51-60

 குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:இல்லறவியல். அதிகாரம்:வாழ்க்கைத்துணைநலம்.

குறள் 51:
மனைக்தக்கமாண்புடையள்ஆகித்தற்கொண்டான்
வளத்தக்காள்வாழ்க்கைத்துணை.
கலைஞர்உரை:
இல்லறத்திற்குரியபண்புகளுடன், பொருள்வளத்துக்குத்தக்கவாறுகுடும்பம்நடத்துபவள், கணவனின்வாழ்வுக்குப்பெருந்துணையாவாள்.
மு.வஉரை:
இல்வாழ்க்கைக்குஏற்றநற்பண்புஉடையவளாகித்தன்கணவனுடையபொருள்வளத்துக்குத்தக்கவாழ்க்கைநடத்துகிறவளேவாழ்க்கைத்துணைஆவாள்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறந்த, புகுந்தகுடும்பங்களுக்குஏற்றநல்லகுணம், நல்லசெயல்களைஉடையவளாய்த், தன்னைமணந்தவனின்வருவாய்க்குஏற்பவாழ்க்கையைஅமைப்பவளேமனைவி.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, அவ்வில்வாழ்க்கைக்குத்துணைஆகியஇல்லாளதுநன்மை. அதிகாரமுறைமையும்இதனானேவிளங்கும்.)
மனைத்தக்கமாண்புஉடையளாகித்தன்கொண்டான்வளத்தக்காள் - மனையறத்திற்குத்தக்கநற்குணநற்செய்கைகளைஉடையவளாய்த்தன்னைக்கொண்டவனதுவருவாய்க்குத்தக்கவாழ்க்கையைஉடையாள்; வாழ்க்கைத்துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப்பேணலும், விருந்துஅயர்தலும், வறியார்மாட்டுஅருளுடைமையும்முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்குவேண்டும்பொருள்கள்அறிந்துகடைப்பிடித்தலும், அட்டில்தொழில்வன்மையும், ஒப்புரவுசெய்தலும்முதலாயின. வருவாய்க்குத்தக்கவாழ்க்கையாவது: முதலைஅறிந்துஅதற்குஇயையஅழித்தல். இதனால்இவ்விரண்டுநன்மையும்சிறந்தனஎன்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தான்பிறந்தகுடிக்குத்தக்கவொழுக்கத்தையுடையாளாய்த்தன்னைக்கொண்டவனதுவருவாய்க்குத்தக்கசெலவினையுடையவள்இல்வாழ்க்கைத்துணையாவள்.
Translation:
As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.
Explanation:
She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.

குறள் 52:
மனைமாட்சிஇல்லாள்கண்இல்லாயின்வாழ்க்கை
எனைமாட்சித்தாயினும்இல்.
கலைஞர்உரை:
நற்பண்புள்ளமனைவிஅமையாதஇல்வாழ்க்கைஎவ்வளவுசிறப்புடையதாகஇருந்தாலும்அதற்குத்தனிச்சிறப்புக்கிடையாது.
மு.வஉரை:
இல்வாழ்க்கைக்குதக்கநற்பண்புமனைவியிடம்இல்லையானால், ஒருவனுடையவாழ்க்கைவேறுஎவ்வளவுசிறப்புடையதானாலும்பயன்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுணமும்நல்லசெயல்களும்மனைவியிடம்இல்லாமற்போனால்அவ்வாழ்க்கைஎத்தனைசிறப்புகளைப்பெற்றிருந்தாலும்பெறாததே.
பரிமேலழகர்உரை:
மனைமாட்சிஇல்லாள்கண்இல்லாயின் - மனையறத்திற்குத்தக்கநற்குணநற்செய்கைகள்ஒருவன்இல்லாளிடத்துஇல்லையாயின்; வாழ்க்கைஎனைமாட்சித்துஆயினும்இல் - அவ்வில்வாழ்க்கைசெல்வத்தான்எத்துணைமாட்சிமையுடைத்தாயினும்அஃதுஉடைத்தன்று. ('இல்' என்றார்பயன்படாமையின்.).
மணக்குடவர்உரை:
குடிக்குத்தக்கவொழுக்கம்மனையாள்மாட்டுஇல்லையாகில், அவ்வில்வாழ்க்கைஎத்துணைநன்மைகளையுடைத்தாயினும்ஒருநன்மையும்இன்றாம்.
Translation:
If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life.
Explanation:
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.

குறள் 53:
இல்லதென்இல்லவள்மாண்பானால்உள்ளதென்
இல்லவள்மாணாக்கடை?.
கலைஞர்உரை:
நல்லபண்புடையமனைவிஅமைந்தவாழ்க்கையில்எல்லாம்இருக்கும். அப்படியொருமனைவிஅமையாதவாழ்க்கையில்எதுவுமேஇருக்காது.
மு.வஉரை:
மனைவிநற்பண்புஉடையவளானால்வாழ்க்கையில்இல்லாததுஎன்ன? அவள்நற்பண்புஇல்லாதவளானால்வாழ்க்கையில்இருப்பதுஎன்ன?.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுணமும்நல்லசெயல்களும்உடையவனாய்மனைவிஅமைந்துவிட்டால்ஒருவனுக்குஇல்லாததுதான்என்ன? அமையாவிட்டால்அவனிடம்இருப்பதுதான்என்ன?.
பரிமேலழகர்உரை:
இல்லவள்மாண்புஆனால்இல்லதுஎன் - ஒருவனுக்குஇல்லாள்நற்குணநற்செய்கையள்ஆயினக்கால்இல்லாததுயாது? இல்லவள்மாணாக்கடைஉள்ளதுஎன் - அவள்அன்னள்அல்லாக்கால்உள்ளதுயாது? ('மாண்பு' எனக்குணத்தின்பெயர்குணிமேல்நின்றது. இவைஇரண்டுபாட்டானும்இல்வாழ்க்கைக்குவேண்டுவதுஇல்லாளதுமாட்சியே, பிறஅல்லஎன்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவனுக்குமனையாள்மாட்சிமையுடையாளானால்எல்லாமிலனேயாயினும்இல்லாததுயாது? மனையாள்மாட்சிமைஇல்லாளானால்எல்லாமுடையானாயினும்உண்டானதுயாது?.
Translation:
There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells.
Explanation:
If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?

குறள் 54:
பெண்ணின்பெருந்தக்கயாவுளகற்பென்னும்
திண்மைஉண்டாகப்பெறின்.
கலைஞர்உரை:
கற்பென்னும்திண்மைகொண்டபெண்மையின்உறுதிப்பண்பைப்பெற்றுவிட்டால், அதைவிடப்பெருமைக்குரியதுவேறுயாது?.
மு.வஉரை:
இல்வாழ்க்கையில்கற்புஎன்னும்உறுதிநிலைஇருக்கப்பெற்றால், பெண்ணைவிடபெருமையுடையவைவேறுஎன்னஇருக்கின்றன?.
சாலமன்பாப்பையாஉரை:
கற்புஎனப்படும்மனஉறுதிமட்டும்பெண்ணிடம்இருக்குமானால்மனைவியைக்காட்டிலும்மேலானவைஎவை?.
பரிமேலழகர்உரை:
பெண்ணின்பெருந்தக்கயாஉள-ஒருவன்எய்தும்பொருள்களுள்இல்லாளின்மேம்பட்டபொருள்கள்யாவைஉள; கற்புஎன்னும்திண்மைஉண்டாகப்பெறின் - அவள்மாட்டுக்கற்புஎன்னும்கலங்காநிலைமைஉண்டாகப்பெறின். (கற்புடையாள்போலஅறம்முதலியமூன்றற்கும்ஏதுவாவனபிறஇன்மையின் 'யாஉள' என்றார். இதனால்கற்புநலத்ததுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பெண்பிறப்புப்போல்மேம்பட்டனயாவையுள? கற்பாகியதிண்மையுண்டாகப்பெறின்.
Translation:
If woman might of chastity retain, What choicer treasure doth the world contain? .
Explanation:
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?

குறள் 55:
தெய்வம்தொழாஅள்கொழுநன்தொழுதெழுவாள்
பெய்யெனப்பெய்யும்மழை.
கலைஞர்உரை:
கணவன்வாக்கினைக்கடவுள்வாக்கினைவிடமேலானதாகக்கருதிஅவனையேதொழுதிடும்மனைவிபெய்எனஆணையிட்டவுடன்அஞ்சிநடுங்கிப்பெய்கின்றமழையைப்போலத்தன்னைஅடிமையாகஎண்ணிக்கொள்பவளாவாள்.
மு.வஉரை:
வேறுதெய்வம்தொழாதவளாய்த்தன்கணவனையேதெய்வமாகக்கொண்டுதொழுதுதுயிலெழுகின்றவள்பெய்என்றால்மழைபெய்யும்!.
சாலமன்பாப்பையாஉரை:
பிறதெய்வங்களைத்தொழாமல்கணவனையேதெய்வமாகத்தொழுதுவாழும்மனைவி, பெய்என்றுசொன்னால்மழைபெய்யும்.
பரிமேலழகர்உரை:
தெய்வம்தொழாஅள்கொழுநன்தொழுதுஎழுவாள்பெய்என - பிறதெய்வம்தொழாதுதன்தெய்வம்ஆகியகொழுநனைத்தொழாநின்றுதுயிலெழுவாள் 'பெய்' என்றுசொல்ல; மழைபெய்யும்-மழைபெய்யும். (தெய்வம்தொழுதற்குமனம்தெளிவதுதுயிலெழும்காலத்தாகலின், 'தொழுதுஎழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத்திரிந்துநின்றது. தெய்வம்ந்தான்ஏவல்செய்யும்என்பதாகும். இதனால்கற்புடையவளதுஆற்றல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தெய்வத்தைத்தெய்வமென்றுதொழாளாய், எல்லாத்தெய்வமுந்தன்கணவனென்றேகருதி, அவனைநாடோறுந்தொழுதெழுமவள்பெய்யென்றுசொல்லமழைபெய்யும்.
Translation:
No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!.
Explanation:
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.

குறள் 56:
தற்காத்துத்தற்கொண்டாற்பேணித்தகைசான்ற
சொற்காத்துச்சோர்விலாள்பெண்.
கலைஞர்உரை:
கற்புநெறியில்தன்னையும்தன்கணவனையும்காத்துக்கொண்டு, தமக்குப்பெருமைசேர்க்கும்புகழையும்காப்பாற்றிக்கொள்வதில்உறுதிகுலையாமல்இருப்பவள்பெண்.
மு.வஉரை:
கற்புநெறியில்தன்னையும்காத்துக்கொண்டு, தன்கணவனையும்காப்பாற்றி, தகுதியமைந்தபுகழையும்காத்துஉறுதிதளராமல்வாழ்கின்றவளேபெண்.
சாலமன்பாப்பையாஉரை:
உடலாலும்உள்ளத்தாலும்தன்னைக்காத்து, தன்கணவனின்நலன்களில்கவனம்வைத்து, குடும்பத்திற்குநலம்தரும்புகழைக்காத்து, அறத்தைக்கடைப்பிடிப்பதில்சோர்வடையாமல்இருப்பவளேமனைவி.
பரிமேலழகர்உரை:
தன்காத்துத்தன்கொண்டான்பேணி - கற்பினின்றும்வழுவாமல்தன்னைக்காத்துத்தன்னைக்கொண்டவனையும்உண்டிமுதலியவற்றால்பேணி; தகைசான்றசொல்காத்து - இருவர்மாட்டும்நன்மைஅமைந்தபுகழ்நீங்காமல்காத்து; சோர்வுஇலாள்பெண் - மேற்சொல்லியநற்குணநற்செய்கைகளினும்கடைப்பிடிஉடையவளேபெண்ஆவாள். (தன்மாட்டுப்புகழாவது, வாழும்ஊர்கற்பால்தன்னைப்புகழ்வது. சோர்வு-மறவி. இதனால்கற்புடையாளதுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தன்னையுங்காத்துத்தன்னைக்கொண்டகணவனையும்பேணிநன்மையமைந்தபுகழ்களையும்படைத்துச்சோர்வின்மையுடையவளேபெண்ணென்றுசொல்லப்படுவள்.
Translation:
Who guards herself, for husband's comfort cares, her household's fame, In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.
Explanation:
She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

குறள் 57:
சிறைகாக்கும்காப்பெவன்செய்யும்மகளிர்
நிறைகாக்கும்காப்பேதலை.
கலைஞர்உரை:
தம்மைத்தாமேகாத்துக்கொண்டுசிறந்தபண்புடன்வாழும்மகளிரைஅடிமைகளாகநடத்தஎண்ணுவதுஅறியாமையாகும்.
மு.வஉரை:
மகளிரைக்காவல்வைத்துக்காக்கும்காப்புமுறைஎன்னபயனைஉண்டாக்கும்? அவர்கள்நிறைஎன்னும்பண்பால்தம்மைத்தான்காக்கும்கற்பேசிறிந்தது.
சாலமன்பாப்பையாஉரை:
இத்தனைகுணங்களும்இருக்கும்படிபெண்ணைச்சிறைவைத்துக்காவல்காப்பதில்பயன்என்ன? பெண்கள்தங்களைத்தாங்களேமனஅடக்கத்தால்காக்கும்காவலேமுதன்மையானது.
பரிமேலழகர்உரை:
மகளிர்சிறைகாக்கும்காப்புஎவன்செய்யும் - மகளிரைத்தலைவர்சிறையால்காக்கும்காவல்என்னபயனைச்செய்யும்? நிறைகாக்கும்காப்பேதலை - அவர்தமதுநிறையால்காக்கும்காவலேதலையாயகாவல். (சிறை : மதிலும், வாயில்காவலும்முதலாயின. நிறை: நெஞ்சைக்கற்புநெறியில்நிறுத்தல். காவல்இரண்டினும்நிறைக்காவல்இல்வழிஏனைச்சிறைக்காவலால்பயன்இல்லைஎன்பார், 'நிறைகாக்கும்காப்பேதலை' என்றார். ஏகாரம்பிரிநிலைக்கண்வந்தது. இதனால்தற்காத்தற்சிறப்புக்கூறப்பட்டது.
மணக்குடவர்உரை:
மகளிரைச்சிறைசெய்துகாக்குங்காவல்யாதினைச்செய்யும்? அவரதுகற்புக்காக்குங்காவலேதலையானகாவல்.
Translation:
Of what avail is watch and ward? Honour's woman's safest guard.
Explanation:
What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.

குறள் 58:
பெற்றாற்பெறின்பெறுவர்பெண்டிர்பெருஞ்சிறப்புப்
புத்தேளிர்வாழும்உலகு.
கலைஞர்உரை:
நற்பண்புபெற்றவனைக்கணவனாகப்பெற்றால், பெண்டிர்க்குஇல்வாழ்க்கையெனும்புதியஉலகம்பெருஞ்சிறப்பாகஅமையும்.
மு.வஉரை:
கணவனைப்போற்றிக்கடமையைச்செய்யப்பெற்றால்மகளிர்பெரியசிறப்பைஉடையமேலுலகவாழ்வைப்பெறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பெண்கள்இத்தனைசிறப்புகளையும்பெறுவார்கள்என்றால்தேவர்கள்வாழும்உலகில்மிகுந்தமேன்மையைஅடைவார்கள்.
பரிமேலழகர்உரை:
பெண்டிர்பெற்றான்பெறின் - பெண்டிர்தம்மைஎய்தியகணவனைவழிபடுதல்பெறுவராயின்; புத்தேளிர்வாழும்உலகுபெருஞ்சிறப்புப்பெறுவர் - புத்தேளிர்வாழும்உலகின்கண்அவரால்பெருஞ்சிறப்பினைப்பெறுவர். (வழிபடுதல்என்பதுசொல்லெச்சம். இதனால்தற்கொண்டாற்பேணியமகளிர்புத்தேளிரால்பேணப்படுவர்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பெண்டிரானவர்தம்மைமனைவியராகப்பெற்றவரையேதமக்குத்தலைவராகப்பெறின்தேவர்வாழும்பெரியசிறப்பினையுடையஉலகத்தைப்பெறுவர்.
Translation:
If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.
Explanation:
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.


குறள் 59:
புகழ்புரிந்தஇல்லிலோர்க்குஇல்லைஇகழ்வார்முன்
ஏறுபோல்பீடுநடை.
கலைஞர்உரை:
புகழுக்குரியஇல்வாழ்க்கைஅமையாதவர்கள், தம்மைப்பழித்துப்பேசுவோர்முன்புதலைநிமிர்ந்துநடக்கமுடியாமல்குன்றிப்போய்விடுவார்கள்.
மு.வஉரை:
புகழைக்காக்கவிரும்பும்மனைவிஇல்லாதவர்க்கு, இகழ்ந்துபேசும்பகைவர்முன்காளைபோல்நடக்கும்பெருமிதநடைஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
புகழைவிரும்பியமனைவியைப்பெறாதவர்க்குஅவர்களைஏளனம்செய்வார்முன்னேஆண்சிங்கமாய்நடக்கும்பெருமிதநடைஇல்லை.
பரிமேலழகர்உரை:
புகழ்புரிந்தஇல்இலோர்க்கு - புகழைவிரும்பியஇல்லாளைஇல்லாதார்க்கு; இகழ்வார்முன்ஏறுபோல்பீடுநடைஇல்லை - தம்மைஇகழ்ந்துரைக்கும்பகைவர்முன்சிங்கஏறுபோலநடக்கும்பெருமிதநடைஇல்லை. ('புரிந்த' என்னும்பெயரெச்சத்துஅகரம்விகாரத்தால்தொக்கது. பெருமிதம்உடையானுக்குச்சிங்கஏறுநடையான்உவமம்ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால்தகைசான்றசொல்காவாவழிப்படும்குற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
புகழ்பொருந்தினமனையாளைஇல்லாதார்க்குஇல்லையாம்: தம்மையிகழ்ந்துரைப்பார்முன்ஏறுபோலநடக்கும்மேம்பட்டநடை. ஏறுநடை- அசைவும்தலையெடுப்பும்பொருந்தியநடை.
Translation:
Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight.
Explanation:
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.

குறள் 60:
மங்கலம்என்பமனைமாட்சிமற்றுஅதன்
நன்கலம்நன்மக்கட்பேறு.
கலைஞர்உரை:
குடும்பத்தின்பண்பாடுதான்இல்வாழ்க்கையின்சிறப்பு; அதற்குமேலும்சிறப்புநல்லபிள்ளைகளைப்பெற்றிருப்பது.
மு.வஉரை:
மனைவியின்நற்பண்பேஇல்வாழ்க்கைக்குமங்கலம்என்றுகூறுவர்: நல்லமக்களைப்பெறுதலேஅதற்குநல்லணிகலம்என்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனுக்குநற்குணநற்செயல்களைஉடையமனைவியேஅழகுஎன்றுஅறிந்தோர்கூறுவர். அந்தஅழகிற்குஏற்றஅணிகலன்கள்நல்லபிள்ளைகளைப்பெறுவதே.
பரிமேலழகர்உரை:
மங்கலம்என்பமனைமாட்சி - ஒருவர்க்குநன்மைஎன்றுசொல்லுவர்அறிந்தோர், மனையாளதுநற்குணநற்செய்கைகளை; அதன்நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவைதமக்குநல்லஅணிகலம்என்றுசொல்லுவர்நல்லபுதல்வரைப்பெறுதலை. ('அறிந்தோர்' என்பதுஎஞ்சிநின்றது. 'மற்று' அசைநிலை. இதனான்வாழ்க்கைத்துணைக்குஆவதோர்அணிகலம்கூறி, வருகின்றஅதிகாரத்திற்குத்தோற்றுவாய்செய்யப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவனுக்குஅழகென்றுசொல்லுப, மனையாள்ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலேநல்லஅணிகலனென்றுசொல்லுப, நல்லபுதல்வரைப்பெறுதலை.
Translation:
The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament.
Explanation:
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.



Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290