951-960
குறள் 951:
இற்பிறந்தார்கண்அல்லதுஇல்லைஇயல்பாகச்
செப்பமும்நாணும்ஒருங்கு.
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.
கலைஞர்உரை:
நடுநிலைதவறாதபண்பும், ஆரவாரமற்றஅடக்கஉணர்வும்கொண்டவர்களையல்லாமல்மற்றவர்களைஉயர்ந்தகுடியில்பிறந்தவர்களாகக்கருதமுடியாது.
மு.வஉரை:
நடுவுநிமையும்நாணமும்உயர்குடியில்பிறந்தவனிடத்தில்அல்லாமல்மற்றவரிடத்தில்இயல்பாகஒருசேரஅமைவதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
சிறந்தகுடும்பத்தில்பிறந்தவரிடம்மனம், சொல், செயல்மூன்றின்சுத்தமும், நாணமும்இயல்பாகஇருப்பதுபோல்மற்றவரிடம்இருக்கமாட்டா.
Translation:
Save in the scions of a noble house, you never find Instinctive sense of right and virtuous shame combined.
Explanation:
Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.
குறள் 952:
ஒழுக்கமும்வாய்மையும்நாணும்இம்மூன்றும்
இழுக்கார்குடிப்பிறந்தார்.
உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
கலைஞர்உரை:
ஒழுக்கம், வாய்மை, மானம்ஆகியஇந்தமூன்றிலும்நிலைதவறிநடக்காதவர்களேஉயர்ந்தகுடியில்பிறந்தவர்களாகக்கருதப்படுவார்கள்.
மு.வஉரை:
உயர்குடியில்பிறந்தவர்ஒழுக்கமும்வாய்மையும்நாணமும்ஆகியஇம்மூன்றிலிருந்தும்வழுவாமல்இயல்பாகவேநன்னெறியில்வாழ்வர்உயர்குடியில்பிறந்தவர்ஒழுக்கமும்வாய்மையும்நாணமும்ஆகியஇம்மூன்றிலிருந்தும்வழுவாமல்இயல்பாகவேநன்னெறியில்வாழ்வர்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுடும்பத்தில்பிறந்தவர்ஒழுக்கம், உண்மை, நாணம்என்னும்இம்மூன்றிலிருந்தும்விலகமாட்டார்.
Translation:
In these three things the men of noble birth fail not: In virtuous deed and truthful word, and chastened thought.
Explanation:
The high-born will never deviate from these three; good manners, truthfulness and modestyThe high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.
குறள் 953:
நகைஈகைஇன்சொல்இகழாமைநான்கும்
வகையென்பவாய்மைக்குடிக்கு.
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.
கலைஞர்உரை:
முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரைஇகழாதபண்பாடுஆகியநான்குசிறப்புகளும்உள்ளவர்களையேவாய்மையுள்ளகுடிமக்கள்என்றுவகைப்படுத்தமுடியும்.
மு.வஉரை:
உண்மையானஉயர்குடியில்பிறந்தவர்க்குமுகமலர்ச்சி, ஈகை, இனியசொல், பிறரைஇகழ்ந்துகூறாமைஆகியநான்கும்நல்லப்பண்புகள்என்பர்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுடும்பத்தில்பிறந்தவர்களுக்குமுகமலர்ச்சி, இருப்பதைக்கொடுத்தல், இனிமையாகப்பேசுதல், கேலிபேசாமைஎன்னும்நான்கும்உரியகுணங்களாம்.
Translation:
The smile, the gift, the pleasant word, unfailing courtesy These are the signs, they say, of true nobility.
Explanation:
A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.
குறள் 954:
அடுக்கியகோடிபெறினும்குடிப்பிறந்தார்
குன்றுவசெய்தல்இலர்.
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
கலைஞர்உரை:
பலகோடிப்பொருள்களைஅடுக்கிக்கொடுத்தாலும்சிறந்தகுடியில்பிறந்தவர்கள்அந்தச்சிறப்புக்கெடுவதற்கானசெயல்களுக்குஇடம்தரமாட்டார்கள்.
மு.வஉரை:
பலகோடிப்பொருளைப்பெறுவதாகஇருந்தாலும்உயர்குடியில்பிறந்தவர்தம்குடியின்சிறப்புக்குன்றுவதற்குகாரணமானகுற்றங்களைச்செய்வதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
கோடிகோடியாகச்செல்வத்தைப்பெற்றாலும்நல்லகுடும்பத்தில்பிறந்தவர்தம்குடும்பப்பெருமைகுறைவதற்கானசெயல்களைச்செய்யமாட்டார்.
Translation:
Millions on millions piled would never win The men of noble race to soul-degrading sin.
Explanation:
Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.
குறள் 955:
வழங்குவதுள்வீழ்ந்தக்கண்ணும்பழங்குடி
பண்பில்தலைப்பிரிதல்இன்று.
தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.
கலைஞர்உரை:
பழம்பெருமைவாய்ந்தகுடியில்பிறந்தவர்கள்வறுமையால்தாக்குண்டபோதிலும், பிறருக்குவழங்கும்பண்பைஇழக்கமாட்டார்கள்.
மு.வஉரை:
தாம்பிறர்க்குக்கொடுத்துதவும்வன்மைவறுமையால்சுருங்கியபோதிலும், பழம்பெருமைஉடையகுடியில்பிறந்தவர்தம்பண்பிலிருந்துநீங்குவதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தொடர்ந்துவரும்நல்லகுடியில்பிறந்தவர்தம்பொருள்கொடுத்துக்குறைந்துவிட்டபோதும், கொடுக்கும்பண்பிலிருந்துவிலகமாட்டார்.
Translation:
Though stores for charity should fail within, the ancient race Will never lose its old ancestral grace.
Explanation:
Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).
குறள் 956:
சலம்பற்றிச்சால்பிலசெய்யார்மாசற்ற
குலம்பற்றிவாழ்தும்என்பார்.
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
கலைஞர்உரை:
மாசற்றபண்புடன்வாழ்வதாகக்கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சகநினைவுடன்தகாதகாரியங்களில்ஈடுபடமாட்டார்கள்.
மு.வஉரை:
மாசற்றகுடிப்பண்புடன்வாழ்வோம்என்றுகருதிவாழ்வோர், வஞ்சனைக்கொண்டுதகுதியில்லாதவற்றைக்செய்யமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
குற்றம்இல்லாமல்வரும்தம்குடும்பமரபோடுவாழ்வோம்என்பவர், வறுமைவந்தபோதும், வஞ்சகம்கொண்டு, பொருந்தாதசெயல்களைச்செய்யமாட்டார்.
Translation:
Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shame.
Explanation:
Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
குறள் 957:
குடிப்பிறந்தார்கண்விளங்கும்குற்றம்விசும்பின்
மதிக்கண்மறுப்போல்உயர்ந்து.
உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
கலைஞர்உரை:
பிறந்தகுடிக்குப்பெருமைசேர்ப்பவரிடமுள்ளசிறியகுறைகள், ஒளிவுமறைவுஏதுமின்றி, வானத்துநிலவில்உள்ளகுறைபோலவெளிப்படையாகத்தெரியக்கூடியதாகும்.
மு.வஉரை:
உயர்குடியில்பிறந்தவரிடத்தில்உண்டாகும்குற்றம், ஆகாயத்தில்திங்களிடம்காணப்படும்களங்கம்போல்பலரறியத்தோன்றும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுடும்பத்தில்பிறந்தவரிடம்ஏதேனும்குறைஇருந்தால்அதுநிலாவில்தெரியும்களங்கம்போல்பெரிதாகத்தெரியும்.
Translation:
The faults of men of noble race are seen by every eye, As spots on her bright orb that walks sublime the evening sky.
Explanation:
The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.
குறள் 958:
நலத்தின்கண்நாரின்மைதோன்றின்அவனைக்
குலத்தின்கண்ஐயப்படும்.
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.
கலைஞர்உரை:
என்னதான்அழகும்புகழும்உடையவனாகஇருந்தாலும்அன்புஎனும்ஒருபண்புஇல்லாதவனாகஇருந்தால்அவன்பிறந்தகுலத்தையேசந்தேகிக்கவேண்டியநிலைஏற்படும்.
மு.வஉரை:
ஒருவனுடையநல்லப்பண்புகளுக்கிடையில்அன்பற்றத்தன்மைக்காணப்பட்டால், அவனைஅவனுடையகுடிப்பிறப்புபற்றிஐயப்படநேரும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுடும்பத்திலிருந்துவருகின்றவனிடம்அன்புஇல்லாதுஇருந்தால்அக்குடும்பத்தைச்சேர்ந்தவன்தானாஎன்றுஅவனைஇந்தஉலகம்சந்தேகப்படும்.
Translation:
If lack of love appear in those who bear some goodly name, 'Twill make men doubt the ancestry they claim.
Explanation:
If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.
குறள் 959:
நிலத்தில்கிடந்தமைகால்காட்டும்காட்டும்
குலத்தில்பிறந்தார்வாய்ச்சொல்.
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
கலைஞர்உரை:
விளைந்தபயிரைப்பார்த்தாலேஇதுஎந்தநிலத்தில்விளைந்ததுஎன்றுஅறிந்துகொள்ளலாம். அதேபோல்ஒருவரின்வாய்ச்சொல்லைக்கேட்டேஅவர்எத்தகையகுடியில்பிறந்தவர்என்பதைஉணர்ந்துகொள்ளலாம்.
மு.வஉரை:
இன்னநிலத்தில்இருந்துமுளைத்ததுஎன்பதைமுளைகாட்டும், அதுபோல்குடியிற்பிறந்தவரின்வாய்ச்சொல்அவருடையகுடிப்பிறப்பைக்காட்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நிலத்தின்இயல்பைஅதில்விளைந்தபயிர்காட்டும்; அதுபோலக்குடும்பத்தின்இயல்பைஅதில்பிறந்தவர்பேசும்சொல்காட்டும்.
Translation:
Of soil the plants that spring thereout will show the worth: The words they speak declare the men of noble birth.
Explanation:
As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).
குறள் 960:
நலம்வேண்டின்நாணுடைமைவேண்டும்குலம்
வேண்டின்வேண்டுகயார்க்கும்பணிவு.
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
கலைஞர்உரை:
தகாதசெயல்புரிந்திடஅஞ்சிநாணுவதும், எல்லோரிடமும்ஆணவமின்றிப்பணிவுடன்நடந்துகொள்வதும்ஒருவரின்நலத்தையும்அவர்பிறந்தகுலத்தையும்உயர்த்தக்கூடியவைகளாகும்.
மு.வஉரை:
ஒருவனுக்குநன்மைவேண்டுமானால்நாணம்உடையவனாகவேண்டும், குடியின்உயர்வுவேண்டுமானால்எல்லோரிடத்தும்பணிவுவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்தனக்குநன்மைவேண்டும்என்றுஎண்ணினால்அவனிடம்நாணம்இருக்கவேண்டும். நற்குடும்பத்தவன்என்றபெயர்வேண்டும்என்றால், எல்லாரிடமும்பணிவுஇருக்கவேண்டும்.
Translation:
Who seek for good the grace of virtuous shame must know; Who seek for noble name to all must reverence show.
Explanation:
He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.
Comments
Post a Comment