691-700
குறள் 691:
அகலாதுஅணுகாதுதீக்காய்வார்போல்க
இகல்வேந்தர்ச்சேர்ந்தொழுகுவார்.
கலைஞர்உரை:
முடிமன்னருடன்பழகுவோர்நெருப்பில்குளிர்காய்வதுபோலஅதிகமாகநெருங்கிவிடாமலும், அதிகமாகநீங்கிவிடாமலும்இருப்பார்கள்.
மு.வஉரை:
அரசரைச்சார்ந்துவாழ்கின்றவர், அவரைமிகநீங்காமலும், மிகஅணுகாமலும்நெருப்பில்குளிர்காய்கின்றவர்போலஇருக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனம்மாறுபடும்இயல்புடையஆட்சியாளரைச்சார்ந்துபழகுவோர், அவரிடம்கிட்டநெருங்காமலும்விட்டுவிலகாமலும்இடைநிலைநின்றுபழகுக.
Translation:
Who warm them at the fire draw not too near, nor keep too much aloof; Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.
Explanation:
Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.
குறள் 692:
மன்னர்விழைபவிழையாமைமன்னரால்
மன்னியஆக்கந்தரும்.
கலைஞர்உரை:
மன்னர்விரும்புகின்றவைகளைத்தமக்குவேண்டுமெனத்தாமும்விரும்பாமலிருத்தால்அவர்க்குஅந்தமன்னர்வாயிலாகநிலையானஆக்கத்தைஅளிக்கும்.
மு.வஉரை:
அரசர்விரும்புகின்றவர்களைத்தாம்விரும்பாமலிருத்தல் (அரசரைச்சார்ந்திருப்பவர்க்கு) அரசரால்நிலையானஆக்கத்தைப்பெற்றுத்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆட்சியாளருடன்பழகுபவர்ஆட்சியாளர்எவற்றைவிரும்புகிறாரோஅவற்றைவிரும்பாமல்இருப்பது, அவருக்குஆட்சியாளரால்நிலைத்தசெல்வத்தைக்கொடுக்கும்.
Translation:
To those who prize not state that kings are wont to prize, The king himself abundant wealth supplies.
Explanation:
For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.
குறள் 693:
போற்றின்அரியவைபோற்றல்கடுத்தபின்
தேற்றுதல்யார்க்கும்அரிது.
கலைஞர்உரை:
தமக்குமேலேயுள்ளவர்களிடத்திலிருந்துதம்மைக்காத்துக்கொள்ளவிரும்புகிறவர்கள். பொறுத்துக்கொள்ளமுடியாதகுற்றங்களைச்செய்யாமல்இருக்கவேண்டும். அப்படிசெய்துவிட்டால்அதன்பிறகுதம்மீதுஏற்பட்டசந்தேகத்தைநீக்குவதுஎளிதானகாரியமல்ல.
மு.வஉரை:
(அரசரைச்சார்ந்தவர்) தம்மைக்காத்துக்கொள்ளவிரும்பினால்அரியத்தவறுகள்நேராமல்காத்துக்கொள்ளவேண்டும், ஐயுற்றபின்அரசரைத்தெளிவித்தல்எவர்க்கும்முடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
ஆட்சியாளருடன்பழகுவோர்தம்மைக்காக்கக்கருதினால்மோசமானபிழைகள்தம்பங்கில்நேர்ந்துவிடாமல்காக்க; பிழைகள்நேர்ந்துவிட்டதாகஆட்சியாளர்சந்தேகப்பட்டுவிட்டால்அவரைத்தெளிவிப்பதுஎவர்க்கும்கடினம்.
Translation:
Who would walk warily, let him of greater faults beware; To clear suspicions once aroused is an achievement rare.
Explanation:
Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.
குறள் 694:
செவிச்சொல்லும்சேர்ந்தநகையும்அவித்தொழுகல்
ஆன்றபெரியாரகத்து.
கலைஞர்உரை:
ஆற்றல்வாய்ந்தபெரியவர்கள்முன்னே, மற்றவர்கள்காதுக்குள்பேசுவதையும், அவர்களுடன்சேர்ந்துசிரிப்பதையும்தவிர்த்து, அடக்கமெனும்பண்பைக்காத்திடல்வேண்டும்.
மு.வஉரை:
வல்லமைஅமைந்தபெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியைநெருங்கிச்சொல்லுதல்உடன்சேர்ந்துநகைத்தலும்செய்யாமல்ஒழுகவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
மேன்மைமிக்கபெரியவர்அருகேஇருக்கும்போது, பிறருடன்காதருகேமெல்லப்பேசுவதையும்அடுத்தவர்முகம்பார்த்துக்கண்சிமிட்டிச்சிரிப்பதையும்செய்யாதுநடந்துகொள்க.
Translation:
All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possess.
Explanation:
While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.
குறள் 695:
எப்பொருளும்ஓரார்தொடரார்மற்றப்பொருளை
விட்டக்கால்கேட்கமறை.
கலைஞர்உரை:
பிறருடன்மறைவாகப்பேசிக்கொண்டிருக்கும்போதுஅதைஒட்டுக்கேட்கவும்கூடாது; அதுஎன்னவென்றுவினவிடவும்கூடாது. அவர்களேஅதுபற்றிச்சொன்னால்மட்டுமேகேட்டுக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
(அரசர்மறைபொருள்பேசும்போது) எப்பொருளையும்உற்றுக்கேட்காமல்தொடர்ந்துவினவாமல்அப்பொருளைஅவரேவிட்டுச்சொன்னபோதுகேட்டறியவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆட்சியாளர்பிறருடன்ரகசியம்பேசம்போதுகாதுகொடுத்துக்கேட்காதே; என்னபேச்சுஎன்றுநீயாகக்கேளாதே; அதைப்பற்றிஆட்சியாளரேசொன்னால்கேட்டுக்கொள்க.
Translation:
Seek not, ask not, the secret of the king to hear; But if he lets the matter forth, give ear!.
Explanation:
(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).
குறள் 696:
குறிப்பறிந்துகாலங்கருதிவெறுப்பில
வேண்டுபவேட்பச்சொலல்.
கலைஞர்உரை:
ஒருவரின்மனநிலைஎவ்வாறுஉள்ளதுஎன்பதைஅறிந்து, தக்ககாலத்தைத்தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளைவிலக்கி, விரும்பத்தக்கதைமட்டுமே, அவர்விரும்பும்வண்ணம்சொல்லவேண்டும்.
மு.வஉரை:
அரசருடையக்குறிப்பைஅறிந்துதக்கக்காலத்தைஎதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும்விருப்பமானவற்றையும்அவர்விரும்புமாறுச்சொல்லவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆட்சியாளருக்குஎதையேனும்சொல்லவிரும்பினால், ஆட்சியாளரின்அப்போதையமனநிலையைஅறிந்துதான்சொல்லக்கருதியசெய்திக்குஏற்றசமயத்தையும்எண்ணிஆட்சியாளருக்குவெறுப்புத்தராததும், வேண்டியதும்ஆகியகாரியத்தைஅவர்விரும்புமாறுசொல்லுக.
Translation:
Knowing the signs, waiting for fitting time, with courteous care, Things not displeasing, needful things, declare.
Explanation:
Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.
குறள் 697:
வேட்பனசொல்லிவினையிலஎஞ்ஞான்றும்
கேட்பினும்சொல்லாவிடல்.
கலைஞர்உரை:
விரும்பிக்கேட்டாலும்கூட, பயனுள்ளவற்றைமட்டுமேசொல்லிப்பயனற்றவைகளைச்சொல்லாமல்விட்டுவிடவேண்டும்.
மு.வஉரை:
அரசர்விரும்புகின்றவற்றைமட்டும்சொல்லிப்பயனில்லாதவற்றைஅவரேகேட்டபோதிலும்சொல்லாமல்விடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆட்சியாளருக்குப்பயன்தரும்செய்திகளைஅவர்கேட்காதபோதும்சொல்லுக; பயன்தராதசெய்திகளைஎப்போதும்சொல்லாதுவிடுக.
Translation:
Speak pleasant things, but never utter idle word; Not though by monarch's ears with pleasure heard.
Explanation:
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).
குறள் 698:
இளையர்இனமுறையர்என்றிகழார்நின்ற
ஒளியோடுஒழுகப்படும்.
கலைஞர்உரை:
எமக்குஇளையவர்தான்; இன்னமுறையில்உறவுடையவர்தான்என்றுஆட்சிப்பொறுப்பில்இருப்போரைஇகழ்ந்துரைக்காமல், அவர்கள்அடைந்துள்ளபெருமைக்கேற்பப்பண்புடன்நடந்துகொள்ளவேண்டும்.
மு.வஉரை:
(அரசரை) எமக்குஇளையவர், எமக்குஇன்னமுறைஉடையவர்என்றுஇகழாமல்அவருடையநிலைக்குஏற்றவாறுஅமைந்தபுகழுடன்பொருந்தநடக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆட்சியாளருடன்பழகும்போதுஇவர்என்னைக்காட்டிலும்வயதில்சிறியவர்; இவர்உறவால்எனக்குஇன்னமுறைவேண்டும்என்றுஎண்ணாமல், ஆட்சியாளர்இருக்கும்பதவியைஎண்ணிஅவருடன்பழகுக.
Translation:
Say not, 'He's young, my kinsman,' despising thus your king; But reverence the glory kingly state doth bring.
Explanation:
Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".
குறள் 699:
கொளப்பட்டேம்என்றெண்ணிக்கொள்ளாதசெய்யார்
துளக்கற்றகாட்சியவர்.
கலைஞர்உரை:
ஆட்சியால்நாம்ஏற்றுக்கொள்ளப்பட்டவராயிற்றேஎன்றதுணிவில், ஏற்றுகொள்ளமுடியாதகாரியங்களைத்தெளிந்தஅறிவுடையவர்கள்செய்யமாட்டார்கள்.
மு.வஉரை:
அசைவற்றதெளிந்தஅறிவினைஉடையவர்யாம்அரசரால்விரும்பப்பட்டோம்என்றுஎண்ணிஅவர்விரும்பாதவற்றைச்செய்யமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
சலனம்அற்றஅறிவைஉடையவர்கள், தாம்ஆட்சியாளரால்மிகவும்மரியாதைக்குஉரியவர்கள்என்றுஎண்ணி, ஆட்சியாளர்விரும்பாதவற்றைச்செய்யமாட்டார்.
Translation:
'We've gained his grace, boots nought what graceless acts we do', So deem not sages who the changeless vision view.
Explanation:
Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".
குறள் 700:
பழையம்எனக்கருதிப்பண்பல்லசெய்யும்
கெழுதகைமைகேடுதரும்.
கலைஞர்உரை:
நெடுங்காலமாகநெருங்கிப்பழகுகிறகாரணத்தினாலேயேதகாதசெயல்களைச்செய்திடஉரிமைஎடுத்துக்கொள்வதுகேடாகவேமுடியும்.
மு.வஉரை:
யாம்அரசர்க்குபழைமையானவராய்உள்ளோம்எனக்கருதித்தகுதிஅல்லாதவற்றைச்செய்யும்உரிமைகேட்டைத்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆட்சியாளருடன்நமக்குநீண்டநாள்பழக்கம்உண்டுஎன்றுஎண்ணித்தீயசெயல்களைச்செய்யும்மனஉரிமைஒருவருக்குக்கெடுதியையேதரும்.
Translation:
Who think 'We're ancient friends' and do unseemly things; To these familiarity sure ruin brings.
Explanation:
The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.
Comments
Post a Comment