811-820

 குறள் 811:

பருகுவார்போலினும்பண்பிலார்கேண்மை
பெருகலிற்குன்றல்இனிது.
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

கலைஞர்உரை:
நல்லபண்புஇல்லாதவர்கள்அன்புவெள்ளத்தில்நம்மைமூழ்கடிப்பதுபோல்தோன்றினாலும்அவர்களதுநட்பை, மேலும்வளர்த்துக்கொள்ளாமல்குறைத்துக்கொள்வதேநல்லது.
மு.வஉரை:
அன்புமிகுதியால்பருகுவார்போல்தோன்றினாலும்நற்பண்புஇல்லாதவரின்நட்பு, வளர்ந்துபெருகுவதைவிடத்தேய்ந்துகுறைவதுநல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
உயிரால்உருகுவார்போல்நடிக்கும், உள்ளத்துள்நல்லபண்புஇல்லாதவரின்நட்புவளர்வதைவிடக்குறைவதுநல்லது.
Translation:
Though evil men should all-absorbing friendship show, Their love had better die away than grow.
Explanation:
The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.

குறள் 812:
உறின்நட்டுஅறின்ஙருஉம்ஒப்பிலார்கேண்மை
பெறினும்இழப்பினும்என்.
தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.

கலைஞர்உரை:
தமக்குப்பயன்கிடைக்கும்போதுநண்பராகஇருந்துவிட்டுபயனில்லாதபோதுபிரிந்துவிடுகின்றவர்களின்நட்பு, இருந்தால்என்ன? இழந்தால்தான்என்ன?.
மு.வஉரை:
தமக்குபயன்உள்ளபோதுநட்புசெய்துபயன்இல்லாதபோதுநீங்கிவிடும்தகுதியில்லாதவரின்நட்பைப்பெற்றாலும்என்னபயன், இழந்தாலும்என்னபயன்.
சாலமன்பாப்பையாஉரை:
தமக்குப்பயனிருந்தால்நட்புக்கொண்டும், பயன்இல்லைஎன்றால்நட்பைவிலக்கியும்வாழ்வதில்தமக்குஇணைஇல்லாதவராய்இருப்பாரின்நட்பைப்பெற்றென்னஇழந்தென்ன?.
Translation:
What though you gain or lose friendship of men of alien heart, Who when you thrive are friends, and when you fail depart?.
Explanation:
Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ? .

குறள் 813:
உறுவதுசீர்தூக்கும்நட்பும்பெறுவது
கொள்வாரும்கள்வரும்நேர்.
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.

கலைஞர்உரை:
பயனைஎண்ணிப்பார்த்துஅதற்காகவேநட்புக்கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும்ஆகியஇந்தமூவரும்ஒரேமாதிரியானவர்களேஆவார்கள்.
மு.வஉரை:
கிடைக்கும்பயனைஅளந்துபார்க்கும்நண்பரும், அன்பைக்கொள்ளாமல்பெறுகின்றபொருளைக்கொள்ளும்விலைமகளிரும், கள்வரும்ஒருநிகரானவர்.
சாலமன்பாப்பையாஉரை:
இவரிடம்நட்புக்கொள்வதால்தமக்குஎன்னகிடைக்கும்என்றுஎண்ணிப்பார்ப்பவரின்நட்பும், தமக்குத்தரும்கூலியைஏற்றுக்கொள்ளும்பாலியல்தொழிலாளரும்திருடர்களும்ஒருவருக்கொருவர்சமமானவர்களே.
Translation:
These are alike: the friends who ponder friendship's gain Those who accept whate'er you give, and all the plundering train.
Explanation:
Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.

குறள் 814:
அமரகத்துஆற்றறுக்கும்கல்லாமாஅன்னார்
தமரின்தனிமைதலை.
போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

கலைஞர்உரை:
போர்க்களத்தில்கீழேதள்ளிவிட்டுத்தப்பித்துஓடிப்போகும்குதிரையைப்போன்றவர்களின்நட்பைப்பெறுவதைக்காட்டிலும்தனித்துஇருப்பதுஎவ்வளவோசிறப்புடையதாகும்.
மு.வஉரை:
போர்வந்தபோதுகளத்தில்தள்ளிவிட்டுஓடும்அறிவில்லாதகுதிரைபோன்றவரின்உறவைவிட, ஒருநட்பும்இல்லாமல்தனித்திருத்தலேசிறந்தது.
சாலமன்பாப்பையாஉரை:
போர்க்களத்தேநம்மைவீழ்த்திவிட்டுப்போய்விடும்கல்வியற்றகுதிரையைப்போன்றவரின்நட்பைக்காட்டிலும்தனிமையாகஇருப்பதேமுதன்மையானது.
Translation:
A steed untrained will leave you in the tug of war; Than friends like that to dwell alone is better far.
Explanation:
Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.

குறள் 815:
செய்தேமஞ்சாராச்சிறியவர்புன்கேண்மை
எய்தலின்எய்தாமைநன்று.
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

கலைஞர்உரை:
கீழ்மக்களின்நட்பு, பாதுகாப்பாகஅமையாததீயதன்மைகொண்டதுஎன்பதனால், அவர்களுடன்நட்புஏற்படுவதைவிட, ஏற்படாமல்இருப்பதேநலம்.
மு.வஉரை:
காவல்செய்துவைத்தாலும்காவல்ஆகாதகீழ்மக்களின்தீயநட்பு, ஒருவனுக்குஏற்படுவதைவிடஏற்படாமலிருப்பதேநன்மையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நாம்பலவகையில்உதவிசெய்தாலும்நமக்குப்பாதுகாப்பாகஇராதஅற்பர்களின்நட்பு, இருப்பதிலும்இல்லாதிருப்பதேநல்லது.
Translation:
'Tis better not to gain than gain the friendship profitless Of men of little minds, who succour fails when dangers press.
Explanation:
It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.

குறள் 816:
பேதைபெருங்கெழீஇநட்பின்அறிவுடையார்
ஏதின்மைகோடிஉறும்.
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

கலைஞர்உரை:
அறிவில்லாதவனிடம்நெருங்கியநட்புக்கொண்டிருப்பதைவிட, அறிவுடையஒருவரிடம்பகைகொண்டிருப்பதுகோடிமடங்குமேலானதாகும்.
மு.வஉரை:
அறிவில்லாதவனுடையமிகப்பொருந்தியநட்பைவிடஅறிவுடையவரின்நட்பில்லாததன்மைகோடிமடங்குநன்மைதருவதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவற்றவனின்மிகநெருக்கமானநட்பைக்காட்டிலும்அறிவுடையார்களின்பகை, கோடிநன்மையாம்.
Translation:
Better ten million times incur the wise man's hate, Than form with foolish men a friendship intimate.
Explanation:
The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.

குறள் 817:
நகைவகையராகியநட்பின்பகைவரால்
பத்தடுத்தகோடிஉறும்.
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

கலைஞர்உரை:
சிரித்துப்பேசிநடிப்பவர்களின்நட்பைக்காட்டிலும்பகைவர்களால்ஏற்படும்துன்பம்பத்துக்கோடிமடங்குநன்மையானதுஎன்றுகருதப்படும்.
மு.வஉரை:
(அகத்தில்அன்புஇல்லாமல்புறத்தில்) நகைக்கும்தன்மைஉடையவரின்நட்பைவிட, பகைவரால்வருவனபத்துகோடிமடங்குநன்மையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
சிரித்துச்செல்லும்இயல்பினராகியநட்பைக்காட்டிலும், பகைவரால்வருவனபத்துக்கோடிமடங்குநன்மையாம்.
Translation:
From foes ten million fold a greater good you gain, Than friendship yields that's formed with laughers vain.
Explanation:
What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.

குறள் 818:
ஒல்லும்கருமம்உடற்றுபவர்கேண்மை
சொல்லாடார்சோரவிடல்.
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

கலைஞர்உரை:
நிறைவேற்றக்கூடியசெயலை, நிறைவேற்றமுடியாமல்கெடுப்பவரின்உறவை, அவருக்குத்தெரியாமலேயேமெல்லமெல்லவிட்டுவிடவேண்டும்.
மு.வஉரை:
முடியும்செயலையும்முடியாதபடிசெய்துகெடுப்பவரின்உறவை, அவர்அறியுமாறுஒன்றும்செய்யாமலேதளரச்செய்துகைவிடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்மால்செய்யக்கூடியஉதவியையும்செய்யமுடியாதவர்போல்நடித்துச்செய்யாமல்விடுபவரின்நட்பைஅவரிடம்சொல்லாமலேயேவிட்டுவிடுக.
Translation:
Those men who make a grievous toil of what they do On your behalf, their friendship silently eschew.
Explanation:
Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.

குறள் 819:
கனவினும்இன்னாதுமன்னோவினைவேறு
சொல்வேறுபட்டார்தொடர்பு.
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.

கலைஞர்உரை:
சொல்லுக்கும்செயலுக்கும்தொடர்பில்லாதவரின்நட்புகனவிலேகூடத்துன்பத்தைத்தான்கொடுக்கும்.
மு.வஉரை:
செய்யும்செயல்வேறாகவும்சொல்லும்சொல்வேறாகவும்உள்ளவரின்நட்பு, ஒருவனுக்குகனவிலும்துன்பம்தருவதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
சொல்ஒன்று, செயல்வேறாகஇருப்பவரின்நட்புகனவிலும்கூடத்துன்பமானதாகும்.
Translation:
E'en in a dream the intercourse is bitterness With men whose deeds are other than their words profess.
Explanation:
The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.

குறள் 820:
எனைத்தும்குறுகுதல்ஓம்பல்மனைக்கெழீஇ
மன்றில்பழிப்பார்தொடர்பு.
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

கலைஞர்உரை:
தனியாகச்சிந்திக்கும்போதஇனிமையாகப்பழகிவிட்டுப்பொதுமன்றத்தில்பழித்துப்பேசுபவரின்நட்புதம்மைஅணுகாமல்விலக்கிக்கொள்ளப்படவேண்டும்.
மு.வஉரை:
தனியேவீட்டில்உள்ளபோதுபொருந்தியிருந்து, பலர்கூடியமன்றத்தில்பழித்துபேசுவோரின்நட்பைஎவ்வளவுசிறியஅளவிலும்அணுகாமல்விடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நம்வீட்டுக்குள்வந்துநட்புக்கொண்டாடிப்பலர்இருக்கும்சபையில்நம்மைப்பழிப்பவரின்தொடர்பைச்சிறிதளவும்சேரவிடவேண்டா.
Translation:
In anywise maintain not intercourse with those, Who in the house are friends, in hall are slandering foes.
Explanation:
Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290