களற்றுஅஃதுஒன்றும்அறாதவர்கள், அவற்றால்சிலதுன்பங்கள்அற்றதல்லதுஅவர்போற்பிறவிஅற்றிலர். (இதனால்அவாஅறுத்தாரதுசிறப்புவிதிமுகத்தானும்எதிர்மறைமுகத்தானும்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பற்றற்றவரென்பார்ஆசையற்றவரே; ஆசையறாதவர்பற்றினையறுத்தாராயினும்ஆசையற்றாரைப்போலப்பற்றறுதலிலர்.
Translation:
Men freed from bonds of strong desire are free;
None other share such perfect liberty.
Explanation:
They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.
குறள் 366:
அஞ்சுவதோரும்அறனேஒருவனை
வஞ்சிப்பதோரும்அவா.
கலைஞர்உரை:
ஒருவரைவஞ்சித்துக்கெடுப்பதற்குக்காரணமாகஇருப்பதுஆசையேயாகும். எனவே, ஆசைக்குஅடிமையாகக்கூடாதுஎன்றஅச்சத்துடன்வாழவேண்டும்.
மு.வஉரை:
ஒருவன்அவாவிற்குஅஞ்சிவாழ்வதேஅறம், ஏன்எனில்ஒருவனைச்சோர்வுகண்டுகொடுத்துவஞ்சிப்பதுஅவாவே.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனைவஞ்சித்துக்கெடுப்பதுஆசையே. அதனால்ஆசைஉண்டாகிவிடாமல்அஞ்சிவாழ்வதேஅறம்.
பரிமேலழகர்உரை:
ஒருவனைவஞ்சிப்பதுஅவா - மெய்யுணர்தல்ஈறாகியகாரணங்கள்எல்லாம்எய்திஅவற்றான்வீடுஎய்தற்பாலனாயஒருவனைமறவிவழியால்புகுந்துபின்னும்பிறப்பின்கண்ணேவிழித்துக்கெடுக்கவல்லதுஅவா, அஞ்சுவதேஅறன் - ஆகலான், அவ்வவாவைஅஞ்சிக்காப்பதேதுறவறமாவது. (ஓரும்என்பனஅசைநிலை, அநாதியாய்ப்போந்தஅவா, ஒரோவழிவாய்மைவேண்டலைஒழிந்துபராக்கால்காவானாயின் , அஃதுஇடமாகஅவன்அறியாமல்புகுந்துபழையஇயற்கையாய்நின்று, பிறப்பினைஉண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவதுவாய்மைவேண்டலைஇடைவிடாதுபயின்றுஅதுசெய்யாமல்பரிகரித்தல். இதனால், அவாவின்குற்றமும்அதனைக்காப்பதேஅறம்என்பதூஉம்கூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
ஒருவனைவஞ்சனைசெய்வதுஆசை: ஆதலால்அதனைஅஞ்சுவதேஅறம். வஞ்சனைசெய்தல்- நன்றிசெய்வாரைப்போலமுன்னேநின்று, பின்னேதீக்கதியுள்உய்த்தல். இஃதுஆசையின்மைவேண்டுமென்றது.
Translation:
Desire each soul beguiles;
True virtue dreads its wiles.
Explanation:
It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.
குறள் 367:
அவாவினைஆற்றஅறுப்பின்தவாவினை
தான்வேண்டுமாற்றான்வரும்.
கலைஞர்உரை:
கெடாமல்வாழ்வதற்குரியநிலை, ஒருவன்விரும்புமாறுவாய்ப்பதற்கு, அவன்பேராசைக்குணத்தைமுற்றிலும்ஒழித்தவனாகஇருக்கவேண்டும்.
மு.வஉரை:
ஒருவன்ஆசையைமுழுதும்ஒழித்தால், அவன்கெடாமல்வாழ்வதற்குஉரியநல்லசெயல்அவன்விரும்புமாறுவாய்க்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆசையைமுழுவதுமாகஅறுத்துஒழித்துவிட்டால், தான்விரும்பும்வண்ணமேஅழியாமல்வாழ்வதற்கானசெயல்உண்டாகும்.
பரிமேலழகர்உரை:
அவாவினைஆற்றஅறுப்பின் - ஒருவன்அவாவினைஅஞ்சித்துவரக்கெடுக்கவல்லன்ஆயின், தவாவினைதான்வேண்டும்ஆற்றான்வரும் - அவனுக்குக்கெடாமைக்குஏதுவாகியவினை, தான்விரும்பும்நெறியானேஉண்டாம். (கெடாமை - பிறவித்துன்பங்களான்அழியாமை. அதற்குஏதுவாகியவினைஎன்றது, மேற்சொல்லியதுறவறங்களை. 'வினை' சாதியொருமை. தான்விரும்பும்நெறிமெய்வருந்தாநெறி. 'அவாவினைமுற்றஅறுத்தானுக்குவேறுஅறஞ்செய்யவேண்டா, செய்தனஎல்லாம்அறமாம்' என்பதுகருத்து. இதனால்அவாஅறுத்தற்சிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஆசையைமிகவும்போக்குவானாயின், கேடில்லாதவினைதான்வேண்டினநெறியாலேவரும்.
Translation:
Who thoroughly rids his life of passion-prompted deed,
Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed.
Explanation:
If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.
குறள் 368:
அவாஇல்லார்க்கில்லாகுந்துன்பம்அஃதுண்டேல்
தவாஅதுமேன்மேல்வரும்.
கலைஞர்உரை:
ஆசைஇல்லாதவர்களுக்குத்துன்பம்இல்லை. ஆசைஉண்டானால், அதைத்தொடர்ந்துதுன்பமும்மேலும்மேலும்வந்துகொண்டிருக்கும்.
மு.வஉரை:
அவாஇல்லாதவர்க்குத்துன்பம்இல்லையாகும், அவாஇருந்தால்எல்லாத்துன்பங்களும்மேலும்மேலும்ஒழியாமல்வரும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆசைஇல்லாதவர்க்குத்துன்பம்வராது; இருப்பவர்க்கோஇடைவிடாமல், தொடர்ந்துதுன்பம்வரும்.
பரிமேலழகர்உரை:
அவாஇல்லார்க்குத்துன்பம்இல்லாகும் - அவாஇல்லாதார்க்குவரக்கடவதொருதுன்பமும்இல்லை, அஃதுஉண்டேல்தவாஅதுமேன்மேல்வரும் - ஒருவற்குப்பிறகாரணங்களெல்லாம்இன்றிஅஃதொன்றும்உண்டாயின், அதனானேஎல்லாத்துன்பங்களும்முடிவின்றிஇடைவிடாமல்வரும். (உடம்புமுகந்துநின்றதுன்பம்முன்னேசெய்துகொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றதுஇதுபொழுதுஅவாவால்செய்துகொள்வனவற்றை. 'தவாஅதுமேன்மேல்வரும்' என்றதனான், மூவகைத்துன்பங்களும்என்பதுபெற்றாம். இதனான்அவாவேதுன்பத்திற்குக்காரணம்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஆசையில்லார்க்குத்துன்பம்இல்லையாகும். அஃதுஉண்டாயின்துன்பமானதுகெடாதுமேன்மேல்வரும்.
Translation:
Affliction is not known where no desires abide;
Where these are, endless rises sorrow's tide.
Explanation:
There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.
குறள் 369:
இன்பம்இடையறாதீண்டும்அவாவென்னும்
துன்பத்துள்துன்பங்கெடின்.
கலைஞர்உரை:
பெருந்துன்பம்தரக்கூடியபேராசைஒழிந்தால்வாழ்வில்இன்பம்விடாமல்தொடரும்.
மு.வஉரை:
அவாஎன்றுசொல்லப்படுகின்றதுன்பங்களுள்பொல்லாதத்துன்பம்கெடுமானால்இவ்வுலகில்இன்பம்இடையறாமல்வாய்க்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆசைஎனப்படும்பெருந்துன்பம்இல்லாதுபோனால், இன்பம்இடைவிடாமல்வரும்.
பரிமேலழகர்உரை:
அவாஎன்னும்துன்பத்துள்துன்பம்கெடின் - அவாஎன்றுசொல்லப்படுகின்றமிக்கதுன்பம்ஒருவற்குக்கெடுமாயின்; ஈண்டும்இன்பம்இடையறாது. அவன்வீடுபெற்றவழியேஅன்றிஉடம்போடுநின்றவழியும்இன்பம்இடையறாது. (துன்பத்துள்துன்பம் - ஏனைத்துன்பங்கள்எல்லாம்இன்பமாகவரும்துன்பம். விளைவின்கண்ணேஅன்றித்தோற்றத்தின்கண்ணும்துன்பமாகலின், இவ்வாறுகூறப்பட்டது. காரணத்தைக்காரியமாகஉபசரித்துஅவாஎன்றும், 'துன்பத்துள்துன்பம்' என்றும், அதுகெட்டார்க்குமனம்தடுமாறாதுநிரம்பிநிற்றலான் 'ஈண்டும்இன்பம்இடையறாது'என்றும்கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்'என்றுஉரைப்பாரும்உளர். இதனால்அவாஅறுத்தார்வீட்டின்பம்உடம்பொடுநின்றேஎய்துவர்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அவாவாகியதுன்பங்களுள்மிக்கதுன்பம்கெடுமாயின்இன்பமானதுஇடையறாமல்வந்துமிகும். இஃதுஇன்பமும்இதனாலேவருமென்றது.
Translation:
When dies away desire, that woe of woes
Ev'n here the soul unceasing rapture knows.
Explanation:
Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.
குறள் 370:
ஆராஇயற்கைஅவாநீப்பின்அந்நிலையே
பேராஇயற்கைதரும்.
கலைஞர்உரை:
இயல்பாகவேஎழும்அடங்காதபேராசையைஅகற்றிவாழும்நிலை, நீங்காதஇன்பத்தைஇயல்பாகவேதரக்கூடியதாகும்.
மு.வஉரை:
ஒருபோதும்நிரம்பாததன்மைஉடையஅவாவைஒழித்தால்ஒழித்தஅந்நிலையேஎப்போதும்மாறாதிருக்கும்இன்பவாழ்வைத்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருகாலமும்முடிவுபெறாதகுணத்தைஉடையஆசையைவிட்டுவிட்டால், அதுவேஒருவனுக்குநிலைத்துவாழும்இயல்பைக்கொடுக்கும்.
பரிமேலழகர்உரை:
ஆராஇயற்கைஅவாநீப்பின் - ஒருகாலும்நிரம்பாதஇயல்பினையுடையஅவாவினைஒருவன்நீக்குமாயின், அந்நிலையேபேராஇயற்கைதரும் - அந்நீப்புஅவனுக்குஅப்பொழுதேஎஞ்ஞான்றும்ஒருநிலைமையனாம்இயல்பைக்கொடுக்கும். (நிரம்பாமையாவது: தாமேயன்றித்தம்பயனும்நிலையாமையின்வேண்டாதனவாயபொருள்களைவேண்டிமேன்மேல்வளர்தல். அவ்வளர்ச்சிக்குஅளவின்மையின், நீத்தலேதக்கதுஎன்பதுகருத்து. களிப்புக்குகவற்சிகளும்பிறப்புப்பிணிமூப்புஇறப்புக்களும்முதலாயினஇன்றி, உயிர்நிரதிசயஇன்பத்தாய்நிற்றலின்வீட்டினை 'பேராஇயற்கை' என்றும், அஃதுஅவாநீத்தவழிப்பெறுதல்ஒருதலையாகலின், 'அந்நிலையேதரும்' என்றும்கூறினார். ஒன்றாய்க்கிடந்தஅரும்பெரும்பாழ்உலப்பிலதனைஉணர்ந்துணர்ந்து, சென்றாங்குஇன்பத்துன்பங்கள்செற்றுக்களைந்துபசையற்றால், அன்றேஅப்போதேவீடும்அதுவேவீடுவீடாமே. (திருவாய் 78-6)என்பதும்இக்கருத்தேபற்றிவந்தது. இந்நிலைமைஉடையவனைவடநூலார் 'சீவன்முத்தன்' என்ப. இதனால்வீடாவதுஇதுஎன்பதூஉம், அஃதுஅவாஅறுத்தார்க்குஅப்பொழுதேஉளதாம்என்பதூஉம்கூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
நிறையாஇயல்பினையுடையஆசையைவிடுவானாயின்அதுவிட்டபொழுதேஅழியாதஇயல்பினைத்தரும். இயல்பாவதுஎன்றும்ஒருபடிப்பட்டது. இதுதன்னுடையஉருவத்தைப்பெறுமென்றது.
Translation:
Drive from thy soul desire insatiate;
Straight'way is gained the moveless blissful state.
Explanation:
The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.
Comments
Post a Comment