581-590

குறள் 581:
ஒற்றும்உரைசான்றநூலும்இவையிரண்டும்
தெற்றென்கமன்னவன்கண்.
கலைஞர்உரை:
நேர்மையும்திறனும்கொண்டஒற்றரும், நீதியுரைக்கும்அறநூலும்ஓர்அரசின்கண்களாகக்கருதப்படவேண்டும்.
மு.வஉரை:
ஒற்றரும்புகழ்அமைந்தநீதிநூலும்ஆகியஇவ்விருவகைக்கருவிகளையும்அரசன்தன்னுடையகண்களாகத்தெளியவேணடும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒற்று,புகழும்தெளிவும்உள்ளநீதிநூல்இவ்விரண்டும்ஆட்சியாளரின்இருகண்என்றுஅறிக.
Translation:
These two: the code renowned and spies, In these let king confide as eyes.
Explanation:
Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

குறள் 582:
எல்லார்க்கும்எல்லாம்நிகழ்பவைஎஞ்ஞான்றும்
வல்லறிதல்வேந்தன்தொழில்.
கலைஞர்உரை:
நண்பர், பகைவர், நடுநிலையாளர்ஆகியஎல்லாரிடத்திலும்நிகழும்எல்லாநிகழ்வுகளையும், எல்லாக்காலங்களிலும்ஒற்றரைக்கொண்டுவிரைவாகஅறிந்துகொள்வதுஅரசுக்குரியகடமையாகும்.
மு.வஉரை:
எல்லாரிடத்திலும்நிகழ்கின்றவைஎல்லாவற்றையும்எக்காலத்திலும் (ஒற்றரைக்கொண்டு) விரைந்துஅறிதல்அரசனுக்குரியதொழிலாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர், நண்பர், பொதுவானவர்எனஎல்லாரிடத்திலும்நிகழ்வானஎல்லாவற்றையும், எப்போதும்ஒற்றால்விரைந்துஅறிந்துகொள்ளவேண்டியதுஅரசின்வேலை.
Translation:
Each day, of every subject every deed, 'Tis duty of the king to learn with speed.
Explanation:
It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.

குறள் 583:
ஒற்றினான்ஒற்றிப்பொருள்தெரியாமன்னவன்
கொற்றங்கொளக்கிடந்ததுஇல்.
கலைஞர்உரை:
நாட்டுநிலவரத்தைஒற்றர்களைக்கொண்டுஅறிந்துஅதன்விளைவுகளைஆராய்ந்துநடந்திடாதஅரசின்கொற்றம்தழைத்திடவழியேஇல்லை.
மு.வஉரை:
ஒற்றரால் (நாட்டுநிகழ்ச்சிகளை) அறிந்துஅவற்றின்பயனைஆராய்ந்துணராதஅரசன்வெற்றிபெறத்தக்கவழிவேறுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
எல்லார்இடத்தும்நிகழ்வனவற்றைஒற்றரைக்கொண்டுஅறிந்து, நடப்பைதெரிந்துகொள்ளாதஆட்சி, நிலைத்துவெற்றிபெறவேறொருவழியேஇல்லை.
Translation:
By spies who spies, not weighing things they bring, Nothing can victory give to that unwary king.
Explanation:
There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.

குறள் 584:
வினைசெய்வார்தம்சுற்றம்வேண்டாதார்என்றாங்கு
அனைவரையும்ஆராய்வதுஒற்று.
கலைஞர்உரை:
ஓர்அரசில்உளவறியும்ஒற்றர்வேலைபார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார்என்றெல்லாம்பாகுபாடுகருதாமல்பணிபுரிந்தால்தான்அவர்களைநேர்மையானஒற்றர்கள்எனக்கூறமுடியும்.
மு.வஉரை:
தம்முடையதொழிலைச்செய்கின்றவர், தம்சுற்றத்தார், தம்பகைவர்என்றுக்கூறப்படும்எல்லாரையும்ஆராய்வதேஒற்றரின்தொழிலாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அரசுப்பணியாளர், ஆளும்கட்சி, அதன்எதிர்கட்சியினர், அயலவர்என்றுஅனைவரின்சொல், செயல்கொண்டுஅவர்தம்மனக்கருத்தைஅறிபவரேஒற்றர்.
Translation:
His officers, his friends, his enemies, All these who watch are trusty spies.
Explanation:
He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.

குறள் 585:
கடாஅஉருவொடுகண்ணஞ்சாதுயாண்டும்
உகாஅமைவல்லதேஒற்று.
கலைஞர்உரை:
சந்தேகப்படமுடியாததோற்றத்துடனும்அப்படிச்சந்தேகப்பட்டுப்பார்ப்பவர்களுக்குஅஞ்சாமலும், என்னநேர்ந்தாலும்மனத்தில்உள்ளதைவெளிப்படுத்தாமலும்உள்ளவர்களேஒற்றர்களாகப்பணியாற்றமுடியும்.
மு.வஉரை:
ஐயுறமுடியாதஉருவத்தோடு, பார்த்தவருடையகண்பார்வைக்குஅஞ்சாமல்எவ்விடத்திலும்மனதிலுள்ளதைவெளிப்படுத்தாமல்இருக்கவல்லவனேஒற்றன்ஆவன்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்சந்தேகப்படாதவேடத்தோடுசென்று, சந்தேகப்பட்டுச்சினந்தால்அஞ்சாதுநின்று, சாமதானபேததண்டம்எனஎந்தஉபாயம்செய்தாலும்ரகசியத்தைச்சொல்லாதவல்லமைபெற்றவரேஒற்றர்.
Translation:
Of unsuspected mien and all-unfearing eyes, Who let no secret out, are trusty spies.
Explanation:
A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).

குறள் 586:
துறந்தார்படிவத்தராகிஇறந்தாராய்ந்து
என்செயினும்சோர்விலதுஒற்று.
கலைஞர்உரை:
ஆராய்ந்திடவந்தநிகழ்வில்தொடர்பற்றவரைப்போலக்காட்டிக்கொண்டு, அதனைத்தீரஆராய்ந்து, அதில்எத்துணைத்துன்பம்வரினும்தாங்கிக்கொண்டு, தம்மையாரென்றுவெளிப்படுத்திக்கொள்ளாதவரேசிறந்தஒற்றர்.
மு.வஉரை:
துறந்தவரின்வடிவத்தைஉடையவராய், அறியஇடங்களிலெல்லாம்சென்றுஆராய்ந்து (ஐயுற்றவர்) என்னசெய்தாலும்சோர்ந்துவிடாதவரேஒற்றர்ஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
செல்லமுடியாதஇடங்களுக்கும்கூடத்துறவியர்வேடத்தில்சென்று, அறியவேண்டுவற்றைஅறிந்து, அங்கேபிடிபட்டால், பிடித்தவர்எத்தகையதுன்பம்செய்தாலும்ரகசியத்தைச்சொல்லாதவரேஒற்றர்.
Translation:
As monk or devotee, through every hindrance making way, A spy, whate'er men do, must watchful mind display.
Explanation:
He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.

குறள் 587:
மறைந்தவைகேட்கவற்றாகிஅறிந்தவை
ஐயப்பாடுஇல்லதேஒற்று.
கலைஞர்உரை:
மற்றவர்கள்மறைவாகக்கூடிச்செய்யும்காரியங்களை, அவர்களுடன்இருப்பவர்வாயிலாகக்கேட்டறிந்துஅவற்றின்உண்மையைத்தெளிவாகத்தெரிந்துகொள்வதேஉளவறியும்திறனாகும்.
மு.வஉரை:
மறைந்தசெய்திகளையும்கேட்டறியவல்லவனாய்அறிந்தசெய்திகளைஐயப்படாமல்துணியவல்லவனாய்உள்ளவனேஒற்றன்ஆவான்.
சாலமன்பாப்பையாஉரை:
ரகசியமாகநடந்தசெயல்களையும்அவற்றைச்செய்தவர்வாயாலேயேகேடடுஅறியும்ஆற்றல்படைத்தவராய், கேட்டவற்றுள்எத்தகையசந்தேகமும்இல்லாதவராய்இருப்பவரேஒற்றர்.
Translation:
A spy must search each hidden matter out, And full report must render, free from doubt.
Explanation:
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.

குறள் 588:
ஒற்றொற்றித்தந்தபொருளையும்மற்றுமோர்
ஒற்றினால்ஒற்றிக்கொளல்.
கலைஞர்உரை:
ஓர் உளவாளி,தனது திறமையினால்அறிந்து சொல்லும் செய்தியைக்கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்துவரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வர வேண்டும்.
மு.வஉரை:
ஓர்ஒற்றன்மறைந்துகேட்டுத்தெரிவித்தச்செய்தியையும்மற்றோர்ஒற்றனால்கேட்டுவரச்செய்துஒப்புமைகண்டபின்உண்மைஎன்றுக்கொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஓர்ஒற்றர்கொண்டுவந்தசெய்தியைஇன்னும்ஓர்ஒற்றர்தரும்செய்தியோடுசரிபார்த்துக்கொள்க.
Translation:
Spying by spies, the things they tell To test by other spies is well.
Explanation:

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.


குறள் 589:

ஒற்றெற்றுணராமைஆள்கஉடன்மூவர்
சொற்றொக்கதேறப்படும்.
கலைஞர்உரை:
ஓர்ஒற்றரைமற்றோர்ஒற்றர்அறியமுடியாதபடிமூன்றுஒற்றர்களைஇயங்கவைத்துஅம்மூவரும்சொல்வதுஒத்திருந்தால்அதுஉண்மையெனக்கொள்ளலாம்.
மு.வஉரை:
ஓர்ஒற்றனைமற்றோர்ஒற்றன்அறியாதபடிஆளவேண்டும்,அவ்வாறுஆளப்பட்டஒற்றர்மூவரின்சொல்ஒத்திருந்தால்அவைஉண்மைஎனத்தெளியப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒற்றரைஇயக்கும்போதுஓர்ஒற்றரைஇன்னுமோர்ஒற்றர்அறிந்துகொள்ளாதபடிஇயக்குக;ஒருகாரியத்திற்குமூவர்சொல்லும்ஒன்றுபோலவேஇருந்தாலும்அதையும்ஆய்ந்துபிறகுஏற்றுக்கொள்க.
Translation:
One spy must not another see: contrive it so; And things by three confirmed as truth you know.
Explanation:
Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.

குறள் 590:
சிறப்பறியஒற்ற஧ன்கண்செய்யற்கசெய்யின்
புறப்படுத்தான்ஆகும்மறை.
கலைஞர்உரை:
ஓர்ஒற்றரின்திறனைவியந்துபிறர்அறியச்சிறப்புச்செய்தால்,ஒளிவுமறைவாகஇருக்கவேண்டியசெய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.
மு.வஉரை:
ஒற்றனிடத்தில்செய்யும்சிறப்பைப்பிறர்அறியுமாறுசெய்யக்கூடாது, செய்தால்மறைபொருளைத்தானேவெளிப்படுத்தியவன்ஆவான்.
சாலமன்பாப்பையாஉரை:
மறைவாகநிகழ்வனவற்றைஅறிந்துசொல்லும்ஒற்றருக்குப்பரிசுதருக; மறைவாகவேதருக;ஊர்அறியத்தருவதுமறைவையும்ஒற்றரையும்தானேவெளிப்படுத்தியதுபோல்ஆகும்.
Translation:
Reward not trusty spy in others' sight, Or all the mystery will come to light.
Explanation:
Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290