701-710
குறள் 701:
கூறாமைநோக்கக்குறிப்பறிவான்எஞ்ஞான்றும்
மாறாநீர்வையக்கணி.
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.
கலைஞர்உரை:
ஒருவர்எதுவும்பேசாமலிருக்கும்போதேஅவர்என்னநினைக்கிறார்என்பதைமுகக்குறிப்பால்உணருகிறவன்உலகத்திற்கேஅணியாவான்.
மு.வஉரை:
ஓருவர்சொல்லாமலேஅவறுடையமுகத்தைநோக்கிஅவர்கருதியகுறிப்பைஅறிகின்றவன்எப்போதும்உலகத்திற்க்குஓர்அணிகலன்ஆவான்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்வாயால்சொல்லாமல்இருக்க, அவனுடையமுகத்தையும்கண்ணையும்பார்த்தேஅவன்மனக்கருத்தைஅறிந்துகொள்பவன், எப்போதும்வற்றாதகடலால்வளைக்கப்பட்டஇவ்வுலகத்தவர்க்குஆபரணம்போன்றவன்.
Translation:
Who knows the sign, and reads unuttered thought, the gem is he, Of earth round traversed by the changeless sea.
Explanation:
The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.
குறள் 702:
ஐயப்படாஅதுஅகத்ததுஉணர்வானைத்
தெய்வத்தோடொப்பக்கொளல்.
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
கலைஞர்உரை:
ஒருவன்மனத்தில்உள்ளத்தைத், தெளிவாகஉணர்ந்துகொள்ளக்கூடியசக்திதெய்வத்திற்கேஉண்டுஎன்றுகூறினால், அந்தத்திறமைபடைத்தமனிதனையும்அத்தெய்வத்தோடுஒப்பிடலாம்.
மு.வஉரை:
ஐயப்படாமல்மனத்தில்உள்ளதைஉணரவல்லவனை (அவன்மனிதனேஆனாலும்) தெய்வத்தோடுஒப்பாககொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவனின்மனக்கருத்தைச்சந்தேகத்திற்குஇடம்இல்லாமல்கண்டுகொள்ளும்ஆற்றல்உள்ளவனைத்தெய்வத்திற்குச்சமமாகமதிக்கவேண்டும்.
Translation:
Undoubting, who the minds of men can scan, As deity regard that gifted man.
Explanation:
He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).
குறள் 703:
குறிப்பிற்குறிப்புணர்வாரைஉறுப்பினுள்
யாதுகொடுத்தும்கொளல்.
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
கலைஞர்உரை:
ஒருவரின்முகக்குறிப்பைக்கொண்டேஅவரதுஉள்ளக்குறிப்பைஅறிந்துகொள்ளக்கூடியஆற்றலுடையவரை, எந்தப்பொறுப்பைக்கொடுத்தாவதுதுணையாக்கிக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
(முகம்கண்இவற்றின்) குறிப்புக்களால்உள்ளகுறிப்பைஉணரவல்லவரைநாட்டின்உறுப்புக்களுள்எதைக்கொடுத்தாவதுதுணையாகபெற்றுக்கொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தான்குறிப்புச்செய்ய, அதைக்கண்டுபிறர்முகத்தையும்கண்ணையும்பார்த்தேஅவர்மனக்கருத்தைக்கண்டுசொல்லும்திறம்மிக்கவரைத்தன்னிடம்இருக்கும்செல்வங்களுள்எதைக்கொடுத்தேனும்துணையாகவைத்துக்கொள்ளவேண்டும்.
Translation:
Who by the sign the signs interprets plain, Give any member up his aid to gain.
Explanation:
The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.
குறள் 704:
குறித்ததுகூறாமைக்கொள்வாரோடேனை
உறுப்போரனையரால்வேறு.
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
கலைஞர்உரை:
உறுப்புகளால்வேறுபடாததோற்றமுடையவராகஇருப்பினும், ஒருவர்மனத்தில்உள்ளதை, அவர்கூறாமலேஉணரக்கூடியவரும், உணரமுடியாதவரும்அறிவினால்வேறுபட்டவர்களேயாவார்கள்.
மு.வஉரை:
ஒருவன்மனதில்கருதியதைஅவன்கூறாமலேஅறிந்துகொள்ளவல்லவரோடுமற்றவர்உறுப்பால்ஒத்தவராகஇருந்தாலும்அறிவால்வேறுபட்டவர்ஆவார்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்மனத்துள்நினைப்பதைஅவன்சொல்லாமலேயேஅறியம்ஆற்றல்உடையவரோடுஅந்தஆற்றல்இல்லாதவர்உறுப்பால்ஒத்தவர்; அறிவால்வேறுபட்டவர்ஆவார்.
Translation:
Who reads what's shown by signs, though words unspoken be, In form may seem as other men, in function nobler far is he.
Explanation:
Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).
குறள் 705:
குறிப்பிற்குறிப்புணராவாயின்உறுப்பினுள்
என்னபயத்தவோகண்.
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.
கலைஞர்உரை:
ஒருவரதுமுகக்குறிப்பு, அவரதுஉள்ளத்தில்இருப்பதைக்காட்டிவிடும்என்கிறபோது, அந்தக்குறிப்பைஉணர்ந்துகொள்ளமுடியாதகண்கள்இருந்தும்என்னபயன்?.
மு.வஉரை:
(முகம்கண்இவற்றின்) குறிப்புக்களால்உள்ளக்குறிப்பைஉணராவிட்டால், ஒருவனுடையஉறுப்புகளுள்கண்கள்என்னப்பயன்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்குறிப்பைக்கண்டபின்பும்அவன்மனக்கருத்தைஅறியமுடியவில்லைஎன்றால், உறுப்புகளுள்சிறந்தகண்களால்என்னநன்மை?.
Translation:
By sign who knows not sings to comprehend, what gain, 'Mid all his members, from his eyes does he obtain?.
Explanation:
Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?.
குறள் 706:
அடுத்ததுகாட்டும்பளிங்குபோல்நெஞ்சம்
கடுத்ததுகாட்டும்முகம்.
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
கலைஞர்உரை:
கண்ணாடி, தனக்குஉள்ளத்தைக்காட்டுவதுபோலஒருவரதுமனத்தில்உள்ளத்தில்அவரதுமுகம்காட்டிவிடும்.
மு.வஉரை:
தன்னைஅடுத்தப்பொருளைத்தன்னிடம்காட்டும்பளிங்குபோல், ஒருவனுடையநெஞ்சில்மிகுந்துள்ளதைஅவனுடையமுகம்காட்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்அருகேஇருக்கும்பொருளின்நிறத்தைக்காட்டும்பளிங்கினைப்போல்ஒருவனதுமனத்தேநிகழ்வதைஅவன்முகம்காட்டும்.
Translation:
As forms around in crystal mirrored clear we find, The face will show what's throbbing in the mind.
Explanation:
As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.
குறள் 707:
முகத்தின்முதுக்குறைந்ததுஉண்டோஉவப்பினும்
காயினும்தான்முந்துறும்.
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.
கலைஞர்உரை:
உள்ளத்தில்உள்ளவிருப்புவெறுப்புகளைமுந்திக்கொண்டுவெளியிடுவதில்முகத்தைப்போலஅறிவுமிக்கதுவேறெதுவுமில்லை.
மு.வஉரை:
ஒருவன்விருப்பம்கொண்டாலும், வெறுப்புக்கொண்டாலும்அவனுடையமுகம்முற்ப்பட்டுஅதைத்தெரிவிக்கும், அம்முகத்தைவிடஅறிவுமிக்கதுஉண்டோ.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்மனத்தால்விரும்பினாலும்வெறுத்தாலும்அதைவெளிக்காட்டுவதில்முந்திநிற்கும்முகத்தைக்காட்டிலும்அறிவுமிக்கதுவேறுஉண்டோ?.
Translation:
Than speaking countenance hath aught more prescient skill? Rejoice or burn with rage, 'tis the first herald still!.
Explanation:
Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.
குறள் 708:
முகம்நோக்கிநிற்கஅமையும்அகம்நோக்கி
உற்றதுணர்வார்ப்பெறின்.
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.
கலைஞர்உரை:
அகத்தில்உள்ளதைஉணர்ந்துகொள்ளும்திறமையிருப்பின், அவர்ஒருவரின்முகத்துக்குஎதிரில்நின்றாலேபோதுமானது.
மு.வஉரை:
உள்ளக்குறிப்பைநோக்கிஉற்றதைஉணரவல்லவரைப்பெற்றால், (அவரிடம்எதையும்கூறாமல்) அவறுடையமுகத்தைநோக்கிநின்றால்போதும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்மனத்தைக்குறிப்பால்அறிந்துதான்எண்ணியதைஅறிபவரைத்துணையாகப்பெற்றால், அவர்களின்முகத்தைஅவன்பார்த்துநின்றாலேபோதும்.
Translation:
To see the face is quite enough, in presence brought, When men can look within and know the lurking thought.
Explanation:
If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face.
குறள் 709:
பகைமையும்கேண்மையும்கண்ணுரைக்கும்கண்ணின்
வகைமைஉணர்வார்ப்பெறின்.
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால் (ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.
கலைஞர்உரை:
பார்வையின்வேறுபாடுகளைப்புரிந்துகொள்ளக்கூடியவர்கள், ஒருவரின்கண்களைப்பார்த்தேஅவர்மனத்தில்இருப்பதுநட்பா, பகையாஎன்பதைக்கூறிவிடுவார்கள்.
மு.வஉரை:
கண்பார்வையின்வேறுபாடுகளைஉணரவல்லவரைப்பெற்றால்( ஒருவனுடையமனதில்உள்ள) கையையும்நட்பையும்அவனுடையகண்களேசொல்லிவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவர்களின்பார்வைவேறுபடுவதைக்கொண்டேஅவர்தம்மனக்கருத்தைஅறியும்ஆற்றல்உடையவர்க்கு, பகைமையையும்நட்பையும்அவர்கள்சொல்லவில்லைஎன்றாலும்அவர்தம்கண்களேசொல்லிவிடும்.
Translation:
The eye speaks out the hate or friendly soul of man; To those who know the eye's swift varying moods to scan.
Explanation:
If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.
குறள் 710:
நுண்ணியம்என்பார்அளக்குங்கோல்காணுங்கால்
கண்ணல்லதுஇல்லைபிற.
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.
கலைஞர்உரை:
நுண்ணறிவாளர்எனப்படுவோர்க்குபிறரின்மனத்தில்உள்ளதைஅளந்தறியும்கோலாகப்பயன்படுவதுஅவரதுகண்அல்லாமல்வேறுஎதுவுமில்லை.
மு.வஉரை:
யாம்நுட்பமானஅறிவுடையேம்என்றுபிறர்கருத்தைஅறிபவரின்அளக்குங்கோல், ஆராய்ந்துபார்த்தால்அவனுடையக்கண்களேஅல்லாமல்வேறுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
நாங்கள்நுண்அறிவைஉடையவர்கள்என்றுகூறிக்கொள்பவர், பிறர்மனக்கருத்தைஅளந்துஅறியப்பயன்படுத்தும்அளவுகருவிஎதுஎன்றுஆய்ந்துபார்த்தால்அதுகண்ணேஅன்றிவேறுஇல்லை.
Translation:
The men of keen discerning soul no other test apply (When you their secret ask) than man's revealing eye.
Explanation:
The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else.
Comments
Post a Comment